உப்புக்காத்து=5

கஷ்ட்ட ஜீவனம்..இன்றைய இளையசமுதாயத்தினர் பலருக்கு  கஷ்ட்ட ஜீவனம் என்றால் அதன் அர்த்தம் தெரிவதில்லை..


காலையில்  உங்கள் வீட்டில் என்ன சாப்பிட கொடுப்பார்கள்..?

என்ன பெரிசா...?? இட்லி தேங்காய் சட்னிதான்.. சார் எனக்கு தோசைன்னா உசிரு..

எங்க  ஆத்தா தோசையே ஊத்திக்கொடுக்காது... ஏன் தெரியுமா? எங்க வீட்ல எட்டு பேர்.. எத்தனை பேருக்கு ஒரு பொம்பளை  ஒன்னு ஒன்னா தோசை ஊத்திக்கொடுத்துகிட்டே இருக்கறது??..ரெண்டு ஈடு இட்லி ஊத்தினமா? தட்டுல எல்லாருக்கும் நாலு நாலு இட்லி வச்சமான்னு காலையிலே சாப்பாட்டுக்கடையை ஏறக்கட்டுவதில் குறியாக இருப்பார் எங்க அம்மா?

ஆக உங்களுக்கு இட்லி தேங்காய் சட்னி என்றால் சலிப்பாக இருக்கின்றது.. அப்படித்தானே..?

ஆமாம் பின்ன??

ரேஷன்ல இலவசஅரிசி கார்டுக்கு போட்டுடறான்.. 

உளுந்து கால்கிலோ வாங்கி உறவச்சி அரைச்சி போட்டா ... நாளைக்கு காலை இட்லி ரெடி...இட்லிக்கு போய் என்னவோ நாசாவுல ராக்கெட் உடற ரேஞ்சிக்கு பீல் பண்ணறிங்க..?

1960 களில்இன்று போல் அன்று இலவச அரிசி எல்லாம் கவர்மென்ட் கொடுத்தது இல்லை..கொளப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் வரை தலைசுமையாக காய்கறி எடுத்து போய் விற்று வந்தால்தான்.. தன் மூன்று பிள்ளைகளை மூன்று வேளை சோறு போட்டு படிக்க வைக்க முடியும்.

நாளைக்கு இட்லி போடப்போகின்றேன்.. என்று இன்று மாலை  ஆட்டக்கல்லில் கன்னியம்மாள் உட்கார்ந்து மாவு ஆட்டினால் நாளை இட்லி தின்னபோகும் அந்த நிகழ்வை முதல்நாள் இரவே அது பற்றி நீங்கள் என்றாவது நினைத்து இருக்கின்றீர்களா? ஆனால் கன்னியம்மாளின் பிள்ளைகள் நினைத்து இருக்கின்றார்கள்..

இன்று வேண்டுமானால் இட்லி சாதாரணமான உணவாக இருக்கலாம்.. ஆனால் அன்று அது பட்சனம் வகை...தீபாவளி பொங்கலின் போது மட்டும் பலகாரத்தோடு இட்லியும் கண்களில் தென்படும் ஒரு வகை பலகார அந்தஸ்த்து அதற்கு...


பல வருடங்கள்.. பத்துக்கு பத்து அறையில்தான் தன் மூன்று ஆண் பிள்ளைகளையும் வளர்த்தாள் கன்னியம்மாள்...காய்கறி வியாபாரம் செய்து கால் கஞ்சி அரைக்கஞ்சி பிள்ளைகளின் பசி ஆற்றுவாள்.. கொல்லியில் களை பிடுங்கும் வேலை செய்துதான் மேஞ்செலவுகளை அவள் சமாளித்து வந்தாள்..கணவன்குடிப்பான்..ஆனால் மனைவி மீது  பாசம் குறையாமல் வைத்துக்கொன்டான்.. 

ஒரு முறை குடித்து விட்டு கணவன் சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் போது..நான் கட்டின தாலியை கொடுடி என்று கேட்க அழகன் படத்தின் சிவப்பு ருக்மணி, கையில் தாலியை சுற்றுவது போல சுற்றி கணவனின் முகத்தில் தாலியை எரிந்த தைரியபெண்மணி...

சின்ன மருமகள் கேட்டாள்..

ஏன் அத்தை இப்படி தாலியை எறிஞ்சிபுட்டிங்களே... அவருக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா?

இந்த கெரகம் பிடிச்சவனுங்க.. நம்மளை எல்லாம் பயமுறித்தி வச்சிஇருக்கானுங்க...தாலியை அவுத்திட்டா அவனுங்களுக்கு ஒரு கருமாந்திரமும் நடக்காது-.. வேர்வை கசகசப்புல நானே நிறைய வாட்டி ராவுல அவுத்து வச்சி இருக்கேன்.. 

அந்த ஆளு எழுந்தறக்கறதுக்குள்ள கழுத்துல போட்டுப்பேன்... இந்தியா சுதந்திரம் வாங்கிய போது என் கழுத்துல கட்டின தாலி....இன்னும் வைரம்பாய்ஞ்ச மரம் கணக்கா குத்துக்கல்லு போலதான் குடிச்சிபுட்டு அவன்  இருக்கான் என்று தன் கணவனை பற்றி மருமகளிடம் புட்டு புட்டு வைத்தவள்..


வீட்டுக்கு யார் வந்தாலும் அடுத்த  பஸ் நாலரைக்கும் ஆறரைக்கும் இருக்கு...நீங்க எப்ப கிளம்பறிங்க? என்று விருந்தினரை  கணவன் உபசரிப்பான்..ஆனால் வந்தவர்கள் இரண்டு நாள் இருந்து வயிறார சாப்பிட்டு செல்லவேண்டும் என்று கன்னியம்மாள் நினைப்பாள்..


சிறு வயதில் இருந்தே கஷ்டம் பார்த்து வள்ர்ந்தவள் என்பதால்.. தன் பக்கத்து வீட்டில் பதினைந்து ,பத்து எட்டு, ஆறு, வயதுகளில் வளர்ந்து கொண்டு இருந்த பிள்ளைகளின் அம்மா சட்டென இறந்து போன போது.. தன் பெற்ற மூன்று பிள்ளைகளை போல பெறாது நான்கு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கியவள்..

யாரிடமும் வம்பு சண்டைக்கு போகவே மாட்டாள்.. ரேடியோ, டிவி இல்லாத நாட்களில் புறம் பேசுதல் தமிழர்கலைகளில் ஒன்றான ஒன்று.. ஆனால் ஒரு போதும் அடுத்தவர் வீட்டு விஷயத்தை ஆர்வத்தோடு கேட்டதே இல்லை..அதே போல தன் குடும்ப விஷயத்தை ஒரு போதும் மற்றவரிடத்தில் சொன்னதும் இல்லை..


சண்டையில் ராங்கிகாரியான தன் பெரிய மருமகள் துடப்பத்தால் அடித்தும் கை விரலை உடைத்த போதும் கூட, பெரிய மனதுபன்னி மன்னித்து ஏற்றுக்கொண்டவள் கன்னியம்மாள்..

வாழ்க்கை சக்கரம் சுழன்றது.. பையன்கள் உழைத்தார்கள்..பெரிய பையனும் சின்ன பையனும் சொந்த வீடு நிலபுலன்களோடு வாழ்க்கை வாழ்கின்றார்கள்..

நான்கு பிள்ளைகளை அம்போ என விட்டு விட்டு அல்பாயில் செத்துப்போன பக்கத்து வீட்டு பெண்மணியின் நான்கு பிள்ளைகளை தன் பிள்ளை போல வளர்த்து ஆளாக்கி இப்போது அந்த நான்கு பேரும் அரசு வேலையில் நல்ல நிலையில் இருக்கின்றார்கள்..

சென்னை மக்கள் தொகை பெருக்கத்தால் வீங்கி போனதால் கொளப்பாக்கத்தில் இரண்டு ஏக்கர் வைத்து விவசாயம் செய்த சின்ன பையன் சில  கோடிகளுக்கு அதிபதி ஆனார்.... கன்னியம்மாளின் சின்ன பையன் கஷ்டபட்ட போதும் சரி, நல்லா இருக்கும் நேரத்திலும்  சரி அவனை விட்டு கன்னியம்மாள் பிரியவேஇல்லை.


கன்னியம்மாள் வீட்டுக்கு வந்தவர்களை சாப்பாடு போடாமல் அனுப்பியதில்லை..அனால் அடுத்த பஸ்சுக்கு எப்போ போறிங்க? என்று கேட்கும் கன்னியம்மாளின் கணவன் 2002 வாக்கில் சோபாவில் உட்கார்ந்து டீ குடித்த படியே இறந்து போனார்..

இப்போது கன்னியம்மாளுக்கு 85 வயதாகின்றது.. உடல் தளர்ந்து சில வருடங்களாக சுய நினைவு இன்றி கிடைக்கின்றார்.. திடிர் என்று எழுந்து அரை நிர்வாணமாகவோ அல்லது முழு நிர்வாணமாகவோ வீட்டை விட்டு யாரும் இல்லாத நேரத்தில் கிளம்பி பக்கத்து தெருவில் எங்காவது விழுந்து கிடப்பார்...

கடந்த  இரண்டு வருடமாக படுக்கையில்தான் பீ முத்திரம் எல்லாம். கன்னியம்மாளுக்கு தன் சின்ன பையனின்  சட்டையும், மூக்காத கைலியும்தான் உடைகளாக இருக்கின்றன.... சின்ன பிள்ளைகள் பீ பேண்டு விட்டு ,அதில் கை வைத்து மார்டன் ஆர்ட் வரைந்து வைத்து நம்மை பார்த்து சிரித்து வயிற்று எரிச்சலைகொட்டிக்கொள்ளுமே? அப்படியே இழுத்து நாளு வைக்கலாம் என்ற அளவுக்கு கோபம் ஏற்ப்படுத்துவார்களே? அது போல வாரத்தில் ஒருநாளவது கன்னியம்மாளுக்கு பீயில் மார்டன் ஆர்ட் வரையவில்லை என்றால் தூக்கம் வராது...

தாலி அவுத்து விட்டெறிந்த கதையை கேட்ட ,சின்ன மருமகள்தான் முகம் சுளிக்காமல் இன்று வரை பணிவிடை செய்து கொண்டு இருக்கின்றார்.

கடந்த இரண்டு வருடத்தில் பத்து முறைக்கு மேல் முக்கிய   உறவு ஆட்களுக்கு சொல்லி அனுப்பியும் எமனுக்கு போக்கு காட்டியவள்.. என்பத்திஐந்துவயது கன்னியம்மாள்..

கடந்த பண்ணிரண்டு நாட்களாக வெறும் பால் மட்டும்தான் ஆகாரம்...தன் தாய் தந்தை பெயரை மட்டும் எப்போதாவது உச்சரித்து விட்டு அவளுக்கு  நினைவு தப்பி விடுகின்றது.. 

கடந்த இரண்டு நாட்களாக தோல் வைட்டிக்கொண்டு கையோடு வருகின்றது.. தூக்கி பால் கூட கொடுக்க முடியவில்லை.. முட்டிக்கு முட்டி சதை இத்து போய் காயம் ஏற்ப்பட்டு காயத்தில் இருந்து சீழ் வடிந்து நாற்றம் அடிக்கின்றது..

படித்த மகனும் மருமகளும் கன்னியம்மாளுக்கு கிடைத்து இருந்தால் இந்நேரம் ஈசிஆரில் ஏதாவது முதியோர் இல்லத்தில் யாருமற்ற அனாதையாக இருந்து இருப்பாள்..கிராமத்து பிள்ளையும் கிராமத்து மருமகளும் பெற்றது  கன்னியம்மாள் போன ஜென்மத்திலோ இந்த ஜென்மத்திலோ செய்த புண்ணியம் என்பேன்.  


கிட்டக்க போய் பால் கூட ஊற்ற முடியாத அளவுக்கு வீடு முழுவதும் கன்னியம்மாளின் சீழ் வாசம் வியாபித்து இருக்கின்றது..

நானும் பார்த்து விட்டேன்.. ரொம்ப நல்லவங்களுக்குதான் சோதனையை ஆண்டவன் அளவுக்கு அதிகமா கொடுத்து சோதிக்கின்றான்.. நான் அடிக்கடி சொல்வது போல நல்லவனாக இருப்பதே தகுதி இழப்பா...?



கன்னியம்மாளின் சின்ன பையனிடம் ஒரு நண்பர் ஐடியா கொடுத்தார்.. 

அம்மாவுக்கு தலைக்கு ஊற்றி இளநீ கொடுத்த அவுங்க வலியில் இருநந்து அவுங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்றார்...

85 வயது கன்னியம்மாளின் 53 வயது அவரது சின்ன பையன் சொன்னார்...

பத்து வீடு தள்ளி இருக்கற கடைக்கே பைக்கில போறிங்க..1960 இல் கொளப்பாக்க்த்துல இருந்து பல்லாவரத்துக்கு தலையிலே காய்கறி சுமந்து அடையாறு மார் அளவு தண்ணியில சுமைய தூக்கிக்கிட்டு கடந்து  நடந்து போய், எங்களை வளர்த்தவங்க அவுங்க...

எங்கம்மாளுக்கு இளநி கொடுக்க மனசு எடம்கொடுக்கலைங்க....


=======
 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

28 comments:

  1. கிளாஸ் தல அம்மானா சும்மாயில்லை தல அது உங்களுக்கும் எனக்கும் தெரியும் ஆனா நிறைய பேருக்கு அது தெரியறதில்லை இதை படிக்கிற சில பேருக்கு அம்மானா என்னானு தெரியட்டும் நன்றி தொடர்ந்து புதிய எழுத்துக்களை உருவாக்க உங்களுக்கு இன்னும் பலம் கொடுக்க உங்களையும் உங்கள் குடும்பத்திற்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. கிளாஸ் தல அம்மானா சும்மாயில்லை தல அது உங்களுக்கும் எனக்கும் தெரியும் ஆனா நிறைய பேருக்கு அது தெரியறதில்லை இதை படிக்கிற சில பேருக்கு அம்மானா என்னானு தெரியட்டும் நன்றி தொடர்ந்து புதிய எழுத்துக்களை உருவாக்க உங்களுக்கு இன்னும் பலம் கொடுக்க உங்களையும் உங்கள் குடும்பத்திற்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  3. மனதை கண்ணீரில் நனைய வைத்த பதிவு...

    ReplyDelete
  4. அம்மா-ன்னா அம்மாதான்.... கடைசி வரிகள் மனதை கலங்கச் செய்கின்றன ! ! !

    ReplyDelete
  5. கண் கலங்க வைக்கிறது ....

    ReplyDelete
  6. arumayana pathivirku nandri jackie anna

    ReplyDelete
  7. நான் உங்கள் வலைப்பூவின் நீண்ட நாளைய வாசகன் .உங்கள் வலைப்பூவை நீண்ட நாட்களாக படித்து வந்த போதும் comment போட்டது இல்லை . ஆனால் உப்புக்காத்து படிக்கும் போது எனக்கு தோன்றியது , அருமை....

    ReplyDelete
  8. //படித்த மகனும் மருமகளும் கன்னியம்மாளுக்கு கிடைத்து இருந்தால்
    இந்நேரம் ஈசிஆரில் ஏதாவது முதியோர் இல்லத்தில் யாருமற்ற அனாதையாக
    இருந்து இருப்பாள்..கிராமத்து பிள்ளையும் கிராமத்து மருமகளும் பெற்றது
    கன்னியம்மாள் போன ஜென்மத்திலோ இந்த ஜென்மத்திலோ செய்த
    புண்ணியம் என்பேன்.//

    படிப்பு சொல்லிக்கொடுக்கும் பாடங்களில் அதுவும் ஒன்று.

    ReplyDelete
  9. இது உப்புக்காத்து இல்ல. மனதை உருக்கும் காத்து.

    ReplyDelete
  10. ஜாக்கி சார் , என்ன எழுதுவது என்றே தோன்ற வில்லை........
    மனசு கனக்குது..............

    ReplyDelete
  11. ஜாக்கி சார், மிக மிக அருமயான பதிவு!!!
    உப்புக்காத்து - கண்ணில் உப்பு நீரை வரவைகிறது!!!

    ReplyDelete
  12. Very nice Mr Jackie. I lost my mom last year. So I know the pain of losing the most beloved...

    ReplyDelete
  13. உங்களின் வலைப்பதிவிற்கு நான் புது வரவு, மனதை கனக்க வைக்கும் தொடர்.....

    ReplyDelete
  14. kuthuyirum kolaiuyirumaai vaithirupathil enna nyayam endru puriyavaillai. amma ippadi chithiravathai paduvathai paarpathai vida, karunai kolai seythuvidalaam. maranam thavirka mudiyaadhu endraalum, anaivarum virumbuvathu valiyillaamal yaarukkum endha kashtamum kodukkaamal poi sera vendum enbadhey. than pillaikal kashtapaduvathai paarka virumbaamal avargalai thaaye kondra kathaigalai varalaaru solgiradhu. jeeranikka kashtamaaga irundhaalum, manikkavum idhuvey nalla vazhiyaaga thondrugiradhu. ammavin udalil ulla nalla uruppugalai yaarukkaavadhu thaanam seythu avarai veru vidhamaaga vaazha vaikkalaam. No hard feelings please.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. Words have power...writers make it more powerful...Not everybody could do it only few are gifter, you are one such writer, keep it up.

    I am more comfortable in writing in English than Tamil, even though I speak the language, but when it comes to commenting i prefer English...excuse me for the same. Once again keep up your good work.

    ReplyDelete
  17. உங்க எழுத்து எப்பவும் எனக்கு பிடிக்கும். ஆனா இந்த கட்டுரையில் சில விஷயங்கள் எனக்கு உடன்பாடில்லை. செண்டிமெண்டா பார்க்காம கொஞ்சம் நடைமுறையையும் பாருங்க. படிச்சவங்கன்ன ஈசீஆர்
    ரோடு முதியோர் இல்லம், ரெண்டு பெரும் வேலைக்கு போற வீட்டில் நாள் புல்லா பீத்துணி கசிகிகிட்டே இருக்க முடியுமா? முதியோர் இல்லம் என்றாலே உங்களுக்கு ஏன் தப்பான அபிப்ராயம்? அங்கே விட்டால் இன்னும் சுகாதாரமாக, மருத்துவ உதவியுடன் முதியோர் உடலை பேண முடியும். படிக்காதவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க என்ற மாதிரி த்வனி உங்க பதிவுல இருக்கு. ஏன்?

    ReplyDelete
  18. Very inspirational.
    Kudos to the son and his wife for taking care of his mother.

    ReplyDelete
  19. Inspirational story. Thanks for sharing.
    Kudos to the son and his wife for taking care of his mother.

    ReplyDelete
  20. manathai urukkum vaarththaikal thaanaka vanthu vilukirathu... uppuk kaarril...

    ReplyDelete
  21. அம்மாவுக்கு தலைக்கு ஊற்றி இளநீ கொடுத்த அவுங்க வலியில் இருநந்து அவுங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்றார்...
    what does it mean ?

    ReplyDelete
  22. jackie.....
    manathai neguzha vaithuvittathu.. Amma amma thaan.Thaliku oortri ila neer kudupathai vida oru nurse appoint panni avargalai sirapaga kavanikallame...

    ReplyDelete
  23. அந்த சின்ன மகனை கையெடுத்து கும்பிடனும் போல இருக்கு !!!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner