மெரினா பீச்சீல் காதலர்கள் உஷாராக இருக்க வேண்டும்...
நேற்று மயிலாபூர் போய் விட்டு அப்படியே மெரினா பீச் சென்றேன் ஏனென்றால் ஒரு காலத்தில் மெரினாபீச்சில் மூன்று மாதகாலம் தங்க இடம் இல்லாமல் அலைந்து திறிந்த இடம் அது....
மெரினாவின் உள்பக்க சாலையில் காந்தி சிலையில் இருந்து நடந்தே அண்ணா சமாதி சென்று திரும்பி வருவேன்... இப்போது எனது பைக்கில் செல்கின்றேன்...மிக பொறுமையாக அந்த சாலையில் வாகனம் செலுத்தி செல்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்.....
நேற்று அப்படித்தான் நான் அந்த சாலை வழியாக சென்ற போது மெரினா பிச் காந்தி சிலை, பூத் காவலர்கள் கடற்கரையில் உட்கார்ந்து இருந்த ஜோடிகளை கடற்கரையில் இருந்து அழைத்து வந்து கொண்டு இருந்தனர்....
முதன் முதலில் கடற்கரையில் இருந்து வந்த ஜோடியை போலிஸ்காரர் அழைத்து போவதை படம் எடுத்தேன்... அதன் பிறகு வெயிலில் இன்னோரு ஜோடிக்கூட்டம் மணலில் போலிஸ்காரர்களுடன் நடந்து வந்து கொண்டு இருந்தது....
சில மாதங்களுக்கு முன் காதலர்களுக்கு போலிஸ் இடையுறு செய்கின்றது என்று பொது நல விரும்பிகள் கண்டன்ம் தெரிவித்தார்கள்... அதனால் கொஞ்சம் அடக்கி வாசித்தனர்... அதே போல் கண்ணில் படும் காதலர்களை எல்லாம் மிரட்டி கல்லா கட்டிய ஒரு காவலரை கண்டுபிடித்து காவல்துறை கலை எடுத்தது வரலாற்று பதிவு...
இன்னும் எந்த பையனிடமும், வாரணம் ஆயிரம் அப்பா சூர்யா போல் ‘
‘‘நம்ம வீடு பெரிய வீடு அந்த பொண்ணுங்களை இங்க அழைச்சிக்கினு வந்து பேசு” என்று சொல்லும் அப்பாக்கள் தமிழ்நாட்டில்ர ரொம்ப குறைவு...
தாம்பரத்தில் இருக்கும் பையனும் தண்டையார் பேட்டையில் குடி இருக்கும் பெண்ணும், பெற்றோருக்கு தெரியாமல் சந்திக்க மெரினா பீச் நல்ல தேர்வு... ஆனால் அவர்களை அங்கேயும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை.....
நம் நாட்டில் இன்னும் காதல் பெரிய அளவில் அங்கீகரிக்க படவில்லை...மேட்டுக்குடியில் மட்டுமே காதல்இப்போதும் அங்கீகரிக்ப்படுகின்றது...அப்படி இருக்கையில் காதல் செய்வது தவறா?...அப்படி வந்த காதலர்களை மிரட்டி பணம் பறிப்பது எந்த வகையில் நியாயம்...?? ஏற்கனவே காதலர்களை பல இடங்களில் சமுக விரோதிகள் மிரட்டி பணம்பறிப்பது நடந்து கொண்டு வருகின்றது.....சூழ்நிலை இடம் கொடுக்கும் பட்சத்தில் அந்த பெண்ணை கற்பழித்தும் விடுகின்றார்கள்.....
படத்தை கிளிக்கி பெரிதாக பார்க்கவும்...
நாம் தான் பெண்ணு்க்கு பெரிய பெரிய வளையங்கள் போட்டு இருக்கின்றோமே....அதனால் இந்த சமுகத்தில் பெண் பாதிக்கப்பட்டால் அவள் எதிர்காலம், மற்றும் குடும்ப மானம் போய்விடும் என்பதால் அந்த பிரச்சனையை எவரும் வெளியே சொல்ல முன் வருவதில்லை...
இதில் யாரும் விதிவிலக்கல்ல.. (என்னையும் சேர்த்துதான் சொல்கின்றேன்...) இதுவே சமுக விரோதிகளு்க்கு வசதியாக போய் விடுகின்றது....
சார் பீச்ல இந்த லவ்வர் பண்ணற அட்டகாசம் தாங்க முடியலை...
உண்மைதான் நிறைய இடங்களில் காதலர்கள் எல்லை மீறுவதை நானே பார்த்து இருக்கின்றேன்....அவர்கள் கொஞ்சம் கட்டுப்பாடாக இருப்பது நல்லது....ஏனென்றால் நாம் போலியான சமுக அமைப்புடன் வாழ்கின்றோம்...
ஆம்பளை என்ன வேனா தப்பு செய்யலாம். ஆனா, பொண்ணுங்க பப்புக்கு போனாலும் அடி உதை.... இனி இந்தியாவில் இருபாலரும் சமம்னு சொல்லாதீங்க....
குருதிப்புனல் படத்தில் கமல் கவுதமியை உதட்டில் முத்தமிட, அப்போது அவர் பையன் வந்து விட, நான் ஏதும் பார்க்கவில்லை என்று அவன் கண்ணை பொத்திக்கொள்வான்...
அதற்க்கு கமல்
“டேய் இது ஒன்னும் தப்பில்லை...உங்க அம்மால உங்க அப்பன் ஆசையா முத்மிடறான்” என்று தன் பிள்ளைக்கு
சொல்லிக்கொடுக்க... அதற்க்கு கவுதமி ...
“சின்னபுள்ளகிட்ட இதை எல்லாம்சொல்லனுமா?” என்று கேட்க...
அதற்க்கு கமல் நான் சொல்லிகொடுக்கலைன்னா சேட்டிலைட் சேனல் கத்துக்கொடு்த்துடும்னு சொல்லுவார்.....
எப்டிவி,எம்டிவி,வீடிவி, வெளிநாட்டு ஆங்கல சேனல்கள்னு நம்ம வீட்டு வரவேற்பறைக்கே வந்து அவுத்து போட்டு காமிப்தை, பார்க்கும் நம்ம இளைய தலைமுறை இந்த அளவுக்கு கட்டுப்பாடாக இருப்பதே என்னை பொறுத்தவரை பெரிய விஷயம்.....
நாய் ரெண்டும் அதுவும் வாயில்லா ஜீவன்க அதுங்க... அதுங்க கிட்ட செல்போனா வச்சிருக்கு???? நேரா பார்க் ஓட்டல் ரூம் நம்பர்335க்கு வந்துடுன்னு, பெண் நாய்கிட்ட சொல்ல....??? அதுக்கு மூட் வந்ததும் ரோடுன்னு பார்க்காம அதுங்க ஓன்னா சேருதுங்க....
நம்ம சமுகம் அது அழகிய காதலின் வெளிப்பாடுன்னு நம்மால புரிஞ்சிக்க முடியுதா? உடனே பக்கத்துல இருக்கற அரைக்கல்லை எடுத்து அதுங்க பாயின்ட்லேயே அடிச்சிட்டு....
“கழுதைங்க எங்க வந்து அசிங்கம் பண்ணிகிட்டு”’ என்று சொல்லும் சமுகம் நம் சமுகம் ...
இதே அந்த நாய் அந்த இடத்தில் “கக்கா” போன அதை பத்தி அவன் கவலையே பட மாட்டான்.... ஏன்னா அவனை பொறுத்தவரை அசிங்கம்னு சொல்லறது உடலறுவு மட்டும்தான்....
நாய்ங்க சேர்ந்தாலே அரைக்கல்லு எடுத்து அடிக்கறவன் கண்ணுக்கு எதிர்ல, அதுவும் அம்சமாக பிகரை ஒருத்தன் தள்ளிகிட்டு வந்து பேசிகிட்ட இருந்தாலே நம்ம ஆளுங்களுக்கு பொறுக்க முடியாது...எனென்றால் இவனுக்கு அந்த காதல் இவன் காலத்தில் மறுக்கப்ட்டது... உடன் படித்த பெண்ணின் பெயர் கேட்டு அவளோடு பேசவே ஆறுமாதம் எடுத்துக்கொண்டவன்...இந்தகாலத்தில் சட்டென அழகான பிகரை டொக்கு பசங்க தள்ளிகிட்ட வருவதை பார்க்கும் போது அடிவயிறு பத்திகிட்டு எறியுது.....
இதற்க்கு காரணம் தலைமுறை இடைவெளியும் போங்குதனம்தான்....என்ன செய்ய..? ஆகவே காதலர்களே காலம் கனியும் வரை பொறுத்து இருங்கள்.... தயவு செய்து கண்டவன் வாயில் விழாதீர்கள் அதே போல் காலிலும்....
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
mee firste
ReplyDeletemee seconde..
ReplyDeletemee thirde...
ReplyDeleteஇதன் மூலம் அறிவிக்க படுவது.... களத்திலே குதிச்சாச்சு....
ReplyDeleteஅண்ணே.... உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியது இல்லே... பீச்சிலே அதிகம் காணப்படுவது... கள்ளக்காதல் சோடிகலாமே.....!!!!
ReplyDelete:-(
நேற்றுதான் உச்ச நீதி மன்றம் ஓரினச் சேர்க்கை தவறில்லை என அங்கிகரித்துள்ளதாக படித்தேன். உண்மையில் வாய்ப்புகள் இல்லாமல்தான் அனைவரும் அந்த வலையில் போய் விழுவதாக என் எண்ணம். 18 வயதில் தன் நாட்டின் தலைவரை முடிவு செய்த ஒருவருக்கு தன் வீட்டின் தலைவியை முடிவு செய்ய இயலாமல் இருப்பது சமூக சூழ்னிலையே,.. இந்த கட்டத்திலாவது காதல் அங்கீகரிக்கபட வெண்டும்
ReplyDeleteஅட்வைஸுக்கு தேங்க்ஸு..
ReplyDeleteஇனிமே சுதாரிப்பா இருந்துக்குறேன்..!
//அட்வைஸுக்கு தேங்க்ஸு..
ReplyDeleteஇனிமே சுதாரிப்பா இருந்துக்குறேன்..//
போலிஸ் பிடிச்ச ஆளுகள்ளே நம்ம அண்ணன் இருந்திருக்காரு போல..?
அவர் பேரை குறிப்பிடாத உன் பெருந்தண்மையை பாராட்டறேன் ஜாக்கி..
சரியாத்தான் சொல்றீக!
ReplyDeleteஎன்ன கொடுமை சார் இது!
ReplyDeleteSuper
ReplyDeleteகாதல் அழகானது ஆனால் இப்போதைய மெரினா பீச் காதலர்கள் காதல் செய்வது இல்லை. காமம் தான் எரிகிறது.இதைப் பற்றி நான் எழுதியது...
ReplyDeleteஅ(ணை)னைப்பு …
கற்புக்கு பெயர் போன
கண்ணகியின் சிலைக்குப் பின்
காதலர்களின் சில்மிஷம்
திருமணத்திற்கு முன்பே…
காதல் தீ
பற்றிக் கொள்ள
அணைக்கின்றது
காதலர் ஜோடி
கண்ணகியின்
கோபத்திற்கு ஆள்பட்டு
சென்னை எரிந்தால்
அணைப்பது யாரோ ?
அதனால் தான்…
மதுரையை எரித்த
கண்ணகியின் சிலை
கடற்கரைக்கு அருகில்
சென்னையில்…
அ(ணை)னைக்க
வசதியாக இருப்பதால்…
ஹை... இங்கிலிஸ்கார தொரை என்னம்மா தமில் கவுஜை படிக்கு...
ReplyDeleteவிவேக் ஒரு காமெடில சொல்லுவார் நம்ம நாட்டுல பப்ளிக்கா பிஸ் அடிக்கலாம் கிஸ் அடிக்க முடியாது (ஆஸ்திரேலியாவில்)இங்க பப்ளிக்கா கிஸ் அடிக்கலாம் பிஸ் அடிக்க முடியாதுன்னு.
ReplyDelete:))
காதலுக்கும் காதலர்களுக்கும் ஏன் எதிர்ப்புனு நீங்க சொல்லுறது தான் சரி !!!!!
ReplyDelete;)))))))))))
ஜாக்கி,
ReplyDeleteசும்மா ஜாலிக்கு புகைப்படத்தில் இருப்பது சங்கவியா?
//அந்த நாய் அந்த இடத்தில் “கக்கா” போன அதை பத்தி அவன் கவலையே பட மாட்டான்.... ஏன்னா அவனை பொறுத்தவரை அசிங்கம்னு சொல்லறது உடலறுவு மட்டும்தான்....//
ReplyDeleteஉண்மைதான்..
நையாண்டி நைனா said...
ReplyDeleteஹை... இங்கிலிஸ்கார தொரை என்னம்மா தமில் கவுஜை படிக்கு...//
அய்யா நைனா...கலைச்சது போதும் அண்ணாத்தே...லூஸ்ல வுடு...
நையாண்டி நைனா said...
ReplyDeleteஹை... இங்கிலிஸ்கார தொரை என்னம்மா தமில் கவுஜை படிக்கு...//
அய்யா நைனா...கலைச்சது போதும் அண்ணாத்தே...லூஸ்ல வுடு...
நீங்க போட்டுயிருக்குற படங்களை பார்த்தா காதலர்கள் போல தெரியலையே!!
ReplyDeleteஉன்னை கேமராவை வெளியில எடுக்க சொன்னது தப்பா போச்சு..
ReplyDeleteநீங்க என்ன சொல்ல வரீங்க?
ReplyDelete//ஆகவே காதலர்களே காலம் கனியும் வரை பொறுத்து இருங்கள்.... //
பொது இடத்தில் அப்போ எல்லை மிரலாமா?
அப்புறம் இன்னொன்னு பீச்,பார்க் போன்ற இடங்களில்
தங்களது காம இச்சையை தீர்த்து கொள்வது காதலர்கள்
மட்டும் அல்ல, கள்ள காதலும் விபச்சாரமும் தான் அதிகம்.
இந்தமாதிரி டக்கர் இடுகையெல்லாம் காதலிச்சவங்கதான் எழுதமுடியும்!
ReplyDeleteஸ்ரீ....
நைனா உனக்கு என் நன்றிகள் பல
ReplyDeleteஅண்ணே.... உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியது இல்லே... பீச்சிலே அதிகம் காணப்படுவது... கள்ளக்காதல் சோடிகலாமே.....!!!!
ReplyDelete:-(//
நைனா நீ சொல்வதில் உண்மை இருக்கின்றது ஒத்துக்கொள்கிறேன் நன்றி
காதலர்கள் கண்களில் இந்தப் பதிவு படணுமேன்னு கவலையா இருக்கேன்.
ReplyDeleteஎலியட்ஸ் பீச்சில்கூட கொஞ்சம் அத்துமீறின வகையில் ஒரு ஜோடியை முந்தாநாள் பார்த்தேன்.
எங்கூரில் காதலுக்கு ஜே என்பதால் அப்படி ஒன்னும் பெருசா இங்கே தோணலைன்னாலும்...... கலாச்சாரக் காவலர்கள் புழங்கும் இடம் என்பதால் கொஞ்சம் சூழ்நிலையை மனசில் வச்சுக்கிட்டால் அவுங்களுக்கு(ம்) நல்லது.
நேற்றுதான் உச்ச நீதி மன்றம் ஓரினச் சேர்க்கை தவறில்லை என அங்கிகரித்துள்ளதாக படித்தேன். உண்மையில் வாய்ப்புகள் இல்லாமல்தான் அனைவரும் அந்த வலையில் போய் விழுவதாக என் எண்ணம். 18 வயதில் தன் நாட்டின் தலைவரை முடிவு செய்த ஒருவருக்கு தன் வீட்டின் தலைவியை முடிவு செய்ய இயலாமல் இருப்பது சமூக சூழ்னிலையே,.. இந்த கட்டத்திலாவது காதல் அங்கீகரிக்கபட வெண்டும்//
ReplyDeleteநன்றி ஜோதி ரொம்ப அற்புமாக எழுதி இருக்கின்றீர்கள்... ஒரு பதிவை படித்து விட்டு அதை உணர்ந்து பதிவு எழுதுவது என்பது பெரிய விஷயம் மிக்க நன்றி
அட்வைஸுக்கு தேங்க்ஸு..
ReplyDeleteஇனிமே சுதாரிப்பா இருந்துக்குறேன்..!//
நன்றி உ தமிழன்
நன்றி தண்டோரா,வால்பையன், இங்லீஷ்காரன்,ரமேஷ் வைத்யா, நைனா
ReplyDeleteவிவேக் ஒரு காமெடில சொல்லுவார் நம்ம நாட்டுல பப்ளிக்கா பிஸ் அடிக்கலாம் கிஸ் அடிக்க முடியாது (ஆஸ்திரேலியாவில்)இங்க பப்ளிக்கா கிஸ் அடிக்கலாம் பிஸ் அடிக்க முடியாதுன்னு.
ReplyDelete:))//
உண்மை சிவா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
காதலுக்கும் காதலர்களுக்கும் ஏன் எதிர்ப்புனு நீங்க சொல்லுறது தான் சரி !!!!!
ReplyDelete;)))))))))))//
நன்றி பதி தங்கள் கருத்துக்கு
ஜாக்கி,
ReplyDeleteசும்மா ஜாலிக்கு புகைப்படத்தில் இருப்பது சங்கவியா?//
இல்லை முரளி
இங்கே வேடிக்கை பாக்க மட்டுமே போக முடிந்தது என்னால். காதலி கிடைக்கலியேஏஏஏஏஏஏஏஏஏஏ
ReplyDelete//அந்த நாய் அந்த இடத்தில் “கக்கா” போன அதை பத்தி அவன் கவலையே பட மாட்டான்.... ஏன்னா அவனை பொறுத்தவரை அசிங்கம்னு சொல்லறது உடலறுவு மட்டும்தான்....//
ReplyDeleteஉண்மைதான்..//
நன்றி தீப்பெட்டி
நீங்க போட்டுயிருக்குற படங்களை பார்த்தா காதலர்கள் போல தெரியலையே!!//
ReplyDeleteகலை ஒரு போட்டோ மட்டுன் தான் அப்படி இருக்கும் மத்த போட்டோக்கள் எடுக்க வசதி பத்தலை
உன்னை கேமராவை வெளியில எடுக்க சொன்னது தப்பா போச்சு..//
ReplyDeleteநன்றி சூர்யா
பீச்,பார்க் போன்ற பொது இடத்தில் காம இச்சையை தீர்த்து கொள்வது கள்ள
ReplyDeleteகாதலர்களே.
ஒரு ஹெவி மேட்டரை ரொம்ப லைட்டா அதே சமயம் நெத்திப்பொட்டுல அடிக்கிற மாதிரி எழுதி இருக்கிங்க.
ReplyDeleteஇந்தமாதிரி டக்கர் இடுகையெல்லாம் காதலிச்சவங்கதான் எழுதமுடியும்!
ReplyDeleteஸ்ரீ....
நன்றி ஸ்ரீ அதை எழுத காதலிக்க வேண்டும் அல்லது காதலித்து இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை...
சமுகத்தை புரிந்து கொண்டாலே போதும்..
இருப்பினும் நீங்கள் சொல்வது உண்மையே,,,,
//ஆகவே காதலர்களே காலம் கனியும் வரை பொறுத்து இருங்கள்.... //
ReplyDeleteபொது இடத்தில் அப்போ எல்லை மிரலாமா?
அப்புறம் இன்னொன்னு பீச்,பார்க் போன்ற இடங்களில்
தங்களது காம இச்சையை தீர்த்து கொள்வது காதலர்கள்
மட்டும் அல்ல, கள்ள காதலும் விபச்சாரமும் தான் அதிகம்.--//
பொது இடத்தில் எல்லை மீறக்கூடாது என்று ஏற்க்கனவே சொல்லிவிட்டேன்.. அதே போல் எலக்ட்ரானிக் மீடியா வளர்ச்சியால் நம் வீட்டு வரவேற்ப்பு அறைக்கே எல்லாம் வந்து விட்ட பிறகு ஒர முத்ததை பொது இடத்தில் கொடுத்து கொள்ள முடிகின்றதா? என்பதே என் கேள்வி....
காமம்கட்டவிழ்த்த நாடுகளில் கூட பொது இடத்தில் எந்த மனிதனும் அலப்பறை பண்ணமாட்டான்...
இந்த நாட்டில் மட்டம எல்லா நாடுகளிலும் விபச்சாரமும் கள்ளகாதலும் உண்டு.. நான் வக்காலத்து வாங்குவது காதலர்களுக்கு....
அதே போல் எத்தனை நாளைக்குதான் பூவும் கார்டும் கொடுத்து பேச முடியும்???? இப்போது ஆண்களைவிட பெண்கள் படுஷார்ப்...
நன்றி ஜெட்லி
எங்கூரில் காதலுக்கு ஜே என்பதால் அப்படி ஒன்னும் பெருசா இங்கே தோணலைன்னாலும்...... கலாச்சாரக் காவலர்கள் புழங்கும் இடம் என்பதால் கொஞ்சம் சூழ்நிலையை மனசில் வச்சுக்கிட்டால் அவுங்களுக்கு(ம்) நல்லது.//
ReplyDeleteநன்றி துளசி கோபால் ஒரு பெண்ணாக இரந்தாலும் அழகாக தர்கம் இல்லாமல் புரிந்து சொல்லுகின்றீர்கள்...
இங்கே காதல் என்றால் மனிக்கனக்காக பேசுவதும் கைபிடித்து நடப்பது மட்டுமே... அப்படி பேசாமல் உதட்டில் முத்தடிமிடும் காதல் நாய் காதலாம்....
இவர்களை பெறுத்தவரை கொஞ்சம் காமம் கூட நாய் லீஸ்டட்டில் சேர்த்து விடுகின்றனர்...
//நன்றி துளசி கோபால் ஒரு பெண்ணாக இரந்தாலும்...//
ReplyDeleteஐயோ ஜாக்கி என்னை இப்படி இரத்தலுக்கு ஆளாக்கலாமா? :-))))
எல்லா சிக்னல்களிலும் பெண்கள்தான் இரந்து வாழ்கிறார்கள் என்பதாலா?
ஐயகோ.....ஓஓஓஓஓ