எனக்குஒளிப்பதிவாளர் கேவி ஆனந் அவர்களை பிடிக்கும். ஏன் என்றால் அவர் என்னை போலவே ஸ்டில் போட்டோடகிராபராக இருந்தவர்... அதன் பின் அவர் எழுத்தாளர்கள் சுபாஎழுதும் மாத நாவலான சூப்பர் நாவலில் அட்டைபடத்திற்க்கு போட்டோ எடுத்தவர்... அதன் பிறகு பிரபல வாரபத்திரிக்கையில் புகைபடக்காராக இருந்து, அதன் பிறகு பிசி ஸ்ரீராம் அவர்களிடம் உதவியாளராக சேர்ந்து...
அவர் நேரம் அவரிடம் உதவியாளராக இருந்த அத்தனை பேருக்கும் படம் செய்ய வாய்பு கிடைக்க, பிசியிடம் கடைசி அசிஸ்டென்டாக ஜாயின் செய்த அவர், ஒரு சில வருடங்களில் முதலிடத்தை பிடிக்க, அதன் பிறகு கேமரா மேனாக வேலை செய்த முதல் மலையாள படத்தில் தேசிய விருது பெற.... அதன் பிறகு பல வெற்றிபடங்களில் ஒளிப்பதிவாளர்.... இன்று பெயர் சொல்லும் இயக்குனர்....
எனக்கு கேவி ஆனந் அவர்களின் ஒளிப்பதிவு எனக்கு ரொம்பவும் பிடிக்கும்...நான் சென்னை திநகர் சரவணா வீடியோ சென்டரில் ஒர்க் பண்ணும் போது ஒரே ஒரு நாள் பீட்டா கேமாரா முதல்வன் படத்திற்க்கு ஷுட்ங்குக்கு எடுத்துக்கொண்டு போனேன்...
அப்போது சக்கலக்கபேபி சாங் பழைய இண்டியன் எக்ஸ்பிரஸ் பில்டிங்கில் எடுத்துக்கொண்டு இருந்தார்கள்... ஒரு சினிமா ஷுட்டிங்கை மிக அருகாமையில் பல முறை பார்த்து இருந்தாலும் ஷுட்டிங்கில் அது நாள் வரை ஒர்க் செய்தது இல்லை.. அதுவும் கேவி ஆனந் அவர்களுடன் எனும் போது என்னால் அப்போது அடைந்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தையில்லை...
சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருக்க வேண்டும் என்பது என் வாழ்நாள்ஆசை... வேட்கை, தவம், எல்லாம்... ஆனால் குடும்ப சூழல் கருதி அந்த ஆசையை நான் அதிகம் மண்டையில் ஏற்றிக்கொள்ளவில்லை.....
நிறைய ரிகர்சல் பண்ணப்பட்டு அந்த பாடல் எடுக்கப்பட்டுகொண்டு இருந்தது... அப்போது இயக்குநர் சங்கர் அங்கே இல்லை... அவர் உதவியாளர் இப்போதைய இயக்குனர் மாதேஷ் இயக்கிகொண்டு இருந்தார்...கேமரா கேவி ஆனந்... காட்சிப்படி நடிகர் அர்ஜுன் கேமரா பிடிப்பது போலவும்,வடிவேலு டிராலி தள்ளுவது போலவுமான காட்சிகள் நான் எடுத்துக்கொண்டு போன கேமராவை வைத்து எடுத்தார்கள்... அதன் பிறகு எடுத்த காட்சிகயில் பிரபஞ்ச பேரழகி சுஸ்மிதா எதிரில்...சிக்கென சிவப்பு உடையில் சுற்றிலும் பாம்பே பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ்.... எனக்கு இதயம் ஒருமுறை துடிப்பதை நிறுத்தி அப்புறம் ரொம்ப வேகமாக துடித்தது....
அப்போது எரி435 கேமரா என்று நினைக்கின்றேன் அதாவது சினிமா கேமாராவில் எடுக்கபடும் காட்சிகளை பிலிமில் பதிந்து அதனை லேபில் டெவலப்பண்ணி,நெகடிவை பாசிட்டிவாக மாற்றியபிறகே காட்சிகளை பார்க்க முடியும் ...
ஆனால் எரி435 கேமராவில் எடுக்கும் காட்சிகளை ஒரு ஆர் எப் கேபிள் மூலம் அவுட் எடுத்து அதனை விஹெச் ரெக்கர்டரில் ரெக்கார்ட் செய்து எடுத்த காட்சிகளை உடனுக்கு உடன் பார்க்கும் தொழில் நுட்பம் அப்போதுதான் மிழகத்தில் அறிமுகமாயிருந்தது....
நான் கேமரா எடுத்து போய் இருந்தேன் ரெக்கார்டிங் செட்டப் எடு்த்து வந்தவன் செல்வம் என்ற எனது நண்பன் அந்த எக்யூப்மென்டை எடுத்து வந்து இருந்தான்... அப்போது செல்வம் பேங்க் வரை போகிறேன் என்று கேவி ஆனந் இடம் அனுமதி கேட்க, அவர் என்னை பார்த்துக்கொள்ள சொல்லி அவனை அனுப்பிவைத்தார்....
அப்போதுதான் எனக்கு அந்த பாடலுக்கு பிரபஞ்ச அழகி சுஸ்மிதா நடனம் ஆடறார்னு எனக்கு தெரியும்... எனக்கு நேரில் பார்க்க போகின்றோம் என்று ஆர்வம் மெல்ல எட்டிப்பார்த்து கை கால் வேர்க்க வைத்தது...
சுஸ் அந்த பாடலுக்கு ரிகர்செல் செய்ய...
திரும்பவும் சக்கலக்க பேபி சக்கலக்கபேபி லுக்குவிட தோனைலையா என்று ஸ்பிக்கரில் பாடல் ஒலிக்க அக்ஷன் சவுன்ட் வர, ஓன் டூ என்று தாளம் தப்பாமல் நம்ம சுஸ் ஆட,கேமராமேன் டேக் ஓக்கே என்றார்.... என் வாயில் ஈ உள்ளே போய் உள் நாக்கை குசாலம் விசாரித்து வெளியே வந்தது....
ஒரு மெல்லிய வாசனை என்னருகில்...சட்டென என் தோளில் யாரோ கை வைப்பது போல் சட்டென திரும்ப 6 அடி உயர அழகு தேவதை நம்ம சுஸ்மி....எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை , நாக்கு அப்பிடியே ஒட்டிக்கிச்சு...கை லேசா உதறுது.... அந்த 6 அடி உயர பிரபஞ்ச அழகி என்னிடத்தில் கேட்டாள்...
if you don't mind . can you rewind the shot? நான் பதட்டத்தில் ஓ ஷ்யூர் மேடம் என்று சொல்லிவிட்டு, நான் கேவியை பார்க்க அவர் எடுத்த ஷாட்டை காட்ட அனுமதி கொடுத்தார்...நான் எடுத்த ஷாட்டை ரிவைன்ட் செய்து காட்ட, அந்த ஷாட் முடியும்வரை அந்த பிரபஞ்சம் என் தோளில் முழங்கை வைத்து கன்னத்தில் கையை முட்டுக்கொடுத்து பார்த்து கொண்டு இருந்தது.... கதைகளில் படித்த காலின் கீழே பூமி நழுவியது என்ற வாக்கியத்திற்க்கான அர்த்தம் அப்போதுதான் நான் உணர்ந்தேன்....
அன்றைய இரவு என்னால் சரியாக உறங்க முடியவில்லை... அந்த சம்பவத்தையே நினைத்து கொண்டே இருந்தேன்... ஒரு போட்டோகூட எடுத்தக்கொள்ளவில்லையே என்று, என்னை நானே கழிப்பறையில் இருந்த ரசம்போன கண்ணாடியில் திட்டிக்கொண்டேன்...
அதன் பிறகு அந்த சம்பவத்தை யாரிடமாவது பகிர ஆசை எற்பட்டது.... முக்கியமாக அதை நம்ப வேண்டும்... அதனால் கடலூரில் இருக்கும் என் பால்ய நண்பனிடத்தில் இப்படி சொன்னேன்....
மச்சான்,
“ இந்த கடலூர்ல சாதாரண கிரமமான கூத்தப்பாக்கத்தில் பிறந்த நான். இங்க, இருந்து சென்னை போய், அங்க அந்த நெட்டை பிரபஞ்ச அழகி அதுவும் டிவில மட்டும் பார்த்து பரவசபட்ட சுஸ்மிதாசென், இந்த ஜாக்கி தலைவர் தோள் மேல கைவச்சி பேசறது எவ்வளவு பெரிய விஷயம்??? என்று சற்றே சிலாகித்தேன்... அதற்க்கு என் நண்பன் சொன்னான்...
நம் கிராமத்தை விட படுகிராமம் பத்திரக்கோட்டை அந்த ஊர்ல இருந்து சென்னை போய் ஒரு பேர் சொல்லற கேமராமேனாகவே ஆயி்ட்டார் நம்ம தங்கர்பச்சான்...இதெல்லாம் பெரிசா பேசிக்கினு, போடா போய் படத்துக்கு கேமராமேனா ஆகற வழியை பாரு அதை விட்டு்ட்டு கையி காலுன்னு பேசறான் என்றான்...
நான் வாய் முடி மவுனித்தேன். அவன் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை...
குறிப்பு... ( என் சொந்த ஊரான கடலூரில் எங்கள் கிராமமான கூத்தப்பாக்த்தில் இருந்து 15 கிலோமீட்டரில்தான் கேமராமேன், இயக்குநர் தங்கர்பச்சான் வாழ்ந்து வளர்ந்த, சொந்த ஊர் பத்திரக்கோட்டை உள்ளது....)
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
என்ன கேமரா வெச்சிருக்க ஜாக்கி ?
ReplyDeleteமீண்டும் மலரும் நினைவுகளா..??
ReplyDeleteசரி.. போட்டு தாக்கு...
//அந்த ஷாட் முடியும்வரை அந்த பிரபஞ்சம் என் தோளில் முழங்கை வைத்து கன்னத்தில் கையை முட்டுக்கொடுத்து பார்த்து கொண்டு இருந்தது...//
ReplyDeleteஅடுத்த தடவை சந்திக்கும் போது அந்த தோளை ஞாபகார்தமாக வெட்டி எடுத்து வந்துவிட வேண்டியது தான்!
ஜாக்கி,
ReplyDeleteதோளப் பத்தியும், நம்ம ஆளப் பத்தியும் அருமையான இடுகை. ம்ம்!!!
ஸ்ரீ.....
// காலின் கீழே பூமி நழுவியது//
ReplyDeleteநழுவும்ல ,, பார்த்து வீட்டுக்கார அம்மாவுக்கு தெரிஞ்ச அவுக கையிலே இருந்து எதாவது நழுவி உங்க தலைய பதம் பார்க்க போவுது..
தோள் கொடுத்த ரகசிய தோழனா ? நடத்துங்க ...
அருமை... அண்ணே! தங்கர்பச்சான்
ReplyDeleteஎன் நெருங்கிய நண்பனின் மாமா..
பக்கத்துபக்கது ஊரு என்பதால,
நீங்க சொல்றது ரசிச்சு படிக்க முடியுது!!
குடுதுவச்ச ஆளு சார் நீங்க .
ReplyDelete// காலின் கீழே பூமி நழுவியது//
ReplyDeleteவயசு அப்படி, தப்பில்ல
:)))))))))))
/*செந்தழல் ரவி said...
ReplyDeleteஎன்ன கேமரா வெச்சிருக்க ஜாக்கி ?*/
அண்ணே நேத்து நான் போட்டிருந்தது கற்பனை கதை அண்ணே...
என்ன கேமரா வெச்சிருக்க ஜாக்கி ?-//
ReplyDeleteடி40 எக்ஸ் நிக்கான்
மீண்டும் மலரும் நினைவுகளா..??
ReplyDeleteசரி.. போட்டு தாக்கு...//
ஆம் சூர்யா சில அனுபவங்கள பதியப்படவேண்டும் அதனால்தான்...
//அந்த ஷாட் முடியும்வரை அந்த பிரபஞ்சம் என் தோளில் முழங்கை வைத்து கன்னத்தில் கையை முட்டுக்கொடுத்து பார்த்து கொண்டு இருந்தது...//
ReplyDeleteஅடுத்த தடவை சந்திக்கும் போது அந்த தோளை ஞாபகார்தமாக வெட்டி எடுத்து வந்துவிட வேண்டியது தான்!//
அடப்பாவிங்களா??ஏன் இந்த கொலை வெறி
ஜாக்கி,
ReplyDeleteதோளப் பத்தியும், நம்ம ஆளப் பத்தியும் அருமையான இடுகை. ம்ம்!!!
ஸ்ரீ.....//
நன்றி ஸ்ரீ தொடர் வாசிப்புக்கு
// காலின் கீழே பூமி நழுவியது//
ReplyDeleteநழுவும்ல ,, பார்த்து வீட்டுக்கார அம்மாவுக்கு தெரிஞ்ச அவுக கையிலே இருந்து எதாவது நழுவி உங்க தலைய பதம் பார்க்க போவுது..
தோள் கொடுத்த ரகசிய தோழனா ? நடத்துங்க ...//
சரிங்க தலைவா....
அருமை... அண்ணே! தங்கர்பச்சான்
ReplyDeleteஎன் நெருங்கிய நண்பனின் மாமா..
பக்கத்துபக்கது ஊரு என்பதால,
நீங்க சொல்றது ரசிச்சு படிக்க முடியுது!!//
நீ சொல்வது உண்மைதான் கலை...
குடுதுவச்ச ஆளு சார் நீங்க .//
ReplyDeleteராஜராஜன் அந்தம்மா தோள் மட்டுமதான் கையவச்சாங்க அதுக்கேவா???
// காலின் கீழே பூமி நழுவியது//
ReplyDeleteவயசு அப்படி, தப்பில்ல
:)))))))))))//
நன்றி சிவா....என்ன செய்ய...
/*செந்தழல் ரவி said...
ReplyDeleteஎன்ன கேமரா வெச்சிருக்க ஜாக்கி ?*/
அண்ணே நேத்து நான் போட்டிருந்தது கற்பனை கதை அண்ணே...//
நன்றி நைனா...
ஆறடியா?
ReplyDeleteஅப்ப என் உயரமுன்னு சொல்லுங்க.. ஹீ.ஹீ
சீக்கிரமே உங்கள் ஒளிப்பதிவாளர் கனவு நிஜமாகட்டும்
ReplyDeleteதோழமை ஜாக்கி அவர்களுக்கு
ReplyDeleteஇந்த கடலூர்ல சாதாரண கிரமமான கூத்தப்பாக்கத்தில் பிறந்த ....///
அட நானும் தான். நம்ம ஊர் என்றவுடன் சந்தோசம், விருப்பம் இருந்தால் தங்களின் மெயில் முகவரி,மொபைல் எண் தரவும்
தோழமையுடன்
ஜீவா
ஆறடியா?
ReplyDeleteஅப்ப என் உயரமுன்னு சொல்லுங்க.. ஹீ.ஹீ//
அதுல அப்படி ஒரு மன திருப்தியா... இருக்கட்டும் இருக்கட்டும்
சீக்கிரமே உங்கள் ஒளிப்பதிவாளர் கனவு நிஜமாகட்டும்//
ReplyDeleteநன்றி ராஜ் உங்கள் வாழ்த்துக்கு தலை வணங்குகின்றேன்...
தோழமை ஜாக்கி அவர்களுக்கு
ReplyDeleteஇந்த கடலூர்ல சாதாரண கிரமமான கூத்தப்பாக்கத்தில் பிறந்த ....///
அட நானும் தான். நம்ம ஊர் என்றவுடன் சந்தோசம், விருப்பம் இருந்தால் தங்களின் மெயில் முகவரி,மொபைல் எண் தரவும்
தோழமையுடன்
ஜீவா//
நன்றி ஜீவா நானும் ரொம்ப சந்தோஷப்படுகின்றேன்... நீங்கள் கூத்தப்பாக்கத்தில் எந்த இடம்?????
சுஷ்மிதா உங்களில் சாய்ந்த நிமிடல் உலகம் சுழற்சியை நிறுத்தியதா இல்லையா ?
ReplyDeleteநன்றி ஜீவா நானும் ரொம்ப சந்தோஷப்படுகின்றேன்... நீங்கள் கூத்தப்பாக்கத்தில் எந்த இடம்?????
ReplyDelete//
Murugan kovil stopping,pakshi kalyana mandapam,Vidya-Mani doctor hospital :)))