உப்புக்காத்து=6



என் புது வீட்டுக்கு இரண்டு வருடத்துக்கு முன் குடியேறிய போது அந்த இடம் எனக்கு புது இடம்.. யாரிடமும் பழக்கம் இல்லை.. மளிகைக்கடை எங்கு இருக்கின்றது? பேப்பர் எங்கு கிடைக்கும்? போன்ற எந்த விஷயமும் தெரியாமல் கண்ணை கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தேன்..



எனக்கு நெட் தேவை... அதனால் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் இருந்தேன். பிஎஸ்என்எல் தவிர எந்த நெட் கனெக்க்ஷனும் என் எரியாவில்  இல்லை என்பதால் யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.. என் வீட்டுக்கு பக்கத்து வீட்டு பெண்ணிடம் நெட் கனெக்ஷன் இருப்பதாக தெரிந்து அவளிடம் விசாரித்தேன்..
இருபத்தி எட்டு வயதான அந்த பெண் ஆரம்பிக்கும் போதே, பீட்டரில் ஆரம்பித்து என்னை மிரள வைத்தாள்.. தமிழ் தெரியுமா? தெரியாதா என்பதை அறிவதற்கு நான் தமிழிலேயே பதில் அளித்தேன்.. 


ஒரு கட்டத்தில் அவள் தமிழை ஆங்கிலோ இந்தியன் ஸ்டைலில் பேசினாள்...நெட் கனெக்ஷன் பற்றி பேசினாள்..பிஎஸ்என்எல் தவிர வேறு ஏதும் இந்த எரியாவில் இல்லை என்றாள்...நீங்கள் புதியவர் என்பதால் குடி புகும் போது, உங்கள் குடும்பத்துக்கு காப்பி போட்டு கொடுக்கலாமா? என்று கேட்கலாம் என்று இருந்தேன்... நீங்கள்  பிசியாக இருந்த காரணத்தால் நான் கேட்க வில்லை... என்றாள்.. நான் நீங்கள்  கேட்க நினைத்ததே எனக்கு பெரிய சந்தோஷம் என்றேன்.....

அவள் அப்பா ராணுவ வீரர், பிறந்தது தமிழ்நாடு என்றாலும், வளர்ந்தது படித்தது எல்லாம்.. வட நாட்டு பக்கம்தான்.. அவளுக்கு திருமணமாகி விட்டது...கணவன் இந்திய ராணுவத்தில் கார்னல்....அப்பா அவள் 12 ஆம் வகுப்பு படிக்கும் போதும் அவளின் அம்மா  அவளின் திருமணம் முடிந்த ஒரு வருடம் கழித்தும் இறந்து போய்விட்டார்கள்.. 

அவளின் ஒரே   சொந்தம் தம்பி மட்டும்தான்.. கணவன் லீவ் கிடைக்கும்  போது வந்து செல்வான்..
தம்பி காலையில்  சென்னை ஓஎம்மாரில் ரோட்டில் இருக்கும் சாப்ட்வேர் கம்பெனியில் பொட்டி தட்ட கிளம்பினால்..  அவன் திரும்பி வர இரவு பத்து மணி ஆகி விடும்..
இரண்டு மாதம் கழித்து உங்கள் வீட்டில் ஈபி ரீடிங் எடுத்து விட்டார்களா? என்று அவளிடம் கேட்டேன்..
இல்லைண்ணா என்றாள்...

ஏதாவது உதவி வேண்டும் என்றாள் என்னிடம் தயங்காமல் கேளுங்கள் அண்ணா என்றாள்..நான் திரும்பி சொன்னேன்..

நீ  எதெச்சையா என்னை அண்ணன்னு கூப்பிட்டியா ?இல்லை வேணும்னு கூப்பிட்டியான்னு எனக்கு தெரியாது..ஆனா உனக்கு எந்த உதவியா இருந்தாலும் இந்த அண்ணனிடம் தயங்காம கேளு என்றேன்..

 என் போன் நம்பரையும், என் மனைவி நம்பரையும் கொடுத்தேன். எதுவாக இருந்தாலும் தயங்காமல்  எங்கள் இருவரிடமும் தயங்காமல் கேள் என்றேன்.. நெகிழ்ந்து போனாள்..
அதன் பிறகு என் மனைவியும் அவளும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்..

கிருஸ்த்துவின் மீது  அபார நம்பிக்கை அவளுக்கு.. சிலநேரங்களில் மதிய நேரங்களில் பைபிளை கையில் வைத்துக்கொண்டு மெலிதாய் சர்சில்பாடும் கிருஸ்த்துவ பாடல்களை பாடுவாள்.. ஆங்கில நாவல்கள் படித்து தள்ளுவாள்..தனிமையை விரட்டும் அனைத்து உபாயத்தையும் கையாளுவாள்.

அவள் வீட்டில் நான் வெஜ்  சமைத்தால் எனக்கு கொடுக்காமல் சாப்பிடமாட்டாள்..

போரூர் பக்கம் போனா என்னை பஸ்ஸ்டாண்டில் இறக்கி விட்டு விடுங்கள் என்று சொல்லுவாள்..

அண்ணே கலர்லேப்ல  பாஸ் போர்ட் போட்டோ இருக்கு.. அந்த பக்கம் போன வாங்கியாங்க என்று சொல்லிவிட்டு பணத்தையும் பில்லையும் கொடுத்து அனுப்புவாள்..

இரண்டு நாள் அவள் வீட்டு பக்கம் எந்த அசைவும் இல்லை ... அவள் தம்பியும் இல்லை அவன் ஒரு வாரம் புனே சென்று இருந்தான்.  அவளுக்கு போன் அடித்தேன்...வைரஸ்பீவர்.. பிரட் வாங்கி வர கூட முடியவில்லை  அண்ணா என்றாள்..

 என் மனைவியை கஞ்சிகாய்ச்சி கொடுக்க  சொல்லிவிட்டு பிரட்பாக்கெட் வாங்கி வந்து கொடுத்தேன்..

அறிவுகெட்ட முண்டைகலப்பை.. எதுக்குடி போன்  வச்சிகிட்டு இருக்கே..? ஆத்திர அவசரத்துக்குதான்.. போனு மயிறு எல்லாம்.... போன்   செய்யவேண்டியதுதானே? என்று கேட்டேன்..உங்களுக்கு எதுக்கு சிரமம்  அதனால் போன் செய்யவில்லை என்று சொன்னாள். அப்படி சிரமம் என்றாள் எங்கள் இருவரிடமும் பேசவேண்டாம் என்று கோபித்துக்கொண்டேன். அவள் சாரி சொன்னாள்.


கணவன் லீவ் கிடைத்தால் வருவான்..தம்பிக்கு புராஜக்ட்டுக்கு புனே, பெங்களுர் என்று கிளப்பிவிடுவான். 

ஒருமுறை என் மனைவி அவளிடம் என்ன புதுசா? கையில் வளையல் எல்லாம் போட்டு இருக்கின்றாய் என்று கேட்டாள்.. வீடு ரொம்ப அமைதியா இருக்கு.. மனசு ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்கு.. அதனால் இந்த சத்தமாவது கேட்கட்டுமே என்று  போட்டு இருக்கின்றேன் என்று சொன்னாள்.. 

மனைவி  பெங்களூருல் இருந்த சமயம்.. எனக்காக காலையில் டீபன் செய்து  அவள் தம்பியிடம் கொடுத்து அனுப்புவாள்..

அவள் கல்யாண நாளுக்கு நாங்கள்   அவளுக்கு சுடிதார் எடுத்துக்கொடுத்தோம். அதே போல அவள் என் மனைவிக்கு தீபாவளிக்கு புடவை எடுத்துக்கொடுத்தாள்..

பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும் அந்த வீட்டில் யாரையுமே அவள்  வீட்டின் உள்ளே அனுமதித்தது இல்லையாம்... என்னையும் என் மனைவியை போன கிருஸ்மஸ்க்கு விருந்துக்கு அழைத்தாள்.. எனக்கு நான்வெஜ் சமையல் என் மனைவிக்கு வெஜ் சமையல் செய்து போட்டு அசத்தினாள்.

நானும்  அவளும் பைக்கில் போவதை எங்க ஏரியா ஆட்கள் சிலர் நக்கலாக பார்த்து இருப்பதை நான் பார்த்து இருக்கின்றேன்.. நான் எந்த மயிரானுக்காகவும் என்  வாழ்க்கையை நான் வாழ்வது இல்லை..எனக்காக மட்டும் என் வாழ்க்கையை வாழ்பவன்.. அதனால் அவர்கள் பார்வைகள் எல்லாம் உதாசினபடுத்தி இருக்கின்றேன்.


அண்ணா எனக்கு நாளைக்கு எம்ஏ எக்சாம்.. பிளஸ் மற்றும் ப்ரே எனக்காக  பண்ணுங்க..

 ஐயம்பாக்கம் எரியாவுல இருக்கும் ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சென்டர் போட்டு இருக்காங்க.. ரூட் எப்படி என்று சொல்லுங்க. நான் காலையிலேயே ஆறு மணிக்கே  கிளம்பி போகனும் என்றாள்..எனக்கு வழி தெரியாது என்றாள்... காலையில எட்டு மணிக்கு எனக்கு நீ கிளம்பி விட்டு போன் செய்... நல்லா படி என்றேன்..

காலையில் எட்டு மணிக்கு போன் செய்தாள்... நான் குளித்து ரெடியாகி இருந்தேன்... முதல்நாள் என்பதால் நான் அவளை என் வண்டியில்  அழைத்து சென்றேன்..போரூர் மதுரவயல் வழியாக அம்பத்தூர்  முன்னே ஷாட் கட்டில் ஐயம்பாக்கத்தில் உள்ள பள்ளியை கண்டு பிடித்து அவளை இறக்கி விடும் முன்.... எங்கே பஸ் ஏற வேண்டும்..?

 சப்போஸ் பஸ் வர  லேட் ஆனால்  எங்கே ஆட்டோ  பிடிக்க வேண்டும்?  என்று  இடங்களை  காட்டி விட்டு..ஆட்டோ ஏறியதும், அந்த ஆட்டோ நம்பரை எனக்கு எஸ்எம்எஸ் பண்ணிடு.....என்று நான் சொல்ல சொல்ல  அவள் என்னையே பார்த்துக்கொண்டு, பூம் பூம் மாடு போல தலையாட்டிக்கொண்டு இருந்தாள்..

பொதுவாக என் தங்கைகளை  அல்லது என் மனைவியை எக்சாம் சென்டருக்கு டிராப் செய்யும் போது பொதுவாக நான் இப்படித்தான் நடந்துக்கொள்வேன்


ஒரு ஸ்டேஷனரியில் இறங்கி ஒரு கருப்பு மற்றும்ஒரு நீலம் ஜெல் பேனாவும் ஒரு ஸ்கேலும் வாங்கி கொடுத்து விட்டு, ஒரு பைவ்ஸ்டார் சாக்லேட் வாங்கி கொடுத்து  ஆல் த பெஸ்ட் சொல்லிவிட்டு வந்தேன். அவள் என்னையே பார்த்துக்கொண்டு நின்றுக்கொண்டு இருந்தாள்... நான் பாய் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்..

மறுநாள் காலை நெகிழ்ச்சியுடன் என் மனைவியிடம் அவள் சொன்னாளாம்.. நேற்று  ஜாக்கி  அண்ணா... என்னை சென்டர்ல டிராப் பண்ணாங்க. பேனா ,ஸ்கேல் வாங்கி கொடுத்தாங்க.. ஆட்டோ நம்பரை எஸ்எம்எஸ் பண்ண சொன்னாங்க.. எனக்கு கண்ணே கலங்கிடுச்சி...பட் நான் வெளிக்காட்டிக்கலை..

ரொம்ப நாள் கழிச்சி என் அப்பாவை ஜாக்கி அண்ணா ரூபத்துல பார்த்தது போல இருந்திச்சி..

===============
உப்புக்காத்து இன்னும்  பிசுபிசுக்கும்......

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ

EVER YOURS...
 

29 comments:

  1. Nan ungal pathiyukalai niraiya natkal padithi varugiren. ithu than mudhal murai ungaluku eluthuvathu.

    ungalin uppukathu ennudai vazhkayil nan santhitha nabarkalai pattiri yosikka vaikirathu, mikka nandri.
    valthukkal.

    ReplyDelete
  2. நெகிழ்வான உறவுப் பதிவு.

    ReplyDelete
  3. உப்புக்காத்து மனதை உறையவைக்கிறது...

    ReplyDelete
  4. மனம் நிறைஞ்ச பதிவு ஜாக்கி.

    நல்லா இருங்க.

    ReplyDelete
  5. அண்ணா வணக்கம்.நான் ஈரோடில் இருக்கும் உங்கள் தம்பி பல்சர்காரனின் நண்பன்..அந்த தங்கையின் பதிவை பற்றி எழுதியது நெகிழ வைக்கிறது...சென்னை எனக்கு சுத்தமாக பிடிக்காது.இப்போது பிடிக்கிறது...உங்களையும் சேர்த்து....

    ReplyDelete
  6. நீங்கள் கொடுத்து வைத்தவர் ஜாக்கி !!!

    ReplyDelete
  7. நெகிழ்ச்சியாக இருக்கிறது

    ReplyDelete
  8. பதிவை எழுதும் ஸ்டைல் இருக்கே..... அது ...

    ReplyDelete
  9. உங்க வண்டியப்பத்தி எழுத மாட்டீங்களா?

    ReplyDelete
  10. நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு எதிர்பார்க்காமல் உதவி செய்து வருகிறிர்களோ அது போல மற்றவர்களும் உங்களுக்கு தேவையான சமயத்தில் உதவி செய்வார்கள். நம்மால் எப்போழுதெல்லாம் உதவி மற்றவர்களுக்கு உதவி செய்யமுடியுமோ அப்போதெல்லாம் உதவி செய்து வர வேண்டும்.

    உங்கள் இந்த பதிவின் மூலம் உங்களின் மனித நேயத்தை பார்க்கிறேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. ஜாக்கி சார்,
    இந்த பதிவை படிச்சதிலிருந்து ஒரு இனம் புரியாத மரியாதை வருது.
    நிறைய சொல்லனும்னு தோணுது.... ஆனா என்ன சொல்லனுன்னு தான் புரியல...

    you are simply great....

    ReplyDelete
  12. படித்து சுவைத்தேன் உண்மை சொன்னிங்க

    //நானும் அவளும் பைக்கில் போவதை எங்க ஏரியா ஆட்கள் சிலர் நக்கலாக பார்த்து இருப்பதை நான் பார்த்து இருக்கின்றேன்.. நான் எந்த மயிரானுக்காகவும் என் வாழ்க்கையை நான் வாழ்வது இல்லை..எனக்காக மட்டும் என் வாழ்க்கையை வாழ்பவன்//

    ReplyDelete
  13. you are simply great.uppukkathu unarvuppadhivu.

    ReplyDelete
  14. you are simply great.uppukkathu unarvu&uravu padhivu.

    ReplyDelete
  15. //நான் எந்த மயிரானுக்காகவும் என் வாழ்க்கையை நான் வாழ்வது இல்லை..எனக்காக மட்டும் என் வாழ்க்கையை வாழ்பவன்.. //

    நன்றாக சொன்னீர்கள்

    ReplyDelete
  16. //நான் எந்த மயிரானுக்காகவும் என் வாழ்க்கையை நான் வாழ்வது இல்லை..எனக்காக மட்டும் என் வாழ்க்கையை வாழ்பவன்.. // நன்றாக சொன்னீர்கள்

    ReplyDelete
  17. போய்யா இந்த ஆம்பள பசங்கள கலங்க வைக்கிறதே உனக்கு வேலையா போச்சு கண்ணு நிஜமாவே நெகிழ்வுடன் பிசுபிசுக்குது .

    ReplyDelete
  18. போய்யா இந்த ஆம்பள பசங்கள கலங்க வைக்கிறதே உனக்கு வேலையா போச்சு கண்ணு நிஜமாவே நெகிழ்வுடன் பிசுபிசுக்குது .

    ReplyDelete
  19. //அந்த தங்கையின் பதிவை பற்றி எழுதிய நெகிழ வைக்கிறது...சென்னை எனக்கு சுத்தமாக பிடிக்காது.இப்போது பிடிக்கிறது...உங்களையும் சேர்த்து....//

    என் நண்பனை வழிமொழிகிறேன் அண்ணா

    ReplyDelete
  20. மனம் நெகிழ்ந்த பதிவு...

    ReplyDelete
  21. Nice post Jackie... i could recollect movie "Anna Nagar Mudhal Theru"

    ReplyDelete
  22. நெகிழ்வான பதிவு ....
    உங்களது "மயிரான்" மனப்பாங்கு
    எனக்கும் வேண்டும் ...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner