உப்புக்காத்து=3


அவர் பெயர் ரவிசன்ஜி...அவரை எனக்கு சென்னை இந்தஸ்தான் கல்லூரியில் வேலை பார்க்கும் போது பழக்கம்.. அவர்தான் படூர் இந்துஸ்தான் கல்லூரியில் வீடியோ மற்றும் ஆடியோ ஸ்டுடியோ வடிவமைத்தவர் என்று கூட சொல்லலாம்...இன்றைக்கு சென்னையில் விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் எலக்ட்ரானிக் மீடியா டிகிரி முடித்த பல பேட்ச் பசங்களுக்கு அவர் வகுப்பு எடுத்து இருக்கின்றார் என்பதால் அவரை நன்றாக தெரியும்..நிறைய கல்லூரிகளில் அவர்  கெஸ்ட்லெக்சரர்ஆக பணி புரிந்து இருக்கின்றார்..கிண்டி அண்ணா யுனிவர்சிட்டியில் பணி புரிந்து இருக்கின்றார்.. அவரது மனைவி போர்டு கம்பெனியில் பெரிய போசிஷன்..

2007ல் அவருடன் கல்லூரியில் ஸ்டாப் ரூமில் அவருடன் சின்ன சண்டை... அவர் கெஸ்ட் லெக்சரர்..ஆனால் அவர் எச்ஓடி போல எனக்கு ஆர்டர் போட்டர்.. நான் அதனை எதிர்த்து  கேட்டேன்..இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் பொது இடத்தில் என்னை விட வயதில், அனுபவத்தில் பெரியவரான அவரிடம் சண்டை போட்டதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டேன்..

ச்சே இதில் என்னப்பா இருக்கு.. அதை எல்லாம் நான் அப்பவே மறந்துட்டேன் என்றார்.. அவர் சொன்ன அந்த வார்த்தை சத்தியம்.. அவரும் அந்த சம்பவத்தை மறந்து விட்டார்.. நானும் மறந்துவிட்டேன்...அதன் பிறகு நிறைய விஷயங்கள் பேசி இருக்கின்றோம்.. முக்கியமாக மதிய உணவை எல்லா ஸ்டாப்புக்ளும் கடை விரித்து அரட்டை அடித்து சாப்பிடுவோம்..

அதன் பிறகு வேறு கல்லூரிக்கு ரவிசென்ஜி மாற்றல் ஆகி போய்விட்டார்... அதன் பிறகு அவரை ஒரு முறை சந்தித்து இருக்கின்றேன்..


கடந்த வெள்ளிக்கிழமை 30/1/2012 அன்று  நண்பர் பினாசுதின் அவர்களிடம் இருந்து போன் வந்தது..ரவிசென்ஜி பையன் அஸ்வின் காங்கோ நாட்டுல நடந்த பிளைட் கிராஷ்ல் இறந்து போய் விட்டான் என்பதுதான்..

இருபத்தோரு வயது பையன்.. பிளஸ் டூ முடித்ததும் விமானி ஆகவேண்டும் என்ற ஆசையில், சவுத் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு பெரிய பிளைட் ஸ்கூலில் சேர்ந்து, அவனுடைய விடா முயற்சியால் ஒரு கார்கோ பிளைட் கம்பெனியில்  வேலைக்கு சேர்ந்து இருக்கின்றான்..30 ஆம் தேதி டூட்டிக்கு வரவேண்டிய கோ பைலட் வரவில்லை என்பதால் இவன் போய் இருக்கின்றான்..வானிலை மோசமானதால் விபத்தில் சிக்கி 21 வயது அஸ்வின் காங்கோ காட்டில் இறந்து விட்டான் என்று வீட்டுக்கு தகவல் வந்து இருக்கின்றது..21 வயது  பிள்ளை இறப்பு  என்பது பெரிய இழப்பு.. உலகின் பெரிய சோகம் புத்திர சோகம்.. அதனால் கடந்த ஞாயிறு அன்று நேரில் போய் துக்கம் விசாரித்து விட்டு வரப்போனேன்.. என்னோடு கல்லூரியில் பணிபுரிந்தவர்கள் எல்லோரும்  நான் போவதற்கு சில மணிநேரத்துக்கு முன் பார்த்து விட்டு சென்று விட்டார்கள்..

நான் தனியாக அவரை பார்த்தேன்.. திடமாக பேசிக்கொண்டு இருந்தார்.. அழவில்லை.. கண்கள் கலங்கி இருந்தது.. இன்னும் மகன் இறப்பை மனம் முழுவதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவரது பேச்சில் தெரிந்தது.. அவரது மனைவி, மற்றும் ஒரே மகள் கண்கள் கலங்கி கொண்டு இருந்தார்கள்.. 

அவர் திடமாக பேசினார் என் மகன் வீரமாக இரண்டு பேரை காப்பாற்றிவிட்டுதான் இறந்து இருக்கின்றான்.. என்று எப்படி விபத்து நடந்தது என்று என்னிடம் விளக்கினார்.. நான் கிளம்பும் போது இந்த சோகத்தில் இருந்து உங்கள் குடும்பம் சீக்கரம் மீள இறைவனை வேண்டிக்கொள்கின்றேன் என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினேன்..

இரண்டு நாளைக்கு முன் எல்லோருக்கும் ஒரு மெயில் அனுப்பி இருந்தார்..  அதை பார்த்ததும் எனக்கு வார்த்தையே வரவில்லை.... அது கீழே...
=====================

Sent: Monday, 6 February 2012 12:19 PM
Subject: FW: pl recognize this HERO and do not grieve.

FYI
From: RaviSenji SAEINDIA [mailto:ravisenji@saeindia.org]
Sent: Monday, February 06, 2012 11:42 AM
Subject: pl recognize this HERO and do not grieve.

Dear Boss & my family members at office,
Thank you all for all the support & prayers.
If you feel fit pl share this with all who had condoled my loss
I have below the narration made by the passengers who were saved by the crew.
“ The plane entered a low hanging electrical cloud as they were climbing.
The stored electrical charge within the cloud burnt their electrical systems,back up systems & communication.
Both pilots struggled to move the plane as far away as possible.
The pilot struggled and held the plane steady and my son fought to move the plane away from the thickly populated community below.
They succeeded in this but were greeted by mount kievu and woods.
MY 21 YEAR OLD SON ASWIN , ROLLED THE PLANE TO HIS SIDE YELLED AT THE PILOT TO MOVE BACK TO SAVE HIMSELF AND PLUNGED SACRIFICING HIS LIFE FIRST. TRYING TO SAVE ALL THE PASSENGERS INCLUDING THE PILOT.
THE PILOT REFUSED TO MOVE BACK AND WAS ALSO KILLED .
ALL 3 PASSENGERS HAVE BEEN SAVED”
My heart torn beyond repair also swells in pride as i write this
I sent my son to Congo, but now await a noble soul to return in a box.
Thank you again,
ravisenji
=======================
முக்கியமாக கடைசி வரியாக அந்த வார்த்தை, பிள்ளையாக காங்கோவுக்கு அனுப்பி விட்டு இன்று பாக்சுக்கு வெயிட்  செய்து கொண்டு இருக்கின்றேன் என்று எழுதி இருந்ததை வாசிக்க மனம் கணத்தது..

இதில் கொடுமை பாக்சுக்கு வெயிட்  செய்து கொண்டு இருக்கின்றேன் என்று சொல்லியது போல் இன்னும் பையனின் உடல் வந்து சேரவில்லை...

ஜனவரி 30ஆம் தேதி பிரிந்த உயிர்.. காங்கோவில் நிறைய நடைமுறை சிக்கல்கள்.கென்யாவில் பிரச்சனை என்று ஒரு ஒருகதையாக சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்..ரவிசாரின் குடும்பம்.. தவித்து போய் இருக்கின்றது..


காங்கோ  நாட்டை பொறுத்தவரை அது உடல்.. இங்கு ஒரு தகப்பன் தன் மகனுக்கு கடைசி மரியாதை செலுத்தவேண்டும்..உடலை பார்த்தாலாவது இற்நத போய் விட்டான் என்று அழுது கொஞ்சம் கொஞ்சமாக மீளலாம்..ஆனால் இதோ இதோ என்று ஜனவரியில் 30ஆம் தேதியில்  இருந்து பத்து நாட்கள் ஆகிவிட்டன....இன்னும் அந்த குடும்பம் வேதனையில் தவிக்கின்றது..

நேற்று  நண்பருக்கு போன் செய்த போது இன்னும் உடல் வரவில்லை என்றார்...ஒரு உடலை பிளைட்டில் ஏற்ற ஏகப்பட்ட நடைமுறை இருப்பதாக சொன்னார்கள்...

இன்று காலை ரவிசாருக்கு போன் செய்தேன்..
இன்னும் பையன் வீட்டுக்கு வரவில்லை என்றார்.... எனக்கு நெஞ்சில் கணம் ஏறியது..கொடுமை நொடிக்கு நொடி ஒரு தகப்பன் ஸ்தானத்தில் கொடுமையான விஷயம்.. 
நேரம் வந்துடுச்சி செத்துட்டடான்... அவன் விதி அவ்வளவுதான் என்று அழுது தூக்கி போட்டு  இருந்தா கூட மனசு ஆறிப் போய் இருக்கும்.. ஆனால் இது கொடுமை..

இதை படிக்கும் நண்பர்கள் காங்கோவிலோ அல்லது கென்யாவிலோ இருக்கும் நம் தமிழ் நண்பர்கள் யாரவது இதை படித்தால், உங்களால் முடிந்தால்,ஒருவேளை ஆங்கே நீங்கள் பெரிய பதவியில் இருந்தால், தயவு செய்து அஷ்வின் உடல்  சென்னைக்கு வர உதவி செய்யுங்கள்..
மேலும் விபரங்கள் வேண்டுமாயின்..

ரவிசென்ஜி .. செல்போன் நம்பர்..9789984730

கதறி அழ முடியாமல் வந்து துக்கம் விசாரித்த நண்பர்களுக்கு மெயில் அனுப்பிக்கொண்டும், இன்று வருகின்றதா? அல்லது நாளை வருகின்றதா? என்று தெரியாமல் பையன் என்ற பிம்பத்தை தவிர்த்து வீட்டு வாசலில் ஒரு பாக்சுக்காக பத்து நாட்களுக்கு மேல் வெயிட் செய்து கொண்டு இருப்பது கொடுமை..


ரவிசென்ஜி சார்... சீக்கிரம் இந்த பிரச்சனையில இருந்து வெளிவர அவருக்கு எல்லாம் வல்ல பலத்தை கொடு இறையே.....


============

 ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

23 comments:

 1. நெஞ்சை கனக்கும் செய்தி....

  ReplyDelete
 2. கண்களில் கண்ணீர்... இறைவனை வேண்டுகிறேன்..

  ReplyDelete
 3. Very Sad to learn his tragedy, Pray the almighty to see his son's face at least once soon and rest his son's soul in peace.

  ReplyDelete
 4. Feel really bad about this. May god help the noble person like Mr. Ravisenji with great strength to overcome the grief.

  ReplyDelete
 5. எனக்கு வந்த மெயிலில் பார்த்தீபன் என்ற நண்பர்..பகிர்ந்தவை

  Dear Mr. Dhanasekar,

  I am a long time reader of your blog and today's heart breaking post made me to write to you for the first time. I have been associated with air-crafts for past 18 years and I would like to point out few things. The fatal aircraft was Antonov 28 manufactured in Poland by PZL-Mielec under the license from Russians (http://russianplanes.net/EN/ID16522). This particular aircraft had the registration 9Q-CUN and 9Q is country code for democratic republic of Congo. Now if you want to really know how the accident happened then one has to wait for official report which in my experience will take approximately 1 year to come. There was this Chicago convention through which ICAO (International Civil Aviation Organization) had laid out clear international Standards And Recommended Practices for aircraft safety but not many 3rd world counties follow them particularly in Africa. Lots of banned (due to inadequate airworthiness) aircrafts from America and Europe still flying in Africa. The airport I work with has banned many aircrafts from landing in the airport due to poor safety records. In some countries rules are strictly applied for commercial civil aircrafts but not so seriously for cargo aircrafts.

  The main reason I wanted to write this mail was when I did a quick check on the internet on this fatal 9Q-CUN aircraft, I found that the manufacturer reported that the airworthiness of this aircraft (msn 1AJ006-11) had expired on June 12, 1993.(http://aviation-safety.net/database/record.php?id=20120130-0) Which means for past 18 odd years the aircraft was not checked my the manufacturer for its air worthiness. In my opinion it is utter foolishness to pilot such a poor maintained aircraft. I advise to every parent or relatives who have one of their loves ones flying aircrafts or working us crew in the aircraft to check the airworthiness of the aircraft they are flying. Besides in my knowledge every aircraft is equipped to deal with electrically charged clouds and had the aircraft is well maintained it would deal with such situation.

  Having said that my heart goes out the young brave Ashwin who had sacrificed his life to save lives not only in the aircraft but also in the ground. My thought and prayers are with the parents and may brave Ashwin's soul rest in peace.

  Thanks and Regards

  R Pratheepan

  ReplyDelete
  Replies
  1. Sir
   the msg. was informative. One thing i would like to know.Is theren't any regulatory mechanism to ground such unworthy aircraft and how are these crafts insured ?
   Kindly reply when convenient to you to rdpgiri@gmail.com

   Delete
 6. கண்கள் கலங்குகிறது

  ReplyDelete
 7. May his soul rest in peace! Hope his family recovers from this loss soon.

  ReplyDelete
 8. எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்....

  ReplyDelete
 9. எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்...

  ReplyDelete
 10. படித்ததும் மனசு வலிக்கிறது அதன் வலி எனக்கும் தெரிகிறது. உங்கள் நண்பரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  ReplyDelete
 11. மனது கனக்கிறது ... எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்...

  ReplyDelete
 12. Sir

  Convey our heartfelt condolences to the grieved family.

  I wish Thiru. Ravisenji be bestowed with courage and will power to face this challenge.

  ReplyDelete
 13. My eyes burst in to tears and unable to even do the imagination of how a family would suffer.. I have prayed by beloved God to give all his blessings to overcome this sorrow and to do all the final respect to the brave young heart who sacrifised to save others.... I hope soon the family will overcome the greviences by the god blessing...

  ReplyDelete
 14. Jackie Anna

  Convey our heartfelt condolences to the grieved family.

  I hope the date was wrongly mentioned as 30/1/2011 instead of 30/1/2012

  ReplyDelete
 15. Jackie Anna

  Convey our heartfelt condolences to the grieved family.

  I hope the date was wrongly mentioned as 30/1/2011 instead of 30/1/2012

  ReplyDelete
 16. Jackie Anna

  Convey our heartfelt condolences to the grieved family.

  I hope the date was wrongly mentioned as 30/1/2011 instead of 30/1/2012

  ReplyDelete
 17. அன்பு தனசேகர்,
  இந்தப் பதிவை எனது நண்பர்கள் 100 பேருக்கு அனுப்பி ரவிசன்ஜிக்கு உதவி செய்ய முடியுமானால் முன்வரச் சொல்லி வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.

  ReplyDelete
 18. மிக்க நன்றி நண்பரே நேற்று 15/02/2012 மதியம் பாடி வந்துவிட்டது.. ஒன்றரை மணிரேநத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டது என்பதை உதவி செய்ய முன் வந்த உங்கள் நல்ல எண்ணத்துக்கும் என் நன்றிகள்..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner