தானேவால் 11 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் கடலூர் மாவட்டம் மக்கள்.....



நேற்று முன் இரவில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ராயப்பேட்டையில் தொடர்ந்து மூன்று மணிநேரம் இரவில் மின்சாரம் இல்லையென்ற காரணத்தால் சாலை மறியலில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு இருக்கின்றார்கள்..


மூன்று மணி நேரத்துக்கு மின்சாரம் இல்லையென்றாலே, கொதித்து எழும் மக்கள் இருக்கும் இதே தமிழ்நாட்டில், கடந்த பத்து நாட்களாக மின்சாரம் இல்லாமல் ஒரு மாவட்டமே கஷ்டப்பட்டுகொண்டு இருக்கின்றது.. 

சனி இரவே.. கடலூருக்கு அப்பாவையும் தங்கையும் பார்த்து விட்டு வர மனைவி குழந்தையுடன் கிளம்பினேன்.. வீட்டில் இன்னும் மின்சாரம் வரவில்லை என்று சொன்ன காரணத்தாலும் கொசு கடித்து படுத்தி எடுப்பதாக சொன்னதாலும், குழந்தையை வைத்துக்கொண்டு அவஸ்த்தைபடக்கூடாது என்பதால்  பயண திட்டத்தை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தேன்.

அரசியல் தலைவர்கள் ,தலைவிகள்... முழங்கி கொண்டு இருக்கும் பொதுக்கூட்ட மேடையை உற்று பார்த்து இருக்கின்றீர்களா? தலைவரோ அல்லது தலைவியோ உட்கார்ந்து இருக்கும் சீட்டுக்கு பக்கத்தில் சின்ன ஏர்கூலர் இருக்கும்...  காரணம் ஓப்பன்   எரியாவில் பெரிய பந்தல் போட்டு இருந்தாலும் கூட, சப்போஸ்  தலைவருக்கோ தலைவிக்கோ வேர்த்து விட்டால்??அதுக்குதான் அந்த ஏர்க்கூலர்..


யோசித்து பாருங்கள்..11 நாட்களாக மின்சாரம் இல்லை... மின்சாரத்தில் பழகியவர்களுக்கு பதினோரு இரவுகள் கொடுமையான விஷயம்... உதாரணத்துக்கு சென்னையை புயல் தாக்கி இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள்...மின்கம்பங்கள் எல்லாம் சாய்ந்து விட்டன..மவுன்ட்ரோடு மற்றும் போய்ஸ் தோட்டத்துக்கு மட்டும் மின் வினியோகம் கொடுத்து விட்டு, சென்னையில் புயல் பாதித்த பகுதிகளில் மின் நிலைமை  சீரடைந்து வருவதாக ஊடகத்தில் செய்தி வெளியிட்டால் சென்னை மக்கள் கொதித்து விடுவார்கள்.. அல்லவா? அது போலத்தான் கடலூர் மக்கள் கொதித்து போய் இருக்கின்றார்கள்...


11  நாட்களாக மின்சாரம் இல்லை.. இத்தனைக்கு புதுப்பாளையம் பகுதி கடலூர் நகராட்சிக்கு பக்கத்தில் இருக்கும் பகுதி அங்கேயே இன்னும் மின்சாரம்  கிடைக்கவில்லை என்றால் இன்னும் கிராமபுறமக்கள் நிலைமையை சற்றே  யோசித்து பாருங்கள்...


ஆட்டுகல்லில் மாவு ஆட்டி போட்டு இட்லி தோசை சுட்ட காலம் எல்லாம் மலையேறிப்போய் விட்டது.. கிரைண்டருக்கு மின்சாரம் இல்லை என்பதால் கடலூர் மக்கள் இட்லி,  தோசையை கண்ணால் பார்த்து பதினோரு நாளைக்கு மேல் ஆகின்றது..ஒட்டல்களில் பொங்கல் பூரி மட்டுமே கிடைக்கின்றது..

கைபம்புக்கு டாட்டா காட்டி  மோட்டருக்கு மாறிய குடும்பங்கள் தவித்து போய் இருக்கின்றார்கள்....ஹார்டுவேர்ஸ் கடைகளில் அடிபம்புக்கு வாஷர் கிடைக்கவில்லை... போல்ட்டு  நெட்டு கிடைக்கவில்லை...  தண்ணிருக்காக புதிதாக கைபம்பு  போட்டு ஒப்பேற்றி வருகின்றார்கள்..

நண்பரின் பக்கத்த வீட்டில் கைபம்பு வைத்து இருக்கும் அவரின் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டில் எல்லோரும் தண்ணி பிடிக்க போய் நின்றால்.... வாஷர் தேய்ந்து விட்டால் நான் எங்கே போய் நக்குவது என்று? பக்கத்து அக்கத்து வீட்டுக்காரர்களை தண்ணர் பிடிக்க விடாமல்  விரட்டிக்கொண்டு இருக்கின்றாராம். 

ஓத்தா பக்கத்து வீட்டுக்காரனுக்கே தவிச்ச வாய்க்கு ஆபத்துல தண்ணி கொடுக்க யோசிக்கற நாய் இது.. காவிரியில் தண்ணி கொடுக்கலைக்கு பக்கத்து மாநிலத்துகாரன்கிட்ட போய் எப்படி நிக்க முடியும்? என்று வேதனையோடு நிறைய பேர் காலிகுடத்தோடு நிறைய ஆண்கள்   கோபத்தோடு பேசி சென்றார்களாம்..

இன்னும் சில கைப்பம்பு வைத்து இருக்கும் ஹவுஸ் ஒனர்கள் மக்கள் தண்ணீருக்கு அடித்துக்கொள்ளும் நிலை பார்த்து அவர்களே தண்ணீர் அடித்து கொடுத்து உதவி செய்தும் நெகிழ்சி படித்தியும் வருகின்றார்கள்...

ரோட்டில் ஆக்கிரமிப்பு எல்லாவற்றையும் தானே புயல் எடுத்துப்போட்டு விட்டதாம்...

பத்து வயது பையனும், 70 வயது பெரியவரும்... என்வாழ்க்கையில் இது போல ஒரு புயலை பார்த்தது இல்லை என்று சொல்லி சொல்லி ஆத்துப்போகின்றார்கள்..

புயல் அடித்த அன்று வீட்டில் கதவை பூட்டிக்கொண்டு எனது அத்தை வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து இருக்கும் போது திடிர் குக்கரில் வருவது போல, விசில் சத்தம் கேட்க மிரண்டு போய் இருக்கின்றார்கள்.. என்ன என்று பார்த்தால் வெளியில்  அடிக்கும் அசுர புயல் காற்று கதவின் சாவிதுழவரம் வழியாக அழையா விருந்தாளியாக வீட்டின் உள்ளே வர முயற்சித்து, குக்கர் போல விசில் அடித்து இருக்கின்றது...அப்ப காற்றின் வேகத்தை கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்..


எனது  வீடுகள் இரண்டும் அஸ்ப்பெட்டாஸ் ஷீட் போட்ட வீடுகள்.. வடக்கு தெற்க்காக  வாயில் படிகள் இருந்த காரணத்தால் வீட்டின் கூறை தப்பித்தது... கிழக்கு பக்கம் வாசற்படி வைத்து இருந்த வீடுகளில் காற்று உள்பக்கமாக புகுந்து, கூறையை சுமைக்கூலி இல்லாமல்  கிடைத்தவற்றை எல்லாம் தூக்கிக்கொண்டு பறந்து இருக்கின்றது தானே சனியன்....

என் அப்பாவுக்கு இப்போது 69 வயது ஆகின்றது... அவர் சிறு வயதாக இருக்கும் போது.. 1952களில்  எங்கே சுற்றினாலும் சரியாக மாலை ஆறு மணிக்கு எல்லாம் வீட்டில் வந்து அடைந்து விடுவார்களாம்.. காரணம் மின்சாரம் இல்லை என்பதுதான்... அது போலான நிலைமை கடலூர் மக்களுக்கு 70 வருடம் கழித்து நிகழ்ந்து இருக்கின்றது...
நாலுமணிநேரம் மின்வெட்டு கடலூரில் ஏற்ப்பட்ட போது எல்லாம் கொதித்த பொதுமக்கள்..இப்போது பதினோரு நாட்களாக வேண்டிக்கொள்ளும் ஒரே விஷயம்..- ஒரு மணிநேரம் மின்சாரம் கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்..

தூங்கி பதினோரு நாட்கள் ஆகிவிட்டது.. மின்சாரம் இல்லாத காரணத்தால் கொசு கடித்து.. படுத்தி எடுத்து வருகின்றது..குழந்தை வைத்து இருக்கும்பெற்றோர்களின் நிலைமையை நினைத்து பாருங்கள்..

மக்கள் நவநாகரிக உடை அணிந்து இருந்தாலும் கற்க்கால வாழ்க்கையை  மின்சாரம் இல்லாத காரணத்தால் வாழ்ந்து வருகின்றார்கள்..

தமிழ்நாட்டில் ஒரே மாவட்டம் கடலூர் தான் தானே புயலால் பாதிக்கப்பட்டு இருக்கின்றது......பதினோரு நாள் ஆகிவிட்டது இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை.. அத்தியாவசிய பொருட்கள்  விலையேற்றத்தில் இருக்கின்றது...குடிக்க,குளிக்க,சூத்து கழுவ தண்ணீர் இல்லை...

சற்றே யோசித்து பாருங்கள்..ஒரு மாவட்டத்தையே சீர் படுத்த பதினோரு நாட்கள் ஆகின்றது என்றால்??? இதுக்கே இந்த லட்சணம் என்றால், ஒரு வேளை கல்ப்பாக்கத்திலோ அல்லது கூடங்குளத்திலோ அணு விபத்து ஏற்ப்பட்டு விட்டது என்றால்? எல்லாரும் அணுகதிர்வீச்சில் பாதிப்பு ஏற்ப்பட்ட பிறகு, பத்து நாள் கழித்து முகமுடிகவசங்களுடன்.. சாவகாசமாக மத்திய குழு விளக்கெண்ணையுடன்,பூஜைமணியை அட்டிக்கொண்டு,  பாதிப்பை விசாரிக்க வருவார்கள்..அன்றைய தமிழக முதல்வர் பணக்கார வாழ்க்கையில் பிறந்து வந்தவராக இருந்தால்? ஹெலிகாப்டரில் கூட பாதிக்கபட்ட மக்களை பார்க்கவரப்போவதில்லை.. காரணம்... கதிர்வீச்சு பாதித்து விட்டால்....???

கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிரான போராட்டம்.... அந்தபகுதி மக்களின் பயம் நியாயமானதே.... காரணம் கடலூர் மாவட்டம்...மிகச்சிறந்த உதாரணம்..

நல்லவேளை... தானே புயலினால் 49 பேர் மட்டுமே இறந்து போய் இருக்கின்றார்கள்..பொருட்சேதம் மட்டுமே அதிகமாகி இருக்கின்றது.. இறைவனுக்கு நன்றி...

ஒருவேளை ஒரு 500 பேர்  தானே புயலினால் இறந்து போய் விட்டார்கள் என்றால்... இருக்கவே இருக்கின்றது.. ஆழ்ந்த இரங்கல் மற்றும் தலைக்கு இரண்டு லட்சமாக 10 கோடி ரூபாயை இறந்தவருக்கு பிரித்து கொடுத்து விட்டால் சரியாப்போச்சு....

வேறு என்ன செய்ய முடியும்? தமிழக அரசாலும், மத்திய அரசாலும்..???



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..

குறிப்பு...

1200 பேர்   வெளிமாவட்ட மக்கள் மற்றும் மின்சார ஊழியர்கள் இரவு பகல்பாராது மின் இணைப்பு கொடுக்க உழைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்..

ஆனாலும்....ஒன்றரை லட்சம் மரம் இழந்த புதுச்சேரியில் மின்சாரம் வந்து விட்டது..பேரிடர் பாதித்த மாநிலம் என்று அறிவித்து இருக்கின்றார்கள்..ஆனால் தமிழக அரசு இன்னும் அப்படி எதையும் அறிவிக்கவில்லை..ஐரோப்பிய மற்றும் அமேரிக்க தேசம் போல மக்கள் சக்தி இல்லாத நாடு அல்ல.. நமது நாடு....ஆனாலும் இன்னும் மின் இணைப்பு சரிசெய்யவில்லை என்றால் எங்கோ யாரோ அலட்சியமாக இருக்கின்றார்கள் என்று அர்த்தம்...நேற்று மின் ஆய்வாளர் பேட்டிக்கொடுக்கும் போது.... நாலுவாரத்தில் சரி செய்துவிடுவவோம் என்று சொல்லுகின்றார்...நாலுவாரம் யோசித்தால் கடலூர் மக்கள் பிதியில் இருக்கின்றார்கள்..



 
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

11 comments:

  1. நேற்று மாலை தீ வட்டியுடன் போராட்டம் பாரதி ரோட்டில்...
    ஒரு மாவட்டத்துக்கே இந்த கதின்னா மக்கள் போராட்டம் செய்யாம என்னதான் செய்வாங்க ..?? ஆனா வெளியே இதை பத்தி அதிகம் செய்திகள் வருவதில்லை :-(

    ReplyDelete
  2. தலைவரே...ஜெயா டிவியில் மின்சாரம் கொடுத்தாச்சுன்னு சொல்றாங்களே.உண்மையில்லையா .அட பாவிகளா......எப்படியெல்லாம் பில்ட் அப் கொடுக்கிறாங்க...இதுல கூட அரசியல் பண்றாங்களே...

    ReplyDelete
  3. கடலூர் வாசிகளின் நிலை மனதை மருகச்செய்கிறது. வருத்தப்படுவதை விட வேறு என்ன செய்யமுடிகிறது இங்கு.

    ReplyDelete
  4. பாரதி ரோட்டுக்கே இந்த நிலைமைன்னா...ஜெய்லானி.. பாவம் கிராமத்து மக்கள்..

    ஜீவா..எல்லாம் பொய்...

    நன்றி தமிழ்..

    ReplyDelete
  5. :( pavam makkal . this again proved that we still live with the most worst system in world. last august i was in US . on aug 26 the "Irene" puyal attacked many states. my village was worst affected .but government/local people supported us for 5 days with food and water until we get power supply. but they made progress every single day. here :( we have drama artists just visiting people for publicity :(

    ReplyDelete
  6. என்ன செய்வது நாம் நம் ஆதங்கத்தை எழுத்துக்களில் தான் பிரதிபலிக்க வேண்டியது இருக்கிறது

    ReplyDelete
  7. இதற்க்கு எல்லாம் அதிகாரிகளின் மெத்தனமே காரணம்.. \\Jayachandran said...
    :( pavam makkal . this again proved that we still live with the most worst system in world. \\

    ReplyDelete
  8. கடலூர் மக்களுக்கு பெரும்பாலும் யாருமே அவக வயல் பக்கமே போறது இல்லை. இன்னும் 4 நாள் இருத்தா அறுவடைனு இருந்த நிலம் இப்போ காலியா இருக்கு.
    அரசாங்கம் 1 காணி நிலத்துக்கு 2500 ரூபாய்னு சொன்னா அத குடுக்றவனே 250 ரூபாய் ஏடுதுகிறான்.இந்த 2500 ரூபாயே எங்க பத்தும்னு நெனைச்சா நடுவுல எப்படிலா நடக்குது. அப்படி மக்கள்கிட்ட புடிங்கி சாப்பிட எப்படி மனசு வருதுன்னு தெரியல. நாம உபயோகிகற பொருள்தான் மாறி இருகே தவிர சிலரோட மனசு ரொம்ப கேவலமா போய்கிட்டு இருக்கு.
    ஒரு சில ஏரியலாலா மறுநாளே மின்சாரம் வந்துடுச்சு.. என்னனு கேட்ட அங்க M . L . A வீடு இருக்காம், அவகளுக்கு மட்டும்தான் பசிக்குமோ??..
    கடலூர்ல என்ன நடந்துதுனே வெளில யாருக்குமே தெரியல. ஒருவேல FaceBook ல போட்டா எல்லோருக்கும் தேரயுமோ என்னவோ.

    ReplyDelete
  9. ஜாக்கி அண்ணா,
    நானும் கடலூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன் தான் ஆனால் தற்சமயம் சவுதில் (ரியாத்)வேலை பார்க்கிறேன்...உங்களின் பதிவுகளால் நம் மாவட்டத்தின் செய்திகளையும் தமிழகத்தின் நிலவரத்தையும் அறிந்து கொள்கிறோம் ..உங்கள் எழுத்துக்கள் மிகவும் எளிய நடையில் நம்ம ஊரின் சாயல் கலந்து படிப்பதற்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது..உங்கள் எழுத்து இறைவனின் கொடை..தொடரட்டும் உங்கள் சேவை......அன்புடன் (AJ)

    ReplyDelete
  10. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  11. தமிழக அரசு விரைவில் செயல்பட வேண்டுமென்பது அவசியம். ஆனால் பாண்டிச்சேரியோடு ஒப்பிடுவது சரி வராது. பாண்டிச்சேரியின் பரப்பளவு மிகக் குறைவு.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner