சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/ஞாயிறு/12/01/2012


ஆல்பம்...

இரண்டு மணி நேர மின்வெட்டை பொறுக்க முடியாமல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டார்கள்...மாற்றத்துக்கு அதுவும் ஒரு காரணம்....  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் மின்வெட்டை அறவே ஒழிப்போம் என்று ஜெ சொன்னதை மக்களும் நம்பினார்கள்..


இப்போது பதவிக்கு வந்ததும் ஓட்டு போட்ட மக்களுக்கு பெப்பே...கோவையில் எட்டுமணிநேரம் மின் வெட்டை கண்டித்து 40 ஆயிரம் பேர் அரசுக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த போலிஸ் தடியடி நடத்தி மக்களை கதற விட்டு இருக்கின்றது... 

போலிஸ் வைத்து தடியடி நடத்தி மக்களை பீதிக்குள்ளாக்கினால் திரும்ப மின்சாரத்துக்கு போராட்டம் என்று தெருவில் இறங்கக்கூடாது என்பதுதான் அரசின் எண்ணம்... பொதுவாக தமிழன் யார் விட்டு எழவோ பாய போட்டு அழுவோ என்பது போலத்தான் எல்லா விஷயத்துலயும் இருப்பான்.. ஆனால் அவன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால் பொங்கி எழுந்து விடுவான்... கோவையில் அதுதான் நடந்தது..
=======================
இழப்பே பெரிய வலி...அதிலும் எப்படி இழக்கின்றோம் என்பது ரொம்பவே முக்கியம்...சென்னையில் மாணவனால் கொலைசெய்யப்பட்ட டீச்சர் விபத்தில் இறந்து போய் இருந்து இருந்தால் கூட நேரம்  விதி என்று அவர் குடும்பம் நினைத்து இருக்கும்.. மனதை சமாதானப்படுத்திக்கொண்டு இருக்கும். ஆனால் காலையில் வேலைக்கு போய் பள்ளியில் ஒரு மாணவனால்  கொலையானதை அந்த குடும்பம்  எப்படி ஜீரணித்துக்கொள்ளும்...? அந்த ஆசிரியைக்கும் அவரது குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
===============================
திருமணத்துக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டு இருக்கும் போது மதுரை அருகே வேன் கிணற்றில் விழுந்து பத்துபேர் பலியாகி இருக்கின்றார்கள்..கிணற்றில் அதிகம் தண்ணீர் இருந்த காரணத்தால் மூன்று பேர் மட்டும் தப்பித்து இருக்கின்றார்கள்.. வேன் டிரைவர் காட்டு வேகத்தில் வண்டி ஓட்டினார்...

நாங்கள் எவ்வளவு சொல்லியும் அவர் காதில் வாங்கவில்லை.. அதனால் இந்த விபத்து நடந்தது  என்று வேனில் பயணித்தவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்..ஆனால் வேகமாக போனது பெரிய தப்பு அதை மறுக்க முடியாது.. ஆனால் ரோட்டில் இருந்து ஸ்பீட் பிரேக்கரில்  ஏறி இறங்கி வேன் தன் கட்டுபாட்டை இழந்து இருக்கின்றது.. அங்கே ஸ்பிட்பிரேக்கர் இருக்கின்றது? என்று ஏதாவது ஒரு அறிவிப்பு பலகையாவது இருந்ததா என்பதை அங்கே இருப்பவர்கள்தான் சொல்லவேண்டும்.. அறிவிப்பு பலகை இருந்து இருக்காது என்பது என் அனுமானம்..தமிழகத்தில் பல இடங்களில் ஸ்பிட் பிரேக்கர் இருக்கும் ஆனால்  அறிவிப்பு பலகை இருக்காது... தங்க நாற்கர சாலைகளில் புயல் போல வேகம் காட்டி ஓட்டி வரும்ஓட்டுனர்கள்... சின்ன சாலைகளில் அதே வேகத்தில் பயணிப்பதையே அவர்கள் விரும்புகின்றார்கள்.. விபத்துக்கு அதுவும் ஒரு காரணம்...திடிமழகத்தின் கிளைச்சாலைகளில் நிறைய கிராமங்களில் அவர்களே ஸ்பிட் பீரேக்கர் அமைத்துக்கொள்கின்றார்கள்.. அதுக்கு எந்த அறிவிப்பும் இருப்பததில்லை.. அதே ஊரில் இருப்பவனுக்கு எந்த வளைவில் ஸ்பீட் பிரேக் இருக்கும் என்பது தெரியும்... வெளியூர் வாகன ஓட்டுனர்களுக்கு  ஸ்பீட் பிரேக்கர் இருப்பது எப்படி தெரியும்???  தேவையில்லாத இடங்களில் இருக்கும் ஸ்பீட் பிரேக்கர் எடுக்க வேண்டும்.. அப்படி தேவைப்படும் இடத்தில் ஸ்பிட் பீரேக்கர் இருந்தால் அதுக்கு முறையான  அறிவிப்பு பலகை இருக்கவேண்டும்....ஓவர் ஸ்பீட் என்று பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது என்பதே எனது எண்ணம்..
================
மிக்சர்.

பஸ்டே என்ற பெயரில் சில காலிப்பயல்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு சென்னையில் தொல்லை கொடுத்து வருகின்றார்கள்.. இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்..கோவையில் மின்சாரம் இல்லை என்று போராடிய பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலிஸ்.. நிறைய நேரம் மாணவர்கள் என்றால் சற்று பயத்துடனே பிரச்சனையை அனுகுகின்றது.. அதனாலே அவர்கள் அதிகம் துள்ளுகின்றார்கள்.. சென்னையில் பஸ்டே கொண்டாட்ட கலவரத்தில் பேருந்தின் முதும் பொதுமக்கள் மீதும்  கல் வீச்வின் போது, சின்ன குழந்தையை காப்பாற்ற தனது ஹெல்மட்டை குழந்தைக்கு கொடுத்து பாதுகாத்து தாயிடம் சேர்பித்த அந்த போலிஸ்காரருக்கு ராயல் சல்யூட்... 
==========
கறை நல்லது என்பது போல திட்டு திட்டாக சென்னை சாலைகளில் கருப்பு கருப்பாக  இருக்கும்.. அது ஒன்றுமில்லை யுவர் ஆனர்..  மழைக்கு பிறகு சாலையை செப்பனிட்டு இருக்கின்றார்கள்.. அதுதான் சாலையில் உள்ள டார்க்  கருப்பு கறைகள்..
================
காசிதியேட்டரில் இருந்து உதயம் தியேட்டர் வழியாக வடபழனி செல்லும் சாலையில், அசோக் பில்லர் அருகே பிரி லெப்ட் ஏன் வைக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை...ஒரு வேளை மக்கள் கடக்க சிக்னல் என்றால் ஓகே... ஆனால் போக்குவரத்து  போலிஸ் மறைந்து இருப்பது அங்குதான்.. உஷார் வாகன ஓட்டிகளே..
=================================
தி பெஸ்ட் படங்கள் உங்களுக்காக டிவிடி  வாங்கி வைத்து இருக்கின்றேன்.. கிண்டி ஒலிம்பியா டவரில் பணிபுரிகின்றேன்.. அந்த பக்கம் வரும் போது வாங்கிக்கொள்ளவும் என்று நண்பர் ஒருவர் சொன்னார்... பேரையும் நம்பரையும் மிஸ் பண்ணிவிட்டேன்.. ஒருவேளை அந்த  நண்பர் இதை படித்தால் என்னை தொடர்பு கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.
=====================
அனந்த விகடனின் இணைப்பான என் விகடனில் வந்த எனது தள அறிமுகத்தை படித்து விட்டு நிறைய கடலூர் மற்றும் சொந்தக்கார  நண்பர்கள் போன் செய்து வாழ்த்தினார்கள். என் தங்கை என் அப்பாவிடம் புத்தகத்தில் வந்ததை படித்து காட்டினாள்..நான் ஒரு பெண்ணுக்காக சாகசம் செய்து சைக்கிளில் இருந்து அவள் காலில் விழுந்தது போன்றவற்றை சொன்ன போது என் அப்பா விழுந்து விழுந்து சிரித்தாராம்.. சிரித்து விட்டு சொன்னாராம்.. பொறுக்கி மொண்டாட்ட ஓத்ததும்மா அது.... என்ன தவம் செய்தனை.. யப்பா ஐயம் லவ்விங் யூ....
========================
நடிகையின் வாக்குமூலம் படத்துக்கு அவரு மட்டும்தான் முதல்நாளே பார்த்துட்டு விமர்சனம் எழுதுவாருன்னு நினைச்சேன்.. அதே போல எழுதிட்டார்.. அவரே உண்மையான கலைதாகம் உள்ள பிளாக்கர்.
==================
ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கொண்டு, தரையில் சம்மணம் இட்டு உட்கார்ந்து சாப்பிடும் போதுதான்.. நம் தொந்தியின் கனம் நமக்கே புரியவைக்கப்படுகின்றது.
===========================
 
சில பெண்கள் சட்டென அசத்திவிடுவார்கள். அவர்கள் எதேச்சையாக செய்யும் விஷயங்கள் சட்டென மனிதில் நிலைத்து நின்று விடும்... புதியதலைமுறை தொலைக்காட்சியில் யப்பீசுக்கு மட்டும்மல்ல என்ற ஒரு நிகழ்ச்சி... அதில் ஒரு தடியானபையனும் (அஸ்வின்) ஒரு பெண்ணும் ஐடி நிறுவனத்தில் வேலை  செய்வுது போலான காட்சிகளில் அந்த பெண் (அஸ்வதி) நடிக்கும்  காட்சிகள் அற்புதம்... அற்புதமான எக்ஸ்பிரஷன், துள்ளலான நடிப்பு. போன வாரத்தில் மேனேஜரை திட்ட வேண்டும் என்ற கான்சப்ட்டில் அந்த பெண் நடிப்பில் கொடுத்த  சின்ன எக்ஸ்பிரஷன் பார்த்து வாய் பிளந்து நின்றேன். அஸ்வதியின் நடிப்பு  பேச்சும் துள்ளலாக இருக்கின்றன.. உதாரணத்துக்கு மவுனராகம் ரேவதி போல....அஸ்வதி  நடிப்பு திறமைக்கு வாழ்த்துகள்...
============
இந்த கார் விளம்பரம் அற்புதம்..


========= 
இன்று தோசிபா ஜெனரேட்டர் நிறுவனத்தை  திறந்து வைத்து முதல்வர் ஜெ பெருமீதம்..தமிழக மக்களுக்கு இப்ப என்ன தேவைன்னு அம்மா போல டைமிங்கான  சேவை செய்ய யாரால முடியும்???
 ============
பிலாசபி பாண்டி.
யாரையும் நம்முடையவர்கள் என்று நினைக்காமல் இருந்தாலே பெரிய ஏமாற்றங்கள் நமக்கு ஏற்ப்படுவதில்லை..

நான்வெஜ்18+
ஒரு பார்மலிட்டிக்குதான் கேட்கின்றேன் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணிகொடுக்கிறிங்களான்னு ஒரு காலேஜ் பையன் பொண்ணோட அப்பாகிட்ட கேட்டான்... அதுக்கு அந்த பொண்ணோட அப்பா டென்ஷன் ஆகிப்போய்.. டேய் என் பொண்ணு கல்யாணம் பார்மாலிட்டின்னு எந்த முண்டம்  சொன்னது கேட்டார்.... உங்க பொண்ணை கயனகாலிஜிஸ்ட் கிட்ட காட்டினேன்..  பொண்ணு கர்பம்.. இப்போதைக்கு  கல்யாணம் பாமலிட்டிதான்னு சொல்லிட்டாங்க..


பி0ரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

12 comments:

  1. கோவை இராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது இரத்ததானம் தர விரும்பும் கோவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் Cell : 9865191061

    ReplyDelete
  2. கார் விளம்பரமும், நான்வெஜ் 18+ பகுதியும் அருமை. நன்றி

    ReplyDelete
  3. என்ன பண்ண.....???? கரண்ட்டை காரணம் காட்டி விளையாடுகிறார்கள்

    ReplyDelete
  4. பஸ் டே..போலீசுக்கு சல்யூட். எங்கெல்லாம் ட்ராபிக் போலீஸ் மறைந்து இருப்பார்கள் என்று சென்னைவாசிகளுக்கு அலர்ட் குடுக்கும் ஜாக்கி வாழ்க. முன்பு சங்கம், இப்போது காசி தியேட்டர்.

    ReplyDelete
  5. I feel Sorry for the teachers two girl children , because of a guy's immatured decision they have lost their mother and it will be really tought for them through out their life . Parents need to talk to their kids frequently and identify the changes/problems they are facing instead of buyign everything they ask .

    ReplyDelete
  6. Nice appa..... Nice pulla...... I love your dad too!!!!

    ReplyDelete
  7. Nalla Appa...Nalla Pulla.... I love your appa's sportiveness and sense of humour.

    ReplyDelete
  8. அந்த விபத்துக்கு காரணம் சாலையில் பரப்பி வைத்திருந்த துவரை செடிகள்தான் காரணம் என்று செய்திகளில் படிக்க நேர்ந்தது.காரணம் அதுவாயிருக்க,வேகத்தடைகளில் ஏறியதுதான் விபத்துக்குக் காரணம் என்று இப்பொழுது செய்தி.எது உண்மை.? சாலைககள் போக்குவரத்துக்காகதாநேயன்றி நெல்லு காயப்போடவும், துவரம்பருப்பு காயப்போடவும் சாலைகளை தவறாகப் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பாதுகாப்பு வாரம் என்று வருடம்தோறும் மட்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதனால் என்ன பயன்.?சாலைகளில் குழி குண்டுகள்,பள்ளங்கள் இவைதான் சாலைப்பாதுகாப்பா.?வாகன ஓட்டிகள் படும் சிரமத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.தேசிய நெடுஞ்சாலைகளில் பார்த்தால் இடையில் இருக்கின்ற தடுப்பு சுவர்களை சேதப்படுத்தி இருசக்கர வாகனங்கள்,நான்கு சக்கர வாகனங்கள் குறுக்கே செல்லும்போது விபத்துகள் நடக்கிறது. நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் தினசரி இவற்றை எல்லாம் கண்காணிக்க வேண்டும்.கண்காணித்து சட்டத்துக்கு புறம்பாக விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவது அரசின் தலையாய கடமை ஆகும்.
    சட்டங்கள் கடுமையானால் தவறுகள் நடப்பதற்கு சாத்தியமே இல்லாமல் போய்விடும்.

    ReplyDelete
  9. அந்த விபத்துக்கு காரணம் சாலையில் பரப்பி வைத்திருந்த துவரை செடிகள்தான் காரணம் என்று செய்திகளில் படிக்க நேர்ந்தது.காரணம் அதுவாயிருக்க,வேகத்தடைகளில் ஏறியதுதான் விபத்துக்குக் காரணம் என்று இப்பொழுது செய்தி.எது உண்மை.? சாலைககள் போக்குவரத்துக்காகதாநேயன்றி நெல்லு காயப்போடவும், துவரம்பருப்பு காயப்போடவும் சாலைகளை தவறாகப் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பாதுகாப்பு வாரம் என்று வருடம்தோறும் மட்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதனால் என்ன பயன்.?சாலைகளில் குழி குண்டுகள்,பள்ளங்கள் இவைதான் சாலைப்பாதுகாப்பா.?வாகன ஓட்டிகள் படும் சிரமத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.தேசிய நெடுஞ்சாலைகளில் பார்த்தால் இடையில் இருக்கின்ற தடுப்பு சுவர்களை சேதப்படுத்தி இருசக்கர வாகனங்கள்,நான்கு சக்கர வாகனங்கள் குறுக்கே செல்லும்போது விபத்துகள் நடக்கிறது. நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் தினசரி இவற்றை எல்லாம் கண்காணிக்க வேண்டும்.கண்காணித்து சட்டத்துக்கு புறம்பாக விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவது அரசின் தலையாய கடமை ஆகும்.
    சட்டங்கள் கடுமையானால் தவறுகள் நடப்பதற்கு சாத்தியமே இல்லாமல் போய்விடும்.

    ReplyDelete
  10. நன்றி நண்பர்களே பின்னுட்டத்தில் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு,..,

    ReplyDelete
  11. அண்ணே ஹோண்டா விளம்பரம்தான் உலகத்திலேயே அதிகமாக செலவழித்து எடுக்கப்பட்ட விளம்பரமாம் கிராபிக்ஸ் இல்லாமல் 606 டேக்கில் எடுக்கப்பட்டதாம்

    ReplyDelete
  12. அண்ணே ஹோண்டா விளம்பரம்தான் உலகத்திலேயே அதிகமாக செலவழித்து எடுக்கப்பட்ட விளம்பரமாம் கிராபிக்ஸ் இல்லாமல் 606 டேக்கில் எடுக்கப்பட்டதாம்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner