என் காதலி வீடு இருந்தது வடபழனி சிவன் கோவில் தெருவில் நான் இருந்தது வடபழினி குமரன் காலனியில்..அப்போதேல்லாம் சைக்கிள்தான் என் இஷ்ட்ட வாகனம்.தென் சென்னையில் என் சைக்கிள் சுத்தாத ரோடு இல்லை என்று சொல்லலாம்..
என் காதலி படித்தது சென்னை அண்ணாநகர் கிழக்கில் இருக்கும் வள்ளியம்மாள் கல்லூரி.. சென்னையில் இருக்கும் கல்லூரிகளிலேயே வள்ளியம்மாளுக்கு தனிச்சிறப்பு உண்டு..
இது பெண்கள் கல்லூரி..கண்டிப்பாக எல்லோரும் புடவையில்தான் கல்லூரிக்கு தினமும் வரவேண்டும்..ஒரு திருமணமண்டபத்தில் திருமணத்துக்கு வந்தவர்கள்.. எவ்வளவு நீட்டாக உடை அணிந்து வருவார்கள்.. அது போல கல்லூரி பெண்கள் அனுதினமும் புடைவையில் செம நீட்டாக வருவார்கள்..
கல்லூரி விட்டு வெளியே வரும் அந்த புடவை கட்டிய பட்டாம்பூச்சிகளை இன்று முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு காட்சியை இதுவரை எந்த திரைப்படத்திலும் நான் பார்த்தே இல்லை என்பேன்...
ஷுட்டிங் இல்லாத நாட்களில் வடழனியில் இருந்து சைக்கிளில் அண்ணாநகர் ரவுண்டானா சென்று கல்லூரி வாசலில் நின்று கல்லூரி விட்டு வரும் எல்லா பிள்ளைகளையும் சைட் அடித்து விட்டு, காதலியை பார்த்து அவளோடு பேசிக்கொண்டு நடந்தே கிரண்ட் தியேட்டர் வழியாக , அண்ணா ஆதர்ஷ் கல்லூரி அருகே இருக்கும் பிரிட்ஜ் வழியாக நடந்தே பேசிக்கொண்டு, எம்எம்டிஏ பகுதியில் நுழைந்து, வடபழனி வரை நடந்தே பேசிக்கொண்டு வடபழனி வந்ததும் இருவரும் பிரிந்து அவரவர் வீட்டுக்கு போய் விடுவோம்.
சட்டென என் காதலியின் குடும்பம் அஸ்தினாபுரத்துக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.. அதனால் சைக்கிள் வேலைக்காவது என்பதால் வடபழனியில் இருந்து கே70 பேருந்து மூலம்.... அண்ணாநகர்கிழக்கு டெப்போவுக்கு போய் அவளுக்காக காத்திருந்து ,அவள் கல்லூரி விட்டு வந்ததும் அண்ணா நகர் கிழக்கில் இருந்து பேசிக்கொண்டே நடந்தே அண்ணாநகர் மேற்கு டெப்போவுக்கு மூன்று கிலோமீட்டர் நடந்து..
மேற்கு டெப்போவில் இருக்கும் மாடிபஸ்சில் ஏறி மாடியில் இருக்கும் முன்பக்க சீட்டில் உட்கார்ந்து கொண்டு, இரண்டு பேருக்கும் தாம்பரம் வரை டிக்கெட் எடுப்போம்..
குரோம்பேட் இறங்கி எம்ஐடி கேட் தண்டினால் அஸ்தினாபுரம் வந்து விடும்.. ஆனால் தாம்பரம் போய் பட்ஸ் பேரடைஸ் ஹோட்டலில் தோசை சாப்பிட்டு விட்டு, தாம்பரம் இரயில் நிலையத்தை கடந்து தாம்பரம் ரயில்வே குவாட்டர்ஸ் வழியாக நடந்தால் ஒரு பெரிய கிரவுண்டு வரும்...
அங்கே அடுக்கி வைத்து இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து விளையாடிக்கொண்டு இருக்கும் பசங்களை பார்த்துக்கொண்டே, பேசிக்கொண்டு இருக்கும் போது ஒரு சுக்குகாப்பி வரும்... அதனை வாங்கி குடித்து விட்டு நடந்தே சாணிட்டேரியம் வந்து அப்படியே சிட்லபாக்கம் வழியாக நடந்தே அஸ்தினாபுரத்துக்கு போய் ,அஸ்தினபுரம் டேப்போ அருகில் போனால் அவள் திரும்ப என்னை பார்த்து டாட்டா காட்டிவிட்டு நோவாமல் வீட்டுக்கு போய் விடுவாள்..
நான் திரும்ப தனியா லொங்கு லொங்கு என்று பேக்கு போல அஸ்தினாபுரத்தில் இருந்து பஸ் பிடித்த குரோம்பேட் வந்து.. அங்கிருந்து வடபழனிக்கு நின்றுக்கொண்டே பயணித்து, வீட்டுக்கு வந்து படுக்கும் போது நினைத்துக்கொள்வேன்.. அவ பாட்டுக்கு ஜாலியா பாய் சொல்லிட்டு போயிட்டா..? நாமதான் பேக்கு போல தனியா அவ்வளவு தூரம் போய் வந்தோம் என்று மனதை நொந்துக்கொண்டு படுத்து உறங்குவேன்.
இந்த நிமிடத்தில் நான் யோசித்து பார்க்கின்றேன்... எதுக்கு அப்படிபோனேன்? என்ன பேசினோம்-? அவ்வளவு தூரம் நடக்க நடக்க களைப்பே தெரியாததின் மாயம் என்ன? இன்றுவரை எனக்கு புரியாத புதிர்தான்.
காதலியான என் மனைவியிடம் எங்காவது அவசரமாக கிளம்பிக்கொண்டு இருக்கும் போது மனைவி சற்று தாமதப்படுத்தினால் எவ்வளவு நேரம் வெயிட் செய்வது என்று அவளிடம் கோபமாக கேட்டால்?? நக்கலாக சொல்லுவாள்..
எனக்காக பேக்கு போல அண்ணா நகர் ஈஸ்ட்.டூ அண்ணாநகர் வெஸ்ட் டூ தாம்பரம் டூ சிட்லபாக்கம் டூ அஸ்தினாபுரம் டூ குரோம்பேட் டூ வடபழினி என மாசத்துல பத்து நாள் பேக்கு போல எனக்கா அலைஞ்சது மறந்து போச்சா??
தங்கப்பதக்கம் சிவாஜியை ஸ்ரீகாந் கேட்ட கேள்வி போல அந்த கேள்வி என் மனதை தைத்தது...நான் எதுவும் பேசாமல் மவுனியாகிவிட்டேன்..
உலக காதலர்களே இதனை உங்கள் வாழ்க்கையில் படிப்பினையாகவும் பாடமாகவும் எடுத்துக்கொள்ளுங்கள்..
பீ கேர்புல்....
நான் என்னைய சொன்னேன்.....
========
காதலர் தினத்தன்று 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் எழுதிய பதிவுகளை வாசிக்க... கிளிக்கி படிக்கவும்...
அனைனவருக்கும் காதலர்தினநல்வாழ்த்துகள் 2012
=======
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
===========
மேலே உள்ள புகைப்படம் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எடுத்தது.. என்னை எனக்கே மிகவும் பிடித்த புகைபடமும் கூட........
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Jackie,So sweet memorable event in your life
ReplyDeletei think your wife love your style than your way of talking and writing.
ReplyDeletelingam
//நான் திரும்ப தனியா லொங்கு லொங்கு என்று பேக்கு போல அஸ்தினாபுரத்தில் இருந்து பஸ் பிடித்த குரோம்பேட் வந்து.. அங்கிருந்து வடபழனிக்கு நின்றுக்கொண்டே பயணித்து, வீட்டுக்கு வந்து படுக்கும் போது நினைத்துக்கொள்வேன்.. அவ பாட்டுக்கு ஜாலியா பாய் சொல்லிட்டு போயிட்டா..? நாமதான் பேக்கு போல தனியா அவ்வளவு தூரம் போய் வந்தோம்//
ReplyDeleteசிரிப்பு அடக்கமுடியவில்லை
காதல் ...சொல்லும் போதே இனிக்கிறதே....உங்களின் அனுபவம் தான் எனக்கும்
ReplyDeletenice
ReplyDeleteஅழகான தருணங்களை திரும்பிப் பார்த்திருக்கிறீர்கள் எங்களுடன்... வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா.
ReplyDelete//எனக்காக பேக்கு போல அண்ணா நகர் ஈஸ்ட்.டூ அண்ணாநகர் வெஸ்ட் டூ தாம்பரம் டூ சிட்லபாக்கம் டூ அஸ்தினாபுரம் டூ குரோம்பேட் டூ வடபழினி என மாசத்துல பத்து நாள் பேக்கு போல எனக்கா அலைஞ்சது மறந்து போச்சா?? //
ReplyDelete//எனக்காக பேக்கு போல அண்ணா நகர் ஈஸ்ட்.டூ அண்ணாநகர் வெஸ்ட் டூ தாம்பரம் டூ சிட்லபாக்கம் டூ அஸ்தினாபுரம் டூ குரோம்பேட் டூ வடபழினி என மாசத்துல பத்து நாள் பேக்கு போல எனக்கா அலைஞ்சது மறந்து போச்சா?? //
ReplyDeletenice....
//உள்ள புகைப்படம் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எடுத்தது.. //
ReplyDeleteஇதை படிச்சவுடனே பத்தாம்பு படிச்சிருக்கீங்களான்னுதான் கேட்கத் தோணிச்சு
so sweet
ReplyDeletePhoto la iruga paayan naala irugan.
ReplyDeletePhoto la iruga paayan naalla than irugan ,.
ReplyDeleteஒவ்வொரு மனிதனுக்கும் அவன் அவன் மனைவிதான் அவனுக்கு உலக அழகி
ReplyDelete