சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/புதன்/29/02/2012


ஆல்பம்..
நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்.. என்னவானாலும் கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்பவது உறுதி.. நம்ம பங்குக்கு அதிகம் மின்சாரத்தையாவது கேட்டு கோரிக்கை வச்சா நல்லா இருக்கும்... என்னதான் எழுச்சி மிகு போராட்டமாக இருந்தாலும்.. ஆளும் அரசு நினைத்தால் எதையும் செய்ய முடியும்... 


எந்த பொதுமக்கள் கூடங்குளத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட கருத்துக்களை தெரிவித்தார்களோ அவர்கள் வாயாலேயே கூடங்குளத்தை திறந்து மின் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று தமிழக மக்கள் கெஞ்சும் நிலைக்கு மத்திய மாநில அரசுகள் ஆளாக்கி விட்டன... இது முன்பே எதிர்பார்த்ததுதான்..
====================
பள்ளிப்பிள்ளைகளை வைத்துக்கொண்டு பேருந்து ஓட்டும் ஓட்டுனர்கள் என்னமாதிரி மனநிலையில் இருப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை..எதிர்பாராமல் டயர்வெடித்து பேருந்து நிலைத்துடுமாறி விபத்து ஏற்ப்பட்டு இருந்தால் அல்லது பிரேக் பிடிக்காமல்  இருந்தாலோ.. அல்லது எதிரில் வந்த வாகன்த்தின் மீது தவறு இருந்தாலோ  அந்த விபத்தை மன்னிக்கலாம்...

 மற்றபடி அஜாக்கிரதையால் விபத்து நிகழ காரணமான பள்ளி பேருந்து ஓட்டுனர்களின் லைசென்ஸ் கேன்சல்  செய்யப்படவேண்டும்..  நேற்று ஆந்திராவில் பள்ளி பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏழு மாணவர்கள் பலி..
================
வேளச்சேரி என்கவுண்டர் மேட்டர் செமை சர்ச்சைகளோடு களை கட்டி இருக்கின்றது..போலிஸ் நடவடிக்கை பற்றி அதிகம் தெரியாத பொதுமக்களிடம் அதிகம் ஆதரவு இருக்கின்றது.. 

போலிஸ் என்பது நல்ல பாம்பு  போல... எப்போது அமைதியாக இருக்கும் எப்போது சீறும் என்று தெரியாது..பட் உண்மை கண்டறியும் குழுவை அந்த எரியா வாசிகள் விரட்டி அடித்து இருக்கின்றார்கள்..அப்படி என்றால் மக்கள் சட்டம் ஒழுங்கு மேல் எந்த அளவுக்கு வெறுப்பாக இருக்கின்றார்கள் என்பதையே இது காட்டுகின்றது..

 எதையாவது செய்தாவது குற்றங்களை குறைக்கவேண்டும் கொலையாகவே இருந்தாலும் பராவாயில்லை என்பதாகவே பொதுமக்களின் மனநிலையை இது காட்டுகின்றது..கொள்ளையர் தலைவன் உடலை வாங்கி சென்ற உறவினர்கள் ஒரு வார்த்தை கூட மீடியாக்களிடம் பேசவில்லை.. அல்லது பேசவிடவில்லையா? 

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இந்த  என்கவுண்டர் பற்றி போலிஸ்துறையை தன் வசம் வைத்து இருக்கும் முதல்வர் ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை.. அடுதத பிரஸ் மீட்டில் நிச்சயம் என்கவுண்டர் பற்றிய கேள்விகளை எழுப்புவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
===================
இந்த நேரத்துக்கு தமிழகத்தின் அதிஷ்ட்டக்கார மக்கள் யார் என்றால் சங்கரன் கோவில் தொகுதிமக்கள்தான்.. ஜமாய்ங்க மக்களே...
================= 
பார்க்கவேண்டும் என்று ஆவலாக இருக்கும் படம்.. காரணம் இயக்குனர் ஸ்ரீராம்ராகவன்.. இவர் ஏற்கனவே இயக்கிய ஜானிகட்டார் படம் எனது பேவரைட் படங்களில்  ஒன்று.. முக்கியமாக ஜானிகட்டார் படத்தின் இன்டர்வெல்பிளாக் எப்போதுமே மறக்க முடியாது..அந்த படத்தின் விமர்சனத்தை வாசிக்க...பார்ப்போம் இந்த படம் எப்படி என்று???




=================
மிக்சர்..
மெட்ரோ ரயில் பணிகளின் பிரமாண்டம் பழைய சென்னை வாசிகளையே பிரமிக்க வைக்கின்றது. உதயம் தியேட்டர் எதிரில் இருக்கும் பயர் சர்விஸ் ஆபிஸ் பின் பக்கம் நடந்து கொண்டு இருக்கும் பணிகளை நேற்று இரவு பார்த்து விட்டு மிரண்டு போய்விட்டேன்.. பெரிய  பெரிய பில்லர் திடிர்  என்று நைட்டோடு நைட்டாக வந்து  நட்டு வைத்து விட்டு சென்றது போல இருக்கின்றது...இரண்டு வருடம் கழித்து சென்னைக்கு வரும் சென்னை வாழ் வெளிநாட்டினருக்கு பேரதிர்ச்சியை இந்த மெட்ரோ ரயில் கண்டிப்பாக கொடுக்கப்போவது உறுதி.
====================================
நம்மை போன்ற ஒரு அலட்ச்சியமான மக்கள் மனோபாவத்தை வேறு எந்த நாட்டிலும் பார்த்து இருக்க முடியாது... ரேஷன்கார்டுகள் புதுப்பிக்க இன்று கடைசிநாள் என்று சொல்லியும் இன்னும் பத்து  லட்சம் மக்கள் இன்னும் புதுப்பிக்கவேயில்லை.. அதனால் திரும்ப காலக்கெடுவை நீட்டிக்க அரசு முடிவு எடுத்து இருக்கின்றது.. இவன் போய் ரினிவல் பண்ணாததிற்கு அரசை குறை சொல்லும் மக்கள் நம் மக்கள்தான்..
============
 
இந்தவாரக்கடிதம்.

Jackie,

           I am reading your blog for past one year.Your way of writing simple and straight forward.Like all your Postings.

Usually I will go to tamil movie after reading your review and cable sankar review.But now a days you stopped reviewing tamil movies.Why??After long time I saw Marina review.After that lot of tamil movies had come(MUK,KSY,Ambuli etc) but none has review on your blog.Along with international movies pls review tamil movies also.It is one of my request. Convey my regards and wishes to YAZHINI...

Yours
Balaji
========



அன்பின் பாலாஜி எனக்கு மட்டும் தொடர்ந்து  தமிழ் திரைப்பட விமர்சனங்கள் எழுத வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இல்லை.. முக்கியமாக எனக்கு என் குழந்தையை பார்த்துக்கொள்ளவே நேரம் சரியாக இருக்கின்றது... ஒரு படத்துக்கு 150ரூபாய்  செலவழிக்க வேண்டி இருக்கின்றது... வாரத்துக்கு இரண்டு படம் என்றால் 300ரூபாய்...மாதத்திற்கு 1200ரூபாய்..1200ரூபாய் மாதம் செலவழிக்கும் நிலையில் நான் தற்போது இல்லை..ஒரு சினிமா பத்திரிக்கையில் வேலை செய்தால் கூட பிரிவியூவுக்கு அழைப்பார்கள்.. தொடர்ந்து படத்தை பார்த்து விட்டு எழுதலாம்..ஆனால் எனது தளத்தை நடத்த எனக்கு மாதம் நெட்டுக்கு ஆயிரம் கொடுக்கவே சில மாதங்களில் நாக்கு தள்ளிவிடுகின்றது..

 பாலாஜிக்கு பதில் சொல்வது போல போன் செய்து ஏன் முன்பு போல தமிழ் படவிமர்சனங்கள் எழுதவில்லை என்று கேட்கும் நண்பர்களுக்கு இதுவே எனது பதில்.. சில நேரங்களில் சில விஷயங்களில் தொய்வு ஏற்படுவது அசாதாரணம்... இது தற்காலிகம்தான் நிரந்தரம் அல்ல...அதனால அடிக்கடி தளத்துக்கு வாங்க எதாவது படத்தை பார்த்தா எழுதி வைக்கறேன்.. என்ஜாய் பண்ணுங்க.......


===========================
பிலாசபி பாண்டி.



=================
நான்வெஜ் 18+

ஒரு பெண் தன் டீ ஷர்ட்டில் இப்படியாக எழுதி இருந்தாள்..


எக்ஸ்கியூஸ் மீ...
என் முகம் மேலே இருக்கு...


 =============
 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

6 comments:

  1. உப்புக்காத்து எழுதலாமே....

    ReplyDelete
  2. Nice Post Jackie Sir,,,, KEEP ROCKING..... PLS CONVEY MY BEST REGARDS TO YAZHINI PAPPA

    ReplyDelete
  3. பார்வை போற இடம் தெரியுமே...

    ReplyDelete
  4. சென்னையை சுற்றி படமெடுத்து வைச்சுக்குங்க ஜாக்கி... பிற்காலத்தில் அந்தப்படங்கள் அபூர்வமாக பேசப்படும்... (மாறிவரும் சென்னையால்...)

    ReplyDelete
  5. nice post sir, specifically kudangulam issue and metro rail works

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner