(THE ARMOUR OF GOD) உலகில் என்னை வசீகரித்த ஒரே நடிகர் ஜாக்கிதான்...

ஒரு படத்தை நீங்கள் எத்தனை முறை பார்ப்பீர்கள்... ஒரு முறை அல்லது இரண்டு முறைஅல்லது 5 முறை... நான் இந்த படத்தை தியேட்டரில் 45 தடவை பார்த்தேன்... ஏன் அப்படி என்று இதுவரை தெரியவில்லை... இது போல் வேற எந்த படமும் என்னை வசீகரிக்கவில்லை...அப்புறம் டிவிடியில் பார்த்தவை கணக்கில் அடங்காதவை. அப்படி ஒரு படம் ஒருவனை வசியம் செய்யுமா?

இந்தனைக்கும் எனக்கு அவ்வளவு ஆங்கில அறிவு கிடையாது... எனது நண்பன் லட்சுமிநாரயணன் சுவற்றில் இரண்டு குருவி படம் வரைந்து, இரண்டும் பேசுவது போல் எழுதினான் ஒரு குருவி ஐ லவ் யூ என்றது பக்கத்து குருவி ஐ லைக் யூ என்றது... எனக்கு லைக்யூ என்றால் என்ன? என்ற அர்த்தம் தெரியாது... எனது எட்டாம் வகுப்பில் ஐலைக்யூ என்ற ஆங்கில சொல்லுக்கு அர்த்தம், தெரியவில்லை என்றால் என் கல்விதகுதியை சற்றே யோசி்த்துக்கொள்ளுங்கள்... அப்படி பட்ட எனக்கு அந்த ஆங்கலிபடம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது....

அந்த நடிகன் குரங்கை விட வேகமாக இயங்கினான்... காற்றிலே லாஜீக்காக பறந்து எதிரிகளை பந்தாடினான்... கார் சேசிங் ஆகட்டும், அல்லத பைக் ஓட்டவதாக இருக்கட்டும் எதிலும் ஒரு லாவகம் இருந்தது...முகத்தில் எப்போதும் ஒரு குழந்தை தனமான புன்னகையை நிரந்தரமாக வைத்து இருந்தான் அவன் பாடி லாங்வேஜ்கள் என்னை வெகுவாய் கவர்ந்தன... என்னை அவன் வெகுசீக்கரத்தில் வசிகரித்தான்...


அவன் நடிகன்தான் என்றாலும் வேலையை இஷ்டப்பட்டு செய்தான் அந்த ஜாப் சேட்டிஸ்பேக்ஷன் எனக்கு அவனிடத்தில் பிடித்து இருந்தது... உயிர் போய்விடும் என்று தெரி்யும் அளவுக்கான காட்சிகளில்கூட டூப்போடுவதை அவ்ன தவிர்த்தான் .. மிக முக்கியமாக அவன் இளமை துள்ளலும், அந்த சுறுசுறுப்பும் என்னை அவன் அடிமையாக்கியது... அந்த ஹாங்காங் நடிகனின் பெயர் ஜாக்கிசான்... என் பெயரில் பாதியை எடுத்து விட்டு அவன் பெயரை வைத்துக்கொண்டதும் அவன் உழைப்பின்மேல் உள்ள காதாலால்தான்.... அப்படி பெரிய திரையில் மட்டும் 45 முறை நான் பார்த்த அந்த படம் ஜாக்கிசானின், தி ஆர்மர் ஆப் காட் இந்த படத்துக்கு பிறகுதான் எனக்கு ஆங்கில படத்தின் மேல் காதல் வந்து மொழி புரியாமல் பார்த்து பார்த்து இப்போது லேசாக புடிபடுகின்றது...


திஆர்மர் ஆப் காட் படத்தின் கதை இது தான்....
ஸ்பில் பெர்க்கின் இன்டியான ஜோன்ஸ் படங்களை நீங்கள் பார்த்து இருக்கலாம்... ஒரு பழங்கால பொக்கிஷத்தை பற்றிய தேடல்தான் கதைகரு... இந்த படமும் அப்படித்தான்... பழங்கால மதி்ப்பு மிக்க 5 முக்கிய பொருட்கள் தேி செல்கின்றான்... அதில் ஒரு பொருளான கத்தியை ஆப்பிரிக்காவின் பழங்குடினிரிடம் இருந்து மீட்கின்றான மீதம் 4 பொருட்களை ஆர்மர் ஆப் காட் எனும் சாமியார் கூட்டத்திடம் இருக்கும் மீத பகுதிகளை மீட்க ஜாக்கி தேடிச்செல்வதும் அதனால் ஏற்படும் இடர்பாடுகளை சுவைபடவும் ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து சொல்லி இருப்பார் ஜாக்கி...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....


