முதல் திரைப்படமான எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் தலை நிமிர்ந்து… சற்றே இவன் வேறமாதிரி திரைப்படத்தில் சின்னதாக சருக்கி… மூன்றாவது திரைப்படமான வலியவன் மூலம் என்ன சொல்ல வருகின்றார் என்பதை இப்போது பார்த்து விடலாம்…
பொதுவா இயக்குனர் சரவணன் இயக்கும் திரைப்படத்தின் நாயகிகள் கொஞ்சம் துடுக்குதனமானவர்கள்… இவன் வேற மாதிரி திரைப்படத்தில் அது மிஸ்சிங்… வட்டியும் முதலுமாக இந்த படத்தில் ஆண்ட்ரியாவை துணைக்கு அழைத்து வந்துள்ளார்…
நிறைய பார்த்த பேய் படங்களின் கலவைதான் இந்த கீதாஞ்சலி தெலுங்கு திரைப்படம் என்றாலும் கதை சொன்ன விதத்தில் சுவாரஸ்யம் கேடாமல் வின்னர் கோட்டை தொட்டு இருக்கின்றார்கள்.
சினுவாச ரெட்டி கடந்த 15 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் கோலோச்சிக்கொண்டு இருப்பவர்... நாயகனின் நண்பன், தம்பி,அண்ணன், கிளைமாக்சில் குண்டு வாங்கி உயிர் விடும் உற்ற நண்பன் என்று நிறைய படங்கள் செய்து இருந்தாலும் சீனுவாச ரெட்டியை ஹீரோவாக போட்டு படம் எடுக்க தில் வேண்டும்...
மரக் என்று வெங்காயத்தை கடித்து குண்டானில் துழவி கைக்கு தட்டு பட்ட நாலைந்து சோற்று பருக்கைகளை வாயில் போட்டு விட்டு ,கடைசியாக குண்டான் நீராகராத்தில் இருக்கும் முக்கால் வாசி தண்ணீரை குடித்து விட்டு வாயை துடைத்து, வேலைக்கு கிளம்ப எத்தனித்தாள்....கனகா...
கனகாவுக்கு 34 வயது... பார்க்கும் போது 22 வயதைதான் சொல்லுவார்கள்.... சரியான உடம்புக்கு எடுத்துக்காட்டாக கனகா உடம்பை தைரியமாக சொல்லலாம்...
இயக்குனர் மிஷ்கின் உதவியாளர் வடிவேல் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் திரைப்படம் கள்ளப்படம். கள்ளப்படம் என்று ஒரு படம் எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று கேள்வி பட்டு இருந்தாலும் மூன்று வாரத்துக்கு முன் நண்பர் செந்தில்... கள்ளப்படம் எனது நண்பரின் அண்ணன் இயக்கும் திரைப்படம் என்றார்...
இந்தியா டாட்டர் ஆவணபடம் வந்து ஒரு பெரிய பிராளயத்தை உண்டு பண்ணியது.... என்னை பொருத்தவரை இந்த ஆவணப்படம் நம்மோடு சுற்றிக்கொண்டுஇருக்கும் செவ்வாழைகளை இனம் காட்டியது எனலாம்..
கன்னட சினிமாவுக்கு சமீபத்தில் மரியாதை என்ற அரிதாரம் பூசிய திரைப்படம் என்றால் அது மிகையில்லை.. கன்னட சினிமாவை யாரும் கவனிக்கமால் இருந்த வேளையில் , தியேட்டர் இருட்டில் டார்ச் அடித்து வழிகாட்டுப்வனை போல லுசியா திரைப்படம் கவனிப்பினால் கன்னட சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியது போல இருந்தது....
சென்னை மயிலை வாசிகள்... கண்டிப்பாக இந்த மாற்றத்தை கடந்த மூன்று மாதங்களாக பார்த்து இருக்க வாய்ப்புண்டு... இளம் வயது சல்மான்கான் ஷாருக்கான் போன்று இருக்கும் சின்ன வயது பசங்கள் டீ விற்று அலைவதை பார்த்து இருப்பீர்கள்....
தமிழில் படத்துக்கு படம் வித்தியாசமாக வேவ்வேறு ஜானர்களில் படம் எடுக்கும் இயக்குனர் மணிரத்னம்... தமிழ் இயக்குனர்களை வட நாட்டு பக்கம் தலை நிமிர வைத்தவர்களில் மணியும் ஒருவர்.
மிமிக்ரி பண்ணி நாயகனாக உயர்ந்தவர் என்று பார்த்தால் அது சிவாதான்...மயில்சாமி, தாமு, சின்னிஜெயந், என்று மிமிக்கிரியில் பலர் சாதித்தாலும் சிவகார்த்திகேயனின் இளமையும்.... அவரின் உழைப்பும் இந்த வளர்ச்சியை பெற்றுக்கொடுத்து இருக்கின்றது எனலாம்...
சினிமாவுக்கென புதிய தளம் ஆரம்பித்துள்ளேன்..முழுக்க முழுக்க சினிமா சார்ந்த செய்திகளை கட்டுரைகளை விமர்சனங்களை ஜாக்கி சினிமாஸ் என்ற பிரத்யோக வலைதளத்தில் எழுத இருக்கின்றேன்....
தாவணி கட்டிய பெண்களை பார்த்து அவர்கள்மீது கொண்ட ஈர்ப்பினை தவிடு பொடியாக்கி....ஒரு வெள்ளைக்கார நடிகை ஒரே படத்தின் மூலம் தூக்கத்தை கெடுக்க வைத்தார்... அவரின்பெயர் சின்டி கிராப்போர்ட்...
பத்து வருடம் காத்திருந்து காதலித்த என் மனைவியை கைபிடித்தேன்... என்பது பெருமைதான் என்றாலும்...ஒரு புள்ளியில் இவள்தான் இவளை விட்டுவிடக்கூடாது என்று ஒரு கணம் தோன்றுமே... அதைதான் இப்போது இந்த காதலர் தினத்தில் பகிர்ந்துகொள்ள போகின்றேன்...
ஒரு மெச்சூர்டான லவ் எப்படி இருக்க வேண்டும்... அது எப்படி வெளிப்படுத்த வேண்டும்...? இரண்டுபேர் மனம் முழுக்க காதல் பூத்து இருந்தால் அடுத்த கட்டமான காமத்தை நோக்கி அது எப்படி செல்லும்... ????என்பதற்கு நம்மவர் திரைப்படத்தின் இந்த காதல் காட் சி ஒரு உதாரணம் என்பேன்...
மனம் முழுக்க காதல் உடனே பூக்க வேண்டும் என்றால் இந்த காட்சியை திரும்ப பார்ப்பது என் வழக்கம்.. மிக அற்புதமான காட்சி இது.
வீட்டுக்கு வெளியே கவுதமி., கமல், ஸ்ரீவித்யா பின்னி இருப்பார்கள்...
கமல் சொல்லுவார்...சாரிங்க... எங்க அக்கா... கொஞ்சம் லூசு.. அதற்கு கவுதமி உங்க குடும்பத்துல எல்லோருமே அப்படித்தான் போல என்று சொல்லுவார். என்னங்க எங்க குடும்பத்தை பத்தி என்று கமல் கேட்கும் போது... நானும் உங்க குடும்பத்துல ஒருத்தின்னு நினைச்சேன் என்பார் கவுதமி.
மழை சீன் ஆரம்பித்ததும்....4,59 இல் இருந்து 7,48 வரை
ஒரே ஷாட்... கட் ஷாட் ,இல்லை...
காமத்துக்கு முன் ஒரு அர்த்தமற்ற உளறல் இருக்குமே இது போலான உளறல் மற்றும் உரையாடல் அது...........
அதன்பின் உள்ள காட்சிகளை எழுதினால் ரொமான்டிக் மூட் வந்து நிறைய பணிகள் பாதிக்கப்படும் என்பதால் நான் இத்துடன் அபீட் ஆகிக்கொள்கின்றேன்.
14 நிமிட வீடியோவை பாருங்க.. ரோமான்டிக் பில் வரவில்லை என்றால் நல்ல மருத்துவரை அனுகுவது உசிதம்.
கண்டநாள் முதல் .. காதலர் தின ஸ்பெஷல்.
ஸ்கிரிப்ட்டில் இருப்பதை தன் உணர்வுகளையும் சேர்த்து செல்லுலாய்டுக்கு கடத்துபவனே நல்ல இயக்குனர் என்பேன்... அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த படம் கண்டநாள் முதல்..
எப்போது அந்த படத்தை பார்த்தாலும் பிரசன்னா லைலா கெமிஸ்ட்ரி அவ்வளவு அழகாக ரம்யமாக இருக்கும்... பார்த்தாலும் சாகடிக்கறா... பார்க்காம இருந்தாலும் சாகடிக்கறா என்று கதறும் வசனங்கள் சிறப்பானவை. நம் கண்ணிலும் நீர் கசியும் காட்சி அந்த கிளைமாக்ஸ்...
ஏதோ இரண்டாம் படத்தில் சருக்கினாலும் பிரியா போன்ற இயக்குனர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும்...
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
எழுத்தாளர்கள் சுபாவோடு சூப்பர் நாவல் காலத்தில் இருந்து கேவி ஆனந்துக்கு உள்ள நட்பு அனேகன் வரை தொடர்ந்து வந்துக்கொண்டு இருக்கின்றது... இன்று படம் பார்ப்பவர்கள் இளைஞர்கள் என்பதால் அவர்களுக்கு மிகவும் பிடித்த கிரைம் திரில்லர் கதைகளை கையில் எடுத்துக்கொண்டு சேப்ட்டியாக பயணிக்கின்றார்கள்... அதில் பெரியசருக்கலை மாற்றன் திரைப்படத்தில் சந்தித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.... அயன் திரைப்படத்துக்கு பிறகு... வெற்றி பெற்றாக வேண்டிய சூழல், சொல்லி அடிக்க வேண்டிய கட்டாயம்... தனுஷ்வுடன் முதல் முறையாக கை கோர்த்து இருக்கின்றார்கள்... ஒரளவுக்கு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்...
உங்களுக்கு பிடித்த காதல் பாடல் எது? என்று கேட்டால் நிறைய பேர் நிறைய பாடல்கள் சொல்லுவார்கள்... ஆனால் எனக்கு 1996 ஆம் ஆண்டு அருண் மந்தரா நடித்த திரைப்படம் பிரியம் திரைப்படத்தில் வரும்..
உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி
நனையாத பூவனம்
உதிர்கின்ற ஓருமுடி
களைகின்ற சிறுநகம்
சிருங்கார சீண்டல்கள்
சில்லென்ற ஊடல்கள்
ப்ரியம் ப்ரியம்
என்ற பாடல் பலருக்கு நினைவுக்கு இருக்கின்றதா ? என்று தெரியவில்லை... வித்யாசாகர் இசையில் வெளியான இப் பாடல் என் ஆல்டைம் பேவரைட்...
அருண்மேல் பெரிய ஈர்ப்புஇல்லை என்றாலும் அந்த பாடலின் வரிக்காக அந்த பாடல் ரொம்பவே பிடிக்கும்... அதன் பின் தில்ரூபா தில்ரூபா பாடல் கூட அருண் விஜய்யை விட மந்தராவின் பெரிய கண்ணுக்கும் அதன் பின் அதே போன்று அவரின்பிரமாண்ட மனசுக்கும் ரொம்பவே அன்றைய காலத்தில் பிடித்தது..