சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/வியாழன்/09/02/2012


ஆல்பம்
திருடனுக்கு தேள் கொட்டிய மனநிலையில் இருப்பவர்கள் யார் என்று கேட்டால் தாரளமாக, தமிழக வாக்காளபெருமக்களை சொல்லலாம். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், ஒரு வாழ்க்கையை மெல்ல வாழ பழகி கொண்டு வருகின்றார்கள்.. வேற வழி.. வேற விதி...??


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் மின்வெட்டை சரிசெய்வோம் என்று ஜெ வாக்களித்தார்..மக்களும் மண்டையை ஆட்டிக்கொண்டு வாக்களித்தனர்.இணையத்துல மின்வெட்டையே  சந்திக்காத நாட்டுல இருந்த, பெரிய வெளிநாட்டு கோஷ்ட்டிங்க இணயைத்துல அந்த அம்மாவுக்காக சில்லான் ஜப்பான் அடிச்சிக்கிட்டு கிடந்தானுங்க.. அதுக்கு இங்க இருக்கற சிலரும் ஜால்ரா போட்டுக்குனு இருந்தானுங்க..சும்மா ஜால்ரா போட்டாலும் பரவாயில்லை... குஜராத்துல இருந்து ஸ்டெயிட்டா தமிழகத்துக்கு மின்சாரம் வந்துடும்னு வேற சப்பைகட்டு வேற... எட்டுமணிநேரம் மின்வெட்டு அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார் நமது முதல்வர் ஜெ அவர்கள்.. மூன்று மாசத்துல சரி பண்ணுவேன்னு சொல்லுட்டுதானே ஆட்சிக்கு வந்தாங்க?? சூரியன் படத்துல கவுண்டர் சொன்ன டயலாக் நியாபகத்துக்கு வருதா? அரசியலில் இது எல்லாம் சாதாரணமப்பா...
========================
ஆட்சிக்கு வந்தும் ரத்தூக்கத்தை தொலைச்சவங்க யாருன்னா சசிக்கலா கோஷ்ட்டிதான்.. இப்படி பின்னங்கால் பிடறியில் விழும் அளவுக்கு ஓடுவோம்னு அவுங்க நினைச்சிக்கூட பார்த்து இருக்க மாட்டாங்க..கடவுள் இருக்கான் கொமாருன்னு எந்த கோஷ்ட்டி நினைச்சிதோ???
====================
உங்கள எதுக்கு மக்கள் தேர்ந்து எடுத்து சட்டமன்றத்துக்கு அனுப்பறாங்க --???என்ற கேள்விக்கு கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் செல்போன் வீடியோவில் பிட்டுபடம் பார்த்து மாட்டிக்கொண்டு பதவியும் விலகி இருக்கின்றார்கள்... என்ன கொடுமை சரவணன் இது..?? இப்படி பதவி போகும் என்று கனவிலும் நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள் அவர்கள்.. பதவி விலகிவிட்டு வீட்டுக்கு போய் இரண்டு பெக் போட்டு விட்டு அந்த செல்போனை பார்த்து பார்த்து அழ வாய்ப்பு அதிகம் இருக்கின்றது..
என் பிறந்தநாளின் போது நிறைய வாழ்த்துகள்... அதில்  விவேக் என்ற நண்பர்,  என் சின்ன வயது போட்டோவையும் இப்போதைய போட்டோவையும் இணைத்து நேரம்மெனக்கெட்டு ஒரு வாழ்த்தை  எனக்கு போஸ்புக்கில் அனுப்பி இருந்தார்.. என் பிறந்தநாள் பரிசில் நான் ரொம்பவே ரசித்த பரிசு அது...




=================
மிக்சர்..
இரண்டு வாரங்களுக்கு முன் இத்தாலியில் நடந்த ஒரு கப்பல் விபத்தையும், அந்த விபத்து நடந்த   விதத்தை  கேள்வி பட்ட போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை. 

ஆனால் ரொம்ப காஸ்ட்லியான சிரிப்பு.  விபத்து நடந்த பகுதியில்  கப்பல் கேப்டனுக்கு ஒரு நண்பர் கரையில் இருந்தாராம் அவருக்கு கை காட்ட கப்பலை கரை பக்கம் செலுத்தி இருக்கின்றார் அது தரை தட்டி ஓகாயா...........
 
 ================
பிலாசபி பாண்டி 
ஒரு பத்தாவது படிக்கற பையன் தன்னோட கூட  படிக்கற பொண்ணுகிட்ட ஒரு கேள்வி கேட்டான்..  உலகத்துலேயே கோபம் பொத்துகிட்ட வருவது ஆணுக்கா அல்லது பெண்ணுக்கா என்று கேட்டான்.. அணுக்கு என்று பெண் பதில் சொன்னாள்? இல்லை என்று பையன் சொன்னான்.. இப்ப நீ எனக்கு ஒரு முத்தம் கொடு எனக்கு கோபமே வராது.. ஆனா உனக்கு கொடுத்தா நீ உடனே கோபப்படுவே என்று பதில் சொன்னான்.


==============================
நான்வெஜ்18+
இதய அறுவை சிகிச்சை செஞ்சிகிட்ட 50 வயதை கடந்த ஒருத்தன் டாக்டர்கிட்ட கேட்டானாம்.. டாக்டர்  நான் செக்ஸ் வச்சிக்கலாமா? கண்டிப்பா வச்சிக்கலாம்  எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனா ஒரு கண்டிஷன் உங்க ஒய்ப்கிட்ட மட்டும்தான் வச்சிக்கனும்.. காரணம் எந்த புது சைச பார்த்து உங்க மனசு உற்சாகமாச்சின்னாலும், போட்ட தையல் பிரிஞ்சி சங்குதாண்டியோ...............


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

10 comments:

  1. ஒருவர் தனது சொந்ததை வாழவைக்க பதவியை பன்படுதினார்

    இவர் தன் சொந்த பகையை தீர்க்க பன்படுத்துகிறார்.

    மின்சார தட்டுபாடு,அயல் மாநிலத்தவரின் ஆதிக்கம்,கனிமவழ த்தை சுரன்டல், தண்ணீர் தட்டுபாடு,...................... எட்ச்ச்ச்ச்ச்

    இதெல்லாம் ????????????????

    ReplyDelete
  2. இந்த முறை 18ப்ளஸ் ஜோக்கை விட அந்த கப்பல் விபத்து ரொம்ப காமெடியா இருக்கு. ஹி ஹி

    ReplyDelete
  3. பொறுங்க ஜாக்கி...
    அம்மா அடுத்த ஆண்டு மின் வெட்டு இல்லாமல் செய்து விடுவார்கள்.அது வரை கொஞ்சம் புழுக்கத்தில் இருக்ககூடாதா?

    ReplyDelete
  4. பால் விலையை ஏத்தியாச்சு...பஸ் கட்டணத்தையும் ஏத்தியாச்சு...
    மின் வெட்டு நேரத்தை ஏத்துனா...மட்டும் கொந்தளிச்சிருவோமா?

    ReplyDelete
  5. மின்வெட்டால் ஆட்டுக்கல், அம்மி-க்கு டிமாண்ட் அதிகமாயிருச்சு.. எங்க வீட்டுல கூட கடந்த இரண்டு நாட்களாக அம்மியில் சட்னி, துவையல் அரைச்சாங்க.. பெண்களுக்கு நல்ல எக்சர்சைஸ்தான்

    ReplyDelete
  6. aadutha varusham minsaram irudhathane vetturadhukku

    ReplyDelete
  7. இன்றைய சூழலில் கோபாலபுரத்து காரர் வந்து உட்கார்ந்து இருந்தாலும் இதே நிலைமை தான்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner