என்ன தவம் செய்தனை....

 
கடந்த நான்கு நாட்களாக உறவினர் திருமணத்துக்கு திருச்சி சென்னை என்று அலைந்து கொண்டு இருந்தேன்.. இன்றுதான் இணையம் பக்கம் வர முடிந்தது..


நேற்று இரவில் இருந்தே வாழ்த்துகளால் பேஸ்புக் ,கூகுள் பிளஸ் மற்றும் எனது  மெயில் பாக்ஸ் வாழ்த்து மழையால் நனைந்து கொண்டு இருக்கின்றது..பிப்ரவரி 1 அன்று எனக்கும் என் மனைவிக்கும் பிறந்தநாள்...160 பேருக்கு மேல் வாழ்த்து மழையில் பேஸ்புக்கில்  என்னை    நெகிழ வைத்து, நனைய வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். வாழ்த்திய அத்தனை பேருக்கும் என் நன்றிகள்.


கூகுள் பிளஸ்சில் நம்ம பதிவுலக நண்பர்கள் வாழ்த்தி செய்தி சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்...
நாளும் கிழமையின் போது ஒவ்வோரு முறையும் காலையில் எழு மணிக்கு முதல் ஆளாக திருநெல்வேலி போக்குவரத்து பணிமனையில் பணி புரியும் ராமலிங்கம் அவர்கள் போன் செய்து வாழ்த்துகளை மறக்காமல் தெரிவிப்பார்...

இன்று காலையில் அவர் போன் செய்து வாழ்த்து சொன்னார்.. மற்க்காமல் உங்கள் துணைவியாருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து விடுங்கள் என்று சொன்னார்..
திருச்சி போக்குவரத்து பணிமனையில் எனக்கு ஒரு நல்லத்தம்பி திருநெல்வேலியில் ராமலிங்கம்.... வாழ்த்துக்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி.

============
அன்புள்ள ஜாக்கி,

வணக்கம்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டு உங்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும், வெற்றியையும் அளிக்கட்டும்.

அன்புடன்
செல்லமுத்து குப்புசாமி...

=========
மெயிலில் காலையில் வாழ்த்து தெரிவித்தது மட்டும் அல்லாமல் போன் செய்தும் வாழ்த்து தெரிவித்தார் நன்றி நண்பரே.
அகநாழிகை வாசு, மணிஜி,ஜோசப்பால்ராஜ்,பட்டர்பிளை சூர்யா,ராமலிங்கம்,விஜயகுமார்,செல்லமுத்து குப்புசாமி போன்ற நண்பர்களுக்கும்,  ஒரு பதிவே  போட்டு வாழ்த்து சொன்ன பங்காளி சங்கவிக்கும் என் அன்பும் நன்றியும்...

மற்றும் கூகுள் பிளஸ் விட்ட, ஸ்ரீராம்,எல்கே,பலாபட்டறை சங்கர்,ரோமியோ, சங்கவி போன்றவர்களுக்கு என் நன்றிகள்.

என் மனைவி பிறந்தநாள் பரிசு எனக்கும் கொடுக்கும் போதும் சரி அவளது தம்பிக்கு கொடுக்கும் போதும் சரி... கையால்  வாழ்த்து அட்டை ரெடி செய்து ஸ்டிக்கர் எல்லா ஒட்டி  ரெடி செய்து கொடுப்பாள்...மிகுந்த பொறுமையுடன் கையால் ரெடி செய்து கொடுப்பாள்..


யாழினியை பார்த்துக்கொண்டு வாழ்த்து அட்டையை அவளால் இந்த முறை ரெடி செய்ய முடியவில்லை...ஆனால் அவளது நண்பி பிரியா கையால் வாழ்த்து அட்டை ரெடி செய்து காலையில் பிறந்தநாள் வாழ்த்து  சொன்ன போது நெகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை..நன்றி பிரியா... கையால் வாழ்த்து அட்டை  ரெடி செய்து எங்கள் இருவருக்காகவும்  நேரம் செலவு செய்து மெனக்கெட்டமைக்கு நன்றிகள்.


நேற்று தப்பி செ  சரவணக்குமார்..  சவுதியில்  இருந்து வந்து இருந்தார்...மணிஜி ஆபிசில் ஒரு  வட்ட மேஜை மாநாடு நடந்தது...ஞானம்,அகநாழிகை வாசு,தம்பி சரவணக்குமார்,பலாபட்டறை சங்கர் என்று மாநாடு சரக்கோடு களைகட்டியது...]

மணிஜி , கண்மணிகுணசேகரன் அவர்கள் எழுதிய நெடுஞ்சாலை புத்தகத்தை எனக்கு பரிசளித்தார்...நன்றி மணிஜி
 

நண்பர்கள் வாழ்த்துக்களோடு வீடு வந்தேன்.. என் மனைவி எனக்கு புளுடூத் மற்றும் சாக்லேட் பாக்ஸ் பரிசளித்தார்.. நான் ஒரு கிட்கேட் எழுபது ரூபாய் சாக்லேட் பரிசோடு  எஸ்கேப் ஆகிவிட்டேன்.. இந்த மாதம்  நிறைய செலவுகள்..
லக்கி எழுதிய பேஸ்புக் ஸ்டேட்டஸ் மேசேஜ் படித்து சிரித்தாலும் அதில் உண்மை இல்லாமல் இல்லை...
அவர் இப்படி எழுதி இருந்தார்...

=============
மாசக்கடைசி கொடுமை பாஸ் :-(

ஏன் தான் 31 என்று ஒரு தேதி வந்து தொலைக்கிறதோ? எல்லா மாதமும் பிப்ரவரியாக இருந்துத் தொலைக்கக்கூடாதா?

கடைசியில் என் இரண்டரை வயது மகளிடம் 300 ரூபாய் கடன் வாங்குமளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.
===============
சிரித்து சிரித்து வயிறு வலித்தாலும் அவர் எழுதியதில் உண்மை இல்லாமல் இல்லை...

காலையில் இருந்து நண்பர்கள்  போனில் வாழ்த்துக்ள் சொல்லிய வண்ணம் இருக்கின்றார்கள்.. மறக்காமல் அண்ணிக்கும் பிறந்தநாள் வாழ்த்து சொன்னதை மறக்காமல்  சொல்லுங்க என்று சொல்லும் அன்பை என்னவென்று சொல்லுவேன்..

எங்கள் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த, அத்தனை  நண்பர்களுக்கும் எனது நெகிழ்ச்சியான  நன்றியும் அன்பும்.

வாழ்த்துக்களை வாசிக்கும் போதும்,கேட்கும் போதும், என்னதவம் செய்தனை என்று பாடத்தோன்றுகின்றது.

 


==========
தகவல் குறிப்பு..

சிங்கையில் இருந்து தம்பி ரோஸ்விக்... தானே புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ, அவரது நண்பர்கள் மூலம் ரூபாய் 40,000 பணம் திரட்டி அனுப்பி இருந்தார்..பத்து நாட்களுக்கு முன்னமே பணம் அனுப்பி விட்டார்..எனக்கும்  தம்பி அப்துல்லாவுக்கு வேலைபளு  அதிகம் இருந்த காரணத்தால் எங்களால் குறித்த நேரத்தில் கடலூர் செல்ல முடியவில்லை.. இன்னும் பாதிக்கபட்ட மக்க்ள் நிறைய பேர் இருக்கின்றார்கள்.. அங்கு   நேரில் சென்று என்ன தேவையோ அதனை  செய்ய இருக்கின்றோம்..கூடவே இரண்டு பதிவுல நண்பர்களும் எங்கள் உடன் வர இருக்கின்றார்கள்..தம்பி லட்சுமணன் மணமக்கள் சர்பாக ஆயிரம் ரூபாய் நிவாரண நிதிக்கு அளித்து இருக்கின்றார்..மொத்தம் 41ஆயிரம் ரூபாய் இருக்கின்றது.. நாளை முழுவதும் கடலூரில் இருப்போம்... 

நன்றி ரோஸ்விக்.


=========

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

நினைப்பது அல்ல நீ நிரூபிப்பதே நீ.....

EVER YOURS...

46 comments:

 1. Many More Happy Returns of the Day Mr.Jackie.

  ReplyDelete
 2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. தங்களுக்கும் தங்கள் துனைவியார்க்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வாழ்த்துகள்...தங்களுக்கும் தங்கள் துணைவியாருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்...

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் ஜாக்கி.வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 6. Wish you Very Happy Birthday Mr and Mrs.Jackie!!

  ReplyDelete
 7. இனிய வாழ்த்துகள்

  ReplyDelete
 8. many many happy returns of the day Jackie anna
  also convey my wishes to your family

  ReplyDelete
 9. I wish you a very very happy birthday to you and your better half and many more happy returns of the day.

  ReplyDelete
 10. Wish you happy birthday Jackie.

  Regards
  S.Sundar
  Valasaravakka,

  ReplyDelete
 11. Wish you happy Birthday jackie

  Regards
  S.Sundar
  Valasaravakkam

  ReplyDelete
 12. இருவருக்கும் ,இருவருக்கும்
  வணக்கம் வணக்கம் .
  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் .
  வாழ்க வாழ்க
  வளர்க வளர்க
  வாழ்த்துவது .வாழ்த்துவது
  யானைக்குட்டி யானைக்குட்டி
  பாப்பாகுட்டிக்கு செல்ல வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 13. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. //Caricaturist SugumarjeFeb 1, 2012 03:21 AM

  Your Caricature is Here Jakie :))
  Jakie Caricature gift for Birthday//

  Oh!Lovely.That's a good one:)

  ReplyDelete
 15. many many happy returns of the day Mrs & Mr jackie

  ReplyDelete
 16. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. Replies
  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

   Delete
 18. அன்பு தனசேகர்,
  உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
  நூறாண்டுக் காலம் வாழ்க ; நோய் நொடியிலாமல் வாழ்க ;

  ReplyDelete
 19. Birthday wishes to Mr & Mrs Jackie Sekars. God bless yazhini madam!!

  ReplyDelete
 20. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. Wishing both of you many more happy returns of the day.

  ReplyDelete
 22. HAPPY BIRTHDAY Mr. DHANASEKAR.. and Mrs.DHANASEKAR
  MANY MORE HAPPY RETURNS OF THE DAY !!

  ReplyDelete
 23. Wishing both of you many more happy returns of the day.

  ReplyDelete
 24. Wish you many more happy returns of the day

  ReplyDelete
 25. HAPPIEST BIRTHDAY GREETINGS TO U BOTH

  SANKAR.M TIRUNELVELI

  ReplyDelete
 26. HAPPIEST BIRTHDAY GREETINGS TO U BOTH.

  SANKAR.M TIRUNELVELI

  ReplyDelete
 27. உங்களூக்கும் உங்கள் மனைவிக்கும் பிறந்த நாள் வாழ்ததுகள்.
  சுட்டிக்கு எங்கள் அன்பு . நட்புடன் நக்கீரன்.

  ReplyDelete
 28. வாழ்த்து சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நெகிழ்ச்சியான நன்றிகள்

  ReplyDelete
 29. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களூக்கும் உங்கள் மனைவிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner