இந்த லகுட பாண்டிகளுக்கு சென்னையில் எதற்க்கு இலவச வீடு????
ஒவ்வோறு சட்ட மன்ற தொகுதியிலும் தேர்ந்து எடுக்கப்படும் சட்ட மன்ற உறுப்பினர் தன் சொந்த ஊர் பிரச்சனையை மக்கள் மன்றத்தில் வைத்து விட்டு சட்ட மன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் கூட வந்த அல்லகைகளை அழைத்துக்கொண்டு ஊர் திரும்ப வேண்டும் இதுதான் நியாயம், தர்மம்...
அதை விடுத்து விட்டு சென்னையில் எங்களுக்கும் வீட்டு மனை அல்லது வீடு வேண்டும் என்று கேட்க உங்களுக்கு உடம்பு கூசவில்லை???, என்னை போல் பஞ்சம் பொழைக்க சென்னை வந்தேன் என்று சொல்லுங்கள்.... உழைப்பு, திறமை ,அதிஷ்டம் இருந்தால் சென்னையில் போட்டி போடுங்கள் வீட்டுமனை வீடு வாங்குங்கள்..... அதை விடுத்து மக்களுக்கு சேவை செய்கின்றேன் என்று சொல்லி விட்டு, அதுவும் அரசு செலவில் இலவசமாக வீடு வேண்டும் என்று கெட்பது எந்த வகையில் நியாயம்???
234 தொகுதிகளில் இருந்து தேர்ந்து எடுக்கபடும் இவர்கள் சென்னை வந்து தலமை செயலகத்தில் தன் தொகுதி பிரச்சனை பற்றி பேச வேண்டும்... இவர்களுக்கு மாதம் எல்லா படிகளும் சேர்த்து 50 ஆயிரம் வரை செலவு செய்கின்றது, தமிழக அரசு... அதே போல் இவர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை வந்து மக்கள் பணி யற்ற வேண்டும் என்பதற்க்காகவும்,மெரினாபீச் பிளாட்பாரத்தில் படுத்தூங்க கூடாது என்பதற்க்காகவும், சேப்பாக்கத்தில் எம்எல்ஏ ஹாஸ்டல் என்ற ஒன்றை கட்டி கொடுத்து இருக்கின்றது அரசு... பொதுவாக இதில் யாரும் தங்குவது இல்லை இவர்கள் கூட வரும் தொண்டரடி பொடியாழ்வார்கள்தான் இந்த வளாகத்தை நிரம்ப ஆக்கிரமித்து இருப்பார்கள்.....
மாசம் சொலையா 5000 வீட்டு வாடகை கொடுக்கற கஷ்டம் வேதனை எனக்கு மட்டுமே தெரியும்... அந்த 5000த்தை எண்ணி கொடுக்கும் போது அவ்வளவு கஷ்டமா இருக்கும்....ஐடி காரர்கள் ஏற்றி விட்ட வாடகையால் பல குடும்பங்கள், சென்னையில் குடும்பம் நடத்தவே சிரமம் கொள்கின்றன... பல நடுத்தர குடும்பங்கள் உன்னை பிடி என்னை பிடி என்று வீட்டு லோன் போட்டு அந்த கடனை அடைக்க முடியாமல் விழி பிதுங்கி கிடக்கின்றன....
இவர்கள் நோவாமல் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு சென்னைக்கு வருவார்களாம்... இவர்களுக்கு சென்னையில் வீடு கொடுத்து குடும்பத்தோடு டேரா போட்டு சென்னையில் நோகாமல் நோம்பு குளிப்பார்களாம்....நாம் வாயில் விரல் வைத்து பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமாம்....
தான் ஊட்டுக்கு ஒரு பைப் கனெக்ஷன் கூட எடுத்துக்காம சி்எம்மா இருந்து செத்து போனவர் காமராஜர்... கடைசிவரை சைக்கிள்ள போனார் கக்கன்... இவுங்க என்னடான்னா எனக்கு வீடு வேனும் சொல்லறாங்க.... என்ன ஒரு மக்கள் சேவை...
எங்க ஊரு பிரச்சனையை பேசுங்கன்னு உங்களை அனுப்பி வச்சா? நீங்க உங்க வீட்டு பிரச்சனையை பத்தி பேசறிங்க.... நல்லா இருக்கு உங்க நியாயம்...
இந்த விஷயத்துக்கு மூல காரணம் யார் தெரியுமா? சமஉ ஞானராஜசேகரன் என்ற காங்கிரஸ் எம் எல்ஏ தான்... இவர் இந்திய இறையாண்மை கட்டிகாக்க அரும்பாடு பட்டவர்...ஈழ தமிழர்களை இந்திய அரசு நலமாக வாழவைத்துக்கொண்டு இருக்கின்றது என்று தெடர்ந்து சொல்லிவருபவர்... ஈழபிரச்சனைக்கு விடுதலைபுலிகள்தான்முதல்காரணம், மூலகாரணம் என்று தமிழ்நாட்டின் பாதுகாப்பு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு தொடர்ந்து சூளுரைத்து வருபவர். தொடர்ந்து தமிழ் சமுதாய மக்களுக்கு அரும்பாடுபடவே சென்னையில் அவர் இலவச வீ்ட்டுமனை கேட்கின்றார்....
கலைஞர் அவர்களே ஏதோ போகும் போது நல்லது செய்து விட்டு போகின்றேன் என்று நினைத்தக்கொண்டு, இலங்கைபிரச்சனையை போல் இந்த விஷயத்தில் சொதப்பாதீர்கள்....நீங்கள் உங்கள் வாழ்ந்த விட்டை மருத்துவமனைக்கு கொடுக்கலாம்....ஆனால் ஊரில் இருந்து மக்கள்சேவை செய்ய வந்து விட்டு, உழைக்காமல் சட்டமன்ற உறுப்பினர் என்ற காரணத்துக்காக, இலவசமாக சென்னையில் வீட்டை கேட்பதை தயவு செய்து ஊக்கபடுத்தாதீர்கள்...
மீறியும் நீங்கள் இந்த விஷயத்தில் ஊக்கபடுத்தினால் மக்கள் மத்தியில் நீங்களும் திமுக கழகமும் டரியல் ஆகிவிடுவீர்கள்....
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Subscribe to:
Post Comments (Atom)
நியாயமான எச்சரிக்கை.
ReplyDeleteஅள்ளி அள்ளி லஞ்சம் வாங்குறது, நா கூசாமல் பிச்சை கேட்கிறது - இவனுகளையெல்லாம் அம்மணமா நிக்க வச்சி சாட்டையால அடிக்கணும்.
சரியான செருப்படி , இத நோட்டீஸ் அடிச்சு எல்லா சட்ட மன்ற உறுப்பினருக்கும் அனுப்பனும் , மானம் கெட்ட பசங்க , அடுத்து கூட படுக்க ஒருத்தியும் ஏற்பாடு பண்ணி கொடுக்கணும்னு கேட்டாலும் கேப்பானுங்க ... அடுத்த தடவ இவனுங்களுக்கு ஒட்டு போட கூடாது நடு நெத்தியில நச்சுனு ஒரு ஓட்டை போட்டு காலண்டர் மாதிரி அந்த அந்த ஊர் புளிய மரத்துல தொங்க விடனும்...
ReplyDeleteநீங்க எழுத்து பிழையா ஒன்னு சொல்லியிருக்கீங்க
ReplyDeleteஅத வேண்டுமானால் கொடுப்பார்.
அவர்களுக்கென்று விடுதி இல்லையா? எம்எல்ஏ ஹாஸ்டல் இருப்பதாக அறிந்தேன். பின்னர் ஏன் தனிவீடு. எல்லா நாட்டு அரசியல்வாதிகளும் ஒரே மாதிரி சில விடயங்களில் இருப்பார்கள் அதில் இந்த வீடு விடயமும் வரும்.
ReplyDelete:)) சொல்லி திருந்துபவர்களா அரசியல்வாதிகள் :)
ReplyDeleteநல்ல சொன்னிங்கப்பா.....மக்கள் இழிச்சவாயர்களாக இருக்கும் வரை
ReplyDeleteஇப்படிதான் ஏறிமிதிப்பார்கள்..நல்ல குட்டு இந்த நரிகளுக்கு
This comment has been removed by the author.
ReplyDeleteHi
ReplyDeleteஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
நல்லா சொன்னீங்க... ஆனா கேட்குறது???
ReplyDeleteஇவனுக பண்ணுற பிராடுதனத்திற்கு வீடு ஒண்ணு தான் குறைச்சல்..
ReplyDeleteஎதுவும் செய்யமுடியாமல் பார்த்துக்கொண்டு இருப்பதை நினைத்தால்....என்னமோ போங்க.. வர கடுப்புல ..
nalla seruppala adicha mathiri than sollirukreenga but inum konjam serupula edhayo thottutu adicha mathiri sollirundha kuda avangaluku ellam oraikadhu..
ReplyDeleteveedu mattum ketanungale nu sandhoshapadaradha?? illa idhu kuda vera edhayachum serthu ketuduvangalo nu erichalpadaradha nu theriyala..
காற்றுள்ள போதே தூற்றிகொள்!
ReplyDeleteபதிவியுள்ள போதே சொத்து வாங்கி கொள்!
இவனுங்க வீட்டை வாங்கி மட்டும், அப்படியே தங்கிட்டாலும்...
ReplyDeleteகண்டார பயலுங்க வாடகைக்கு விட்டுவானுங்க!
மொத்தமா 26 ஏக்கர் தேவைப்படும்.
ReplyDeleteஇவனுக பண்ணுற பிராடுதனத்திற்கு வீடு ஒண்ணு தான் குறைச்சல்.
பாலபாரதி MLA எதிர்ப்பு தெரிவிச்சாங்களே. அதையும் எழுதியிருகலாம்.
நல்ல ஒரைக்கிற மாதிரி சொன்னீங்க அண்ணாத்தே. ஆனா நாய் வாலை நிமித்த முடியுமா ?
ReplyDeleteநியாயமான எச்சரிக்கை.
ReplyDeleteஅள்ளி அள்ளி லஞ்சம் வாங்குறது, நா கூசாமல் பிச்சை கேட்கிறது - இவனுகளையெல்லாம் அம்மணமா நிக்க வச்சி சாட்டையால அடிக்கணும்.--//
அவ்வளவு கோபமா? காசு
சரியான செருப்படி , இத நோட்டீஸ் அடிச்சு எல்லா சட்ட மன்ற உறுப்பினருக்கும் அனுப்பனும் , மானம் கெட்ட பசங்க , அடுத்து கூட படுக்க ஒருத்தியும் ஏற்பாடு பண்ணி கொடுக்கணும்னு கேட்டாலும் கேப்பானுங்க ... அடுத்த தடவ இவனுங்களுக்கு ஒட்டு போட கூடாது நடு நெத்தியில நச்சுனு ஒரு ஓட்டை போட்டு காலண்டர் மாதிரி அந்த அந்த ஊர் புளிய மரத்துல தொங்க விடனும்...//
ReplyDeleteநன்றி ஆல்வார் தங்கள் வருகைக்கும் கோபத்துக்கும்
நீங்க எழுத்து பிழையா ஒன்னு சொல்லியிருக்கீங்க
ReplyDeleteஅத வேண்டுமானால் கொடுப்பார்.//
சாரி தலைவா...
அவர்களுக்கென்று விடுதி இல்லையா? எம்எல்ஏ ஹாஸ்டல் இருப்பதாக அறிந்தேன். பின்னர் ஏன் தனிவீடு. எல்லா நாட்டு அரசியல்வாதிகளும் ஒரே மாதிரி சில விடயங்களில் இருப்பார்கள் அதில் இந்த வீடு விடயமும் வரும்.//
ReplyDeleteஇருக்கின்றது நன்றாக படித்து பாருங்கள்
)) சொல்லி திருந்துபவர்களா அரசியல்வாதிகள் :)//
ReplyDeleteஅவுங்க திருந்தராங்களோ, இல்லையோ நம்ம கோபத்தை கொட்டியாச்
சு அவ்வளவுதான்
நல்ல சொன்னிங்கப்பா.....மக்கள் இழிச்சவாயர்களாக இருக்கும் வரை
ReplyDeleteஇப்படிதான் ஏறிமிதிப்பார்கள்..நல்ல குட்டு இந்த நரிகளுக்கு//
நீங்கள் சொல்வது சரிதான் அன்பரே
நல்ல சொன்னிங்கப்பா.....மக்கள் இழிச்சவாயர்களாக இருக்கும் வரை
ReplyDeleteஇப்படிதான் ஏறிமிதிப்பார்கள்..நல்ல குட்டு இந்த நரிகளுக்கு//
நன்றி கிருஷ்னன்
நல்லா சொன்னீங்க... ஆனா கேட்குறது???//
ReplyDeleteகத்தறது நம்ம கடமை கத்தி வச்சாச்சு அவ்ளவுதான் நைனா...
இவனுக பண்ணுற பிராடுதனத்திற்கு வீடு ஒண்ணு தான் குறைச்சல்..
ReplyDeleteஎதுவும் செய்யமுடியாமல் பார்த்துக்கொண்டு இருப்பதை நினைத்தால்....என்னமோ போங்க.. வர கடுப்புல ..//
உங்கள் கோபமே என் கோபமும் கிரி
nalla seruppala adicha mathiri than sollirukreenga but inum konjam serupula edhayo thottutu adicha mathiri sollirundha kuda avangaluku ellam oraikadhu..
ReplyDeleteveedu mattum ketanungale nu sandhoshapadaradha?? illa idhu kuda vera edhayachum serthu ketuduvangalo nu erichalpadaradha nu theriyala..//
சச்சனா உங்கள் கோபமும்தான் என் கோபமும்
காற்றுள்ள போதே தூற்றிகொள்!
ReplyDeleteபதிவியுள்ள போதே சொத்து வாங்கி கொள்!//
அப்படிதான் இருக்கின்றார்கள் வால் பையன்
இவனுங்க வீட்டை வாங்கி மட்டும், அப்படியே தங்கிட்டாலும்...
ReplyDeleteகண்டார பயலுங்க வாடகைக்கு விட்டுவானுங்க!//
இதுவும் உண்மைதான் கலை
மொத்தமா 26 ஏக்கர் தேவைப்படும்.
ReplyDeleteஇவனுக பண்ணுற பிராடுதனத்திற்கு வீடு ஒண்ணு தான் குறைச்சல்.
பாலபாரதி MLA எதிர்ப்பு தெரிவிச்சாங்களே. அதையும் எழுதியிருகலாம்.//
அந்த நீயூஸ் எனக்கு தெரியாது நாஞ்சில் தெரிந்தால் சேர்த்து இருப்பேன்
32 தொகுதி?? நான் 234 ன்னு நினைச்சேன்
ReplyDeleteகாங்கிரஸ் காரங்களை மட்டும் சொல்றீங்களோ??
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA
தமிழ்நாட்டில கட்சி நடத்தும் அனைவருக்கும் தெரியும் நாங்கள் எச்சில் இலைதான் என.
ReplyDeleteதமிழ் இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் அனைத்து தேர்தல் அரசியல் கட்சிகளும் தில்லி ஏகாதிபத்தியத்தின் கைகூலிகள்தான் எனவும், தில்லி ஏகாதிபத்தியத்தின் கூட்டுக் கொள்ளையர்கள் தான் எனவும் தற்போதைய சமூக நிகழ்வுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த ‘இந்தி’யத் தேசியத்தில் இருந்து கொண்டு, தமிழருக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை தேர்தல் அரசியல் கட்சிகளை தமிழ் மக்கள் இனங்காண வேண்டும். மாற்றத்திற்கு வழி தமிழ்த் தேசியமே என்பதை உணர வேண்டும். ‘இந்தி’யத் தேசியம் பேசி இனியும் ஏமாந்து விடக் கூடாது. தமிழர்களே! நன்றாக யோசித்து பாருங்கள். எங்கோ வடநாட்டில் இருக்கும் பனியாவின் மகன் மகளுக்கெல்லாம் முடி சூட்டு விழா நடத்தும் கங்காணிக் கட்சியில் இருந்து கொண்டு எம் தமிழினத்திற்கு துரோகம் இழைக்காதீர்.
வழிமொழிகிறேன் ..
ReplyDeleteபொதுவா பிச்சக்கார பயபுள்ளைக எப்ப பாரு எதாச்சும் கேட்டுக்கிட்டே இருப்பானுக ,அதான் அந்தாலு வீட கட்ட இடம் கேக்குறான் போல ..
மொள்ளமாறி சமஉ
ஒரு வருடத்திற்கு எத்தனை நாள் சட்ட சபை நடக்குது? பத்து நாள் இருக்குமா?
ReplyDeleteரிப்பன் வெட்டுவது, அரசு விழா எல்ல்லாம் தொலை தூரத்தில் இருந்து செய்யும்போது
சட்ட சபையும் ரிமொட்டிலா இருந்து பங்கு கொள்ளட்டும். வேட்டி கிழி ப்பிலிருந்து விடுதலை.
காசு வாங்கி ஒட்டு போட்டா இப்படித்தான்.
உங்கள் கட்டுரையில் ஒரு தகவல் பிழை,
ReplyDeleteஎம்.எல்.ஏக்கள் இலவசமாக மனை கேட்கவில்லை.
சோளிங்கநல்லூர் அருகே வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக மனை ஓதுக்கீடு செய்யுமாறு கேட்டுள்ளனர்.
வாரியம் நிர்ணயம் செய்யும் விலையினை கொடுத்து வாங்க தயாராக இருக்கிறார்கள்
ஆகவே இலவசம் என்று எழுதியது தவறு..ஆனால் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடு வாங்க மக்கள் காலங்காலமாக காத்திருக்க இவர்களுக்கு எதற்க்கு முன்னுரிமை என்று கேளுங்கள் அதில் நியாயம் இருக்கிறது.
அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்
நல்ல சொன்னீங்க நண்பா...சும்மாவே இவர்கள் தொகுதிப்பக்கம் வருவதில்லை...இதில் இவர்களுக்கு இது இப்ப ரொம்ப தேவை தானா?
ReplyDelete"திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்" ன்னு இந்த கோமாளிகளை பார்த்து தான் எழுதி இருப்பார்கள் போல.
ReplyDeleteஇந்த ஆளு ரொம்ப நேர்மை மாதிரி காட்டிக்கொள்வான்.. .
ReplyDeleteஒரு 3,4 தடவை MLA ஆன போதை,
என்ன என்னவோ பேச சொல்லுது.
இந்த MLA-வால் எங்க ஊரு (வேலூர்) மானம் போனதுதான் மிச்சம்.
ஒரு Factory கட்டலாம் ஒரு நாளும் அந்த ஆளு பேசியது கிடையாது.
வேலூர் Bus Stand Entrance ஒரு போர்டு இருக்கும் அதுல திரு______--ஆல் 35 லட்சம் வழங்கி மேம்பாடு (?) செய்ய பட்டுள்ளது என்று .
நீங்க BusStand உள்ள வந்து பார்த்தீங்கன்னா ஒரு நாலு இரும்பு சீட்டும் ,இத்து போன ரோடு இருக்கும் அதுக்கு பேருதான் பஸ் ஸ்டாண்ட்.
அத பத்தி குரல் கொடுக்க மாட்டன் எந்த ஆளு.
பாலாத்துல தண்ணி வந்து எவ்ளோ வருஷம் ஆச்சு ,அது ஏன் எதுக்கு
குரல் கொடுக்க மாட்டன் இந்த ஆளு.
இப்ப என்னடான்ன ,2 ground நெலம் வேணும் ,அப்புறம் போறதுக்கு கார் வேணும் ,புடுங்கறதகு மயிர் வேணும் அப்புறம் ________,________ கேப்பான்.
நாம் இவனுக்கு ஓட்டும் போட்டுட்டு ,ரோட்ல வந்தா வழியும் விட்டுட்டு இப்படியா இருத்த ஆகாது, அடுத்த தடவை ஒட்டு கேட்டு வரும் போது,அவன எதால் அடிச்சாலும்
தகும்....
(பிகு : கண்டிப்பாக என் செருப்பை நான் கேவல படுத்த மாட்டேன் )
That proposal is
ReplyDeleteBad Agley Stupidity Terrible Atrocious Ridiculous Treachery Dirty Sonofbitch
தமிழ்மணத்துல ஓட்டு போட்டாச்சு.
ReplyDeleteThat proposal is not
ReplyDeleteBad Agley Stupidity Terrible Atrocious Ridiculous Treachery Dirty Sonofbitch
actually it is
B.. A.... S....... T....... A........ R......... T........ D.... S.........
If you want you can fill in the blanks otherwise also it has meaning
support u'r say 100%
ReplyDeleteGood request . . .Why they need house in public money ?????????
ReplyDelete