இந்த படத்தின் ஒவ்வோறு காட்சியும் எனக்கு அத்துபடி.... எல்லா சீன்களும் என் நினைவுகளில்....

இந்த படம் 1986ல் வெளி வந்தது...


இந்த படத்தின் முதல் காட்சியில் ஜாக்கி பழங்குடியினரிடம் வாள் எடுத்து சண்டை போட்டு தப்பிக்கும் காட்சியில் ஒரு மரத்தை பிடித்து தாண்டும் போது மதல் ஷாட்டில் ஓகே... ஜாக்கி அந்த காட்சியை ரீடேக் எடுக்க மரக்கிளை முறிந்த பதினைந்து அடி உயரத்தில் இருந்து கீழே விழந்து மண்டையை உடைத்து கொண்டதும்.... அதன் 8 மணி நேரம் ஆப்பேரஷன் இருப்பினும் காது ஓரத்தில் நிரந்தரமாக இருக்க அதனை பிளாஸ்டிக் வைத்து அடைத்தனர்... ஒரு பக்க காத கேட்கும் திறன் கொஞ்சம் அவுட்....

எல்லா படத்திலும் படம் முடிந்து டைட்டில் போடும் போது தியேட்டரில் பாதி கூட்டம் இருக்காது ஆனால் ஜாக்கி படங்களில் மட்டும் படம் முடிந்து டைட்டில் போடும் போது தேசியகீதம் போட்டது போல மந்தித்துக்கு கட்டுபட்டது போல எல்லா மக்களும் நின்று அவர் படத்தில் பட்ட கஷடங்களை மக்களுக்கு தெரிவிப்பார்....

என் குறுபடங்கள் எல்லாவற்றிலும் இந்த முறையை விடாது பின் பற்றுகின்றேன்... அதனால் எனக்கு கிடைத்த நன்மைகள் ஏராளம்.. அது தனி கதை..

ஜாக்கியின் இந்த செயலால் அவரை எந்த இன்ஷுர் நிறுவனமும் அவரை சேர்த்தக்கொள்ள தயங்குகின்றன....அவர் உடம்பில் அடிபடாத இடமே இல்லை எனலாம்....

டூவின் பிரதர் படத்தை தவிர ஜாக்கி எந்த படத்திலும் சிகரேட் புகைப்பது போல் காட்சி வைத்து இல்லை... ஏனெனில் தன்னை பார்த்து எந்த ரசிகனும் கெடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார் ...

அவர் போல் வேலைக்காக உயிரை கொடுத்து நடிக்கும் நடிகர்கள் இந்த உலகில் குறைவு...

இந்த படத்தில் கிளைமாக்சில் அந்த 4 பெண்களுடன் போடும் சண்டையும் அதில் ஒரு பெண்ணை மார்பில் குத்தி விட அந்த காட்சியை அப்போது எல்லோரும் பரபரப்பாய் பேசினர்... அதன் பிறகு அந்த பெண்களை வீழ்த்துவது அற்புதமான ஆக்ஷன் பேக்....

ஜாக்கி பப்புள் கம் கையில் வைத்து வில்லனிடம் பேசியபடியே சட் சடடென வாயில் போடும் அழகே அழகு...அதை தமிழில் யாரும் செய்து பார்க்கவில்லை...

ஜாக்கி நண்பனாக வரும்Alan Tam கேனத்தனமாக செய்யும் காட்சிகளில் சிரித்து மகிழலாம்...

கடைசிகாட்சியில் பலூனில் பறந்து வரும் போது, படத்தில் இடம் பெறும் அந்த கடைசி பாடல் ஜாக்கிதான் பாடுவார் என்று நினைக்கிறேன் ... அது யூடியுபில் இரந்தால் தேடி பிடித்து லிங்க் கொடுக்கவும் , அந்த பாடல் என் ஆல்டைம் பேவரிட்....

தன் நண்பனையும் காதலியையும் தப்பிக்கைவைக்க அவர் போடும் சண்டைகாட்சிகள் அபாரம்....

இந்த படத்தில் கார் இரண்டு பாலங்களுக்கு தாண்டும் அதே போல் ஒரு பைக்கும் தாண்டுவது போலான காட்சி மெய்சிலிர்க்கும் ரகம்....

பாமை பத்த வைத்து விட்டு அவர் செய்யும் காமெடிகள், தேர்ந்த நகைச்சுவையாளானால் மட்டுமே செய்ய முடியும்....படத்தின் பெரும்பாலான காட்சிகள் யுகோஸ்லோவாகியாவில் படம் பிடிக்கபட்டன...

எதி்ரிகளிடம் உதை வாங்கி அதன் பிறகு திருப்பி அடிக்கும் ஒரே ஹீரோ ஜாக்கி மட்டும்தான்...

அமெரிக்காவின் ஹீரோ சில்வஸ்டர் ஸ்டோலன் நடித்த படமான ராக்கி 5 பாகத்தின் வசூலை இந்த ஒரு படம் எடுத்துவிட்டதாக சொல்லுவார்கள்...

Directed by Jackie Chan
Eric Tsang
Produced by Leonard Ho
Chua Lam
Written by Jackie Chan
John Sheppard
Eric Tsang
Starring Jackie Chan
Alan Tam
Maria Dolores Forner
Rosamund Kwan
Music by Michael Wandmacher
Cinematography Bob Thompson
Distributed by Golden Harvest
Toho
Release date(s) 1986
Country Hong Kong
Yugoslavia
Croatia
Language Cantonese

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

20 comments:

 1. //ஒரு படத்தை நீங்கள் எத்தனை முறை பார்ப்பீர்கள்... ஒரு முறை அல்லது இரண்டு முறைஅல்லது 5 முறை... நான் இந்த படத்தை தியேட்டரில் 45 தடவை பார்த்தேன்...//

  சார் ரொம்ப கரெக்ட் .. நான் ஒரு பத்து தடவை பார்த்தேன்.

  ReplyDelete
 2. நான் ஜாக்கின் சில படங்கள் பார்த்து இருக்கிறேன் , அவரை போல் எவராலும் Action Comedy
  பண்ண முடியாது.அற்புதமான நடிகன். உங்கள் பகிர்வுக்கு நன்றி.தேடி பிடித்து பார்த்து விடுகிறேன்

  ReplyDelete
 3. அண்ணே ! சரியாச் சொன்னீங்க !
  அவர்தான் உண்மையான Hero
  மத்தவெனெல்லாம் பந்தாப் பேர்வழிகள்

  ReplyDelete
 4. நானும் பார்த்து ரசிச்ச படத்தில் இதுவும் ஒண்ணு. மீண்டும் பார்க்கணும்.

  ஸ்ரீ....

  ReplyDelete
 5. எனது நண்பரும் ஹாட்லிக் கல்லூரி பழைய ஆசிரியருமான பாலா சேர் (பாலசுப்பிரமணியம்) தான் முதலில் ஜாக்கிசானை பலவருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பின் அவரது பல படங்களைப் பார்க்கக் கிடைத்தது.
  இப்பொழுது புருஸ் லீயின் படங்கள் சிலவற்றையும் பார்க்கிறேன். அறிமுகத்திற்கு நன்றி

  ReplyDelete
 6. அண்ணே... இந்த பதிவு கண்டிப்பாக "ஜாக்கி"யின் புகழை பரப்பும்.

  ( அண்ணே ஜாக்கி சானோட அணைத்து படத்திலேயும் வருவாரே.... "சாமோ ஹங்" அவரை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க...)

  ReplyDelete
 7. naan partha muthal aangila padam... naanum pathu thadavaiku mel paarthu irukkiren

  ReplyDelete
 8. எல்லா படத்திலும் படம் முடிந்து டைட்டில் போடும் போது தியேட்டரில் பாதி கூட்டம் இருக்காது ஆனால் ஜாக்கி படங்களில் மட்டும் படம் முடிந்து டைட்டில் போடும் போது தேசியகீதம் போட்டது போல மந்தித்துக்கு கட்டுபட்டது போல எல்லா மக்களும் நின்று அவர் படத்தில் பட்ட கஷடங்களை மக்களுக்கு தெரிவிப்பார்....\\


  இதுவே அவர் அதிகம் இரசிகர்களை பெற்ற காரணம் போல


  நான் அதிகம் பார்த்த படம்

  சலங்கை ஒலி - 35க்கும் மேல்

  ReplyDelete
 9. //ஜாக்கி பப்புள் கம் கையில் வைத்து வில்லனிடம் பேசியபடியே சட் சடடென வாயில் போடும் அழகே அழகு...அதை தமிழில் யாரும் செய்து பார்க்கவில்லை...//

  இததான் சூப்பர்ஸ்டார் சிவாஜி'ல கிராபிக்ஸ் உதவியோட பண்ணினாரு ...

  ReplyDelete
 10. நான் பார்த்த ஜாக்கியின் முதல் படம்..இப்போதும் விசை டிவி ல போட்டா மிஸ் பண்ண மாட்டேன்.. தல.. ஒரே ஒரு கவிதை..
  இங்கே
  ஜாக்கியை
  பற்றி
  ஒரு
  ஜாக்கியே
  பதிவு
  எழுதுகிறார்..!!!
  :-))))))))))

  ReplyDelete
 11. //எல்லா படத்திலும் படம் முடிந்து டைட்டில் போடும் போது தியேட்டரில் பாதி கூட்டம் இருக்காது ஆனால் ஜாக்கி படங்களில் மட்டும் படம் முடிந்து டைட்டில் போடும் போது தேசியகீதம் போட்டது போல மந்தித்துக்கு கட்டுபட்டது போல எல்லா மக்களும் நின்று அவர் படத்தில் பட்ட கஷடங்களை மக்களுக்கு தெரிவிப்பார்.//

  இங்கே இப்போ சில பேர் இத காப்பி அடிக்கிறானுங்கண்ணோ..

  ReplyDelete
 12. சேகர், என் புனை பேர்தான் ஜெட்லி.
  நானும் ஜாக்கி சான் அவர்களின் தீவிர
  ரசிகன். உங்கள் விமர்சனத்தின் மூலம்
  மேலும் சில தகவல்களை தெரிந்து கொண்டேன்.
  நன்றி.

  ReplyDelete
 13. //ராக்கி 5 பாகத்தின் வசூலை //

  5வது பாகத்தின் வசூலா? இல்ல..
  5ந்து பாகங்களின் வசூலை முறியடித்ததா?


  ஜாக்கிக்காக.. ஜாக்கியின் அடுத்த படம்
  Shinjuku Incident வருகிறது விரைவில்!!

  ReplyDelete
 14. ஜெட்லீதான்னே நம்ம பேவரைட்டு ...

  ஆனால் ஜாக்கியும் பிடிக்கும்.

  ReplyDelete
 15. "கடைசிகாட்சியில் பலூனில் பறந்து வரும் போது, படத்தில் இடம் பெறும் அந்த கடைசி பாடல் ஜாக்கிதான் பாடுவார் என்று நினைக்கிறேன் ... அது யூடியுபில் இரந்தால் தேடி பிடித்து லிங்க் கொடுக்கவும் , அந்த பாடல் என் ஆல்டைம் பேவரிட்...."

  ஜாக்கி இந்த பாட்டா?
  http://www.youtube.com/watch?v=U_S_nmnolMw

  ReplyDelete
 16. ஜாக்கிசான் பல படங்கள் விஜய் டிவி புண்ணியத்தில் தமிழில் பார்த்திருக்கிறேன். இந்த படமும் பார்த்திருக்கிறேன்.
  அருமையான படம்.

  ReplyDelete
 17. எம் ஜி ஆர் க்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.....ஜாக்கி சான்.......உங்கள்ளோட குறும் படங்கள் பார்க்கணுமே!

  ReplyDelete
 18. Full movie link enjoy....

  http://rapidshare.com/files/236091303/JackieChan_ArmourOfGod.Praxunited.part1.rar
  http://rapidshare.com/files/236129714/JackieChan_ArmourOfGod.Praxunited.part2.rar
  http://rapidshare.com/files/236145867/JackieChan_ArmourOfGod.Praxunited.part3.rar
  http://rapidshare.com/files/236160278/JackieChan_ArmourOfGod.Praxunited.part4.rar
  http://rapidshare.com/files/236112248/JackieChan_ArmourOfGod.Praxunited.part5.rar
  http://rapidshare.com/files/236180393/JackieChan_ArmourOfGod.Praxunited.part6.rar
  http://rapidshare.com/files/236192697/JackieChan_ArmourOfGod.Praxunited.part7.rar
  http://rapidshare.com/files/236168794/JackieChan_ArmourOfGod.Praxunited.part8.rar

  ReplyDelete
 19. வணக்கம், நீங்க ஆசை பட்டு கேட்ட Link
  Armour of God - German Credits - http://www.youtube.com/watch?v=kaWsK7SA4LM

  Jackie Chan-Armour of God ( english credits) - http://www.youtube.com/watch?v=IOsVsfqT7ls

  மகிழ்ச்சிதானே?

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner