சாண்ட்விச் அண்டு நான்வெஜ்..(20,07,09)

ஆல்பம்...

தமிழ் மண திரட்டி நிர்வாகம் என்னை தமிழ்மண நட்சத்திர பதிவாராக என்னை தேர்ந்து எடுத்து உள்ளது... அடுத்த மாதம் ஆகஸ்ட்டு மாதம் 3ல் இருந்து ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதிவரை என்னுடைய வாரமாக தேர்வு செய்து இருக்கின்றாகள் ...தமிழ் மண நிர்வாகிகளுக்கும் என் எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்....போனில் செய்தி சொன்னதும் ரொம்ப வெளிப்படையாக,

ஜாக்கி, “ரொம்ப பெரிய விஷயம்
எழுத வந்த குறுகிய காலத்துல இந்த அங்கீகாரம் பெரிய விஷயம்” என்று வாழ்ந்து சொன்ன நண்பர் கேபிள் சங்கருக்கும் உடன் வாழ்த்து சொன்ன தண்டோராவுக்கும், அண்ணே உங்க பதிவுகல படிக்க ஆவலாய் இருக்கின்றோம் என்று சொன்ன நைனாவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.....

இதுவரை என் எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் 142 பாலோயர்களுக்கும் எனக்கு தொடர்ந்து பின்னுட்டம் இட்டு உற்சாகபடுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்....

தற்போது சில பல வேலைகள் வந்து கொண்டு இருப்பதால் , ஒரு நாளைக்கு 3 பதிவு எல்லாம் இனிஎழுத முடியாது .. ஒரு நாளைக்கு ஒன்றுதான் அதுவே ரொம்ப கஷ்டம் என்று எண்ணுகிறேன்.. முடிந்த வரை நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக நிறைய எழுதுகின்றேன்...ஆனால் ஒரு நாளைக்கு ஒரு பதிவு என்பது உள்ளுரில் இருக்கும் போது நிச்சயம்... அதுவே பிரியாக இருந்தால் அதகளம் செய்வோம்...

நான் எழுதும் பட விமர்சனங்களுக்கு எனது மெயில் முகவரிக்கு பல நண்பர்கள் வாழ்த்து அனுப்பியபடி இருக்கின்றார்கள்... அதில் குறிப்பிடபட வேண்டிய செய்தி அவர்கள் சில படங்களின் லிங்கையும் சேர்த்து அனுப்புவது மகிழ்வை தருகின்றது...எனக்கான மெனெக்கெடல் அந்த முகம் தெரிய நட்புகளை அதிகம் நேசிக்க வைக்கின்றது... அதே போல் நான் நெட்டில் குஜால் படங்களை தவிர வேறு படங்களை பார்க்கமாட்டேன்.... அதிக பட்சமாக தியேட்டர்,
அல்லது, என் வீட்டு ஹோம் தியேட்டரில் 5.1 சவுண்டில் சப்டைட்டிலோடு பார்த்தால்தான் எனக்கு தூக்கமே வரும்....

அறிவிப்பு....
ஒரு புகைபட காரணாக இருந்து கொண்டு சில படங்களை எடுத்து அதனை பெட்டியில் வைத்துக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.... இந்த வாரத்தில் இருந்து விஷுவல் டேஸ்ட் என்ற தலைப்பில் நான் எடுத்ததில் பிடித்த படங்களை, சாண்ட்விச் அண்டு நான் வெஜ் பகுதியில் வைக்கின்றேன்....

மிக்சர்...

ஏதோ ஒரு சிலை என்றால் கூட பரவாயில்லை... நகரம் எங்கும் சிலைகள் வைத்துக்கொள்ளும் மயாவதி..... அவரை நினைத்தால் பார்க்க பாவமாய் இருக்கின்றது.... இந்தியாவில் இது போன்ற ஆட்டங்களை நிறைய பார்த்தாகிவிட்டது...

நாடோடிகள் டிரைலர் பார்க்க அற்புதமாக இருக்கின்றது... அவர்கள் ஒர்கிங் ஷாட் அற்புதம் ... சினிமா என்பது கூட்டு முயற்ச்சி என்பதை விஷுவலாக சொல்லி இருக்கி்ன்றார்கள்.... நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்....

பைலட் தியேட்டரில் டிரான்ஸ்பர்ஸ் படம் பாத்தேன்.. ஏனோ தெரியவில்லை சென்டர் ஸ்பீக்கர்ஸ் சரியாக ஒர்க் ஆகவில்லை.... அல்லது தமிழ் படுத்தும் போது சரியாக வாய்ஸ் பதிவாகவில்லையா என்பது தெரியவில்லை....மொத்தத்தில் ரொம்ப டென்ஷனாக இருந்தேன் ....சரியாக இல்லை படம் பார்க்க வரும் பார்வையாளனை கொடுமை படுத்தினால், அப்புறம் அவன் எப்படி தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பான் சொல்லுங்கள்......

விஷுவல் டேஸ்ட்....(நான் எடுத்த புகைபடத்தில்பிடித்தது)
படத்தை கிளிக்கி பெரிதாக பார்க்கவும்

ஒரு ஓவியரின் துரிகை செயல்பட்டு கொண்டு இருந்த அந்த நொடியில் கிளிக்கியது.... இடம்.. சென்னை அண்ணாசாலை ஓய் எம் சி யே வளாகம் அருகில்,நேரம் மாலை ஆறு முப்பது மணி...


வயிற்று பிழைப்புக்காக பெங்களுர் போரம் ஷாப்பிங்மால் எதிரில்

வயிற்று பிழைப்புக்காக
வானம் ஏற முயற்ச்சிப்பவன்....

சென்னை அடையாற்றில் 17 மாடி கட்டத்தின் மேல் தளத்தில் எனது நண்பர் சுகுமாருடன்....

நான்வெஜ்....



ஜோக்...1

அவன் ஒரு தண்ணி வண்டி, எப்போது பார்த்தாலும் தண்ணியில் மிதப்பவன்,விஸ்க்கியில் பல் துலக்கி, விஸ்க்கியில் முகம்கழுவி என்று எப்போதும் தண்ணி தண்ணிதான்..அப்படிபட்டவன் இரவில் பாரில் இருக்கும் போதே அவனுக்கு சட்டென காமம் கிளற, சட்டென மனைவிக்கு போன் அடித்தான்... நான் விட்டுக்கு வரும் போது நீ தயாராக இரு என்றான்...வெறியோடு வீட்டுக்கு வந்தான்...அவள் உடைகளைந்தான் , முத்தமிட்டான். என்ன, ஒரே உப்புகரிக்குது என்றான்... சனியன் புடிச்சவனே, நான் நிக்கறேன் நீ முட்டிபோட்டுக்குனு இருக்குற முதல்ல எழுந்துரு என்றாள்....

ஜோக் பன்ச்....2

பட்டுதுணி அணிந்து நடப்பது சுபமுகூர்த்தம்,ஒட்டு துணி கூட இல்லாம நடப்பது சாந்தி முகூர்த்தம்..... எப்புடி????


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி..


26 comments:

  1. நட்சத்திர வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தமிழ்மணத்துக்கும்,
    படங்கள் அருமை.. அதிலும் அந்த மொட்டைமாடி ப்ரேமிங் சூப்பர்.

    ReplyDelete
  3. படங்கள் சூப்பர். ஒளிஓவியர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். மொட்டைமாடிப்படம் கலக்கல். முன்கூட்டிய நட்சத்திரவாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தமிழ்மண நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.

    படங்கள் அருமை.

    நாந்வெஜ் - கேபிளாருக்கு போட்டு போடுகின்றமாதிரி இருக்கு...

    ReplyDelete
  5. ஜாக்கி,
    நட்சத்திர வாழ்த்துகள்.

    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  6. பட்டுதுணி அணிந்து நடப்பது சுபமுகூர்த்தம்,ஒட்டு துணி கூட இல்லாம நடப்பது சாந்தி முகூர்த்தம்..... எப்புடி????


    சூப்பர்...

    நட்சத்திர வாழ்த்துக்கள்... திரு.ஜாக்கி

    ReplyDelete
  7. Jackie sir,
    Non-Veg is super...--

    நன்றி விஜய் ஆனந்

    ReplyDelete
  8. non-veg punch... really superb..//

    நன்றி கிஷோர்

    ReplyDelete
  9. நட்சத்திர வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி ஜமால்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் தமிழ்மணத்துக்கும்,
    படங்கள் அருமை.. அதிலும் அந்த மொட்டைமாடி ப்ரேமிங் சூப்பர்.//

    நன்றி கேபிள் சங்கர், படத்தினை குறிப்பிட்டதற்க்கு நன்றி

    ReplyDelete
  11. படங்கள் சூப்பர். ஒளிஓவியர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். மொட்டைமாடிப்படம் கலக்கல். முன்கூட்டிய நட்சத்திரவாழ்த்துக்கள்.//

    நன்றி வந்தியதேவன்
    உங்கள் தொடர் வாசிப்புக்கும் என் படத்தினை குறிப்பிட்தற்க்கும்

    ReplyDelete
  12. சாண்ட்விச் அண்டு நான்வெஜ்..

    super

    ReplyDelete
  13. வாழ்த்துகள் ஜாக்கி.. போட்டோஸ் எல்லாமே அருமை.. குறிப்பாக மூன்றாவது நன்றாக இருக்கிறது..

    ReplyDelete
  14. ஜாக்கி,

    அட... சொல்லவேயில்லையே..???

    நட்சத்திர வாழ்த்துகள்..

    அப்பாடா, ஒரு வழியாக போட்டோக்களை தூசி தட்டி எடுத்தாச்சா..???

    போட்டு தாக்கவும்.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. Twinkle,twinkle little star.
    ஜாக்கியும் இப்போ சூப்பர் ஸ்டார்..

    ReplyDelete
  17. ஜாக்கி,

    ஏதோ நானே தேர்ந்தெடுக்கப்பட்டது போன்ற மகிழ்ச்சி. தமிழ்மணமெல்லாம் உங்கள் இடுகையிடும் ஆர்வத்துக்கும், தரத்துக்கும் ஆரம்ப அங்கீகாரம்தான். இன்னும், இன்னும் பதிவுலகில் பல வெற்றிகளை நிச்சயம் பெறுவீர்கள். அப்போதும் எனது வாழ்த்து உங்களை வந்தடையும்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் ஜாக்கி ஸார்...
    போட்டோக்கள் அற்புதம், நான் வெஜ் பன்ச் பாக்கா...

    ReplyDelete
  19. மூன்றாவது புகைப்படம் மிக அருமை. என்னுடைய புகைப்படத் தொகுப்பை இங்கு பார்க்கலாம் - http://www.flickr.com/subbusos

    ReplyDelete
  20. ஜோக் பன்ச்....2 ..... சூப்பரப்பூ....

    தமிழ்மண நட்சத்திரம் ஆனதற்க்காக வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள் ஜாக்கி...

    ReplyDelete
  21. தமிழ்மண நட்சத்திரமா? கலக்குங்க வாழ்த்துக்கள்.

    ஜோக் பன்ச்....2 ..... சூப்பரப்பூ
    :)

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள்ணே

    ReplyDelete
  23. பட்டுதுணி அணிந்து நடப்பது சுபமுகூர்த்தம்,ஒட்டு துணி கூட இல்லாம நடப்பது சாந்தி முகூர்த்தம்..... எப்புடி????

    சூப்பர் பாஸ் ... ஹி ஹி ஹி

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner