உப்புக்காத்து =1வாழ்வில் நிறைய மனிதர்களை சந்தித்து இருக்கின்றேன்.. பலரை பார்த்து வியந்து இருக்கின்றேன்.  சிலரை போல வாழ முயற்சித்து இருக்கின்றேன் ..
சில நெகிழ்வான சம்பவங்களில் கோர்த்துக்கொண்ட மனிதர்களை பார்த்து வியந்து போய் இருக்கின்றேன்...

இந்த இடத்தில் நான் இருந்தால்  என்ன செய்து இருப்பேன் என்று அந்த சம்பவங்களுடே பயணித்து இருக்கின்றேன்... அப்படி நான் கடலூரில் இருந்து சென்னை வரை நான் சந்தித்த மனிதர்கள் மற்றும் சம்பவங்களை தொடர்ந்து எழுத இருக்கின்றேன்.. சிலரை நான்  சந்தித்து இருக்கலாம்.. சிலது கேள்விப்பட்டு இருக்கலாம்.. எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அது பதியப்பட வேண்டும் என்ற ஆவல்..


அவர்கள் நிறைய பேரை சென்று அடையவேண்டும்... நான் அடைந்த நெகிழ்ச்சியை நீங்களும் அடையவேவேண்டும் என்பதே...போன வருடமே எழுதவேண்டும் என்று நினைத்து வேலைப்பளுகாரணமாக தள்ளிக்கொண்டே போனது..நேரமில்லை என்று மனது சால்ஜாப்பு சொல்லிக்கொண்டு இருந்தது இன்று சால்ஜாப்புக்கு ஆப்பு வைத்து விட்டு தொடர்ந்து எழுத இருக்கின்றேன்...

தலைப்பு என்ன வைக்கலாம் என்று யோசித்து யோசித்து தாவு தீர்ந்து போனதுதான் மிச்சம்... பெங்களுர் நண்பர் யுவாவுக்கு போன் செய்து சேதி சொன்னேன். கடலை சார்ந்த தலைப்பாக இருத்தல் நலம் என்றேன். அவரும் யோசித்து சில தலைப்புகள் எழுதி அனுப்பினார்...

ஹலோ ஜாக்கி,

1. நான் பொறுக்கிய கிளிஞ்சல்கள் -- கவனிக்கவும் "சேகரித்த" அல்ல "பொறுக்கிய".

2. என் ஈரகால்சட்டைப் பையில் புகுந்த மண்துகள்கள்.

3. கடல் வழியே... - உங்களின் கடலூர் கடலிருந்து சென்னை கடலுக்கான பயணத்தினூடே சேகரித்த மனிதர்கள்!

4. மனிதா! மனதா!!

நோ... நோ... சிரிக்ககூடாது! மை பாவம் :-(!

யுவா.
====================
என்று உடனே மெயில் தட்டினார்..

கடலோடி, நெஞ்சில் நிற்கும் மனிதர்கள், மனதில் நிற்கும் மனிதர்கள் என்று நிறைய நானும் யோசித்துக்கொண்டே இருந்தேன். 

கடல் கரிப்புகள் என்று  என் அத்தை மகன் தாமோதரன் சொன்னான். ஆனால் யுவா மெயில் பார்த்து விட்டு என் மனைவி நான் சுவாசித்த உப்புக்காற்று என்று  போகின்ற போக்கில் அடித்து விட்டாள்..அதில் உப்புக்காத்து மட்டும்  நான் எடுத்துக்கொண்டேன்.. கேச்சியாகவும் சுருக்கமாகவும் இருந்ததால் அதனையே தலைப்பாக வைத்தேன்...தலைப்புக்கு உதவிய யுவா,தமோதரன்,யாழினி அம்மா போன்றவர்களுக்கு என்  நன்றிகள்.

கடலூரில் என்  சொந்த வீட்டில் இருந்து ஐந்து கிலோமீட்டரில் கடல் இங்கே சென்னையில் இருப்பது கிலோ மீட்டரில் கடல்....
 உப்பு வாசத்தோடு வீசும் கடல்காற்றுக்கு எப்போதும் ஒரு தனித்தன்மை உண்டு...கடற்கரை விட்டு வந்தாலும் பிசு பிசுப்பு நம்  உடலில் இருந்துகொண்டே இருக்கும்..அந்த பிசு பிசுப்பு போல நான் சொல்லப்போகும் மனிதர்களும் சில நிமிடங்கள் உங்கள் மனத்திரையில் பிசுபிசுத்தபடி இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.

அம்மாவின் ஆசிர்வாதங்களுடன்.................

உங்கள் ஆதரவுடன்....பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

14 comments:

 1. ஆரம்பமே அசத்தல் அண்ணா... தொடருங்கள்...

  பிரபாகர்...

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. காத்திருக்கிறோம், ஆர்வமுடன்.

  ReplyDelete
 4. இன்னும் ஆரம்பிக்கவே இல்ல ஆனாலும் அசத்தல்..


  இந்த தலைப்பு எனக்கும் தோணிச்சு ஆனாலும் இந்த தலைப்பே அமைஞ்சதும் மகிழ்ச்சிதான் ஜாக்கி :))

  ReplyDelete
 5. உப்புக்காற்று சுகம் பவித்ரமானது....தனித்துவமானது....
  அதை அனுபவிக்க காத்திருக்கிறோம்....நண்பரே

  ReplyDelete
 6. அன்பு ஜாக்கி,

  உப்பு காற்றுக்கு ஈரமும், வீரமும் உண்டு என்பார்கள். காற்று வீசட்டும், உங்கள் மன கதவு திறக்கட்டும். இது உங்களை பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள உதவும். கிட்டத்தட்ட சுயசரிதை மாதிரி. உங்கள் தொடர் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  ராஜ் முத்து குமார்

  ReplyDelete
 7. உப்புக்காத்து... அட அட இப்பவே இனிமையா கரிக்குதே!

  \\ஆனால் யுவா மெயில் பார்த்து விட்டு என் மனைவி நான் சுவாசித்த உப்புக்காற்று என்று போகின்ற போக்கில் அடித்து விட்டாள்\\

  பின்னே அவங்களுக்கத்தானே தெரியும்... Better half know the other half better always!

  அப்ப என் பேரும் புக்குல வரும்(ஒரு மெயிலுக்கு இதெல்லாம் ஒவெர்தான்).

  வேறென்ன நன்றிகள்!

  ReplyDelete
 8. எழுத்து பயணம் தொடரட்டும் ; வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 9. "உப்பு காற்று " பயணம் இனிதாக வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. அம்மா இறந்த மருத்துவமனையை கூட கும்பிடும் உங்களை அம்மா கட்டாயம் ஆசீர்வதிப்பாங்க.

  தொடர்ந்து எழுதுங்க.

  ReplyDelete
 11. நீங்க சொன்னதுலே என்னக்கு ரொம்ப புடிச்சது "யாழினி அம்மா "..கரணம் ஏதும் உண்டா ?? மனைவி என்று சொல்லி இருக்கலாமே ?

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner