அழகு ஓவியம் பூசிக்கொள்ளும் சென்னை சுவர்கள்....



சென்னையில் சில விஷயங்களை டி பால்ட்டாக பார்க்கலாம்....
ரோடு அப்போதுதான் அழகாய் போட்டு இருப்பார்கள்.. மறுநாள் அந்த இடத்தை குடிநீர் வாரியம் , நேற்று போட்ட ரோட்டை ,தார் மணம் போவதற்க்குள் வெட்டிக்கொண்டு இருப்பார்கள்....எப்போது பார்த்தாலும் ரோட்டின் ஓரம் ஏதாவது வெட்டி போட்டு அதனை மூடிக்கொண்டு இருப்பார்கள்...அந்த குழியை சரியாக மூடாமல் செல்வதால், நாமக்கல்லில் இருந்து சரக்கு ஏத்தி வரும் டிரைவர் முனுசாமிக்கு தெரியவாய்ப்பில்லை. அவர் லாரியை ரிவர்ஸ் எடுக்கும் போது அந்த குழியில் லாரி சக்கரம் மாட்டி, அந்த பக்கம் டிராபிக் ஆகி அப்புறம் கிரேன் வந்து என்று இப்படி சென்னை பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம்....

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை மவுன்ட் ரோடில் பயணப்பட்ட போது நான் பார்த்த விஷயங்கள் என்னை வியப்பின் உச்சத்துக்ககே சென்று விட்டேன் ... ஆம் சென்னை மவுன்ரோட்டின் பக்க ஓர சுவர்களில் பல அழகான ஓவியங்கள் இடம் பெற்று இருந்தன...

மவுன்ட் ரோடில் நந்தனம் சிக்னல் தாண்டி ஒய் எம் சியே வாளகத்து மதில் சுவர்களில் பல வண்ண ஓவியங்கள் இடம் பெற்று உள்ளன...இன்னும் வரைந்து கொண்டு இருக்கின்றார்கள்...
நம் கலாச்சார பெருமைகள், நம் ஊரின் முக்கிய சுற்றுலா தளங்கள், என்று ஒவியங்களில் நம் ஊரின் சிறப்பினை பொதுமக்களிடம் கொண்டு செல்கின்றார்கள்... இது சென்னை முழுவதும் அமுல் படுததினால் நிச்சயம் இது சிங்கார சென்னை

தூரிகைகள் எல்லாம் கால மாற்றத்தால் ,பிளக்ஸ்,டிஜிட்டல்போர்டு போன்ற வருகையால் சோம்பி இருந்த வேளையில் அவைகளுக்கு மீண்டும் வேலை கிடைத்து உள்ளது.. வரையும் ஒவ்வோறு ஓவியரிடமும் பெருமை கண்களில் இருக்கின்றது...

என்னதான் லலித் கலா அக்காடமியில் ஓவியம் வைத்தாலும் ஒருவாரம்தான் இருக்கும் ஆனால் இது நாள்கணக்கு என்பது கிடையாது அல்லவா? பேருந்தில் போவோரும், இரு சக்கர வாகனத்தில் பயணிப்போரும் அந்த இடம் கடக்கையில்

“காலையில் வெறும் கிளிதலைமட்டும்தான் வரைஞ்சாங்க..... அதுக்குள்ள பஞ்சவர்ணகிளி வரைஞ்சிட்டாங்க... ”

என்று பேசிக்கொண்டு செல்கின்றாகள்...இதே போல் நமது ஓவியர் கூட்டம் பிரபல ஓவியர் தலமையில் எதோ ஒரு நாட்டின் தெருக்களின் சுவர்களில் இது போல் படம் வரைந்து நம் சென்னை ஓவியர்கள் சிறப்பு சேர்த்தார்கள் என்பதை எப்போதோ ஒரு வார பத்திரிக்கையில் பார்த்த ஞாபகம்.....சென்னை முழவதும் உள்ள சுவர்களில் இது போல படம் வரைந்தால் எப்படி இருக்கும்? என்று கற்பனை செய்து பாருங்கள்....அதே போல் இன்னோரு பயமும் எனக்குள்ளே....

1.. அவசரத்துக்கு இந்த ஓவியங்கள் மேல் யாரும் உச்சா போக கூடாது...

2..யாரும் இதன் மேல் பான்பராக் எச்சில் துப்பக் கூடாது....

3.. கழக தொண்டர்கள் யாரும் தலைவனுக்கோ, தலைவிக்கோ பிறந்தநாள் (வாழும் வரலாறே) வாழ்த்து போஸ்டரை உணர்ச்சி வசப்பட்டு இதன் மேல் ஒட்டக்கூடாது...

4..கரித்துண்டை வைத்து இந்த படத்தின்மேல் படங்கள் வரையக்கூடாது...
அல்லது அந்த ஓவியங்களில் இருக்கும் பெண் படத்துக்கு மீசை வரையக்கூடாது...

5.. நகரத்தின் வாகன புகை அந்த ஓவியங்களை ஒரு மாதத்தில் டல் ஆக மாற்றும். வரைந்ததோடு நம் வேலை முடிந்ததாக என்னாமல் சம்பந்த பட்ட நிர்வாக்ம் மாதம் ஒரு முறை அந்த ஓவியங்களை தண்ணீர் ஊற்றி கழுவி விட வேண்டும்...

6..அந்த ஓவியங்கள் இருக்கும் பிளாட்பாரத்தில் எந்த பஞ்சர்கடையோ, அல்லத இளநீர்கடையோ அல்லது வேறு ஏதாவத பிளாட்பாரகடைகள் அந்த இடங்களில் வராமல் இருக்க வேண்டும் ஆண்டவா....

7..தமிழனின் அதிகபட்ச கோப வெளிப்பாடான, சரக்கை போட்டுக்கொண்டு அலப்பறை செய்து, மாடு போட்ட சாணியை தூக்கி அதன் மேல் அடித்து செல்லாமல் இருக்க எல்லாம்வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன்...

வேறு என்ன நாம் செய்ய முடியும் சொல்லுங்கள்.....

புகை படங்கள்
ஜாக்கிசேகர்

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி..

21 comments:

  1. அண்மையில் கலைஞர் செய்திகளில் இதனைப் பற்றிய விபரங்கள் சொன்னார்கள். எல்லாம் நம்ம மக்களின் கைகளில் தான் இருக்கிறது. ஒரு வாரமாக இலியானாவைப் பார்த்து போரடிக்கிறது மாற்றிவிடுங்கள்.

    ReplyDelete
  2. //
    4..கரித்துண்டை வைத்து இந்த படத்தின்மேல் படங்கள் வரையக்கூடாது...
    அல்லது அந்த ஓவியங்களில் இருக்கும் பெண் படத்துக்கு மீசை வரையக்கூடாது...//

    வரையுறவனுங்க கரிக்கு கூட உதவதாவனுங்க சார்....

    நானும் உங்கள மாதிரியே வேண்டிகிறேன் இந்த படங்களுக்கு தீங்கு ஏற்படக்கூடாதென்று.......

    ReplyDelete
  3. சரிதான்...நம் மக்களை நம்ப முடியாது...ஓவியங்களை பான்பராக் துப்பி மேலும் அழகாக்கும் முயற்சி கண்டிப்பாக நடக்கும்...

    ReplyDelete
  4. நானும் சென்னை சாலையில் நேற்று இந்த ஓவியங்களை கண்டு வியந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.. நீங்கள் வேண்டிக்கொள்வது போல் நானும் வேண்டிக்கொண்டேன்..

    ReplyDelete
  5. சிங்காரச்சென்னை அழகானா சரிதான்.

    ReplyDelete
  6. WOW. Kudos to Chennai corporation.

    ReplyDelete
  7. ரொம்ப அழகா வரைஞ்சிருக்காங்க. ஒரு மாசம் கழிச்சு போய் பாருங்க, உங்க பயம் எல்லாமே நிஜமாகி இருக்கும் :-(

    ReplyDelete
  8. படங்கள் ஒவ்வொன்றும் அருமை. நீங்க சொல்றத நினைச்சாலே பயமா இருக்குது. அப்படியெல்லாம் எதுவும் ஆக கூடாதுன்னு வேண்டிக்கரத தவிர வேற என்ன செய்ய முடியும்?

    புகைப்படங்களுக்கு நன்றி...

    ReplyDelete
  9. நல்ல விஷயம் தல.. மக்கள் இதை புரிஞ்சுக்கிட்டு ஒழுங்கா நடந்துக்கிட்டா சரி..

    ReplyDelete
  10. வரவேற்க தக்க முயற்சி.. நம்மக்கள் அதை காப்பற்றினாங்கன்னா ,நல்லாஇருக்கும்...

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  11. அடடா அப்பிடியா நான் லீவுக்கு மெட்ராஸ் வர்ற வரைக்கும் கொஞ்சம் விட்டு வைங்கப்பா!
    :)

    ReplyDelete
  12. பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  13. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது. தங்கள் கூறியபடி எதுவும் நேராதிருக்க வேண்டும். பார்க்கலாம்...

    ReplyDelete
  14. //அவசரத்துக்கு இந்த ஓவியங்கள் மேல் யாரும் உச்சா போக கூடாது...//

    ரொம்ப முக்கியம் இல்ல நாறிடும்..

    ReplyDelete
  15. மக்களை மேல பழியை போடாம, ஒழுங்க சுத்தமான, இலவச/குறைந்த கட்டண கழிப்பறை இருந்தால் போகமாட்டேய்னா சொல்லுவாங்க

    ReplyDelete
  16. க்யூபெக் மற்றும் சில கனடிய நகரங்களில் பார்த்த சில சுவர் ஓவியங்கள், சிறப்பாக இருந்தன. இத்தகைய ஓவியங்களுக்கு வரலாற்று பின்ணியும் இருக்கின்றன.
    http://en.wikipedia.org/wiki/Mural
    நேரம் கிடைக்கும் போது சில புகைபடங்களை பகிர்ந்து கொள்கின்றேன்.
    இப்பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  17. அருமையான படங்களும் விமர்சன்மும்

    ReplyDelete
  18. Great effort.....think most of the tamil magazines or news papers failed to notice these. Good work done "once again"

    ReplyDelete
  19. அழகான படங்கள்... சிறப்பான செய்திகளுடன்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner