யாழினிஅப்பா.


யாழினி அப்பா...... இப்படி  என் மனைவி அழைக்கும் போது ஒரு புது பெயருக்கு  நான் அனிச்சையாக திரும்பி பார்க்கின்றேன். என் அம்மா ஏதாவது வேலை ஆக வேண்டும் என்றால் என்னை தனுசுராஜா என்று செல்லமாக ஐஸ் வைத்து  அழைப்பாள்..
என் மனைவி எனக்கு நிறைய செல்லப்பெயர்களை வைத்து அழைத்துஇருந்தாலும்,எனது புனைப்பெயரான ஜாக்கி என்று பொதுவெளியில் அழைக்கப்பட்ட போது கிடைத்ததை விட இந்த புதுப்பெயரில் என்னை என் வீட்டில் அழைப்பதில் எனக்கு சந்தோஷமே....

பக்கத்து வீட்டு தென்னை மரத்தில் இளநி வெட்டி யாழினி அப்பாவுக்கு ஒரு கிளாஸ் இளிநி கொடுங்க என்று சொல்லும் போது மனது மகிழ்வாய்தான் இருக்கின்றது...

ஒரு மகள் பிறக்கும் போது ஒரு தகப்பன் பிறக்கின்றான் என்று சொன்னது எவ்வளவு உண்மையான வரிகள்.. என் மகள் பிறந்த போது இனிமேலாவது அடுங்குடா என்று எனது நெருங்கிய நண்பர்கள் சொன்னார்கள்... நான் எதற்கு அடங்கவேண்டும் என்று எனக்கு தெரியவேயில்லை..? எனக்கு பிடிச்சதை நான் ரசிச்சதை செய்ய வேண்டும் என்பது எனக்கு கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு கிடைத்த ஆட்டிடுயூட்... அதை என் மகளுக்காக  நான் ஏன் மாற்றிக்கொள்ளவேண்டும்..??


நான் எழுத வந்த புதுசில் நிறைய அம்மாக்கள் வலைப்பூக்களில் கோலாச்சிக்கொண்டு இருந்தார்கள்... எப்போது பார்த்தாலும் அதில் சமையல் மற்றும் அவர்கள் பிள்ளைகள் பற்றிய பெருமைகள் இடம் பெற்று இருக்கும்..சில நிறைய சுவாரஸ்யங்களை உள்ளடக்கியதாக இருக்கும். சில கட்டுரைகள் இன்னும் சுவாரஸ்யமாக எழுதி இருக்கலாம் என்று தோன்றும்...

பெங்களுர் நண்பர் யுவாதான் சொன்னார்...பொதுவா குழந்தைகளை பத்தி அம்மாக்கள்தான் அதிகமா தங்கள் புள்ளைங்களை பத்தி எழுதிகிட்டு இருக்காங்க, ஏன் நீங்க யாழினி பத்தி எழுதக்க்கூடாது... ஒரு அப்பாவோட பாயிண்டாப் வீயூவில அதையேன் எழுதக்கூடாது? அப்படி எழுதினவங்க ரொம்ப கம்மி... உதாரணத்துக்கு என் மகள் பத்தாவது படிக்கின்றாள்.. அப்ப அப்ப எனக்கு ஏன் கடவுளே ? இப்படி படுத்தி எடுக்கற அப்பாவை கொடுத்தே என்று என் எதிரில் கடவுளிடம் அவள்  வேண்டாத நாளே இல்லை....அது போல சின்ன சின்ன ரசனைகளை  உங்கள் பாணியில்  எழுதுங்கள்... என்று கொளுத்தி போட்டு விட்டு  அவர்பாட்டுக்கு அவர் வேலையை பார்க்க போய்விட்டார். சரி எழுதிதான் பார்ப்போமே??? காசா பணமா?

என் மூன்று தங்கைகளை நான் வளர்த்தவன் என்பதால் மூத்திர துணி, பீத்துணி போன்றவைகள் என் அம்மாவுக்கு உதவியாக நானே துவைத்து இருக்கின்றேன். குழந்தையை பார்த்துக்கொள்வதற்கு மூன்று வீட்டில் பிச்சை எடுத்து  சாப்பிட்டு விடலாம் என்று என் மனையிவின் பாட்டி விளையாட்டாக சொல்லுவார். அந்த அளவுக்கு குழந்தைகள் படுத்திவார்கள்..இந்த ஒரு வருட காலத்தில்  சில நேரங்களில் அவள் படுத்தும் போது.. இழுத்து போட்டு நாலு சாத்து சாத்தாலாம் என்று நிறைய கணங்கள்  யோசித்து விட்டு கோபத்தை குறைத்து இருக்கின்றேன்..

குழந்தையோடு நான் செலவிட்ட நேரங்களை இங்கே பகிரலாம் என்று இருக்கின்றேன்..

வரும் 15ம் தேதி யாழினி பிறந்து ஒரு வருடம் ஆகப்போகின்றது.. காலம் இவ்வளவு வேகமாக சுழலுமா  என்ன??

குழந்தைகள் பிறந்ததில் இருந்து வாரவாரம் அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்று ஒரு வெப்சைட் அப்டேட் கொடுத்துக்கொண்டே இருக்கின்றது... என் மனைவி அதில் பதிந்து வைத்து இருந்தாள்...அதில் பதினோராவது மாதத்தில் உங்கள் குழந்தை நீங்கள் முத்தம் கேட்டால் முத்தம் கொடுக்கும் என்று  போட்டு இருந்தது.. எங்களுக்கு சிரிப்புதான் வந்தது.. யாழினி ஆறு மாதத்திலேயே அப்பாவுக்கு ஒரு உப்பா கொடு என்றால் அவள் உதடுகளால் எங்கள் கன்னத்தை ஈரப்படுத்தி விடுவாள்..

அவளுக்கு கோபம் நிறைய வருகின்றது என்று  என் அப்பாவிடம் சொன்னேன். வெற ஒன்னு போட்டா சுரை ஒன்னா வரும் என்றார்..
சத்தம் போட ஆரம்பித்தால் எங்கள் நகரையே எழுப்பி விடும் அளவுக்கு குரல்  வல்லமை அவளுக்கு இருக்கின்றது..


ஆறாம் மாதத்தில்  நான், யாழனி, யாழினி அம்மா, யாழினி பாட்டி, யாழினி மாமா என்று எல்லோரும் சதாப்தியில் பெங்களுருவுக்கு ரயிலில் போய் கொண்டு இருந்தோம்...

யாழினி சத்தம் போட ஆரம்பித்து ரயில் பயணிகளை எங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்தாள்...நான் மெதுவாக யாழினியிடம் சொன்னேன்.. யாழினி அப்பா போல அமைதியா இரு என்றேன்...
என் மச்சான் உடனே சொன்னான்...

தோ பாருங்க.. ஒடற ரயில்ன்னு கூட பார்க்க மாட்டேன்.. அப்படியே குதிச்சிடுவேன்... நீங்க அமைதியா? அப்படி சொன்னா உலகம் அழிச்சிடும்... சின்ன புள்ளைகிட்ட தப்பான மேசேஜ் கொடுத்தா டென்ஷன் ஆயிடுவேன்  என்றான்..

நேற்று யாழினியின்  இரண்டு கைகளிலும் பிஸ்கட் இருந்தது..ஒரு கையில் இருந்த பிஸ்கட் கீழே  விழுந்து விடுமே என்ற நல்ல எண்ணத்தில் அதை வாங்கி சரியாக கொடுக்கலாம் என்று வாங்கி விட்டேன்... அவ்வளவுதான் அப்படி ஒரு கத்தல்...  கோபம்... அவள் தின்ற பொருளை நான் வாங்கி கொண்டேன் என்று  கோபம்.. வாழ் என்று வாயை திறந்து அழுது வாயில் கொமுக்கி வைத்த பிஸ்கட்டுகள் எல்லாம் தரையில் சிதறும் அளவுக்கு அழுது கொண்டு இருந்தாள்.. பக்கத்து வுட்டு பெண்மணி அவளை சமாதான படுத்தும் நோக்கில்.. யாழினி அப்பாவை அடிச்சிடலாம் என்றார்..

அவ்வளவுதான் மகராசி... காமன்டோ சீப் கொடுத்த கட்டளை போல பாவித்து என் கன்னத்தில் பளீர் என்று கோபத்தில் அடிக்க.. நான் நிலைகுலைந்து போனேன்... என் எதிர்காலம்  பொறி கலங்க தலைக்குமேல் சுற்றும் நட்சத்திரங்களுடன் தெரிந்துவிட்டது...

அடாவடியா பேசும் போதும், அடாவடியா நடந்துகொள்ளும் போதும் என் அம்மா சொல்லுவாள்.. ஊட்ல அடங்காதது எல்லாம் ஊர்லதான் அடங்கும் என்று...கொஞ்சம் பழமொழி என் விஷயத்தில் மாறும் என்று எண்ணுகின்றேன்.



 அதே போல நான் ஒரு விஷயத்தில்  நான் ரொம்ப தெளிவாகவே இருக்கின்றேன்.குழந்தை  பிறந்த உடன் ஒரே ஒரு கேள்விக்கு என்னை மனதளவில் தயார் படுத்திக்கொண்டு விட்டேன்..அந்த கேள்வியை நான் என் அப்பாவிடம் கேட்டேன்...

அதே  கேள்வியை உங்களில் பலர்  உங்கள் அப்பா அம்மாவை பார்த்து கேட்டு இருக்கக்கூடும்..அல்லது உங்கள் மகளோ மகனோ உங்களை பார்த்து அந்த கேள்வியை கேட்டு இருப்பார்கள்...அதே போல  என் மகள் என்னை பார்த்து எப்போது அந்த கேள்வியை கேட்கப்போகின்றாள் என்று கேட்க ஆர்வாமாக இருக்கின்றேன்..



 எனக்கு நீ என்ன செஞ்சி கிழிச்ச...???
======================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

45 comments:

  1. Advance Happy birthday to YAZHINI

    ReplyDelete
  2. சூப்பர் பாப்பா யாழினிக்கு அன்பு முத்தங்கள்..

    யாழினி அப்பா..இந்தப்பேரே நல்லா இருக்கே ஜாக்கி!

    ’எனக்கு நீ என்ன செஞ்சு கிழிச்ச?’
    இது ரொம்ப வலி தரும் கேள்வி..!!

    கண்டிப்பா யாழினிப்பாப்பா அதைக் கேக்கமாட்டா!

    ReplyDelete
  3. யாழினி அப்பாவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. Aadakassam pooga first suthi pooduga pa. HAPPY BRITHDAY யாழினி.

    ReplyDelete
  5. எஸ்.ராமகிருஷ்ணனை படிப்பதைப் போன்ற உணர்வு.

    வெல்டன் ஜாக்கி!

    ReplyDelete
  6. இனிய பிறந்த நல்நாள் வாழ்த்துக்கள் யாழினி

    ReplyDelete
  7. //எனக்கு நீ என்ன செஞ்சி கிழிச்ச...???//
    எல்லா குழந்தைகளும் கேட்கும், கேட்கக்கூடிய கேள்வி இது தான்... ஆனாலும் ஒரு தந்தையோ, தாயோ இந்த கேள்வியை எந்த வகையிலும் தவிர்க்கவே இயலாது.

    முன் கூட்டிய ஆர்வம் நல்லது தான் :))

    ReplyDelete
  8. இனிய பிறந்த நல்நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. //எனக்கு நீ என்ன செஞ்சி கிழிச்ச...???//
    என் மகள் ரம்யாவும் அப்படி கேட்கக்கூடாது என்றுதான் நானும் நினைக்கிறேன்...

    ReplyDelete
  10. யாழினிக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள் ! !


    எனக்கு நீ என்ன செஞ்சி கிழிச்ச...??? - எந்த மகனும், மகளும் அப்பாவைப் பார்த்து கேட்கக் கூடாத கேள்வி ! !

    நிச்சயம் யாழினி கேட்க மாட்டாள் ! !

    ReplyDelete
  11. ரொம்ப நல்ல பதிவு, யாழினியின் அப்பா!
    //அவ்வளவுதான் மகராசி... காமன்டோ சீப் கொடுத்த கட்டளை போல பாவித்து என் கன்னத்தில் பளீர் என்று கோபத்தில் அடிக்க.. நான் நிலைகுலைந்து போனேன்... என் எதிர்காலம் பொறி கலங்க தலைக்குமேல் சுற்றும் நட்சத்திரங்களுடன் தெரிந்துவிட்டது...//
    இந்தப் பதிவின் முழு பொருள் இந்த பத்தியில் அடங்கியிருக்கிறது :-)
    amas32

    ReplyDelete
  12. //first suthi poodunga//

    Exactly. Photo paarthathumae athaan solla thondriyathu. Very cute.

    ReplyDelete
  13. Advances Wishes Yazhini. God will bring all happiness to you in your life.

    ReplyDelete
  14. யாழினிக்கு 12 நாளுக்கு அப்புறம்தான்... பார்த்டே.. இருந்தாலும் இப்பவே வாழ்த்து தெரிவித்த அத்தனை நண்பர்களுக்கு நன்றி..

    ReplyDelete
  15. //எனக்கு நீ என்ன செஞ்சி கிழிச்ச...???//
    இந்த கேள்வி தவிர்க்க முடியாதது.. அம்பானி பையனும் இந்த கேள்வி கேட்டிருப்பான்... ஆனா நான் இந்த கேள்வி கேட்டு எங்க அம்மா அதற்கு கொடுக்கும் பதில் அல்லது விளக்கம் என் பால்ய வயதை ஞாபகப்படுத்துவதால் நானே இந்த கேள்வியை அடிக்கடி கேட்பேன்... அப்புறம் முக்கியமா.. வீட்டுக்காரம்மாகிட்ட சொல்லி ரெண்டுபேருக்கும் திருஷ்டி சுத்தி போடசொல்லுங்க..

    ReplyDelete
  16. குழந்தைகள் என்ன பண்ணினாலும் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.எங்க அக்கா பொண்ணு பவ்யா இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறாள்.ஒன்னரை வயசாகுது.அவளுக்கு மாமா பாசம் ரொம்பவே இருக்கிறது.யாரை ரொம்ப பிடிக்கும் என்றால் மம்மா என சட்டென சொல்லி மழலையில் மயக்குகிறாள்.
    யாழினி இன்னும் பல சுவாரஸ்யங்களை உங்களுக்கு தரட்டும்.எதிர்பார்த்து காத்திருங்கள்.

    ReplyDelete
  17. Did you notice Jackie, there is a lot of face resembelance to your black and white baby photo and yazhini's this photo.

    ReplyDelete
  18. Did you notice Jackie, there is a lot of face resembelance to your black and white baby photo and yazhini's this photo.

    ReplyDelete
  19. காதல் அனுபவங்களை விட
    கண்மணிகளின் அனுபவங்கள்
    எப்போதுமே இனிமை .....

    ReplyDelete
  20. குழந்தைகள் என்ன பண்ணினாலும் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.எங்க அக்கா பொண்ணு பவ்யா இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறாள்.ஒன்னரை வயசாகுது.அவளுக்கு மாமா பாசம் ரொம்பவே இருக்கிறது.யாரை ரொம்ப பிடிக்கும் என்றால் மம்மா என சட்டென சொல்லி மழலையில் மயக்குகிறாள்.
    யாழினி இன்னும் பல சுவாரஸ்யங்களை உங்களுக்கு தரட்டும்.எதிர்பார்த்து காத்திருங்கள்.

    ReplyDelete
  21. யாழினி அந்த கேள்வியை கேட்க மாட்டாள் என்று இந்த ஒரு வரியில் தெரிந்து விட்டது யுவர் ஆனர்...

    //காமன்டோ சீப் கொடுத்த கட்டளை போல பாவித்து என் கன்னத்தில் பளீர் என்று கோபத்தில் அடிக்க..//

    //தோ பாருங்க.. ஒடற ரயில்ன்னு கூட பார்க்க மாட்டேன்.. அப்படியே குதிச்சிடுவேன்... நீங்க அமைதியா? அப்படி சொன்னா உலகம் அழிச்சிடும்... சின்ன புள்ளைகிட்ட தப்பான மேசேஜ் கொடுத்தா டென்ஷன் ஆயிடுவேன் என்றான்..//

    உலகமே அறிஞ்ச ஒரு விசயத்துக்கு இப்படி உங்க மச்சினன் டென்சன் ஆராரே... பாவம்...

    ReplyDelete
  22. யாழினி அந்த கேள்வியை கேட்க மாட்டாள் என்று இந்த ஒரு வரியில் தெரிந்து விட்டது யுவர் ஆனர்...

    //காமன்டோ சீப் கொடுத்த கட்டளை போல பாவித்து என் கன்னத்தில் பளீர் என்று கோபத்தில் அடிக்க..//

    //தோ பாருங்க.. ஒடற ரயில்ன்னு கூட பார்க்க மாட்டேன்.. அப்படியே குதிச்சிடுவேன்... நீங்க அமைதியா? அப்படி சொன்னா உலகம் அழிச்சிடும்... சின்ன புள்ளைகிட்ட தப்பான மேசேஜ் கொடுத்தா டென்ஷன் ஆயிடுவேன் என்றான்..//

    உலகமே அறிஞ்ச ஒரு விசயத்துக்கு இப்படி உங்க மச்சினன் டென்சன் ஆராரே... பாவம்...

    ReplyDelete
  23. யாழ் இனி கேட்பாள் தயாராகுங்கள்...ஜாக்கி.

    ReplyDelete
  24. இப்பவே யாழினிக்கு இவ்வளவு ரசிகர்களா?
    யாழினிக்கு அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. யாழினி பாபாவுக்கும் (செல்ல)அடி வாங்கிய யாழினி அப்பாவுக்கும் வாழ்த்துகள்..!!

    ReplyDelete
  26. அந்த முகத்திலேயே அந்த (யாழினி அப்பா என்ற) பெருமை தெரியுது..வாழ்த்துகள்...!

    ReplyDelete
  27. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பர்களே.... உங்கள் கருத்துகள் நிறைவாக மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.. மிக்க நன்றி நண்பர்களே.

    ReplyDelete
  28. Jackie Sir,,,, Photo Rombo live ah Irukku... very super... n... Y This Kolaveri Yazhini... Unka Appa Kitte... Yazhini HAPPY BIRTHDAY TO U PA...MAY GOD FULFIL ALL UR DREAMS COME TRUE.... MY CUTE BABY......

    ReplyDelete
  29. Jackie Sir,,,, Photo Rombo live ah Irukku... very super... n... Y This Kolaveri Yazhini... Unka Appa Kitte... Yazhini HAPPY BIRTHDAY TO U PA...MAY GOD FULFIL ALL UR DREAMS COME TRUE.... MY CUTE BABY......

    ReplyDelete
  30. Suya Puranam romba first iruntha mathiri ela unga blag sorry to say Interesting ka ela sir ...

    ReplyDelete
  31. Suya Puranam romba first iruntha mathiri ela unga blag sorry to say Interesting ka ela sir ...--// ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்கு.,. தற்பெருமை, சுயபுராணம் இல்லாம வாழ நான் என்ன முனிவரா?சரக்கு தீர்ந்து போச்சின்னு நினைக்கிறேன்.. அதான் இன்டிரஸ்டிங்கா இல்லை..ஒரே தற்பெருமையா இருக்கு... அதனால இணையத்துல தேடினிங்கன்னா இன்னும் இன்னும் சிறப்பான இண்ரஸ்டிங்கான தளங்கள் உங்களுக்கு கிடைக்கும்.. இந்த பக்கம் வந்து உங்க நேரத்தை வேஸ்ட் செய்யாதிங்க..டைம் ரொம்ப முக்கியம்.....நன்றி

    ReplyDelete
    Replies
    1. Nice Nose Cut Jackie Sir... Yaar Enna Sonnalum Don"t Care.. V R Here For U.... Jackie Sir Contd....

      Delete
  32. ஜாக்கி வாசிக்கும்போது பக்கத்தில இருந்து நண்பன் ஒருவன் ரெண்டாவது ரவுண்டில் கொஞ்சம் சீரியஸாக உணர்ந்து சொல்லுவானே விஷயம் .. அப்படி இருந்தது .. அருமை ..

    நாளைக்கே பெண் தேடி, கட்டி மறுநாளே பெண் பிள்ளை ஒன்று பெறவேண்டும் .. வளர்க்கோணும் போல ... அம்மாட்ட சொல்லப்போறன்!

    அடிச்சு ஆடுங்க ஜாக்கி.. நன்றி

    ReplyDelete
  33. எனக்கு நீ என்ன செஞ்சி கிழிச்ச...??? - Very true. I stopped asking this to my parents after I became a parent.
    Very cute baby. Looking forward to more of her naughty stuff as my kids are grown now and miss them so much being little. Enjoy this time together as they grow real fast.

    ReplyDelete
  34. Nice article, Jackie! Enjoyed looking at your picture with your daughter.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner