நீங்கள் ஒரு சின்ன கிராமத்தில் இருந்து படித்து ஒரு சின்ன கம்பெனியில் பத்தாயிரத்துக்கு வேலை செய்கின்றீர்கள்... படிபடிப்படியாக வள்ர்ந்து ,உங்களுக்கு இந்தியாவில் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்..??
என்ன இப்படி கேட்டுபுட்டிங்க.. சான்சே இல்லை வீக்கென்ட் டிஸ்கோத்தே இல்லாம தூங்க மாட்டேன்..சரக்கு குட்டின்னு வாழ்க்கையை வாழுவேன்..
அது போர் அடிச்சிடுச்சின்னா வேற என்ன செய்விங்க...?
அடிங்... கொய்யால அது எப்படி போர் அடிக்கும்..?
அப்படி அடிச்சா அதை திருப்பி போட்டு அடிப்போம் இல்லை..
ஹலோ கேட்ட கேள்விக்கு பதில்...
போர் அடிச்சா என்ன பண்ணுவிங்க?
மாசம் வீட்டு செலவு 25 ஆயிரம் அப்படின்னாலும் மிச்ச எழுபத்தி ஐந்தாயிரம் இருக்கு...
மக்கள் டிவி, வசந் டிவியில டெல்லிகணேஷ், பூவிலங்கு மோகன், டிவி சீரியல் பிகருங்க பரிந்துரைக்கும் பிளாட்டை திண்டிவனத்துக்கு பக்கத்துல வாங்கி போடுவேன்..
குட்... நல்ல ஆன்சர்..உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது..உங்களுக்கு ஒரு பையன் இருக்கின்றான்...ஒரு லட்சரூபாய் மாதம் சம்பளம் வருகின்றது...இந்த சமுகத்தில் உங்களுக்கு காதலோ காதல் இந்த சமுகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அப்போது என்ன செய்வீர்கள்..?
என்ன செய்வேன்..?மாசம் பத்தாயிரம் சமுகசேவை நிறுவனங்களுக்கு கொடுத்துட்டு, எதாவது கஷ்டபட்டு படிக்கற பையனோ பொண்ணோ அவுங்களோட படிப்பு செலவை ஏத்துக்கிட்டு போக வேண்டியதுதான்...
உங்க மனைவி வேலைக்கு போறாங்க.... அப்ப நீங்க என்ன செய்விங்க?
சமுக சேவைக்கு பத்தாயிரத்துக்கு பதிலா இருபதாயிரம் கொடுப்பேன்..
கிரேட்...அப்படியா?
என்ன நொப்பிடியா? இந்த காலத்துல எவன்சார் பத்தாயிரம் ரூபாய் மாச மாசம் தர்மகாரியத்துக்கு கொடுப்பான்..??
சப்போஸ் மாதம் அந்த ஒரு லட்சரூபாய் வேலையை விட்டு விட்டு மாசம் பத்தாயிரத்துக்கு ஒரு சமுகசேவை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்ய சம்மதிப்பீர்களா?
நான் என்ன லூசா? இந்த சமுகம் எனக்கு என்ன மயித்த கிழிச்சிது.. மாசம் பத்தாயிரம் ஜோப்பியலர்ந்து சொளையா முள்ளங்கி பத்தாட்டாம் கொடுக்கறதே பெரிய விஷயம்...
இதுல மாசம் ஒரு லட்ச ரூபாய் வேலைய விட சொல்லறியா? நீ ஒரு ஆளு மயிறுன்னு நீ கேட்ட கேள்விக்கு எல்லாம் பொறுமையா பதில் சொன்னேம்பாரு.. ங்கோத்தா என்ன சொல்லனும்..
உன் பேரு என்ன ஜாக்கிதானே? என் விகடன் அட்டை படத்துல பஞ்ச பரதேசி பய போல உன் போட்டோவை பார்த்தேன்... அப்பயே உஷாரா இருந்து இருக்கனும்... டேய் ஐநூறு ருபாய்க்கு சிங்கி அடிச்சி பாருடா? அப்ப தெரியும் பணம்னா என்னன்னு? அது எவ்வளவு முக்கியம்னு????
கூல் பிரதர் சும்மா கேட்டேன்? கேரியான்... என்சாய்..
===============
சமீபத்தில் நான், தம்பிகள் அப்துல்லா மற்றும் ஜோசப் பால்ராஜ், கடலூருக்கு போய் விட்டு திரும்ப வந்துக்கொண்டு இருக்கும் போது, சட்டென வெங்கி பற்றிய பேச்சு வந்தது..
அவரெல்லாம் இன்னைக்கு மாசம் ஒன்றரை லட்சத்துக்கு மேல சம்பளம் வாங்கற ஆளு.. இன்னைக்கு பத்தாயிரம் சம்பளம் வாங்கி கிட்டு இருக்கார்..
எந்த வெங்கி ஜோ? மைசூர் இம்சை வெங்கியா?
அவரேதான்...
இம்சை என்ற பெயரில் கும்மி அடிக்கும் வெங்கியை பற்றி எனக்கு தெரிஞ்சது எல்லாம்... அவர் எம்என்சி கம்பனி ஓப்பனிங் இருந்தா அதை பலருக்கு சொல்றார்..அவர் சாப்ட்வேர்ல வேலை செய்யறார் ..
என் பிளாக் என்றால் ரொம்பவே பிடிக்கும்..யாரவது நண்பர்கள் என்னை பற்றி நக்கல் விட்டால் முதல் ஆளாக எனக்கா பரிந்து பேசும் நபர் என்று நண்பர்கள் சொல்லக் கேள்வி பட்டு இருக்கின்றேன்.
முதன் முதலாக சஞ்சய் கல்யாணத்தில் என்னை பார்த்து விட்டு சின்ன குழந்தை போல ஜாக்கி அண்ணன் கூட நான் ஒரு போட்டோ எடுத்துக்கனும் என்று குதுகலித்து வந்து, என் பின்னால் நின்று கொண்டதும் அன்பு பாராட்டியதை பார்த்து நான் வியந்து போய் இருக்கின்றேன்...
ஆனால் கென்னடி ஒயின்சில் பேசும் போது வெங்கி மிகப்பெரிய ஆச்சர்யத்துக்கும் தைரியத்துக்கும்,தான்கொண்ட கொள்கைக்கும் பிடிவாதத்துக்கும் சொந்தக்காரர் என்பது தெரிந்த போது ஆ என்று வாய் பிறந்து வெங்கியின் கதை கேட்டேன்..
ஈரோடு பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் இருந்து படித்து அமெரிக்காவில் வேலை பார்த்துவிட்டு, சமுக பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டவர்..பெங்களுர் ஐபிஎம் கம்பெனிக்கு மாற்றலாகி வருகின்றார்..பிரண்ட்ஸ் ஆப் சில்ரன் அமைப்பில் தன்னை இணைத்துக்கொள்கின்றார்..தினமும் ரெயில் நிலையத்தில் வீட்டைவிட்டு சினிமா ஆசை மற்றும் வீட்டில் கோபித்துக்கொண்டு வரும் பெண்களை ரயில்வே போர்டர் ஆட்கள் மற்றும் ரயில் லயினை சுற்றி இருக்கும் குப்பத்து ரோமியோக்கள் என அந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி நாலு நாட்களுக்குள் அந்த சின்ன பெண்ணை சக்கையாக்கி விடுவார்கள்.
அப்படி பட்ட சின்ன பெண்கள் காப்பகத்தில் இருக்கும் போது அந்த பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது, பின்தங்கிய கிராமத்து மாணவர்களுக்கு டிரைனிங் கேம்ப என்று உதவி செய்வது என்பது பிரண்ட்ஸ் ஆப் சில்ட்ரன் நோக்கம்...
சமுக பணி செய்யும் போது ஐபிஎம் வேலை செய்ய முடியவில்லை ஆனால் ஐபிஎம் நிறைய ஆப்ஷன் கொடுத்து அவரை தக்க வைத்துகொள்ள முயன்றது...
அதே அமைப்பில் சமுக சேவை செய்ய வந்த ஆந்திரா பெண் நட்பாய் இருக்க கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாவேண்டாம் என்ற முடிவு எடுத்த வெங்கி, அந்த பெண்ணை கரம் பிடிக்கின்றார்...
அந்த பெண்ணும் சமுக சேவையில் ஆர்வம் என்பதால் நான் வேலைக்கு போகின்றேன்.. நீங்கள் முழு நேரம் எதிர்கால மாணவ சமுதாயத்துக்கு சமுக கடமை ஆற்றுங்கள் என்று சொல்லுகின்றார்....
மாதம் ஒரு லட்சரூபாய் சம்பாதித்த ஐபிஎம் வேலையை விடுகின்றார்...
( நந்து தனது மகள் நிலாவுடன்.)
அவர் நண்பர் நந்துவுக்கு 2008 வாக்கில் அவர் ஒரு மெயில் அனுப்பிகின்றார்..
அது கீழே...
Dear Friends
Good Evening, Thank you all for your support and guidance for an important decision in my life.
I have now made up my mind to quit my professional career in IBM and start my own project for supporting students from economically challenged background and move into social services full time.
It is a very hard decision for which I have been asking advice to almost everyone for past 2 months and now my mentor and all friends have finally agreed for my decision after getting the permission from my wife in person.
My mentor told me that she will provide me a most challenging work in social field so that I will runaway back to my family in Pune in a Year. I have accepted it.
I thank my wife whole heartedly for supporting my decision bcos she is now going to support me and my family for rest of her life.
I will keep you all updated. As of now I would be involved in setting up few training schools for training students who do their degree (BA, BCOM, BSC & Diploma) in Regional language. These students would be trained and placed in diferent companies.
Initially this plan would be implemented in Karnataka and in 5 years planning to expand to Tamilnadu, Kerala, Andra and Maharastra. Later on all over India.
It is going to be a very big and most challenging project. I have not yet thought how to implement it but I am now ready for the challenge. I would be officially moving into this role from April.
Planning to say good bye to IBM next week. I am not there in the pictures but Pavan's mother/ my wife is there.
Thanks
Venky
================
வித்யா போஷாக் என்ற அமைப்பில் ஒரு லட்சரூபாய் வேலையைவிட்டு விட்டு தன்னை இணைத்துக்கொள்கின்றார்..
வித்யா போஷாக் அமைப்பின் நோக்கம்....
டிகிரி முடிச்சிட்டு வரும் கிராம புற மாணவர்களும், தன்னம்பிக்கையை கொடுப்பது...எனக்கு எட்டாவது படிக்கும் வரை ஐலைக்யூ என்றால் என்ன என்று தெரியாது..தமிழ்சினிமா தயவால் ஐலவ்யூவுக்கு அர்த்தம் தெரியும்... அவ்வளவே..
ஆங்கிலத்தின் மீது பயததோடு டிகிரி முடித்த கிராமபுறமாணவர்களுக்கு எளிமையாக ஆங்கிலம் கற்றுக்கொடுத்து, செல்ப்காண்பிடன்ஸ் கிளாஸ்,பாடிலாங்வேஜ், இண்டாவியூ எப்படி அட்டென் செய்வது என்று தயார் செய்து, அந்த கிராமத்து பையனை பெங்களூர் மற்றும் மைசூர் போன்ற பெருநகரங்களில் இருக்கும் ஐடி கம்பெனியில் அவர்களை வேலைக்கு அனுப்ப தயார் செய்வது...
வித்யா போஷாக்கில் சேரும் ஏழை கிராமபுறமாணவனிடம் இருந்து ஐந்தாயிரம் கேஷாக முதலில் வாங்க கொண்டு அவனை சேர்த்துக்கொள்ளுகின்றார்கள்.. பத்தாயிரம் ரூபாய்க்கு அவனுக்கு லோன் போட்டு அவனிடம் பொறுப்பை கொடுக்கின்றார்கள்.. காரணம் இலவசம் ஒரு போதும் வளர்ச்சியை தராது...பிறகு பெரிய பெரிய ஐடி கம்பெனிகளிடம் நன்கொடை பெற்று மேற்க்கொண்டு 90 நாட்களுக்கு செலக்ட் செய்த மாணவர்களுக்கு கோச்சிங் கொடுக்கின்றார்கள்..ஒரு மாணவனுக்கு 30ஆயிரம் செலவு ஆகின்றது..இன்போசிஸ் சுதா நாராயணமூர்த்தி மற்றும் பெரிய பெரிய நிறுவனங்கள் வித்ய போஷாக்கிற்கு வரும் ஒரு கிராமபுற மாணவனின் செலவுக்கு 15 ஆயிரம் வீதம் கொடுக்கின்றார்கள்..
இதுவரை வித்யா போஷாக் 1200 கிராமபுற மாணவர்களின் வாழ்வில் விளக்கு ஏற்றி இருக்கின்றது...
காதல் மனைவி மற்றும் ஒரே ஆண்பிள்ளை புனேயில் இருக்க ...
வெங்கி மட்டும் மைசூரில் வித்யா போஷாக்கில் ஒரு லட்சரூபாய் சம்பளத்தை விட்டு விட்டு மாதம் பத்தாயிரம் சம்பளத்தில் எதிர்கால மாணவ சமுதாயத்துக்கு முக்கியமாக கிராமபுற மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றார் என்பதை பெருமையுட்ன் சொல்லுகின்றேன்..வெங்கி கோச்சுகளுக்கு எல்லாம் கோச்சாக சூப்பர் கோச்சாக இருக்கின்றார்..
(வெங்கி தன் மகன் பவனுடன்)
மனைவி, குழந்தை புனேயில்.. வாரா வாரம் மனைவி குழந்தையை பார்க்க அவர் வாங்கி வைத்து இருக்கும் நானோ காரில் பயணம்... இதுவரை அவர் வாங்கிய நானோ கார் ஒன்றரை லட்சம் கிலோமீட்டர் ஓடி எறப்பு வாங்கி நின்று கொண்டு இருக்கின்றது...
என்னதான் சமுகசேவையில் ஆர்வம் உள்ள மனைவியாக இருந்தாலும் ஒரு லட்சரூபாய் வேலையை விட சம்மத்திக்கவே மாட்டாள்...நீ போ... நான் பார்த்துக்கொள்ளுகின்றேன். என்று சொன்ன அந்த முகம் தெரியாத சகோதரிக்கு என் அன்பும் நன்றியும்...
தன் ஒரே பாசமிகு மகனையும், மனைவியையும் விட்டுவிட்டு இங்கே மாணவர்களுக்கு உழைத்துக்கொண்டு இருக்கின்றார்..
தன் மகன் ஒரு மாதம் லீவுக்கு மைசூர் வந்த போது அவனிடம் சின்ன நிலப்பரப்பை கொடுத்து அதில் விவசாயம் கற்றுக்கொடுத்து பயிற்சியும் கொடுத்து இருக்கின்றார் வெங்கி...
சமுக பணிக்காக மாதம் ஒரு லட்ச ரூபாய் வேலையை விட்ட போது, நண்பர்கள் நந்து போன்றவர்கள் இதை பதிவாக போட... அவர்களுக்கு வெங்கி சொன்ன பதில்....
==========
மனதுக்கு பிடிக்காத வேலய 11 வருசம் செஞ்சாச்சி இப்ப நல்ல சான்ஸ் வந்திருக்கு அதான் மனதுக்கு பிடிச்சத செய்யலாம்னு.
கண்டிப்பா சமூக அக்கறை விட சில காரணங்கள் இருக்கு.
1. குற்ற உணர்ச்சி - படிக்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து எல்லாரும் பண்னும் தவறுகள் நானும் செய்திருக்கிறேன் ஆனா என் அதிர்ஸ்டம் எப்படியோ படிப்பு முடித்து நல்ல வேலையில் இருக்குறேன் , ஆனா என்னுடன் பதித்த என்னை விட திறமை, அறிவு எல்லாம் அதிகம் இருந்த என் பல நண்பர்கள் பணம் இல்லாததால் மேற்படிப்பு படிக்க முடியாமல் இப்பவும் 4000 ருபாய் வேலயில இருக்காங்க அது ரொம்ப மனதை உறுத்துது.
2. இதுவும் ஒருவகையான போதை தான் ஏன்னா நாம் செய்வதை நிறையா பேர் பாராட்டுராங்க. அது மனதுக்கு பிடிச்சிருக்கே...
3. மனைவியோட சப்போர்ட் இருக்கு, அவங்க முழு மனதுடன் சம்மதம் குடுத்து இருக்காங்க.
4. பணம் ரொம்ப கஷ்டம் இல்ல, பெற்றோர் அவங்களுக்கு தேவையானது சேர்த்து வைத்து இருக்காங்க
5. படிப்பு முடிச்சி வேலைல முதல் இரண்டு வருடம் Guidance இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டேன் , அதனால இவ்ளோ நாள் part timeமா செய்துவந்தென் இப்ப முழு நேரம் செய்ய சிலர் பண உதவி பண்ணராங்க.
அனைவரின் உதவியும் இந்த causeக்கு தெவைபடுது. உங்களோட knowledge & time ஷேர் பண்ணா போதும், உங்க வீட்டில இருந்தே செய்யலாம். தெவையான நேரத்தில கண்டிப்பா அனைவரிடமும் உதவி கேட்பேன்.
ரொம்ப உணர்ச்சி வசப்பட வேண்டாம் , வழக்கம் போல நம்ம கும்மி , மொக்கைய தொடருவோம்...
Thanks & regards to Everyone
Venky
=================
இந்த சேவையை எப்படியாவது தமிழகத்துக்கு கொண்டு வரவேண்டும் என்று ஜோசப்பால்ராஜ் ,நந்துமற்றும் அப்துல்லா முயற்சி செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
ஜோ ஒரு முறை வெங்கியிடம் ஒரு லட்சரூபாய் வேலையை விட்டுட்டோம்னு மனசுக்கு கஷ்ட்டமா இல்லையா? என்று கேட்க...
அதுக்கு வெங்கி.....
இல்லவே இல்லை.. நான் அந்த சம்பளத்தை விட அதிகம் வாங்குகின்றேன் என்று வெங்கி சொல்லி இருக்கின்றார்..
எப்படி என்று ஜோ வினவ....
1200 கிராமத்து பசங்க வித்யா போஷாக் முலமா பயிற்சிபெற்று சம்பாதிக்கறாங்க.. ஒருத்தருக்கு 15 ஆயிரம்னு கணக்கு போட்டு பாரு நான் எவ்வளவு சசம்பாதிக்கறேன்னு உனக்கு தெரியும் என்று வெங்கி அடக்கமாக சொல்லி இருக்கின்றார்...
வெங்கி சஞ்சய் திருமணத்தில் என்னுடன் நீ எடுத்துக்கொள்ள அசைப்பட்ட புகைபடத்தை நான் இன்னும் பெருமீதமாக பார்க்கின்றேன்.
ரொம்ப பெருமையாக இருக்கின்றது... வெங்கியோடு நான் இருக்கும் போட்டோவை பார்க்கும் போது..
வெங்கி ஐ லவ் யூ...................
=========
மேலும் விபரங்கள் அறிய...
பிரண்ட்ஸ் ஆப் சில்ரன் புனே....
வித்யா போஷாக்
போன்ற தளங்களுக்கு சென்று பார்வையிட்டு தெரிந்துகொள்ளுங்கள்..
வெங்கியின்.... கைபேசி...09845038017
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நண்பர் வெங்கிக்கு ஒரு சல்யூட். இப்படி மனிதம் நிறைந்தவர்கள் இருப்பது மிக்க நம்பிக்கை அளிக்கிறது. நன்றி தல!
ReplyDeleteஆச்சர்யமான மனுசன் நம்ம வெங்கி.. கூடிய சீக்கிரம் தமிழ்நாட்டுக்கும் அவர் சேவை வரும்னு நம்புறேன்.
ReplyDeleteமுக்கியமான விசயம், அந்த நேநோ காரை இவர் ஓட்டுன மாதிரி வேற எந்த நேநோ காரும் ஓடி இருக்காது. டாடா கம்பெனி நேநோ விளம்பரத்துக்கு இவரை அணுகலாம். :)
நல்ல உள்ளங்களை இந்த பதிவுலகத்திற்கு அறிமுகப்படுத்தும் தங்கள் சேவை என்றுன்றும் தொடரட்டும்.
ReplyDeletegreat.
ReplyDeleteWow! Venky is a great person.
ReplyDeleteWow! Venky is a great person.
ReplyDeleteமிகச் சிறியவனாக உணர்கிறேன்...
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
இந்தக் காலத்திலயும் இப்படியொரு மனுஷனா? ஆச்சர்யம்தான்.. பாராட்டப்பட வேண்டியவர். எத்தனையோ சுயநலவாதிகள் தங்களின் பெருமையை நிலைநாட்ட செய்யும் உதவிகளை விளம்பரப்படுத்தி,போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து, அதைக் கட்டாயம் நாளிதழ்களில் இடம்பெறச்செய்யவும் செய்கிறார்கள்.
ReplyDeleteஇத்தகையவர்களுக்கு மத்தியில் இப்படிப்பட்டவர்களும், சுயநலமில்லாமல் சமூகச்சேவை ஒன்றே பிரதானமாகக் கொண்டு செயல்படும் வெங்கி போன்றவர்களை நிச்சயம் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். என்னுடைய பாராட்டுதல்களும், வாழ்த்துகளும். !தங்களின் ஈடில்லா சமூகச்சேவைக்கு எனது நன்றி திரு. வெங்கி அவர்களே.!!
இப்பதிவின் மூலம் நல்லதொரு சமூக சேவகரை அறிமுகப்படுத்தி, பெருமைபடுத்தியதற்கு உங்களுக்கும் நன்றி திரு ஜாக்கிசார்.!
Salute to Venky!
ReplyDeleteஅவரைப்பாத்தா எவ்வளவு எளிமையா இருக்காரு.
எதுக்கும் மனசு வேணும்.
கைஎடுத்துக்கும்பிடத்தான் தோணுது.. இன்னும் நெறைய பேருக்கு இவர் சேவை செய்யணும்.. செய்வாரு..
அவரைப்பாத்தா எவ்வளவு எளிமையா இருக்காரு.
ReplyDeleteஎதுக்கும் மனசு வேணும்.
கைஎடுத்துக்கும்பிடத்தான் தோணுது.. இன்னும் நெறைய பேருக்கு இவர் சேவை செய்யணும்.. செய்வாரு..
I FEEL BELITTLED BEFORE HIM.
ஜெயமோகனின் “அறம்” வரிசைக் கதைகளை வாசித்தபோது கிடைத்த மனநிறைவும், மன உந்துதலும் மற்றும் இன்னபிறவும் உப்புக்காத்து தொடரிலிருந்து கிடைக்கின்றன. இது மிகையில்லை.
ReplyDeleteவெங்கி போன்றோருக்கு “இவர்கள் எதற்காக நம்மை பாராட்டுகிறார்கள்?” என்கிற எண்ணமே தோன்றும். வணங்குவோம்.
You made it sekar. இந்தத் தொடர் உங்கள் முதல் புத்தகமாக வரட்டும். அதை நானே பதிப்பிக்கிறேன்.
அன்பு நித்யன்.
Great ! மகாத்மா...
ReplyDeleteGreat Venki & Thanks Jackie for sharing this to all.
ReplyDeleteநம்மால் முடியாவிட்டாலும் இவர் போன்ற தெய்வங்கள்(கல்வி , வேலை , (முக்கியமாக)தன்னம்பிக்கை கொடுக்குறாரு இது தான் சிறந்த வார்த்தை) நம்முடன் வாழ்கின்றார்கள் என்பதே பெருமை தான். ராயல் சலுயூட் வெங்கி சார்.
ReplyDeleteவெங்கி அவர்களை வாழ்த்த வார்த்தைகள் கட்டாயம் இல்லை.
ReplyDeleteகல்வி , வேலை , தன்னம்பிக்கை கொடுக்கும் கடவுளாய் இருக்கின்றார் சபாஷ். வாழ்த்துகள் வெங்கி சார்
பதிவை படிக்கும் போது கண்கள் கலங்கி விட்டது. வெங்கி வாழ்க !
ReplyDeleteஉங்களை போன்ற நிறைய பேருக்கு சென்று சேரும் பதிவர் இதனை எழுதுவது மிக நல்லது . மகிழ்ச்சி
நானும் பள்ளி குழந்தைகளுக்கு உதவும் சில செயல்களில் ஈடுபட்டுள்ளேன். வெங்கியுடன் நிச்சயம் பேசுவேன். தொடர்பில் இருந்து என்னால் ஆன
உதவிகள் செய்வேன்
நன்றி ஜாக்கி
இவரால் பயனடைந்த 1200 பேரும் இவரை தெய்வமாகத்தான் பார்ப்பார்கள் ! ! வாழும் தெய்வமாகவே தோன்றுகிறார் அவர். வாழ்த்துகள் ! ! அவரது பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
ReplyDeleteஅருமையான மனிதரைப்பற்றி நல்எழுத்துக்கள்..அந்த குழந்தை விவசாயம் செய்யும் காட்சிகள் அருமை.. இறைவன் எல்லா உதவிகளையும் அவருக்கு செய்திட என் பிரார்த்தனைகள்..
ReplyDeleteஅடடே..உப்புக்காத்து விஷயங்கள் மனதை வருடிச்செல்லும் தென்றல் காற்றாய் இருக்கிறதே.. டெம்போ தொடர வாழ்த்துக்கள்..
இதை படித்தபின் மனதில் தோன்றியது இதுதான் --
ReplyDelete" நானெல்லாம் ஒரு மயிருக்கு கூட சமானம் இல்ல "
கொஞ்சம் மெனக்கெட்டு ‘ஷார்ப்’ ஆக எழுதினால் இந்த உப்புக்காத்து தொடரை புத்தகமாக கொண்டுவரலாம் ஜாக்கி.
ReplyDeleteவெங்கிக்கு எனது அன்புகள்!
great
ReplyDeleteநாமளும் மத்தவங்களுக்கு "நல்ல" உதாரணமாக இருப்போமே
ReplyDeleteஒரு நாள் ஜாக்கி சார், நாம்மலப்பத்தியும் எழுதட்டுமே
great sir,
ReplyDeleteHats off to you Venky Sir
ReplyDeleteகைஎடுத்துக்கும்பிடத்தான் தோணுது.. இன்னும் நெறைய பேருக்கு இவர் சேவை செய்யணும்.. செய்வாரு..
ReplyDeleteSimply super man. We all with you sir
Thanks Jackie for honoring me in such a thoughtful way. The wishes from all of you is making me more responsible. I am reachable at gfs.venky@gmail.com
ReplyDeleteபின்னுட்டத்தில் தங்கள் கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..
ReplyDeleteநன்றி லக்கி இன்னும் ஷார்ப்பா எழுத முயல்கின்றேன்.
நன்றி நித்யன்.. எத்தனை பேர் பாராட்டினாலும் உஙகள் பாராட்டு எனக்கு உத்வேகம் கொடுக்கும் நித்யன்.
நன்றி வெங்கி....நல்லவர்களையும் நல்லமனது கொண்டோர்களையும் மக்களுக்கு சொல்லவேண்டும் அவ்வளவே.............
Dear All,
ReplyDeleteGreetings from Vidya Poshak
With great joy and pride we announce our "1000 Students Trained & Placed" by VIDYA POSHAK'S GRADUATE FINISHING SCHOOLS.
To celebrate this accomplishment we are arranging "1000 Graduation Ceremony" in Dharwad on Sunday 1st April 2012.
Our donors Mrs Kumari Shibhulal , Chairperson of Sarojini Damodaran Foundation and Mr S.D.Shibhulal CEO of Infosys would be joining us during this event.
We kindly request you to block your calender for the event.
Let’s get together and toast the Grads
--
--
Venkatesan.N |
COO
Vidya Poshak
1st Floor, Yashoda Sadan, Vidyagiri, Dharwad -580 004
Karnataka, India
Mobile: +91 9845038017
வாழ்த்துகள் வெங்கி..
என்ன மனுஷன் பா இவரு.... இந்த மாதிரி நல்லவங்க இருக்கறதுனால தான் நாட்ல மழை பெய்து...
ReplyDeleteஉப்பு காத்து படிச்சு மனதில் மனிதர்களை பற்றி எண்ணங்கள் உயர்கின்றன. எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமுலு.
ReplyDeleteகடவுள், உண்மை, நன் மனிதர்கள் யாவையும் தரிசனம் செய்தாற் போல இருக்கிறது.
பேராசை பெருகிய இந்நாட்களில் உயர்ந்த மனிதர்களை பற்றி எழுதி எங்களை நெகிழ்விக்கும் உங்கள் சேவை -சூப்பர்.
உப்பு காத்தில் வீசும் தென்றலுக்கும் , மனிதர்களில் மாணிக்கமாக இருக்கும் நல் உள்ளங்களுக்கும் , இறைவன் அருளை வேண்டுகிறேன்.
ReplyDelete