உப்புக்காத்து=7



இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முந்தைய கதை இது... சில முகங்களையும் சில சம்பவங்களையும்  நாம் வாழ்வில்  மறக்கவே முடியாது... 
சில மனிதர்களின் நடத்தைகள் பசுமரத்தாணி போல மனதில் அப்படியே பதிந்து நிற்கும்....அப்படிப்பட்ட நினைவை  விட்டு நீங்காத சம்பவமும்  அந்த மனிதனை பற்றிய நினைவுகளின் பதிவு இது...



கமண்டோ படத்தில் இருக்கும் அர்னால்ட், ராம்போ படத்தின் சில்வர்ஸ்டோலன் இரண்டு பேருமே  தன் புஜங்களை காட்டி வெறுப்பேற்ற, எங்கள் கூத்தப்பாக்க கிராமத்துக் கீத்துக்கொட்டாய் ஜிம்முக்கு வருவதற்கு முன் நடந்த சம்பவம் இது..



கமலின் சட்டை போடாத போட்டோ ஒன்று பிளாக் அண்டு ஒயிட்டில் இருக்கும்... கமல் போலத்தான் அவன் இருப்பான்.. அதே போல ஹேர் ஸ்டைல் எல்லாம் வைத்து கலக்கலாய் தெருவில் நடப்பான்.. 
(இந்த உப்புக்காத்தில்  எழுதும் சிலருடைய பெயர்களையும் சம்பவங்களையும் சின்னதாக சுருக்கியும் விவரித்தும் எழுதி வருகின்றேன்.. மனிதர்கள் நிஜமானவர்கள்.. ஆனால் அவர்கள் பெயர்களை மட்டும் மாற்றி இருக்கின்றேன்.)

கமல் ஹேர் ஸ்டைல் வைத்துக்கொண்டு கமலாகவே பாவித்துக்கொண்டு  உங்கள் கண் எதிரில் சாலையில் நடப்பவன்  குணா....

குணா வீட்டின் குடும்பத்தொழில் சட்டிப்பானை செய்யும் தொழிலை செய்து வந்தார்கள்.. ஆனால் குணாவுக்கு  அந்த தொழில் ஏனோ பிடிக்கவில்லை. தன்னை அந்த தொழிலில் இருந்து விடுவித்துக்கொள்ள வேறு தொழிலில்  கவனத்தை செலுத்தினான்..

பல வருடங்கள் அவன் என்ன வேலை செய்தான் என்று  எங்கள்  எரியாவில்  இருக்கும் யாருக்குமே தெரியாது.. காலையில் டிப் டாப்பாக அயர்ன் செய்த சட்டை பேன்ட்டை அணிந்து வேலைக்கு சைக்கிளில் புறப்பட்டால்.. சாயங்காலம் அவன் வீட்டுக்கு வரும் போது கூட அந்த அயர்ன் கலையவே கலையாது.. நல்ல சிவப்பு தோல் என்பதால் ஒரு மன்மதராசா போலவே குணா எங்கள் எரியாவில் அறியப்பட்டான்..


ஆனால் அவன் என்ன வேலை செய்தான் என்று யாருக்குமே தெரியாது.. அந்த அளவுக்கு உடைக்கும், கெத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பவன்..

ஒருநாள்  அவன் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் நடந்த வேலி சண்டையில் அவனுக்கு தகவல் போக அவன் சைக்கிளில்  குணா வேகமாக வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரரிடம்  சண்டை போட வந்தான்.. குணா வந்த கோலத்தை பார்த்து விட்டு எங்க ஏரியாவே அதிர்ந்து  போய் விட்டது..

காக்கி சட்டை, காக்கி பேண்டில் கையெல்லாம் கிரீஸ் கரையாக அழுக்கு குணாவாக எல்லோருக்கும் காட்சி கொடுத்தான்.. அப்போதுதான் அவன் மெக்கானிக்காக ஒர்க்ஷாப்பில் வேலை செய்தது தெரிந்தது..

ஜிம்மில் எக்சசைஸ் செய்து உடம்பை கல்லு போல ஏற்றி வைத்து இருப்பவன்.. ஏரியாவில் ஏதாவது பிரச்சனை என்றால் கட் பனியனோடு இவன் பிரச்சனை நடக்கும் இடத்துக்கு சென்றால்  அந்த இடத்தில் பேச்சும் சவடாலும் சற்றே குறையும்...

ஊரில் வருடா வருடம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பாரதி இளைஞர்  நற்பணி மன்றம் சார்பாக விளையாட்டு போட்டி நடக்கும்...

இன்றைக்கு மணி டாக்டர் வீட்டுக்கு எதிரே ராஜாராம் நர்சரி பள்ளி  எதிரே இருந்த காலி கிரவுண்டில் போட்டிகள் நடக்கும்...
கரண்டியில் எலுமிச்ச்சம் பழம் வைத்துக்கொண்டு ஓடுதல், சாக்கில் உடம்பை புகுத்திக்கொண்டு ஓடுதல், கோலப்போட்டி, நடனபோட்டி என்று விழா களைக்கட்டும்.. 

குணா  பளீர் வேட்டி சட்டையில்  பெரிய பாக்யராஜ் கண்ணாடி அணிந்துக்கொண்டு விளையாட்டு போட்டி நடக்கும் இடங்களில்  வேட்டியின் ஒரு முனையை கையில் பிடித்துக்கொண்டு வெள்ளை செருப்பை அணிந்துக்கொண்டு பில்டப்பாக நடப்பது  குணாவுக்கு ரொம்பவே  பிடித்த விஷயம்.

 பொங்கல் விளையாட்டு போட்டியில் கபடிப் போட்டி வருடா வருடம் நடக்கும்..ஆனால் அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு மெயின்டெயின் செய்த குணா அதில் கலந்து கொள்வதில்லை.. காரணம் யாருக்கும் புரியவில்லை..

 அதே போல எவ்வளவுதான் வற்புறுத்தி அழைத்தாலும்  கிணற்றிலும்  மோட்டர் கொட்டைகளில் இருக்கும் பம்பு செட்டுகளில் ஒரு நாளும் குணா குளித்ததை யாரும் பார்த்து இருக்கவே முடியாது...

இவ்வளவு ஏன் கும்பலாக சாயாந்திரம் ஆனால் ஆய் போக ஒரு பெரிய குருப்பே கிளம்பும் அதிலும் குணா இருக்கவே மாட்டான்.

நான்கு வருடம்  தொடர்ந்து நடக்கும் கபடி போட்டியில் குணா கலந்துக்கொண்டதே இல்லை.. கும் என்று தேத்தி வைத்த ஜிம் பாடி  உடம்பை வைத்துக்கொண்டு குணா கலந்துக்கொள்ளவில்லை என்று நண்பர்களால் ஏளனம் செய்யப்பட்டு வற்புறுத்தி அவன் பெயரையும் அந்த வருடம் கபடி போட்டியில்  சேர்த்தார்கள்..


 போட்டி தொடங்கியது... பெண்கள் கூட்டம்  பெருமளவில் இருந்தது..குணா பக்கத்தில் இருந்து அலட்டிக்கொள்ளாமல் கபாடிக்  கபாடிக் என்று பாடிக்கொண்டே இரண்டு பேர் தலையில் தட்டி அவுட்டாகிவிட்டு வந்து விட்டான்..

குணாவுக்கு பெண்கள் மத்தியில் பெரிய பாராட்டு மழை... பசங்க குணா குணா என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள்.
எதிரணியில் இருந்து கபோச்சிக் கபோச்சிக் கபோச்சிக் என்று குணா அணியின் உள்ளே புகுந்த ஒரு சப்பை பையன் என்று  நினைத்து அலட்சியமாக இருக்க அவன் குணாவையும் மற்றவனையும் விட்டு அத்தனை பேரையும் அவுட்டாக்கிவிட்டு சென்று விட்டான்.. 

  எதிரணி பலத்தை பார்த்து விட்டு குணாவை போக  கபடி  கேப்டன் கேட்டுக்கொள்ள.. குணாவை கோழி கோழி அமுக்குது போல அமுக்க எதிரணியினர் வட்டமேசை மாநாடு போல கையால் அரை வட்டத்தை ஏற்ப்படுத்தினார்கள்.

குணா மண்ணை தொட்டு கும்பிட்டு விட்டு, கபாடிக், கபாடிக் காபாடிக்  என்று உள்ளே செல்ல எதிரணியின்ன அரை வட்டம் குணாவை கோழி ஆக்க முயற்ச்சிக்க..

குணா எதிராணியை பயமுறுத்த குரலில் கடுமைக்காட்டி கபாடிக் காபடிக்கு என்று   சட்டென வேகமாக   ஹாலிவுட் நடிகர் வேன்டேம் பிளட் ஸ்போர்ட் படத்தில் காலை தூக்குவது போல காலைத்தூக்கி  எட்டி உதைக்க முற்சிக்க பரக் என்ற பெரும் சத்தம் கேட்டது..

குணாவின் கால் சட்டை பரரரரரரரரரரக்கென்று பெரும் சத்தம் எழுப்பி கிழிந்த காரணத்தால், கால்களுக்கிடையே பெரிதாய் சுரைக்காய் போல ஒரு பெரிய சமாச்சாரம் கடிகார பெண்டுலம் போல படீர் என்று கபடி பார்த்த பொதுமக்கள் மத்தியில்  ஆட.... எதிர்பாராத அதிர்ச்சியையும்  தரிசனத்தையும் மக்களுக்கு கணா  கொடுக்க.. பெண்கள் அலண்டு போய்  கண்களை மூடிக்கொள்ள....இடம் பொருள் ஏவல் தெரியாத அவன் அணி ஆட்களே குணா மச்சானுக்கு எம்மாம் பெரிய பானை என்று சொல்லி  சிரிக்க....


குணாவின் கால் சட்டை கிழிந்து மச்சசானுக்கு எம்மாம் பெரிய பானை ஏன்று கேலி செய்யப்பட்ட, பண்ணிரண்டு நாள் கழித்து  எங்கள் கிராமத்து கண்களுக்கு தட்டுப்படாமல் குணா காணாமல் போய் விட்டடான்...

 சென்னையில் மின்சாரரயில், பேருந்து, டெலிபோன் எக்ஸ்சேன்ஜ் பாக்ஸ் பேன்றவற்றில் விரை விக்கம், மூலம், பவுத்தரம் என்ற பிட்  நோட்டிஸ் விளம்பரத்தை பார்க்கையில் அந்த கபடி போட்டியும் குணாவின் அதிர்ச்சியான முகத்தையும் இத்தனை வருடம் கழித்தும் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


====================
குறிப்பு

 சில வாரங்களுக்கு முன் குணா பற்றிய பேச்சு வந்த போது பம்பாயில் சொந்தமாக மெக்கானிக் ஷெட் வைத்து  இருப்பதாக கேள்விப்பட்டேன்.





நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

 

4 comments:

  1. கில்லி படம் பார்த்த எஃபெக்டை உண்டாக்கிவிட்டீர்கள். ஆனால் கடைசியில் சோகம்!

    ReplyDelete
  2. சிரிப்பு சிரிப்பா . . . . .வருதுனே படிக்க படிக்க .

    ஆனா ஒன்னுனே, உங்கள விட்ட வேறயாராலையும் இவ்வளவு
    நகைசுவையோட கற்பனைநயமா எழுத முடியாது.வார்த்தைய யோசிச்சு யோசிச்சு எழுதுவிங்கலோ . !

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner