(EAGLE EYE)கம்யூட்டரே ஒரு கொலை செய்...எழுத்தாளர் சுஜதாவிடம் ஒரு முறை கம்யூட்டர் அறிமுகம் இல்லாத காலகட்டங்களில் கம்யுட்டர் பற்றி எளிதாய் விளக்குங்கள் என்று சொன்ன போது அவர் இப்படி சொன்னார் சென்னை கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் செல்ல வேண்டும் என்று கம்யுட்ட்ரிடம் வழி சொல்லிவிட்டால் அது பஸ் பிடித்து தாம்பரம் சென்று விடும்...


கிண்டியில் ஒரு சின்ன விபத்து அதனால் டிராபிக் ஜாம் அதனால் பேருந்து நிறுத்தபட்டுவிட்டது என்றால் அது கோயம்பேட்டிலேயே பேருந்து வரும் வரை நிற்க்கும் ஆனால் மனிதன் சட்டென பஸ் பிடித்து கோடம்பாக்கம் போய் லிபர்ட்டி இறங்கி மின்சார ரயில் பிடித்து தாம்ரம் போய் சேர்ந்து விடுவான் அதனால் எப்போதுமே மனிதன் தான் சிறந்தவன் என்று பதில் சொன்னார்....

பொதுவாக கம்யுட்டர் என்பது மொத்த மனித சிந்தனைகளின் கூட்டு வடிவம்... அதற்க்கு விடை என்பது சரியாக இருக்க வேண்டும். 99 பர்செண்ட் என்றால் கூட கம்யுட்டர் ஒத்துக்கொள்ளாது... ஆனால் மனிதனை பொறுத்த வரை பிரச்சனை அல்லது சுழலை பொறுத்து அதை 60 பர்சென்ட் சரியாக இருந்தாலே ஏற்றுக்கொள்வான்... ஆனால் புரோகிரம் செய்த கம்யுட்டரை பொறுத்தவரை அது தவறு அல்லவா? அப்படி அந்த கம்யுட்டர் சர்வ அதிகாரம் கொடுக்கப்பட்டு இருந்தால் அதுவே தன்னை ஒரு மனிதனாக நினைத்து செயல்பட்டால் என்ன என்ன இடர்பபாடுகளை நாம் எதிர்நோக்க வேண்டி வரும் என்பதை ஈகிள் ஐ படத்தின் கதை...

பொதுவாக நமக்கு ஈகிள் ஐ என்றால், எழுத்தாளர்கள் சுபா அறிமுகப்படுத்திய டிடெக்டிவ் எஜென்சியும், அதன் தலைவர் ராமதாசும் அவர் குடையும் பைப்பும் நினைவுக்கு வரும்.... ஆனால்இந்த படம் வேறு பார்வை வேறு கோனம்... இந்த படம் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை அந்த டெம்ட் குறையாமல் திரைக்கதை அமைத்து இருக்கின்றார்கள்.....

ஈகிள் ஐ படத்தின் கதை இதுதான்...

நீ வாழனும்னா நான் சொல்லற பேச்சை கேட்டுதான் ஆகனும் என்பதுதான் இந்த படத்தின் ஒரு வரிகதை...

பயங்கரவாதத்தை தடுக்க அமெரிக்க அரசாங்கம் பெண்டகனில் பரம ரகசியமாக ஒரு வேலை செய்து வருகின்றது... அதாவது சந்தேகப்படும் எல்லாமனிதரையும் கண்கானிப்பது அது எப்படி சாத்தியம்... இந்த தகவல் தொழில் நுட்ப உலகில் அனைத்தும் சாத்தியம்தான்... அதை நீங்கள் படம்பார்க்கும் போது உணர்வீர்கள்...
அப்படி ஒரு அதி புத்திசாலிதனமான கம்யுட்டர் உதவியுடன் ஒரு பயங்கர வாதியை கண்கானிக்க அவன் பயங்கரவாதியா? அல்லது அந்த குழுவில் இடம்பெற்று இருப்பவனா? என்பது சரிவர தெரியாத நிலையில் ஆளில்லாத விமானம் மூலம் அவனை கண்கானிக்கின்றது எப் பி ஐ.


அவன் ஒரு சவ ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றான்... அப்போது அவன் முகம் கொஞ்சம் மங்கலாக கிடைக்கின்றது அதனை கம்யுட்டர் மூலம் அனலைஸ் செய்யும் போது தேடப்படும் தீவரவாதி முகத்துடன் அது 51 பர்சென்ட்தான் பொருந்தி போகின்றது... ஆனால் அமெரிக்க அதிபர் அந்த தீவரவாதியை தீர்த்து கட்ட சொல்லி விடுகின்றார்.... கம்யூட்டரை பொறுத்தவரை 51 பர்சென்ட் தானே பொருந்தி போயிற்று எப்படி அந்த முடிவை எடுக்கலாம்? அதனால் அந்த முடிவை எடுத்த அமெரிக்க அதிபரை கொலை செய்ய திட்டம் போடுகின்றது.... அந்த திட்டம் எப்படி போட்டது யாரையெல்லாம் அது மிரட்டியது என்பதை வெண்திரையில்காண்க...


படத்தைபற்றிய சுவாரஸ்யங்களில் சில...,.

இந்த படம் போன வருடம் வெளியானது... இந்த படத்தின் தயாரிப்பாளர் திரை பிதாமகர் ஸ்பீல்பெர்க்....

டிரன்ஸ்பார்மர் படத்தின் நாயகன்தான் இந்த படத்தின் ஹீரோ... எனக்கு என்னவோ இந்த பையனை ஸ்பில்பெர்க்,க்கு பிடித்து போய் விட்டது என்று எண்ணுகிறேன்....Jerry Shaw (Shia LaBeouf)

அதே போல் இந்த படத்தில் தன் விடலைதனத்தை மூட்டைகட்டிவிட்டு நடிப்பில் முதிர்ச்சி காண்பிக்கின்றார்....

படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை பதட்டத்தோடு திரைக்கதையை நகர்த்தியது மிக அழகாக நகர்த்தி இருக்கின்றார் இயக்குனர்...D.J. Caruso

ஆக்ஷன் பட விரும்பிகளுக்கு இந்த படம் ஒரு அல்வா துண்டு...

படத்தின் கார் சேசிங் காட்சிகளில் மிரட்டி இருக்கின்றார்கள்... அதே போல் படத்தில் ஈகிள் ஐ என்பதால் “பேர்ட் ஐ வியுவ்” ஷார்ட் அதிகம்... Dariusz Wolski ஒளிப்பாதிவாளருக்கு பாராட்டுக்கள்.....

Thomas Morgan (Billy Bob Thornton)எப் பி் ஐ ஏஜென்டாக நடித்து இருக்கும் பில்லி நடிப்பில் பின்னி பெடெலெடுத்து இருக்கின்றார்... அவரின் வேகம் நாமும் எப்பிஐ வேலைசெய்யாமல் போய் விட்டோமே என்று எண்ணவைக்கின்றார்.. இந்த வயதிலும் ஆகஷன் காட்சிகளில் தூள்கிளப்புகின்றார்....

ஒரு கம்யுட்டர் கையில் நாட்டின் அதிகாரம் போய்விட்டால் எது வேண்டுமானாலும் நடக்கும்...

தவறவிடாமல் பார்க்கவேண்டிய ஆக்ஷன் பேக் இது....Directed by D.J. Caruso
Produced by Steven Spielberg
Alex Kurtzman
Roberto Orci
Pat Crowley
Ed McDonnell
Written by John Glenn & Travis Adam Wright
Dan McDermott

Hillary Seitz
Starring Shia LaBeouf
Michelle Monaghan
Billy Bob Thornton
Rosario Dawson
Michael Chiklis
Music by Brian Tyler
Cinematography Dariusz Wolski
Editing by Jim Page
Distributed by DreamWorks Pictures
Release date(s) September 26, 2008
Running time 118 min.
Country United States
Language English
Budget $80,000,000[1]
Gross revenue $178,066,569 (worldwide)

23 comments:

 1. பார்த்துட்டேன் நண்பா இந்த படத்தை ...

  ReplyDelete
 2. சூப்பர் படம் பிடிச்சி இரண்டு முறை பார்த்தேன்

  ReplyDelete
 3. nalla vimarsanam.. download potrukkaen.. paakalam.. :)

  ReplyDelete
 4. படம் பார்த்து படம் பார்த்து கண்ணு போச்சு....

  அட.. நீங்க அறிமுக படுத்துற உலக படம் பார்த்தில்லீங்க...

  "உங்களோட கவர்ச்சி படம் பார்த்து தான்"....

  அய்ய்ய்ய்யாயாயாயாயா சாமி.... நீங்க போட்டிருக்கிற கவர்ச்சி படத்தை தான் சொல்றேன்.

  ReplyDelete
 5. இங்கு நிறைய டிவிடி படங்கள் கொட்டி கிடக்கு  http://stagevu.com/


  தாங்க விமர்சனம் எழுதும் போது இதில் தேடி லிங்க் கொடுக்கலாம்
  அல்லது
  சைடுல வைச்சிக்கலாம் :)

  ReplyDelete
 6. /*கார்த்திகைப் பாண்டியன் said...
  பார்க்கத் தூண்டுது..*/

  அட இங்கே பார்ரா... உங்களையும் கவர்ச்சி படம் படுத்தி எடுக்குதா.... ????

  ReplyDelete
 7. தற்ச்சமயம் கம்பியூட்டர் சார்ந்த திரைப்படங்கள் சக்கை போடு போடுகிறது!

  டெர்மினேட்டர் கூட இந்த வகைதான்!
  அந்த வரிசையில் எனக்கு பிடித்தது!

  I, robot.

  ReplyDelete
 8. அண்ணே... உங்களை வச்சி ஒரு நீதிக் கதை எழுதி இருக்கேன்.... போடட்டுமா ????

  ReplyDelete
 9. /
  ஆக்ஷன் பட விரும்பிகளுக்கு இந்த படம் ஒரு அல்வா துண்டு...
  /

  OK பாத்திடணும்.

  ReplyDelete
 10. நன்றி ஜமால் தொடர் வாசிப்புக்கு

  ReplyDelete
 11. nalla vimarsanam.. download potrukkaen.. paakalam.. :)//

  நன்றி மீ தங்கள் பாராட்டுக்கு

  ReplyDelete
 12. parthudalam//

  நன்றி பிஸ்கோத்து பயல்

  ReplyDelete
 13. "உங்களோட கவர்ச்சி படம் பார்த்து தான்"....

  அய்ய்ய்ய்யாயாயாயாயா சாமி.... நீங்க போட்டிருக்கிற கவர்ச்சி படத்தை தான் சொல்றேன்.//

  உன் கண்ணை பார்த்தாலே தெரியுதே....

  ReplyDelete
 14. தாங்க விமர்சனம் எழுதும் போது இதில் தேடி லிங்க் கொடுக்கலாம்
  அல்லது
  சைடுல வைச்சிக்கலாம் :)//

  நன்றி மின்னல். தங்கள் தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 15. பார்க்கத் தூண்டுது..//

  நன்றி பாண்டியன்

  ReplyDelete
 16. அட இங்கே பார்ரா... உங்களையும் கவர்ச்சி படம் படுத்தி எடுக்குதா.... ????//

  யோவ் நீ அடங்கமாட்டியா?

  ReplyDelete
 17. தற்ச்சமயம் கம்பியூட்டர் சார்ந்த திரைப்படங்கள் சக்கை போடு போடுகிறது!

  டெர்மினேட்டர் கூட இந்த வகைதான்!
  அந்த வரிசையில் எனக்கு பிடித்தது!

  I, robot.//

  வால்பையன் எனக்கும் பிடித்த படம் ஐ ரோபர்ட்...

  ReplyDelete
 18. அண்ணே... உங்களை வச்சி ஒரு நீதிக் கதை எழுதி இருக்கேன்.... போடட்டுமா ????//

  கண்டிப்பா..

  ReplyDelete
 19. /
  ஆக்ஷன் பட விரும்பிகளுக்கு இந்த படம் ஒரு அல்வா துண்டு...
  /

  OK பாத்திடணும்.//

  நன்றி சிவா

  ReplyDelete
 20. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  செய்திவளையம் குழுவிநர்

  ReplyDelete
 21. Next பார்க்க வேண்டிய படம் True Lies- அ இல்ல ‍‍Murder at 1600- கரெக்டா சொல்லுங்க‌

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner