பெங்களுருவில் ஒரு ஊட்டி ரயில்வே ஸ்டேஷன்...

சென்னைவாசிகளுக்கு காதல் வந்தால் அவர்கள் சந்திக்க ஏதுவாக மெரினா பிச்,எலியட்ஸ் பீச்,கிண்டி பாம்பு பண்னை,போன்ற இடங்களை சொல்லலாம்...பொதுவாக இது போன்ற இடங்கள், காதலர்கள் மட்டும் சந்திக்கும் இடம் மட்டும் அல்ல, நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள்,மற்றும் எல்லோரும் மனம் விட்டு பேசக்கூடிய விஷயங்களை இது போன்ற தனியான, அமைதியான இடத்தில் சந்தித்து பேசலாம்...

நான் பெங்களுர் போய் வந்த கதை உங்களுக்கு தெரியும்...பெங்களுரில் நானும் என் மச்சான் ஆனந்தும், பைக்கில் நகர்வலம் செல்வது வழக்கம்...அவன் சிலாகித்த விஷயங்களை என்னோடு பைக்கில் போகும் போது பகிர்ந்து கொள்வான்... அவன் ரொம்ப நாட்களாக மடிவாலாவில் இருந்து 12 கிலோமீட்டரில் ஒரு சொர்கம் காண்பிக்கின்றேன் என்று பல முறை சொல்லி இருக்கின்றான். அந்த இடத்தை புகைபடம் எடுத்து அனுப்பிய போது அந்த இடத்தை பார்க்க மிகுந்த ஆவல்கொண்டேன்.... (என்ட மச்சான்)

சிலக் போர்டில் இருந்து நேராக சர்ஜாபுரா ரோட்டில் பைக்கில் வேகம் எடுத்தால் நடுவில் ஒரு ஏரி வருகின்றது அந்த எரியை சுற்றிலும் ஒரே காதலர்கள் கூட்டம் அதே போல் அந்த ஏரி என் அறிவுக்கு எட்டியவரைஅந்த ஏரி பாதுகாப்பானது அல்ல... இன்னும் யோசித்தால் உள்ளே உள்ள குருவி கத்தியவரை அந்த ஏரி பாதுகாப்பான இடம் அல்ல... குடும்பத்தோடு அங்கு போனால் கூட ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டிவரும்..அதுமட்டும் அல்லாது அது கொலை செய்ய ஏற்ற இடமாகவே ரவுடிகளுக்கு தோன்றும் அப்படி ஒரு தனிமை...

சர்ஜபுரா ரோட்டில்போய் வேகம் எடுத்து லெப்ட் திரும்பினால் மார்த்தஹள்ளி ...ரொம்ப ரொம்ப ஹைடெக்கான சாப்ட்வேர் கட்டிடங்கள் நமக்கு தாழ்வுமனப்பான்மையை உருவாக்குவதில் போட்டி போட்டுகொண்டு இருக்கும்.

அதில் ஒரு 3 கீலோமீட்டர் பயணம் செய்தால் ஒரு ரயில்வேஸ்டேன் அதன் பெயர் பெலன்தூர்ஸ்டேஷன்...ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு ரயில்தான் வருகின்றது என்றாலும் அந்த ஸ்டேஷன் அமைந்திருக்கும் அந்த இடம் ரொம்ப ரொம்ப ரம்யமாக அமைதியாக இருக்கின்றது... அந்த இடத்துக்கு வந்ததும் எதோ ஊட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது போல் ஒரு பிரமை....

அந்த ஸ்டேஷன் பக்கத்திலேயே ஓங்கி வளர்ந்து நிற்க்கும் நிலகிரி தைல மரங்கள்...அதன் பக்கத்திலேயே பசுமையான வயல் வெளி, எந்த வாகன சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்கின்றது. இந்த ரயில் மார்கம் சேலத்தில் இருந்து பெங்களுர் வருபவர்கள் இந்த ஸ்டேஷனை பார்த்து இருக்கலாம்...பக்கத்தில் எல்லா விளை நிலங்களையும் வலைத்து போட்டு வில்லா கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்... பார்பதற்க்கு கிராமம் போல் இருக்கும் இந்த இடத்தில் பெண்ஸ்காரும், பி்எம்டபுள்யு காரும் சர்வசாதாரணமாக செல்கின்றன....

அந்த ரயில்வேஸ்டேஷனில் வேட்டிகட்டியும் நைட்டி அணிந்தும் பெண்கள் வாக்கிங் செல்கின்றார்கள் ரொம்ப அற்புதமான அழகான இடம் அது..பெங்களுர் வாழ் கணவன், மனைவி, காதலர்கள், நண்பர்கள் போன்றவர்கள் சந்தித்து மனம் விட்ட பேச சிறந்த இடம் அது ...

ஒரு டீக்கடை கூட அங்கு இல்லை அதனால் திண்பதற்க்கு எதாவது வாங்கி செல்லுதல் நலம். இன்னும் உங்களிடம் பைக் இருந்தால் அப்படியே ஸ்டேஷன்தாண்டி அந்த பணக்கார பார்ம் ஹவுஸ் போகும் வழியில், பேசிக்கொண்டே மெதுவாக பைக்கில் சென்று அந்த ஒதுக்குபுற பணக்கார வீடுகளை பார்த்துவிட்டு, முடிந்தால் வயிறு எரிந்து விட்டு வாருங்கள்.....அமைதியான அழகான எழிலான இடம் அது...


பொதுவாக அந்த பார்ம் அவுஸ் வீடுகள் வாங்கியவர்களை பார்த்தால் நேர்மையாக சம்பாதித்து வாங்கியவை என்று ஒரு சில வீடுகளை மட்டும் சொல்லாம்... ஒவ்வொறு பெரும் சொத்தின் பின்னும் ஒரு மாபெரும் தவறு இருக்கின்றது என்று சும்மாவா சொன்னார்கள்... ஏனோ அந்த வீடுகளை பார்க்கும் போது அந்த எண்ணம் வந்ததை தவிர்க்க முடியவில்லை... வீடுகளை எடுக்க முடியவில்லை அதற்க்கு பதில் அந்த விளம்பர பலகை மட்டும்...

(அமெரிக்காவில் பொட்டிதட்டும் நமது நண்பர்கள் யாராவது அந்த இடத்தை வாங்க இது பயண்படும்.. எனக்கு அந்த வழியா பைக்ல போக முடியும்...அவ்வளவுதான்)
பெங்களுர் வாசிகள் எற்க்கனவே இந்த இடத்தை பார்த்து இருக்கலாம், சப்போஸ் இந்த பதிவை படித்தவிட்டு போய் பார்த்து உங்களுக்கு அந்த இடம் பிடிக்காமல் கூட போகலாம்... ரசனை என்பது மனிதருக்கு மனிதர் மாறுபாடு கொண்டவை என்பதை மறவாதீர்...

நிழற்படம்...ஜாக்கி/ஆனந்

அன்புடன்/ஜாக்கிசேகர்

தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

28 comments:

 1. இடம் வாங்க நிற்பவர்களின் லிஸ்ட்டோ...

  ReplyDelete
 2. ஆமா... படம் பார்த்த பதிவர்களின் போட்டோ எங்கே...

  இப்படி நீங்க சரக்கை அனுப்பாம மட்டம் போட்டீங்கன்னா.... நான் எப்படி கடை தொறந்து வச்சி யாவாரம் பண்றது....

  ReplyDelete
 3. அந்த ரயில்வே ஸ்டேஷனை பார்த்ததுமே, அச்சு அசலாக எங்க ஊர் ஸ்டேஷன் போலவே இருக்குண்ணே!! ம்.. என்னடா ஆளை கானுமேன்னு பார்த்தேன். பெங்களூர் போயிட்டீங்களா?

  ReplyDelete
 4. பொதுவாக அந்த பார்ம் அவுஸ் வீடுகள் வாங்கியவர்களை பார்த்தால் நேர்மையாக சம்பாதித்து வாங்கியவை என்று ஒரு சில வீடுகளை மட்டும் சொல்லாம்... ஒவ்வொறு பெரும் சொத்தின் பின்னும் ஒரு மாபெரும் தவறு இருக்கின்றது என்று சும்மாவா சொன்னார்கள்... ஏனோ அந்த வீடுகளை பார்க்கும் போது அந்த எண்ணம் வந்ததை தவிர்க்க முடியவில்லை...


  சூப்பர்...

  ReplyDelete
 5. யோவ் சிவா நீ ஆரம்பிச்சது நம்ம மக்கா எல்லாம் ஊர் கூடி தேர் இழுத்து 5 வரை எடுத்துக்குனு போயிட்டாங்க....

  ReplyDelete
 6. நன்றி 2 நைனா, 3தண்டோரா,4 நகைகடை நைனா,5குவாட்டர் கோயிந்தன்...

  ReplyDelete
 7. இடம் வாங்க நிற்பவர்களின் லிஸ்ட்டோ...//

  நானே பஸ்ட் அப்படித்தான் நினைச்சிட்டேன் நீங்க வந்து அதை பிரேக் பண்ணிட்டிங்க.. நன்றி அன்பு

  ReplyDelete
 8. அந்த ரயில்வே ஸ்டேஷனை பார்த்ததுமே, அச்சு அசலாக எங்க ஊர் ஸ்டேஷன் போலவே இருக்குண்ணே!! ம்.. என்னடா ஆளை கானுமேன்னு பார்த்தேன். பெங்களூர் போயிட்டீங்களா?//

  அப்படியா நன்றி கலை...ஒரு ரெண்டுநாள் போயிட்டேன்

  ReplyDelete
 9. பொதுவாக அந்த பார்ம் அவுஸ் வீடுகள் வாங்கியவர்களை பார்த்தால் நேர்மையாக சம்பாதித்து வாங்கியவை என்று ஒரு சில வீடுகளை மட்டும் சொல்லாம்... ஒவ்வொறு பெரும் சொத்தின் பின்னும் ஒரு மாபெரும் தவறு இருக்கின்றது என்று சும்மாவா சொன்னார்கள்... ஏனோ அந்த வீடுகளை பார்க்கும் போது அந்த எண்ணம் வந்ததை தவிர்க்க முடியவில்லை...


  சூப்பர்.//

  நன்றி பேரரசன்

  ReplyDelete
 10. ஆமா... படம் பார்த்த பதிவர்களின் போட்டோ எங்கே...

  இப்படி நீங்க சரக்கை அனுப்பாம மட்டம் போட்டீங்கன்னா.... நான் எப்படி கடை தொறந்து வச்சி யாவாரம் பண்றது....

  ReplyDelete
 11. ஆமா... படம் பார்த்த பதிவர்களின் போட்டோ எங்கே...

  இப்படி நீங்க சரக்கை அனுப்பாம மட்டம் போட்டீங்கன்னா.... நான் எப்படி கடை தொறந்து வச்சி யாவாரம் பண்றது....

  ReplyDelete
 12. ஆமா... படம் பார்த்த பதிவர்களின் போட்டோ எங்கே...

  இப்படி நீங்க சரக்கை அனுப்பாம மட்டம் போட்டீங்கன்னா.... நான் எப்படி கடை தொறந்து வச்சி யாவாரம் பண்றது....

  ReplyDelete
 13. If you walk 100 meter on the track towards Marathahalli, you will notice a village called 'munnekolalu'; this is where i am living. just 100 meter from the track and 1 km away from the station.

  ReplyDelete
 14. ஜி நான் இந்த பெலந்தூரில் தான் கடந்த 1 1/2 வருடமா இருக்கிறேன் .ஆனால் நான் இந்த ரயில்வே ஸ்டேசன கேள்வி பட்டதே இல்லை . நீங்கள் போட்டிருக்கும் cessana park பக்கத்தில் தான் உள்ளேன் ..

  நன்றி உங்கள் தகவலுக்கு .. நான் போய் தேடி பார்க்கிறேன் ..

  அப்புறம் நீங்க சொன்ன ஏரி மெய்யாலுமே பாதுகாப்பனது அல்ல ..

  நிறைய வழிப்பறிகள் அந்த ஏரி பக்கத்துல உள்ள ரோடில் நடைபெறுவது வழக்கம் ..

  ReplyDelete
 15. இப்படி நீங்க சரக்கை அனுப்பாம மட்டம் போட்டீங்கன்னா.... நான் எப்படி கடை தொறந்து வச்சி யாவாரம் பண்றது....--//

  இப்பதான் தெரியுது நம்ம சரக்கை எதிர்பாபர்த்தம் ஆட்கள் இருக்காங்கன்னு இப்பதான் தெரியுது....
  நன்றி நைனா...

  ReplyDelete
 16. If you walk 100 meter on the track towards Marathahalli, you will notice a village called 'munnekolalu'; this is where i am living. just 100 meter from the track and 1 km away from the station.//

  அப்படியா ஷாஜீ நல்லது மிக்க நன்றி

  ReplyDelete
 17. அப்புறம் நீங்க சொன்ன ஏரி மெய்யாலுமே பாதுகாப்பனது அல்ல ..

  நிறைய வழிப்பறிகள் அந்த ஏரி பக்கத்துல உள்ள ரோடில் நடைபெறுவது வழக்கம் ..//
  சசூரியன் அப்போதுதான் அந்த வழியாக சென்றேன் ஏனோ மண்டைக்குள் குருவி உடனே கத்தியது....

  ReplyDelete
 18. ஜி நான் இந்த பெலந்தூரில் தான் கடந்த 1 1/2 வருடமா இருக்கிறேன் .ஆனால் நான் இந்த ரயில்வே ஸ்டேசன கேள்வி பட்டதே இல்லை . நீங்கள் போட்டிருக்கும் cessana park பக்கத்தில் தான் உள்ளேன் ..

  நன்றி உங்கள் தகவலுக்கு .. நான் போய் தேடி பார்க்கிறேன் ..

  கண்டிப்பாக பார்த்து விட்டு பதிவிடுங்கள்....
  நன்றி சூரியன் தங்கள் தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்திற்க்கும்....

  ReplyDelete
 19. (போன வருசம் எழுதுன பதிவுக்கு இப்ப பின்னூட்டம் போட்றது சரியானு தெரியல,ஆனாலும் ஏதே சொல்லனும்னு தோனுது)///////
  நீங்கள் சொல்வது சரிதான்,பல முறை அந்த இரயில் நிலையத்தை மீதமான வேகத்தில் செல்லும் கோயம்புத்தூர் இன்டர்சிட்டியில் பயனித்தவாறே ரசித்திருக்கிறேன்.ஒரு முறை பைக்கில் வழி தவறி அந்த பகுதியில் பயனித்த போது அந்த தனிமையையும்,ரம்மியத்தையும் அனுபவித்தேன்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner