சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/புதன்/22/02/2012

 
ஆல்பம்..
நல்லவேளை இத்தாலி கப்பல்காரன் சுட்டதிலே ஒரு தமிழன் ஒரு கேரளாக்காரன் செத்து போயிட்டான்..
அதனால் வட இந்திய சேனல்கள் எல்லாம் இந்திய மீனவர்கள் சுடப்பட்டார்கள் என்று கூப்பாடு போடுதுங்க..இரண்டு பேருமே தமிழ்நாட்டு மீனவர்களா இருந்து இருந்தா? தமிழக மீனவர்கள் சுடப்பட்டார்கள் என்று இங்கு இருக்கும் மீடியாக்களே எழுதும்...இன்பாக்ட் நாமளே அப்படி எழுதற அளவுக்குதான் நம்மை பழக்கப்படுத்தி வச்சி இருக்கானுங்க..இலங்கை ஆர்மிக்காரன் இதுவரை 500 பேருக்கு மேல இந்திய மீனவர்களை சுட்டு சாவடிச்சி இருக்கான்.. இத்தாலி மட்டும்தான்  வெளிநாடு... அப்ப இலங்கை வெளிநாடா? இல்லையா?? ஒரு வாரம இதுதான்  எல்லா சேனல்லேயும நியூஸ்..இன்னைக்கு நாகையை சார்ந்த இந்திய மீனவர்களை பெட்ரோல் குண்டு வீசி காயப்படுத்தி அனுப்பி இருக்காங்க.. இது தமிழ் சேனல் தவிர எதிலேயும் முச்சு  விடலை.....

=============
தமிழகம் முழுவதும் சென்னையை தவிர... அறிவிக்கப்பட்ட மின்வெட்டு எட்டுமணி நேரம்... ஆனால் 12 மணிநேரத்துக்கு மேல கரண்ட்டை கட் பண்ணிகிட்டே இருக்காங்க என்பதுதான் நிதர்சனமான உண்மை..  இதை எல்லாம் யார் கேட்கறது.. கேட்டாலும் பதில் கிடைக்கபோவதில்லை..5 வருஷம் கழிச்சிதான்  உங்களால் ஓட்டு சீட்டு மூலம் எதிர்க்க முடியும்.. அதுவரை அமைதியாக  பகவான் மேல பாரத்தை போட்டு இருக்கவேண்டியதுதான்.. மூன்று மாதத்தில் மின்வெட்டை போக்குவேன்னு  சொன்னதை நம்பித்தானே வாக்களித்தோம்..? அதே நம்பிக்கையோட காலத்தை தள்ளுங்க.....
======================
எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பது உறுதியாகிவிட்டது... அதற்கு மாநில அரசும்  ஒப்புதல் அளித்து விட்டது.. அவர்கள் அமைத்த குழுவின் பரிந்துரையும் திறப்பதை நோக்கித்தான் செல்கின்றது...பிரதமர் சொன்னது போல தமிழகத்துக்கு பாதிக்கு பாதி கரென்ட்டையாவது வாங்கிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.. நெய்வேலியில் இருந்து  உச்சநீதமன்ற தீர்ப்பை மதிக்காத  கர்நாடகம் மற்றும் கேரளாவுக்கு இங்க இருந்து மின்சாரம் தங்குதடையில்லாம கிடைச்சிகிட்டுதான் இருக்கு-.. அது போல இதையும்  நாம விட்டு விடக்கூடாது...ஜாக்கி அணுஉலையை மூட வேண்டும் என்பதுதான் நம் வேண்டுகோள்..  எனக்கு அதே எண்ணம்தான்.. ஆனா கூடங்குளம் அணுஉலையை மூட வாய்ப்பே இல்லை என்பதுதான்.. இப்போது  நடந்து கொண்டு இருக்கும் அரசின் கண்ணாமூச்சி விளையாட்டு முடிவின் நிதர்சனம்.
=======================
கொள்ளை அடிச்ச கொள்ளக்கூட்டக்காரங்க.. இன்னைக்கு டிவி நியூஸ் பார்த்துட்டு பேசிக்கிட்டா எப்படி இருக்கும்? சின்ன  கற்பனை கீழே,...
பாஸ் சென்னையில இன்னும் 400 பேங்குல கேமரா இல்லையாம்..ஒரு மாசத்துல எல்லா பேங்குலேயும் கேமரா பொருத்த போலிஸ் அவகாசம் கொடுத்து இருக்கும்..பாஸ் ஒரு மாசம் நமக்கு டெட்லைன்கொடுத்து இருக்கு போலிஸ் ஜாலிதான்..... 400 பேங்க் ன்னு தெளிவா கணக்கு சொன்ன கமிஷனுருக்கு நம்ம சார்பா ஒரு பொக்கே அனுப்பிடறேன் பாஸ்..
இன்பர்மேசனுக்கு நன்றி கபாலி..மாருதி அம்னி மட்டும் செகன்ட் ஹான்ட்ல் ஒரு  40 வண்டி வாங்கி நம்ம கொடவுன்ல நிறுத்துங்க.. எஸ் பாஸ்.....
=================
இன்னைய தேதிக்கு ஜெயலிலிதாவைவிட தில்லானவங்க யாருன்னா? ஜெயலலிதா ஆட்சி நடக்கறப்பவே, மக்கள் அதிகம் உள்ள பிசியான ரோட்டுல மாசத்துக்கு ஒரு பேங்குன்னு ரிலாக்சா கொள்ளை அடிக்கற அந்த கொள்ளைக்காரங்களுக்குதான் எக்கச்செக்க தில்லுன்னு சொல்லுவேன்... சென்னையில் நடந்த இரண்டு வங்கிக் கொள்ளைக்கும் அறுபது பர்சென்ட ஒத்துப்போவதாக காவல்துறை சொல்லுகின்றது....விசாரனையில் புது திருப்பமா?? திருப்பூர் ஜாய் அலுக்காசில் 14 கோடி அடிச்சதும் அவங்களா கூட இருக்க போறாங்க..?.இப்போதைக்கு நமக்கு தேவை ஜென்டில்மேன் படத்துல வருகின்ற சரண்ராஜ் போன்ற துடிப்பான இன்ஸ்பெக்டர்தான் எப்பூடி..??
========
சரி சீரியாசான மேட்டர்...

வங்கிக் கொள்ளையர்கள் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் 99520 91100, 98408 14110 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு துப்பு அளிக்கலாம். சரியான தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.
=======================
இப்போது தொலைகாட்சியில் நான்  அதிகம் ரசிக்கும் விளம்பரம்.. =====================
மிக்சர்...
நேற்றில் இருந்து நெறிக்கட்டி வலி உயிர் போகின்றது... இடது காலைதூக்கவே முடியவில்லை...உடம்பில் காயமும் இல்லை.. நேற்று இரவு 12 மணியில் இருந்து ஜுரம் என் உடலில் வெற்றிநடை போட ஆரம்பித்து விட்டது.. சென்னை துறைமுகத்தில் கையாளப்படும் அனைத்துசரக்குகளையும் என் உடம்பில் இறக்கி வைத்து ஏற்றுவது போல அப்படி ஒரு உடல்வலி பின்னி பெடலெடுக்கின்றது... என்னதான்கெத்தாக இருந்தாலும் ஜுரம் என்று வந்துவிட்டால் மனைவி கையை பற்றிக்கொள்ள மனம்பரபரக்கின்றது.. நேரம் காலம் தெரியாமல் என் மனைவி மேல் ஆதராவாக கை வைத்தால் என் மகள் யாழினி என் மனைவி மேல் வைத்த கையை, கண்டிப்புடன் எடுத்து விட்டு, புரியாத பாஷையில் என்னைதிட்டி தீர்க்கின்றாள்..(மவளே ஜுரம் போவட்டும் உனக்கு கொடுக்கறேன்டி செக்கமாத்து)போனவாரம் தலைவிலி உயிர் போவுது என்று பத்து வாட்டி என் மனைவி சொல்லிக்கொண்டுஇருக்க... நான் கம்யூட்டர் பார்த்த படி பதினோராவது முறை என் மனைவி சொல்லும் போதுஅப்படியா? என்று கேட்டேன்.. ஒரு பத்து வினாடி தீர்க்கமாக என்னை பார்த்து விட்டு கடந்துபோனாள்... தீர்க்கமாக பார்த்த அந்த பத்து வினாடியில் பெருமாளிடம் ஏதாவது வேண்டிஇருப்பாளோ??? பெருமாளே??? என்னைக்காப்பாத்து...
====
மேலே இருக்கும் செய்தியை இரண்டு நாளைக்கு முன்ன பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் மெசேஜ்ல போட்டு  விட்டேன்... இப்போதுதான் உடம்பு வணக்கத்துக்கு வந்தது.. யாழினிக்கு முதல் ஜலம்  விட்டாச்சி.. அதே நேரத்துல   சத்தியம் தியேட்டர் பக்கத்தில் ஆட் கம்பெனியில் விஷுவல் டிசைனராக இருக்கும் ராமு என்ற வாசக நண்பர்.. மயிலாப்பூர் முண்டகக்கன்னியம்மன் கோவிலில் இருந்து பேசறேன்.. விளக்கு போட்டு வேண்டிக்கிட்டேன்.. சீக்கரம் அவ நல்லாயிடுவா? என்று சொன்ன போது மனம் நெகிழ்ந்து போய் விட்டது...
================
இணையத்தில் ரசித்தது...

 =============
இந்த வார கடிதம்.

சில நேரங்களில் எனக்கு வரும் கடிதங்களை படிக்கும் போது இதற்க நான் தகுதியானவனா? என்று ஒரு கேள்வி எனக்குள் எழும்.. அப்படி எனக்குள் கூச்சத்தை ஏற்படுத்திய கடிதம்... இது.. நெஞ்சார்ந்த நன்றிகள்... ரோஸ்விக், செந்தில் குமார்,அப்துல்லா,ஜோசப்பால்ராஜ்...

==================

அண்ணா வணக்கம்..

எனது பெயர் வினோத் செல்வராஜ்.. தற்பொழுது பின்லாந்த்-ல் ஒரு கணிபொறி நிறுவனத்தில் பனி புரிந்து வருகின்றேன்.. பொருளாதார முன்னேற்றத்திற்காக
சொந்த ஊரை விட்டு வெளியில் வாழ்ந்தாலும் நமது மண்ணையும் மக்களையும் மறக்காமல் இருக்க இணையத்தின் உதவியை நாடும் எத்துனையோ
நண்பர்களில் நானும் ஒருவன்...

உங்களுடைய வலை பக்கத்தின் நீண்ட நாள் வாசகன் நான். ஆரம்ப காலங்களில் உங்களுடைய வலை பக்கங்களை மிக சாதரணமாக கடந்து
போனதுண்டு.. உங்களை மிக நன்றாக திரைப்பட விமர்சனம் எழுத கூடிய ஒருவராகதான் பார்த்து கொண்டு இருந்தேன்..ஆனால் போக போக உங்களுடைய
எழுத்துக்கள் மேல் ஒரு வசீகரம், காதல் வருவதை உணர முடிந்தது.. உங்களுடைய எழுத்துக்கள் எந்தவித அலங்காரமும் இல்லாமல் ஒரு பாமர மனதை
படம் பிடித்து காட்டுவதை உணர்ந்தேன்..

இது வரை உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது இல்லை.. ஆனாலும் உங்களுடைய தானே புயல் நிவாரண பணிகளை பார்த்த பிறகு உங்களுக்கு உடனே
மின்னஞ்சல் அனுப்ப தோன்றியது.. நான் என்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அரிச்சுவடி (www .arichuvadi .org) என்னும் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றேன்..
பெரிய அளவில் நங்கள் செயல் பட விட்டாலும் எங்களால் முயன்ற உதவிகளை திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் செய்து வருகின்றோம்.. நம்மால் முயன்றதை
ஒவ்வொருவரும் செய்தல் கண்டிப்பாக இந்த சமுதாயத்தில் ஒரு மாற்றம் வரும் என்பதே எங்கள் நம்பிக்கை. அதுவும் உங்களை போன்ற பிரபலமான ஒருவர்..
தன்னுடைய எழுத்துக்களால் பல்லாயிர கணக்கான மக்களை சென்று அடைய கூட ஒருவர் இப்பிடி பட்ட சமூக பணிகளை செய்யும் பொழுது, இது பலரை யோசிக்க வைக்கும்..

நமது சமூகத்தில் இன்னமும் அடுத்தவரின் துயர் துடைக்க எத்துனையோ ஈர இதயங்கள் இருக்கின்றன.. அவர்களுக்கு தேவை உங்களை போன்றவர்களின்
வழி காட்டுதல்தான் அண்ணா.. உங்களுடைய இந்த சேவை தொடரட்டும் அண்ணா..

தானே நிவாரண பணிகளுக்காக உதவிய அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள
வினோத் செல்வராஜ்
=========================
நேற்றுதான் தெலுங்கு படம் ரகடா பார்த்தேன்.. சர்மியை எனக்கு அனுக்கு குன்டோ ஒக்க ரோஜு படத்தில் இருந்து அந்த பெண்ணை பிடிக்கும் என்றாலும்.. இந்த பாடலில் டான்ஸ் பார்பாமென்ஸ் சான்சே இல்லை..என்ன ஆட்டம்டா சாமி...


===============

பிலாசபி பாண்டி..
புக் ஷாப்புல சேல்ஸ்மேன்கிட்ட போய் ஒரு  பொண்ணு கேட்டா? பெண்கள் புத்திசாலிகள் அப்படின்ற தலைப்புல புத்தகம் எங்க இருக்கும்.. சேல்ஸ்மேன் சொன்னான்...  பஸ்ட் புளோர்ல ரைட் சைடு திரும்புனிங்கன்னா காமெடி செக்ஷன்ல இருக்கு என்றான்.
================
நான்வெஜ்18+
ஒய்ப்பு பிரகனன்டா இருந்தா டென்ஷனா இருக்கும்..அதுவே கேர்ள் பிரண்ட் பிரகனன்டா இருந்தா  டெரர்ரா இருக்கும்... இரண்டு பேரும் ஒரேநேரத்துல வாந்தி எடுத்தா? அது மனுஷனுக்கு ஹாரர் பீல் கொடுக்கும்...  சரி  ரெண்டு பேர் வாந்தி எடுக்கறதுக்கும் நீ சம்பந்தமில்லைன்னா அதுக்கு பேரு ட்ராஜடி....


========

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

========

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

7 comments:

 1. Nice article and interesting videos.
  I am glad to hear that you are doing better.

  ReplyDelete
 2. Nice article and interesting videos.
  I am glad to hear that you are doing better.

  ReplyDelete
 3. நீங்கள் ரசிக்கும் விளம்பரம் நன்று தான் ஜாக்கி. அவர்கள் சுற்றுச்சூழல் குறித்து சொன்னது தான் சரியில்லை. மரங்கள் 30,00,000 நடுவது பற்றி சொன்னது. தினசரி வெட்டப்படும் 2,98,00,000 மரங்கள் பற்றி சொல்லாதது. இந்த செய்தியின் மூலம் இயல்பாகவே மக்களிடம் இவ்வளவு மரம்தான் நடறாங்களே.அப்பறம் என்ன என்ற எண்ணம் தோன்றிவிடும். மற்றபடி உங்கள் பதிவு அருமை..

  ReplyDelete
 4. நீங்கள் ரசிக்கும் விளம்பரம் நன்று தான் ஜாக்கி. அவர்கள் சுற்றுச்சூழல் குறித்து சொன்னது தான் சரியில்லை. மரங்கள் 30,00,000 நடுவது பற்றி சொன்னது. தினசரி வெட்டப்படும் 2,98,00,000 மரங்கள் பற்றி சொல்லாதது. இந்த செய்தியின் மூலம் இயல்பாகவே மக்களிடம் இவ்வளவு மரம்தான் நடறாங்களே.அப்பறம் என்ன என்ற எண்ணம் தோன்றிவிடும். மற்றபடி உங்கள் பதிவு அருமை..

  ReplyDelete
 5. குழந்தை இடம் இருந்து தள்ளிய இருங்கள் உடம்பு செரியாகும் வரை..Get well soon..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner