Colombiana (2011)/ கொலம்பியானா பழிக்கு பழி வகை ஆக்ஷன் கதை


இதை படிக்க ஆரம்பிக்கும்99,9 பர்சென்ட் ஆட்களின் வாழ்க்கையில் இது நடந்து இருக்க  வாய்ப்பே இல்லை...அப்படி ஒரு சூழ்நிலையை யாரும் சந்தித்து இருக்க வாய்ப்பில்லை...ஒரு பர்சென்ட் வாய்ப்பு இருக்கின்றது...


ஆனால் தமிழகத்தில் நடக்கவாய்ப்பே இல்லை என்று அடித்து சொல்லவே முடியாது.. சென்னையில் முந்தநாள் பள்ளிக்கு பையை  எடுத்துக்கொண்டு கிளம்பிய டீச்சர் சக மாணவனால் கத்தியால் குத்தி  வகுப்பறையிலேயே படுகொலைசெய்யப்பட்டு இறந்து போய் இருக்கின்றார்.. பிள்ளைகளுக்கு பை சொல்லிவிட்டு பள்ளிக்கு சென்றவர் வீட்டுக்கு திரும்பவே இல்லை....இந்த லட்சணத்தில் இரண்டுநாளாக டீச்சரை குத்தி கொலை  செய்ய திட்டம் போட்டேன். என்று கைதான மாணவன் வாக்குமூலம் அளித்து இருக்கின்றான்.. அதனால் தான்100 பர்சென்ட் உங்கள் வாழ்க்கையில்  நடக்கே வாய்ப்பே இல்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை...

சரி சீன் சொல்லறேன்.. உங்கள் வாழ்க்கையில்  அது போல ஒருசம்பவம்  நடந்து இருக்கின்றதா ? என்று சொல்லுங்கள்...??

நீங்கள் வீட்டில் படித்துக்கொண்டு இருக்கும் போது உங்க அப்பாரு வந்து, இன்னும் பத்து நிமிஷத்துல இந்த ஊரை விட்டே போகனும்  அப்படி போகலைன்னா நாம் எல்லாரும் செத்துடுவோம்..ஒரு கால் நாம் போக முடியாத சூழ்நிலை வந்தால் படித்துக்கொண்டு இருக்கும் உங்களிடம்  சொல்லுகின்றார்.. நீ எப்படியாவது உயரோடு தப்பித்து விடு...

ஒரு மைக்ரோ கார்டு கொடுக்கின்றார்.. இதில் உனது பாஸ் போர்ட் இருக்கின்றது... இந்த விலாசத்தில் போய் சேருவது உன் சமத்து என்று உங்களிடம் சொல்லி பத்தாவது நிமிடத்தில் உங்கள் அம்மாவும் அப்பாவும்  உங்கள் கண்  எதிரில் கொலை செய்ய படுகின்றார்கள்.. இப்ப ஒரு சம்பவம் உங்கள் வாழ்க்கையில் எட்டு வயதில் நடந்து இருக்குமா??
==============
Colombiana (2011) படத்தின்  ஒன்லைன்.

அப்பா அம்மாவை சாவடிச்ச ஒரு பெரிய போதை மருந்து கும்பல் டானை பழிக்கு பிழி வாங்குவதே படத்தின் ஒன்லைன்..
==============
Colombiana (2011) படத்தின் கதை என்ன?

காட்டாலியா( Zoë Saldana) வீட்டில் படித்துக்கொண்டு இருக்கின்றாள்.. அப்போது அவள் அப்பா பிபோ வந்து விமர்சனத்தில் மேலே சொன்னது போல  சொல்லி கொஞ்ச நேரத்தில் காட்டாலியா கண் எதிரில் டான் லூயிஸ் ஆட்கள் காட்டாலியா அப்பா அம்மாவை சுட்டு கொல்கின்றார்கள்.. காரணம் ரொம்ப சிம்பிள்...


காட்டாலியா அப்பா போதை மருந்து தொழிலில் இருந்து திருந்தி வாழ நினைக்கின்றார்... உலகம் புல்லா இருக்கும் எந்த டானும் தன் கூட்டாளி திருந்துவதை விரும்புவதில்லை... இந்த டானும் அப்படியே...டேய் எங்க அப்பா திருந்தி வாழனும்னுதானே ஆசைப்பட்டார்.. அவரை அநியாயமா சாகடிச்சிட்டியே என்று மனதில் கருவிக்கொண்டு பெரிய ஆளாக ஆகும் போது  திட்டம் போட்டு கொலை செய்வது எப்படி என்பதையும் கற்றுக்கொள்கின்றாள்.. எப்படி எதிரிகளை பந்தாடுகின்றாள் என்பது பரபர சரசர ஆக்ஷன் தமாக்கா..........

========================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

பரபரப்பான ஆக்ஷன் திரில்லர் பிலிம்... அது போலான திரைக்கதை..
முதல் காட்சியில் அம்மா அப்பா இறந்தவுடன்  சின்ன வயது கட்டாலியா தப்பித்து ஒடும் கொலம்பிய தேசத்தின் லோக்கேஷ்ன்கள் அசத்தல் ரகம்..

இந்த படம் பரபரப்பாய் இருக்க காரணம் இந்த கதையை எழுதிய ரைட்டர்ஸ்தான் டேக்கன் என்ற படத்துக்கு எழுதியவர்கள் என்பதால் படத்தின் பரபரப்புக்கு பஞ்சமா வேண்டும்.

முதலில் படிப்பு பின்பு கொலை செய்வது பற்றிய பாடம் என்று அந்த  சின்ன பெண்ணுக்கு  அவளது கசின் சொல்லி புரிய வைக்கும் காட்சி அருமை.

யாருடா இந்த பொண்ணு.. கண்களில் ஒரு மென்சேகம் அப்படியே வேறு ஒரு கோணத்தில்  பார்த்தால் அதே கண்கள் போதை தருகின்றன.. மிதமான மார்பு... ஒடிசலான  தேகம்.. யாருடா என்று   படம் பார்க்கும் போது யோசித்துக்கொண்டே இருந்தேன்..

யூரேகா யூரேகா.... Zoë Saldana டேர்மினல் படத்தில் ஏப்போர்ட்டில் சீல் குத்தி அனுப்பும் கேரக்டர் ஒரு ஒருமுறையும்.. டாம்ஹேங்ஸ் போய் நிற்கும் போதும் ரிஜக்டேட் குத்தி அனுப்பி கொண்டு இருப்பார்...அவதார் படத்தின் நாயகி கேரக்டருக்கு வீடியோ கிராபிக்ஸ் உருவத்துக்கு பொருந்தி போனவர்..இவர்தான்.

ஸ்பில்பெர்க் மற்றும் ஜேம்ஸ்கேமரோன் போன்ற ஜாம்பவான்களின் மோதிரக்கையல் Zoë Saldana குட்டு பட்டவர் என்பதால் சின்ன சின்ன எக்ஸ்பிரஷ்களில் ஜொலிக்கின்றார்..

படத்தில் Zoë Saldana ஒரு அறை நிர்வான குளியல் காட்சியில் கேமராமேனின் திறமைக்கும் எடிட்டர் திறமைக்கு  சான்று என்பேன்.. இருக்கு ஆனா இல்லை என்பதான் ஷார்ப் கட்டிங்  ஷாட்டுகள்....

படத்தின் பெரிய பலமே Zoë Saldana என்பதால் பிரேமுக்கு பிரேம் அவரை நம்பியே படம் இருக்கின்றது...Zoë Saldanaக்கு பிரா போடுவதே பிடிக்காது போலிருக்கின்றது..

சிலர் இந்த படத்தை வழக்கமான கிளிஷே கதை என்று புறம் தள்ளி  விடுவார்கள்.. ஆனால் படத்தின் பிரசன்டேஷன் வழக்கமான என்ற பதத்தை யோசிக்க வைக்க விடவில்லை..


 
கொலை நடக்கும் இடத்தில் எல்லாம் ஒரு பூவை வரைந்து வைத்து விட்டு வருவது அவளின் வழக்கம்.. அந்த பூவின் பெயர் காட்டாலியா... அவள் பெயரும் அதுதான்...

படத்தில் காட்டாலியாவை பிடிக்க துடிக்கும் இன்ஸ்பெக்ட்ர் கேரக்டர் டாப்பு...


===================
படத்தின் டிரைலர்...


===================
படக்குழுவினர் விபரம்..
 Directed by     Olivier Megaton
Produced by     Luc Besson
Pierre-Ange Le Pogam
Screenplay by     Luc Besson
Robert Mark Kamen

Starring     Zoë Saldana
Michael Vartan
Cliff Curtis
Lennie James
Callum Blue
Jordi Mollà
Music by     Nathaniel Méchaly
Cinematography     Romain Lacourbas
Editing by     Camille Delamarre
Studio     Stage 6 Films
EuropaCorp
Canal+
Distributed by     TriStar Pictures
(Sony Pictures Entertainment)
Release date(s)     27 July 2011 (France)
26 August 2011 (USA)
9 September 2011 (UK)
Running time     108 minutes[1]
Country     France
United States
Language     English
Spanish
Budget     $40 million[2][3]
Box office     $60,965,854
=‘========================
பைனல்கிக்.
ரொம்ப நாள் ஆச்சிங்க.. பரபரப்பா ஒரு ஆக்ஷன் திரில்லர் பாத்து என்று நீங்கள்  சொல்லக்கொண்டு இருக்கும் போது இந்த படத்தை பார்த்தால் இன்னும் ஒரு  மாதத்துக்கு அப்புறம் ரொம்ப நாள் ஆச்சிங்க நல்ல ஆக்ஷன் திரில்லர் பார்த்து என்று நிச்சயம் சொல்லுவீர்கள்.. இந்த படம் பார்த்தேதீரவேண்டிய படம். காரணம் பரபரப்புக்காகவே இந்த படத்தை பார்த்தே தீரவேண்டும்..இந்த படம் சென்னை பாரிஸ்இல் உள்ள மூவிஸ் நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது.




நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

7 comments:

  1. படம் கைவசம் இருக்கிறது. சீக்கிரம் பார்த்துவிடுகிறேன். விமர்சனத்திற்கு நன்றி ஜாக்கி சார்.

    ReplyDelete
  2. கண்டிப்பா பாக்கப்போறேன்

    ReplyDelete
  3. அந்த ஆரம்ப ஜெயில் சீக்வென்ஸ் காட்சிகள் நீளம் என்பதை விட வேறு ஒன்றும் குறையில்லை..

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. Screenplay by Luc besson appadi endral eppavum parapara endru than nagarum. french Director, screenplay writer producer endru pala mugam ivarukku Leon , Taxi1,2,3,4, wasabi,Transporter series appadi nnu oru periya list irukku

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner