சென்னை வங்கி கொள்ளையர்கள் ஐந்து பேர் சுட்டுக்கொலை...


சென்னை பெருநகரத்தில் மக்கள் பரபரப்பான சாலையில் இருக்கும்  வங்கியில்  மதியம் சாப்பாடு நேரமாக பார்த்து, துப்பாக்கி முனையில் பேங்கில் கொள்ளை அடித்தது நான்கு பேர் கொண்ட கும்பல்....எந்த துப்பும் இல்லாத வங்கிக்கொள்ளை இது.... காவல்துறைக்கு பெரும் தலைவலி..

ஆபிசுக்கு கிளம்பி சொல்வது போல மாதத்துக்கு ஒரு பேங்க் என்று ரொம்ப ரிலாக்சாக நடந்த கொள்ளை இது..


எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று போலிஸ் மண்டையை போட்டு பிய்த்துக்கொண்டு இருந்தது.. ஆனால் மேலிடத்து பிரஷர் என ஒரு மாதமாக தண்ணி காட்டிய கொள்ளையர் பிரச்சனையில் சிக்கித்தவித்தது போலிஸ். ராத்தூக்கம் இழந்து தவித்துக்கொண்டு இருக்கும் போது, மேலும் மடிப்பாக்கத்தில் பரபரப்பான சாலையில் அடுத்த ஒரு கொள்ளை என்றால் எப்படி இருக்கும்?????

நேற்று நான் சொன்னது போல  சென்னை போலிசார் எல்லோருமே ஜென்டில்மேன் படத்து சரண்ராஜ் போலத்தான் கொள்ளையர்களை பிடிக்க வெறியோடு அலைந்து கொண்டு  இருந்தார்கள்...


நேற்று முன் தினம் எனக்கு பயங்கர ஜுரம்.... அப்போதுதான் மாத்திரை போட்டு படுத்து வேர்த்து விட்டுக்கொண்டு இருந்தது.. மணி பண்ணிரண்டே முக்கா இருக்கும்...மேல் வீட்டு நண்பர் முரளியின் குழந்தைக்கு ஜுரத்தில் உடம்பு தூக்கி தூக்கி போடுகின்றது என்று அவரின் மனைவி, என் மனைவியிடம் போனில் விசும்ப.. எனக்கு ஜுரம் பறந்து போன இடம் தெரியவில்லை.  நான்  நண்பரின் காரை எடுத்துக்கொண்டு ரெடியாக..... நண்பர், நண்பரின் மனைவி மற்றும் குழந்தையோடு காரில் விஜயா ஆஸ்பிட்டலுக்கு ஒரு மணிக்கு பறந்தோம்.. காரை நான் ஒட்டிக்கொண்டு சென்றேன்..


சென்னை  வந்த 15 வருடத்தில் இரவு நேரத்தில் இப்படி ஒரு வாகன சோதனையை நான் பார்த்ததே இல்லை.. கொளப்பக்கத்தில் யார் என்ன என்று விசாரித்தார்கள்.. காரின் உள்ளே டார்ச் அடித்து பார்த்தார்கள்.. அதே போல ராமாபுரம் சிக்னல் அருகே எந்த வாகனத்தையும் விடவில்லை.. பக்கா செக்கிங்..  மருத்துவமணைக்கு உள்ளே போகும் போது குழந்தைக்கு,  ஜுரம்  சுத்தமாக விட்டு விட்டது..  ஊசி போட்டுக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினோம்.

   விருகம்பாக்கம் சிக்னல் மற்றும் போரூர் சிக்னல் என  எல்லா இடத்திலேயும் போலிஸ் செக்கிங்... அந்த அளவுக்கு அவர்கள்  கண் கொத்தி பாம்பாக இருந்தனர்..

கொள்ளை அடித்தவர்கள் பற்றிய துப்பு இல்லை.. ஆனால் நேற்று கொள்ளையன்  எப்படி இருப்பான் என்று ஒருவன் புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டு சொன்ன போது, ச்சே இது நமக்கு தோனலியே? என்று நினைத்துக்கொண்டேன்..  எப்படியும் இந்த பேங்கை கொள்ளை அடிக்கும் முன், எந்த எந்த பேங்கில் கேமரா இருக்கு.. இல்லை என்று பார்க்க கண்டிப்பாக அவர்கள் சென்று இருப்பார்கள் அல்லவா என்று யாராவது ஒரு இன்ஸ்பெக்ட்ர் சொல்லி இருப்பார்.. அவர் வாய்க்கு சக்கரை போட வேண்டும்..இந்த ஒரு வேலிட் பாயிண்ட்தான்   இந்த கேசில் பெரிய திருப்பம் அதற்கு சென்னை காவல் துறையை பாராட்டுவோம்....

ஒரே ஆள் எல்லா பேங்கிலேயும் நோட்டம் விட்டது சிசிடிவி வைத்து இருந்த பேங்கில் சிக்கி இருக்கின்றான்... சிசிடிவி இருக்கும் பேங்க்கில் இருக்கும் புட்டேஜை போட்டு பார்த்த போது, கொள்ளை  போன பேங்கில் இருந்த ஊழியர்கள் அடையாளம் காட்டி இருக்கின்றார்கள்..
நேற்று மதியம் புகைபடத்தை வெளியிட்டு விட்டு இன்று விடியலில் 5 பேரை சுட்டுக்கொன்று இருக்கின்றார்கள்..யாரும் உயிர் பயத்தில் சரண் அடைய முயற்சிக்கவில்லையா? என்ற கேள்வி எழுகின்றது... 

அதே நேரத்தில் மாதம் ஒரு பேங்க் என்று கொள்ளை அடிக்கும்  தைரியம் உள்ள நபர்கள் உடனே சரணடைய ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்ற லாஜிக்கும் இடிக்கின்றது...... ஒரு மணிநேரத்துக்கு மேல் நடந்த  துப்பாக்கி சண்டை இது......தமிழகத்தில் நடந்த பெரிய என்கவுண்டர் இது..ஐந்து பேர் பலி... திங்கள் கிழமை 14 லட்சம் அடித்த பணத்தை மட்டும் கைப்பற்றி இருக்கின்றார்கள்..


இரண்டு போலிசார் காயம் பட்டு இருக்கின்றார்கள்..
கொள்ளையர்கள் தங்கி இருந்த வேளச்சேரி வீட்டில் இருந்து பெருங்குடி பேங்க் 10 கிலோமீட்டர் இருக்கும்..கீழ்க்கட்டளை பேங்க் ஒரு 5கிலோமீட்டர் இருக்கும்.. எல்லாம் ரொம்ப பக்கம்தான்..

வழக்கம் போல போலிஸ் முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றார்கள்... சென்னையில் இருக்கும்  400 வங்கியில் கேமரா இல்லை.. சென்னையிலேயே இந்த நிலை என்றால்.. தமிழகம் முழுவதும் யோசித்து பாருங்கள்... 

ஒரு நாலு பேரை சேர்த்துகிட்டு குருட்டாம் போக்கில், ஒரு பொம்மை துப்பாக்கியை  வச்சிகிட்டு வாலிபத்து பயபுள்ளைங்க எல்லாருமே  பேங்கை கொள்ளை அடிக்க கிளம்பிட்டா? என்ன செய்வது... யோசிச்சி பார்க்கவே பயமா இல்லை..???அதான் இந்த என்கவுண்டர் ..


இப்ப யோசித்து பாருங்க.. பேங்கை கொள்ளை அடிக்க  எந்த கொம்பனா இருந்தாலும் யோசிப்பான்.. அதுதான் இப்போதைக்கு போலிசுக்கு தேவை..


கொள்ளை கூட்டத்தலைவன் முன்னாள்  எஸ்ஆர்எம் கல்லூரி மாணவன் என்பது முக்கியதகவல்..இந்த தகவலை திரும்ப திரும்ப கலைஞர் மற்றும் சன் நியூஸ் சொல்லி வந்தார்கள்... இப்போது புதியதலைமுறை செய்தியிலும் அதே தகவலை சொல்லுகின்றார்கள். அப்படி சொல்லுவது பெரிய விஷயம்...பாராட்டுகள்.. சில பீகார் கல்லூரி மாணவர்களிடம் நான் பேசி இருக்கின்றேன்.. இந்த ஊர் உங்களுக்கு ஏன்டா இப்படி பிடிச்சி இருக்கு என்று கேட்டு இருக்கின்றேன். சார் எங்கள் ஊரில் எல்லாம் இருக்கும் ஆனால் மின்சாரம் நான்கு மணி நேரம் மட்டும்தான் இருக்கும்.. 

எல்லாத்துக்கும் நாங்க ரயிலை நம்பி இருப்போம். ஆனா இங்க எல்லா இடத்துக்கும் பஸ் இருக்கும் டிரெயின் இருக்கு...தமிழக மக்கள் கிட்ட நல்ல விருந்தோம்பல் மற்றும் பாசம் இருக்கு அதான் எல்லா நார்த் இன்டியன் பசங்களும் படிப்பை முடிச்சிட்டு இங்கேயும் வேலை தேடுகின்றோம்  எங்க ஊருக்கு போக பிடிக்கவில்லலை என்று சொல்லி இருக்கின்றார்கள். 

அதே போல சென்னையில் கட்டப்படும் எல்லா  பெரிய பெரிய கட்டிடதுக்கும் பிகாரில் இருந்துதான் தொழிலாளர்கள் வேலைக்கு குடும்பத்துடன் வருகின்றார்கள்.. காரணம் அந்த மாநிலத்தின் வறுமை மற்றும்  கேவலமான சட்டம் ஒழுங்கு..

எது எப்படி இருந்தாலும் பொதுமக்களின் பணத்தை காப்பாற்ற என்கவுண்டர் நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு  வந்து இருக்கின்றார்கள்.. இனி மனிதஉரிமை ஆணையம் என்று நிறைய அமைப்புகளுக்கு கேள்விகளுக்கு  சென்னை காவல்துறை  பதில் சொல்லியாக வேண்டும்..

கொள்ளை அடித்த பணத்தை முழுதாக  எண்ணிக்கூட பார்த்து இருக்கமாட்டார்கள்.. பெருங்குடியில் கொள்ளை அடித்த அதே 23ஆம் தேதி அவர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.

இன்னும் பல தகவல்கள் வரும் போது ஒரு அளவுக்கு போலிஸ் என்ன சொல்ல வருகின்றது என்று தெரியவரும்..  வெயிட் அண்டு சீ...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

20 comments:

 1. காக்க காக்க படம் பாத்த மாதிரி இருக்கு

  ReplyDelete
  Replies
  1. ஒரு மணி நேரம் சண்டை நடந்ததா சொல்றாங்க ஆனா பக்கத்துல இருந்த யாருக்கும் தெரியலை
   பொது மக்களை சுடுவேன்னு மேரட்டினதா சொல்றாங்க ஆனா ராத்திரி ஒரு மணிக்கு பொது மக்கள்
   எப்படி வெளிய இருப்பாங்க ? இருந்தா அவுங்க நடந்தத பாத்து இருப்பாங்க, ஆனா யாருமே பாக்கல

   ஹௌசிங் போர்டு வீடு எப்டி இருக்கும் இன்னு எல்லாருக்கும் தெரியும், ஒரு வழி தான் போக வர. முன்னால போலிசு
   நின்ன வேற எப்படியும் தப்பிக்க முடியாது, ஆதெல்லாம் விட உள்ள இருந்த எல்லாருமே கொள்ள காரங்க தான்னு
   எப்புடி சார் முடிவு பண்ணங்க, அப்போ பதனாலு இலட்சத்க்கு அஞ்சு பேருன்ன மூணு லட்சம் கொண்டுபோனா
   யார வேண்ணா வீடுகுள்ளையே வெச்சு கொன்னுடலாம், கேட்டா கொள்ளையடிச்ச பணத்த புடுசிடோம் முன்னு சொல்லிடலாமா, எங்கயோ ரொம்ப பெருசா ஒதக்கிதே, இது நல்லதில்லை என்பது என் கருத்து

   Delete
 2. மக்கள் இன்னும் இரு நாளைக்கு இதைப் பற்றியே பேசுவார்கள் ! உழைக்கும் வர்க்கம் பீகாரிஸ்-ம் இருக்கிறார்கள் ! உழைக்காமல் கல்வி புரோக்கர் வேலை பார்த்துக்கொண்டு திருடும் கும்பலும் இருக்கிறது. ஒரு காலத்தில் சர்தார்ஜி-களை சந்தேகத்தோடு பார்த்த மாதிரி இனி ஹிந்தி பேசும் வட இந்தியர்களை நம் மக்கள் சந்தேகத்தோடு பார்க்க வேண்டிய நிலை. ஒழுங்காக படித்து முன்னேறணும் என்று வரும் வட இந்தியர்களின் நிலை இன்னும் கொஞ்ச காலத்துக்கு பரிதாபம்தான்

  ReplyDelete
 3. அருமையான் செய்தி கட்டுரை.

  ReplyDelete
 4. VERY QUICK POST,,,,,,,, WELL DONE JACKIE SIR.... CONTD,,,,,, PRABHU MADIPAKKAM

  ReplyDelete
 5. எங்கேயோ ஒரு மூலையில ஒதைக்குது பாஸ்.. பக்கா நாடகமா கூட இருக்குமோன்னு..

  ReplyDelete
 6. இது முடிவு அல்லை தொடக்கம்....

  ReplyDelete
 7. neenga romba appaavinga! ellaaththaiyum nambidareenga.

  ReplyDelete
 8. POLICE RELEASE PANNA PICTURE LA IRUKKA AALU AH ... BANK ROBBERY APPO ANGA IRUNTHA MAKKAL PATHU IRUPANGA... ITHULA EVANUM CHEAT PANNA MUDIYATHU

  ReplyDelete
 9. தமிழ்நாடு போலிஸ் கெளப்புறாங்க

  ReplyDelete
 10. aniyaayaththukku appaaviyaa irukkaangale!

  ReplyDelete
 11. நண்பர்களுக்கு காலையில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் எழுதிய பதிவு இது..போலிஸ் நிறைய கட்டுக்கதைகளையும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்து இருக்கின்றது என்பதை நான் கடைசி பத்தியில் சொல்லி இருக்கின்றேன்.. நிறைய கேள்விகள் எனக்கு எழுகின்றன உதைக்கின்றன...வெயிட் அண்டு சீ..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner