ஆனந்தவிகடனில்…ஜாக்கி(பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)



நேற்று கடலூரில் இருந்து எனது பால்ய நண்பர்கள் பலர் போன் பண்ணினார்கள்.. சரி விகடன்  பார்த்து இருப்பார்கள் என்று ஊகித்துக்கொண்டேன். 

 

கடலூர்,வேலூர்,விழுப்புரம்,மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை,புதுச்சேரி, போன்ற ஊர்களில்  ஆனந்தவிகடனோடு வெளியாகும், என் விகடனில் எனது தளத்தை வலையோசை என்ற பகுதியில் அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள்.

ஆனந்த விகடனின் அட்டை படத்தில் எல்லாம் என் முகரகட்டை வரும் என்று  நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. ஒருவேளை என் அம்மா உயிரோடு இருந்து இருந்தால்  என் புகைபடத்தை பார்த்து விட்டு மயக்கமாகி இருந்து இருப்பாள்.. தேவையில்லாமல் மயக்கம் தெளிவிக்க ஒரு கோலிசோடாவை பயண்படுத்து இருக்கவேண்டும்.. லட்சனமாக படம் இருக்கச் சொல்ல, பரதேசி போல தாடி போட்டோவை  போட்டுட்டாங்களே என்று விகடன் ஆசிரியர் குழுவை திட்டி தீர்த்து இருப்பாள்...


யாழினி..........


ஆனால் நான் போனவருடம் மனைவி மாசமாக இருந்த போது வேண்டுதலுக்கு தாடி வளர்த்தேன்.. அந்த போட்டோ எனக்கு மிகவும் பிடித்த படம். அந்த  போட்டோவோடு வெளியாகி இருப்பதில் இரட்டிப்பு மகிழ்சி..


ஜாக்கிசேகர் என்ற எனது புனைப்பெயரை எனது கூத்தப்பாக்கம் எனது கிராமத்தில் பிரபலப்படுத்திய விகடனுக்கு என்  நன்றிகள்..


தாடியோடு என்னை ஊரில் யாரும் பார்த்தது இல்லை என்பதால் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என்பதாகத்தான் முதலில் நண்பர்கள் நினைத்து இருக்கின்றார்கள்.. 

பலருக்கு எனது பெயர் ஜாக்கிசேகர் என்பதும் தெரியாது. என் நண்பர்கள் பலருக்கு இணையம்  பற்றி அறியும் அளவுக்கு அவர்களுக்கு  தேவைகள் இல்லை... அதனால் இது போல இணையத்தில் நாள் ஒரு தளம் ஆரம்பித்து எழுதுகின்றேன் என்று நான் யாரிடமும் சொன்னது இல்லை..

அப்படி ஒரு நண்பருக்கு  எனது தளம் பற்றி அவருக்கு சொல்லி அதை புரிய வைப்பதற்க்குள் நான் பட்டபாடு எனக்குதான் தெரியும் என்பதால் நான் வாயையே திறப்பதில்லை..

டேய் உனக்கு தமிழ் டைப்பிங்கே தெரியாது... நீ எப்படி தமிழில் எழுதுவே? அதுக்கு பணம் கட்டி படிக்கனுமா? எப்பவேனா படிக்கலாமா? எனக்கு மெயில் அட்ரஸ் இல்லை நான் எல்லாம் போய் படிக்கலாமா? நெட் சென்டர்ல மெயில் அட்ரஸ் சொன்னாதான் படிக்க உடுவாங்களா? போன்ற கேள்விகளுக்கு நான் விளக்கம் சொல்லிஆகவேண்டும் என்பதால் நான் அடக்கியே வாசிப்பேன்..


யாராவது போன் செய்யும் போது ஆமாங்க ஜாக்கிபேசறேன் என்று  சொன்னால் இன்னும் ஜாக்கிசான் படம்பார்க்கறதை நிறுத்தலை போல..?? அது என்னடா  தனுசுன்னு பேரை சொல்லம ஜாக்கி, போல்டுன்னு  சொல்லிகிட்டு என்று நக்கல் விட்ட நண்பர்கள் நேற்று விகடன்  பார்த்து விட்டு போன்  செய்து சங்கை சங்கையா திட்டினார்கள்.. என்டா இதை என்கிட்ட முன்னமே சொல்லலை நாங்க உன் பிளாக்கை படிச்சி இருப்போம் இல்லை... யாழினி பத்திய எழுதியது டாப்  என்று சொன்னார்கள்..

அதே போல சைக்கிளில் மாடியில் இருந்து இறங்கி எங்கள் ஊர் தேவதை காலில் விழுந்த கட்டுரையை படித்து விட்டு எனது திண்டிவனம் அத்தை வனிதா யாருடா அந்த தேவதை என்று துளைத்து எடுத்துவிட்டார்கள்..


நேற்று விகடனிவ் வெளிவந்த எனது வெப்சைட் அட்ரசை தனது இணையத்தில் தொடர்பு படுத்தி,  என் தனத்தை வெங்கட் என்ற நண்பர்.... ஒரு வருடத்தில் நான் எழுதியதை  நேற்று முழுவதும் படித்து விட்டு பாராட்டினார்.. இது எல்லாம் விகடனால் எனக்கு கிடைத்த பெருமை என்று சொல்லாம்..

ரொம்பநாள் ஆசை விகடனில் உன்னை பத்தி வரனும்னு...முதல் படியாக விகடனோட என் விகடன்  இணைப்புல வந்து இருக்கே.. மெயின்விகடனில் வந்து கலக்க அட்வான்ஸ் வாழ்த்துகள் என்ற சொன்ன எனது தங்கை ருக்மணி,லட்சுமிநாரயணன்,டிஜிட்டல் குமார்,சூரி போன்றவர்களுக்கு என் நன்றியும் அன்பும்..


என்னை என் சொந்த மண்ணில் அடையாளப்படுத்திய விகடன் குழுமத்தினருக்கும்,லக்கி,சுகுனாதிவாகர்,செந்தில்வேலன், போன்ற பத்திரிக்கை நண்பர்களுக்கு என் அளவுகடந்த அன்பும் நன்றியும்...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

50 comments:

  1. மேலும் வளர....வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Dear Jackie,
    If you stop using ugly words in your blog articles, your blog will further reach heights. Please take my advice.

    ReplyDelete
  3. என மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சேகர்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் ஜாக்கி அண்ணா, விகடனில் உங்களைப் பார்ப்பது மிகவும் சந்தோசமா இருக்கு
    -ரவி

    ReplyDelete
  5. வாழ்த்துகள் ஜாக்கி சார்..! திறமையானவர்களுக்கு உண்மையான அங்கீகாரம் எங்கும், எப்போதும் உண்டு என்பது மற்றுமொருமுறை நிரூபணமாகியிருக்கிறது.

    ReplyDelete
  6. மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. வாழ்த்துகள் ! ! ஜாக்கி ! ! தொடர்ந்து எழுதுங்கள் ! ! படிக்க காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  8. மேலும் வளர....வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. கலக்குங்க தலைவா... எல்லைகள் மேலும் விரிவடையட்டும்...

    ReplyDelete
  10. அந்த கூத்தப்பாக்கத்தை இன்னும் கிராமம்னு சொல்றிங்களே? இது நியாயமா ?

    ReplyDelete
  11. என் கண்கள் கலங்குது சார்
    நான் முதன் முதலா ப்ளாக் படிச்சது சரியா ஒரு மாசத்துக்கு முன்னாலதான்
    அது என்ன பதிவு தெரியுமா? உங்களோட "பீத்துணி". என் நண்பன்தான் உங்களை எனக்கு அறிமுகம் செய்தான்
    நண்பனுக்கு கோடான கோடி நன்றி.
    அதுக்கு அப்புறம் தொடர்ந்து படிக்கிறேன்
    உங்களாலதான் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சான்


    பெருமையா இருக்கு

    ReplyDelete
  12. Dear JACKIE,

    I am regular visitor your blog. I have already read maximum post. Everything very interesting.

    Ramesh Mani
    Doha, Qatar...

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
  16. உங்கள் எழுத்துகள் பயனுள்ளவை. விகடன் போன்ற இதழ்களின் அங்கீகாரம் கிடைத்தால்தான் அது சிறந்த படைப்பு என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஒரு படைப்பை சுயமாக எடை போட்டுப் பாராட்டும் பக்குவம் நம்மவருக்குத் தேவை.

    ReplyDelete
  17. உங்கள் எழுத்துகள் பயனுள்ளவை. விகடன் போன்ற இதழ்களின் அங்கீகாரம் கிடைத்தால்தான் அது சிறந்த படைப்பு என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஒரு படைப்பை சுயமாக எடை போட்டுப் பாராட்டும் பக்குவம் நம்மவருக்குத் தேவை.

    ReplyDelete
  18. jackisekar ippo jacki(vikatan) sekara.............!
    vazhuthukkal

    ReplyDelete
  19. இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  20. இனிமை + எளிமை+அடக்கம் = ஜாக்கி... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. ஜாக்கி... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. ஜாக்கி... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் சகோதரா..,

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் ஜாக்கி சார்!!

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் ஜாக்கி சார்!!

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் .........உங்கள் ப்ளாக் ரசிகன் நான்....ஒரே அலைவரிசை எண்ணம் என்பதால்.........லைக் கூட போடுவதில்லை ஆனால் வாசிக்காமல் இருந்ததில்லை....நண்பர்களுக்கும் சொல்லுவேன் போய் படி என்று..................ஆனந்த விகடனில் 50 மார்க் மேலே வாங்கிய ஒரு புதிய இயக்குனர் போல உங்கள் சந்தோசத்தில் நானும் பங்கு கொள்கிறேன் .........வாழ்த்துக்கள் இன்னும் மென்மேலும் வளர .........அன்புடன் புல்லட் பாண்டி ( முகநூல் )

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் .........உங்கள் ப்ளாக் ரசிகன் நான்....ஒரே அலைவரிசை எண்ணம் என்பதால்.........லைக் கூட போடுவதில்லை ஆனால் வாசிக்காமல் இருந்ததில்லை....நண்பர்களுக்கும் சொல்லுவேன் போய் படி என்று..................ஆனந்த விகடனில் 50 மார்க் மேலே வாங்கிய ஒரு புதிய இயக்குனர் போல உங்கள் சந்தோசத்தில் நானும் பங்கு கொள்கிறேன் .........வாழ்த்துக்கள் இன்னும் மென்மேலும் வளர .........அன்புடன் புல்லட் பாண்டி ( முகநூல் )

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் லக்கி. ))

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் ஜெய் ஜாக்கி. மேலும் மேலும் உங்கள் எண்ணங்களும் புகழும் வளரட்டும்.

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் ஜாக்கி. மேன் மேலும் வளர நெஞ்சார வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  31. கடின உழைப்பு என்றும் வீண் போகாது என்பதை உணர்த்திவிட்டீர்கள்

    ReplyDelete
  32. Great boss. You are doing good. We are always with you.

    ReplyDelete
  33. இது ஒரு தொடக்கம் தான் ஜாக்கி சார்! இன்னும் மென்மேலும் வளருவீர்கள்! வாழ்த்துக்கள்! வணக்கங்கள்!
    நன்றி..இதுவரை வெளிவந்த உப்புக்காத்து மனிதர்களுக்கும் சேர்த்து!

    ReplyDelete
  34. என் மீது அன்பு வைத்து எனக்காக பின்னுட்டமிட்டு வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.உங்கள் அனைவரது பின்னுட்டங்களும் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் நிறைய எழுத வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுக்கின்றன..

    ReplyDelete
    Replies
    1. தலைவரே , இன்று தான் முதன்முதலாக தங்கள் பதிவுக்கு பின்னூட்டம் வரைகிறேன் .
      வாழ்த்துக்கள் .விகடன் போன்ற முன்னணி இதழில் இடம் பெறுவது என்பது உங்களை
      போன்ற போராளிகளுக்கு மட்டுமே முடியும் . உங்களை போன்ற கொங்கு மண்டலத்தை
      சேர்ந்த நம் பதிவர் பரிசலும் விகடனில் இடம் பிடித்திருக்கிறார் . மேலும் மேலும் முன்னேற
      என் வாழ்த்துக்கள் .

      Delete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner