சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/திங்கள்/27/01/2012


ஆல்பம்.
கடந்த இரண்டு நாட்களாக பெண்களூரில் வாசம்.. கடந்த வெள்ளிக்கிழமை திடிர் என்று  பெங்களுர் போய் வரலாம் என்று முடிவு எடுத்து உடனே குடும்பத்தோடு கிளம்பி விட்டோம்.
முன்னை விட குளீர் போகும் போதே வாட்டி எடுக்கின்றது.. கிருஷ்ணகிரி டூ ஓசூர் சாலைகள்  விரிவுபடுத்த படுவதால் மலைகளை குடைந்து கொண்டு இருக்கின்றார்கள்.. அதுமட்டும் அல்ல.. வேலூர் டூ கிருஷ்ணகிரி பாதைகளை மூன்று வழி பாதையாக மாற்ற  வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன...

காஞ்சிபுரத்தில்  இருந்து பூந்தமல்லி வரை ரோடு கச்சடாவாக இருக்கின்றது.. ஆனால் டோல் மட்டும் வக்கனையாக வாங்குகின்றார்கள்..கனரக வாகனங்கள் இடது புறம் செல்லவேண்டும் என்று எத்தனை இடத்தில் எழுதி வைத்தாலும் எந்த லாரி டிரைவரும்  மதிப்பதாக தெரியவில்லை.. ஆனால் ஒரு சில லாரி டிரைவர்கள்.. மிகச்சரியாக ஓட்டுகின்றார்கள்..
================
12 மணிக்கு ஆரம்பித்த போலிஸ் என்கவுண்டர் பரபரப்பு விடியல் மூன்று வரை தொடர்ந்தது என்று என்கவுண்டர் நடந்த வீட்டுக்கு பக்க்த்து வீட்டு நண்பர்  தெரிவித்தார்..போலிஸ் எங்களை எல்லாம் காப்பாத்தி இருக்குன்னுதான் சொல்லனும்... அவனுங்க சுடுவானுங்கன்னு  நாங்க யாரும் எதிர்ப்பார்க்கலை..நாலுமணிநேரம் பக்கு பக்குன்னு வீட்டுக்குள்ளேயே உயிரை கையில புடிச்சிகிட்டு விளக்கு எல்லாத்தையும் அனைச்சிட்டு உட்காந்துகிட்டு இருந்தோம் என்றார்..வீட்டுக்கு வெளியே யாரையும் நடமாட விடாத காரணத்தால் பொதுமக்கள் உயிருக்கு சேதம் ஏதும் இல்லை.. அப்படியும் எங்க வீட்டுக்கு எதிர் வீட்டு  பையன் போனில் வெளியே வந்து பேச.. ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர்.. ஒரு தர சொன்ன அறிவு வேணாம் ஓத்தா  உள்ளே போய் பேசுடா.. என்று கடிந்து கொண்டு இருக்கின்றார்.. அந்த பையன் நின்று பேசிய இடத்தில் கொள்ளையர்கள் சுட்ட புல்லட் மார்க் இருக்கின்றது.. அவன் அங்கே நின்று இருந்து இருந்தால் பொதுஜனத்தில் இற்நது போன லிஸ்டில் அந்த பையனும் வந்து இருப்பான்... என்று  நண்பர்  போன் செய்து சொன்னார்.. அவுங்க கதவை தட்டி வெளியே வரச்சொன்னாங்க.. ஆனா அவுங்க துப்பாக்கியால் சுட்டதால்தான் திருப்பி சுட்டு பிடிச்சாங்க.. உண்மையிலேயே போலிஸ்  பக்கத்து வீட்டுல இருக்கும் எங்க எல்லாரையும் காப்பாத்தி இருக்கு என்று சொன்னார்...இதில் எந்தஅளவுக்கு உண்மை என்று தெரியவில்லை..ஆனால் எனக்கு போன் செய்து சொன்ன  நண்பர்..மெனக்கெட்டு போன் செய்து போலிசுக்கு ஆதரவாக பேசுபவர் அல்ல என்பது மட்டும் உண்மை.
======================
இன்றில் இருந்து இரண்டு மணிநேரம் சென்னையில் மின்வெட்டு அமுலுக்கு வருகின்றது.. சென்னை மக்கள் உற்சாகமாக வரவேற்ப்போம்... ஒரு நாள் மின் விடுமுறையும் அமுலுக்கு  வருகின்றது.. நான் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் மின்வெட்டை சீர் செய்து விடுவேன் என்று யாரோ முழங்கியதும் நினைவுக்கு வருகின்றது. இன்னும் கூட சென்னைக்கு மின்வெட்டை அதிகபடுத்த வேண்டும்... எங்கள் ஊரில் எட்டுமணிநேரம் மின்வெட்டு என்று சொன்னாலும்..12 மணி நேரத்துக்கு மேல் மின்வெட்டு அறிவிக்கபடாமல் அமுலில் இருக்கின்றது..சென்னையில் இருப்பவர்கள் மட்டும்தான் மனிதர்கள்.. அவர்கள் மட்டும்தான் நெய்யில் பொறித்தவர்களா என்ன?? மாற்றத்தை எதிர்ப்பார்த்த சென்னை மற்றும் தமிழக வாக்களபெருமக்களுக்கு அம்மாவின்  கோடை பரிசு...
=================
 

வாத்தியாருக்கு இன்று நினைவுதினம்...ஒரு முறை நான்,செய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு மற்றும் வாத்தியார்.. மூவரும் இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்..மெக்சிக்கோ சலவைக்காரி ஜோக் பற்றியெல்லாம் பேசி சிரித்து மகிழ்ந்த அந்த நினைவுகள் ஒன்று போதும் ஆசானே...
=================
மிக்சர்.

 84வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.. எதிர்பார்த்தது போல ஆர்டிஸ்ட் திரைப்படம் விருதுகளை அள்ளிக்குவித்து இருக்கின்றது... இசை கேட்டகிரியில் ஜான் வில்லியம்ஸ்க்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்.. பட் ஊத்திக்கிச்சி.சோ சேட்.

Best Cinematography: Robert Richardson, "Hugo"
Best Art Direction: Dante Ferretti and Francesca Lo Schavo, "Hugo"
Best Costume Design: Mark Bridges, "The Artist"
Best Makeup: Mark Coulier and J. Roy Helland, "The Iron Lady"
Best Foreign Language Film: "A Separation"
Best Supporting Actress: Octavia Spencer, "The Help"
Best Editing: Kirk Baxter and Angus Wall, "The Girl With the Dragon Tattoo"
Best Sound Editing: Phillip Stockton and Eugene Gearty, "Hugo"
Best Sound Mixing: Tom Fleischman and John Midgley, "Hugo"
Best Documentary: "Undefeated"
Best Animated Feature: "Rango"
Best Visual Effects: "Hugo"
Best Supporting Actor: Christopher Plummer, "Beginners"
Best Original Score: Ludovic Bource, "The Artist"
Best Original Song: Bret McKenzie, "Man or Muppet"
Best Adapted Screenplay: Alexander Payne, Nat Faxon and Jim Rash, "The Descendants"
Best Original Screenplay: Woody Allen, "Midnight in Paris"
Best Live Action Short: "The Shore"
Best Documentary Short: "Saving Face"
Best Animated Short: "The Fantastic Flying Books Of Mr. Morris Lessmore"
Best Director: Michel Hazanavicius, "The Artist"
Best Actor: Jean Dujardin, "The Artist"
Best Actress: Meryl Streep, "The Iron Lady"
Best Picture: "The Artist"


==============
 நேற்று இரவு பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டு இருந்தேன்.. கிருஷ்ணகிரி அருகே இருக்கும் மலையில் காட்டுத்தீ ஜெக ஜோதியாக எரிந்து கொண்டு இருந்தது.. வேலூர் அருகே வந்தால் அங்கேயும் மலையில் தீ எரிந்து கொண்டு இருந்தது.. யாரோ விஷமிகள் வைத்த தீ என்பது நன்றாக தெரிகின்றது..
======================
Dear Mr. Jackie,

I am a regular reader of Vikatan. After seeing about your site in vikatan, I become a regular reader of your site.

Wish to be in touch with you.

I really like the way you write. I am from Chennai and now working in Bangalore.

Whenever you plan your next visit to Bangalore, please do call me.

With warm regards,

P S Bhaskar

=========

 விகடன்ல வந்த உங்க சைட் அட்ரசை அடிச்சேன்... முழுசா படிச்சிட்டே உங்க கிட்ட பேசறேன் என்றார்..பெங்களூர் வந்தால் அவசியம் கால் செய்யவும் என்றார்..அவருக்கு போன் செய்தேன். பெங்களுரில் வாசக நண்பர் பாஸ்கரை  எம்ஜி ரோட்டில் சந்தித்தேன். அங்கிருந்து குவார்ட்டர் திரி சைனிஸ் ரெஸ்ட்டாண்ட் சென்று சாப்பிட்டுக்கொண்டு பேசினோம்... சில நேரங்களில் இது போல சந்திக்கும் நண்பர்களை பேச விட்டு நான் வேடிக்கை பார்ப்பேன். அவர் நிறைய பேசினார். பக்கா டைம் கீப்பிங்.. பாஸ்கர் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...கடந்த சனிக்கிழமை இரவு மறக்க முடியாத இரவுதான்... நண்பர்களோடு இரவு நெடுநேரம் எம்ஜி ரோட்டில் நின்றுக்கொண்டு பேச கொடுத்து வைத்து இருக்கவேண்டும்.

அதே போல நேற்று மாலை பிடிஎம் பாரத் பெட்ரோல் பங்க் அருகே இருக்கும் அடையாறு ஆனந்தபவனில் சாப்பிட்டுவிட்டு யாழினியை தூக்கி வைத்துக்கொண்டு  இருக்கும் போது எனக்கு ஒருவர் வணக்கம் வைத்தார்.. நான் யாழினியை தூக்கி வைத்துக்கொண்டு இருந்த காரணத்தால் அவர் குழந்தைக்கு  ஹாய் சொல்லுகின்றார் என்று நினைத்துக்கொண்டேன்.. அவர் அருகில் வந்து ஜாக்கி... நான் உங்களுக்குதான் ஹாய் சொன்னேன்... இரண்டு வருஷமா உங்களை படிக்கின்றேன் ஒருமுறை  போன் செய்து இருக்கின்றேன் என்று சொன்னார்.. நல்லா எழுதறிங்க..குட் என்று பாராட்டினார்.. உலகம் ரொம்பச்சின்னதுபா...

 ================
இந்தவாரகடிதம்.

 

அன்பு ஜாக்கி,
 
எப்படி இருக்கீங்க ? யாழினி பாப்பா நலமா? நாங்க இங்கு நலம். என்ன பெயர் ராஜ் முத்து குமார். உங்களுடைய தளம் பற்றிய விவரத்தை பிக் FM - இல் சொல்லியதை பின்னுடமிட்டிருந்தேன். நியாபகம் வரும் என்று நினைக்கிறேன். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பொட்டி தட்டும் வேலை.
 
நான் உங்களுடய தீவிர வாசகன். காலையில் உங்களுடைய தளத்தை வாசிக்கமால்  இருந்ததில்லை.  தினம் 2 , 3 தடவை உங்கள் தளத்தை பார்க்கும் அளவுக்கு பைத்தியம் முத்தி போய் இருக்கிறது. உங்களுடைய சான்வேஜ் நான்வெஜ், உப்பு காத்து, உலக சினிமா மற்றும் பயண அனுபவங்கள் பிடிக்கும். பின்னுட்டம் குறைவாகவே இட்டுருக்கிறேன். பின்னுட்டம் இட்டால் தமிழில் இட வேண்டும் என்று விருப்பம் அதனால் தான் நிறைய இட முடியவில்லை.
 
உங்களை பார்த்து நானும் எழுத வேண்டும் என்று (தேவை இல்லாத) ஆசை. ஜன ரஞ்சகமாக நிறைய படித்திருக்கிறேன். பாலகுமாரன், கல்கி,சுஜாதா, பாக்கியம் ராமசாமி, லஷ்மி, ரமணி சந்திரன் என்று பலர் பிடிக்கும். தீவிர இலக்கியத்தில் ஆர்வமில்லை. கடந்த வாரம் அருப்புகோட்டை போய் வந்தேன். அந்த அனுபவத்தை ஒரு பதிவாக்கி என் பதிவுலக வாழ்கையை ஆரம்பிக்கிறேன். என் தள முகவரி anandhabavanam.blogspot.com . உங்களுடைய உண்மையான விமர்சனம் எனக்கு தேவை.
 
உங்களுக்கு நான் நான்கு ஆப்சன் குடுக்கிறேன்
1 ) நீயில்லாம் எழுதணுமா
2 ) தம்பி நீ இன்னும் வளரனும்
3 ) பரவாஇல்லை இன்னும் நன்றாக எழுத முயலுங்கள்
4 ) நல்லா இருக்கு
 
நான் தள வடிவமைபில்லும் தேர்ச்சி பெற்றவனல்ல. எதாவது மாற்ற வேண்டியிருந்தால் சொல்லவும். UDANZ  வோட்  பட்டன்  போட்டு விட்டேன் ஆனால் எப்படி என் தளத்தை லிங்க் அன்று தெரியவில்லை. எனக்கு சொல்லவும். நிறைய எழுதவும். எனக்கு ஒரு தரவு போடுவதுக்குள் தாவு தீந்து போய் விடுகிறது.  நீங்கள் எப்படித்தான் அடிக்கடி போடுகிரீங்கலோ. உங்கள் மெயிலை ஆவலுடன் எதிர் பார்க்கும் 
 
ராஜ் முத்து குமார்

=============
 ஆன்பின் ராஜ் முத்துக்குமார்..ஏதோ என்னை பார்த்து எழுத வந்தது என்று எல்லாம் சொல்ல ஜல்லிஅடிக்க வேண்டாம்..உங்களுக்கு எழுதவேண்டும் என்று உந்துதல் இருந்தால் மட்டுமே எழுத முடியும்.. இது மட்டும் அல்ல  எந்த வேலையுமே அப்படித்தான்.. நேற்றுதான் படித்தேன்..நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்.. இன்னும் எழுதவும்.. அதே போல உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளாதீர்.. என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் அதுதான்..  வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர..


 =====================

பிலாசபி பாண்டி.


சில நண்பர்கள் எப்போதுமே டாம் அண்டு செர்ரி போலத்தான்..இரண்டு பருமே என்னதான் அடிச்சிகிட்டாலும் ரெண்டு பேரும் யாரையும் விட்டுக்கொடுக்கமாட்டாங்க.. அதே போல அவுங்களை வம்புக்கிழுக்கலைன்னா தூக்கமே வராது..
===============
நான்வெஜ்18+இருக்கறதிலேயே ரொம்ப கொடுமையான  சமாச்சாரம்... கடவுள் ஆம்பளை உடம்பில படைச்ச ஒரு பார்ட்தான்.. கடைசி வரை தக்காளி தூக்குல தொங்கறது போல தொங்கிகிட்டே கடன்னு சொல்லி படைச்ச பார்ட் அது ஒன்னுதான்.. சில பேர் இரண்டுன்னு சொல்லலாம்... அது அவுங்க அவுங்க யூகம்....அம்புட்டுதேன்...
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

7 comments:

 1. மெக்சிகொ சலவைக்காரி சொல்லுங்க நீங்களாவது சொல்லுங்க ஜாக்கி

  ReplyDelete
 2. சுய பெருமைகள் அல்லது சுய புலம்பல்கள் என்னை ரொம்பவும்
  வெறுப்பேற்றுகின்றன.நீங்களும் அப்படிதான்.ஏன் இவ்வளவு
  பெருமை? விட்டால் t .ராஜேந்தரையே தாண்டி விடுவீர்கள் போல.
  மனசாட்சி என்று ஒன்றிருந்தால் இதை நீங்கள் பதிவேற்ற வேண்டும்.

  ReplyDelete
 3. மோதிர கையால் குட்டு என்பது போல உங்கள் கையால் என் வலை தளம் அறிமுகப்படுத்தபட்டது என் பாக்கியம். நிறைய நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்களுடன் அதை தொடர்வேன் என்ற நம்பிக்கையுடன்
  - ராஜ் முத்து குமார்

  ReplyDelete
 4. அன்புடன் ஜாக்கி வாத்தியார் திரு சுஜாதா , நினைவுட்டலுக்கு நன்றி மெக்சிகொ சலவைகாரி சிறிப்பை பகிர்ந்து கொல்லுங்களேன். யாழினி அப்பா. நட்புடன் நக்கீரன்

  ReplyDelete
 5. anbudan Jakeey Yazenei appa nu Icc vaidhal kuda Mexcico naathy salavaikari pathe muchi kuda veeda maateereya nanbaa NADPUDAN NAKKEERAN.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner