பெங்களூரில் ஆஞ்சிநேயரும், அல்லாவும் நட்போடு...

சில ஆபூர்வங்கள் இந்த உலகில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது...கடலூரில் சின்ன வயதில் நான் பார்த்த அதிசயம் ஒரு தென்னை மரத்திற்க்கு 4 கிளைகள் இருந்தது... அந்த வயதில் தென்னை மரத்திற்க்கு பனை மரத்திற்க்கு கிளைகள் கிடையாது, என்று படித்துகொண்டு இருக்கும் போது தென்னை மரத்துக்கு 4அ கிளைகள் இருக்கும் போது அது அதிசயம்தானே.... அந்த தென்னை மரம் கடலூர் பதுநகர் சென்ட்மேரிஸ் பெண்கள் பள்ளிக்கு போகும் வழியில் இருந்தது....

அதே போல் பனை மரத்தக்கு கிளைகள் கிடையாது.. ஆனால்9கிளைகள் கொண்ட பனை மரம் கடலூர் திருப்பாதிரிபூலியு்ர் எஸ் எஸ் ஆர் நகரில் அதாவது லட்சமி சோர்டியா பள்ளி அருகில் இருந்தது... சின்ன வயதில் கோடைகால விடுமுறையில் ஊருக்கு வரும் பசங்களிடம் தென்னை, பானை மரத்துக்கு கிளை உண்டா ?என்ற கேள்வி கேட்டு 25 பைசா பெட் வைத்து ஜெயித்து தேன் மிட்டாய் வாங்கி சாப்பிட்ட அனுபவம் இன்றும் நாக்கில்....

அதே போலதான் பெங்களுர் போய் என் மச்சான் ஆனந்தும் நானும் அந்த ரயில்வே ஸ்டேஷன் போகும் போது பெட்ரோல் போட ஒரு பெட்ரோர் பங்க் வாசலில் நிறுத்தினான்... நான் எதிரில் பார்க்க பிரமாண்ட ஆஞ்சிநேயர் சிலையை பார்த்தேன்... அது ஒரு ஆஞ்சிநேயர் கோவில்....சிலை மிக பிரமாண்டம்... நான் போட்டோ எடுத்துக்கொண்டு இருந்த போது , இன்னொரு அதிசயம் ஆச்சர்யம் நடந்தது... என் மச்சான் ஆனந் அந்த கோவில் பக்கத்துல என்ன இருக்கு தெரியுமா ? என்றான். நான் என்ன என்று கேட்ட போது... பக்கத்தில் இருக்கும் அந்த கட்டிடம் ஒரு மசூதி என்றான் என்னால் நம்பவே முடியவில்லை... உண்மைதான் பக்கத்தில் இருப்பது மசூதிதான்.... அதாவது ஒரு அடி வித்யாசம் கூட இல்லை.. பக்கத்து பக்கதில்....

அல்லா ஓதுவது இங்கே தெளிவாக கேட்கும் அதே போல் அஞ்சிநேயருக்கு சொல்லும் மந்திரங்கள் அங்கே தெளிவாக கேட்கும்....


கரசேவைன்னு சொல்லி மசூதி இடிச்சவனும்,மதத்தின் பேரால் கொலை செய்தவனும் , பாம் வச்சவனும் போய் பாருங்கள்... அங்கே ஆஞ்சிநேயரும் அல்லாவும் கை கோர்த்து இருப்பதை.... இடத்தின் பேர் நினைவில் இல்லை பெங்களுர் நண்பர்கள் பின்னுட்டம் இட்டு தெரியபடுத்தவும்.... ஆனால் இந்த கோவில்கள் சர்ஜாபுரா போகும் வழியில் உள்ளன....
புகை படம் /ஜாக்கி
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

16 comments:

  1. இந்த இடத்தின் பெயர் Agara

    ReplyDelete
  2. மக்கள்லாம் ஒத்துமையாதான் இருக்காங்கோ.

    அப்புறம் கொழப்பம் ஏற்படுத்துவது யாரு...ன்னு வேற நான் சொல்லனுமா????

    ReplyDelete
  3. ஜீலை 10 நாளில் 11 பதிவு...

    நடக்கட்டும்..

    ReplyDelete
  4. தோழர் ஜாக்கிக்கு ,
    நான் பெங்களூர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வருகையில் ஆஞ்சநேயர் அங்கு இல்லை .. ஆனால் திடீர் என்று மசூதிக்கு போட்டியாக உயராமா இந்த சிலை வைக்க வேண்டும் என்ற போட்டியில் வைக்கப்பட்டது போல உள்ளது இது ..
    ஏன் மசூதிக்கு அருகில் தவிர வேற இடம் கிடையாதா ?
    இருந்தாலும் மசூதி,ஆஞ்சனேய இரண்டையும் தினம் பார்க்கும் புண்ணியவான் நான்..

    ReplyDelete
  5. அ..ஆ..ரெண்டு தெய்வத்தையும் கும்பிடற பக்தர்களுக்கிடையில் எந்த பிரச்சினையும் வராம அந்த ரெண்டு பேரே காப்பாத்தட்டும்.......ஜெய் ஆஞ்சனேயா....அல்லாஹூ அக்பர்!

    ReplyDelete
  6. ஆந்திரமானிலம் சித்தூர், காஜூர் பகுதியில் ஒரு முஸ்லீம் பெண்மணி தனது சொந்தப்பணத்தில் ஒரு கோவிலையே கட்டி பராமரித்து வருகிறார்.

    ReplyDelete
  7. மதங்கள் நம்மை வழி நடத்தவும்,மன அமைதிக்கும் மட்டும் உருவானவை. அவரவர் மதம் அவரவர்க்கு சிறப்பானதாக இருக்கட்டும்.அயோத்தியில் கூட அம்மக்கள் அவர்களுக்குள் ஒற்றுமையாகதான் இருக்கிறார்கள்.ஜாதி, மதமில்லா ஒன்று பட்ட இந்தியா உருவாக்குவோம்.

    ReplyDelete
  8. mee firste--//

    நன்றி நைனா

    ReplyDelete
  9. மக்கள்லாம் ஒத்துமையாதான் இருக்காங்கோ.

    அப்புறம் கொழப்பம் ஏற்படுத்துவது யாரு...ன்னு வேற நான் சொல்லனுமா???//

    அதனாலதான் அவுங்களை எல்லாம் இதில் அதிகம் சாடலை நைனா...

    ReplyDelete
  10. ஜீலை 10 நாளில் 11 பதிவு...

    நடக்கட்டும்..//

    கிளம்பிட்டாங்கைய்யா கிளம்பிட்டாங்க... நல்லாதான்யா... கணக்கு போடற....

    ReplyDelete
  11. தோழர் ஜாக்கிக்கு ,
    நான் பெங்களூர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வருகையில் ஆஞ்சநேயர் அங்கு இல்லை .. ஆனால் திடீர் என்று மசூதிக்கு போட்டியாக உயராமா இந்த சிலை வைக்க வேண்டும் என்ற போட்டியில் வைக்கப்பட்டது போல உள்ளது இது ..
    ஏன் மசூதிக்கு அருகில் தவிர வேற இடம் கிடையாதா ?
    இருந்தாலும் மசூதி,ஆஞ்சனேய இரண்டையும் தினம் பார்க்கும் புண்ணியவான் நான்.//

    நன்றி சூரியன் தங்கள் தொடர்வாசிப்புக்கும் கருத்துக்கும்....

    ReplyDelete
  12. அ..ஆ..ரெண்டு தெய்வத்தையும் கும்பிடற பக்தர்களுக்கிடையில் எந்த பிரச்சினையும் வராம அந்த ரெண்டு பேரே காப்பாத்தட்டும்.......ஜெய் ஆஞ்சனேயா....அல்லாஹூ அக்பர்!//
    நன்றி ராஜீ

    ReplyDelete
  13. இந்த இடத்தின் பெயர் Agara//

    நன்றி கோபிநாத் இடத்தை சொன்னதற்க்கு

    ReplyDelete
  14. ஆந்திரமானிலம் சித்தூர், காஜூர் பகுதியில் ஒரு முஸ்லீம் பெண்மணி தனது சொந்தப்பணத்தில் ஒரு கோவிலையே கட்டி பராமரித்து வருகிறார்.//

    முருகு நீங்கள் சொல்வது போன்ற சம்பவங்கள் ஏராளம் ஆனால் இது போல் பக்கத்து பக்கத்து இடத்தில் இருப்பதை நான் பார்பது இதுவே முதல் முறை..

    நன்றி தங்கள் முதல் வருகைக்கு

    ReplyDelete
  15. மதங்கள் நம்மை வழி நடத்தவும்,மன அமைதிக்கும் மட்டும் உருவானவை. அவரவர் மதம் அவரவர்க்கு சிறப்பானதாக இருக்கட்டும்.அயோத்தியில் கூட அம்மக்கள் அவர்களுக்குள் ஒற்றுமையாகதான் இருக்கிறார்கள்.ஜாதி, மதமில்லா ஒன்று பட்ட இந்தியா உருவாக்குவோம்.//

    உங்கள் கருத்தை மாற்று கருத்து சொல்லாது அப்படியே வழி மொழிகின்றேன்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner