தமிழ்நாட்டில் எல்லோருமே டாக்டர்கள்தான்.




வேறு எந்த நாட்டிலாவது இப்படி இருப்பார்களா என்று தெரியவில்லை...? ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள்..


தமிழ்நாட்டில் தனக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால்  எனக்கு தெரியவில்லை என்று சொல்ல.... ரொம்பவே யோசிக்கின்றவர்கள் அதிகம்.. முந்திரிக்கொட்டை போல ஐடியா கொடுப்பவர்கள் இங்குதான் அதிகம் என்று நினைக்கின்றேன்.

உதாரணத்துக்கு பொம்மிஅம்மன் கோவில் எங்க இருக்குன்னு ஒரு கேள்வியை கேளுங்க..?தனக்கு தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பக்கம் கை நீட்டி வழி சொல்வதை நீங்கள் கவனித்து இருக்கலாம்...நான் இது போல பல முறை சென்னையில் ஏமாந்து இருக்கின்றேன்.. அதன் பிறகு சுதாரித்து வழி கேட்டதும் கொஞ்சம் யோசனைக்கு வழி சொல்வபவரின் முகம் மாறும் போதே நன்றி சொல்லி விட்டு நகர்ந்து விடுவேன்...

ஒருவருக்கு உடம்புசரியில்லை என்று சொல்லிப்பாருங்கள்... எல்லோருமே டாக்டராகிவிடுவார்கள்.. சிலர் மருந்து முதற்க்கொண்டு சொல்லுவார்கள்.. காய்சல் தலைவலிக்கு மருந்து சொல்வது ஒரு பெரிய விஷயம் இல்லை...ஆனால் கிட்னி பிரச்சனை, விஷக்காய்சல்,மனப்பிறழ்வு போன்ற சீரியஸ் பிரச்சனைகளுக்கு கூட மருந்து மாத்திரை மற்றும் ஐடியா சொல்வது நம்ம ஊரில் அதிகம்...........

அப்படி ஜடியா சொல்லித்தான் இரண்டு உயிர்கள் பலியாகிபோய் இருக்கின்றன....

சாலையில் விபத்து நடக்கின்றது என்று வைத்துகொள்ளுங்கள்... விபத்தில் அடிபட்டவருக்கு முதலுதவி செய்ய போகின்றீர்கள்..விபத்தில் அடிபட்டவர் காதில் ரத்தம் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம்... அவசரமாக ஆட்டோ பிடிக்க நாம் இருக்கும் அலையும் போது, வேடிக்கை பார்க்க வந்த ஒரு  வெட்டி எம்பிபிஎஸ் சொல்லுவதை நம்மில் பலர் கேட்டு இருக்கலாம்...

//காதுல ரத்தம் வந்துடுச்சில்ல... அவ்வளவுதான் இது தேறாது ரொம்ப கஷ்டம் அவ்வளவுதான்//

என்று  சத்தமாக சொல்லுவார்கள்..அவசரமாக உதவி செய்ய நினைப்பவருக்கு கூட இந்த வார்த்தைகள் சோர்வை தரும்..

நேற்று நெல்லையில் பிள்ளைகள் பாயசம் வைத்துகொடுக்க அம்மாவிடம் சொல்லி இருக்கின்றார்கள்..வெல்லம் வைத்து இருந்த பரணில் வெல்லத்துக்கு பக்கத்தில் வயலுக்கு தெளிச்ச பூச்சி மருந்து வெல்லத்தின் மீது கொஞ்சம் ஊற்றி இருக்கின்றது..அத்த அம்மாவுக்கு இது நன்றாகவே தெரிந்து இருக்கின்றது....

பூச்சி மருந்து இருந்த வெல்லப்பகுதிகளை மட்டும் கத்தியால் சீவி விட்டு, மீதம் உள்ள  வெல்லத்தை பாயசத்துக்கு பயண்படுத்தி இருக்கின்றார்..

ஆனால் வெல்லத்தில் பூச்சி மருந்து முழுவதும் ஊறி இருக்கும் என்பதை அவர் அறியவில்லை...பக்கத்து வீட்டு குழந்தைக்கு கூட பாயசத்தை கொடுத்து இருக்கின்றார்.. பாயாசம் வயிற்றுவலியை உண்டாக்க பிரச்சனை தீவிரம் தெரிந்து இருக்கின்றது.. எல்லோரும்  பாயாசம் சாப்பிட்ட உடனே அத்தனை பேரும் வாந்தி எடுத்து துடித்து இருக்கின்றார்கள்.. 

வாந்தி எடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று அங்கு இருந்த  எல்லாம் தெரிந்த வெட்டி எம்பிபிஎஸ் ஆஸ்பிட்டல் செல்ல விடாமல் அச மடக்கி இருக்கின்றார்கள்..

மூன்று மணி நேரத்த்துக்கு மேல் வாந்தி மற்றும் வயிற்று  வலியால் துடித்து இருக்கின்றர்ர்கள்.. அதன் பிறகு மருத்துவமணை கொண்டு செல்ல.. அம்மா மகன் இரண்டு பேரும் நேற்று இறந்து போய் இருக்கின்றார்கள்..பாயாசம் சாப்பிட்ட,மீதி ஐந்து பேர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்றார்கள்..

சரியான நேரத்தில் மருத்துவமணைக்கு கொண்டு போய் இருந்தாலே, இரண்டு உயிர்கள் காப்பாற்றி இருக்கலாம்.. எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்...நிறைந்த மாநிலம் நம் மாநிலம்.. என்ன செய்ய....??

பூச்சிமருந்து பட்ட வெல்லம் என்று தெரிந்தே  பாயாசம் தயார் செய்த தாயை என்ன சொல்வது...?? அவர் மீதும் தப்பு இல்லை நம் வளர்ப்பு அப்படி...

ரெனால்ட் என்ற பேனா மட்டும் வரவில்லை என்றால் மர மைபேனாவில் ரீபில் மட்டும் மாற்றி மாற்றி தலைமுறை தலைமுறையாக பயண்படுத்தி வந்த தேசம் நம் தேசம்... அந்த பொது புத்தி நான் உட்பட இங்கு பிறந்த எல்லோருக்குமே உண்டு...

இப்போதுதான் மை பேனா பயண்படுத்தி தூக்கி தூர எரிய மெல்ல கற்றுக்கொண்டு இருக்கின்றோம்.. யூஸ் அண்டு துரோ பேனாக்களையும் நாம் இப்போதுதான் பயண்படுத்த ஆரம்பித்து இருக்கின்றோம்...

எங்கள் ஊரில் இருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதியான ஒரு விவசாய குடும்பம் இருக்கின்றது..கத்திரி பயிர் விளைவித்து, நல்ல  கத்திரிகாய்களை விற்று விட்டு, சொத்தை கத்திரிகளை சமையலுக்கு பயண்படுத்துவார்கள்....அதுபோலத்தான் பல குடும்பங்கள் இருக்கின்றார்கள்...

பூச்சி மருந்து பட்ட அந்த வெல்லத்தை அந்த பெண்மணி தூக்கி போட்டு இருக்கலாம்...வாந்தி எடுக்க ஆரம்பித்தஉடன் மருத்தவமணைக்கு அழைத்து சென்று அட்மிட் செய்து இருக்கலாம்.....

இரண்டு உயிர்கள் பலியாகி விட்டன...

 விதி........யாரை குற்றம் சொல்ல......?

 
 ==========
 பிரியங்களுடன்
 ஜாக்கிசேகர்.
 

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

12 comments:

  1. சரியான விஷயத்தை எடுத்திருக்கீங்க தல, தமிழ்நாட்டில் இந்த மாதிரி நடந்துகொள்பவர்கள் மிக மிக அதிகம். மருத்துவமனையில் டாக்டருக்காக காத்திருக்கும் போதே டாக்டரை மிஞ்சிய அட்வைஸ்கள் தருபவர்களை பாத்திருக்கிறேன்.
    மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதை குறைந்த பட்சம் மருத்துவ விஷயத்திலாவது தவிர்த்துக் கொள்ள வேண்டும். நிச்சயம் இது பற்றிய விழிப்புணர்வு எல்லாருக்கும் வரவேண்டும்!

    ReplyDelete
  2. //டாக்டருக்காக காத்திருக்கும் போதே டாக்டரை மிஞ்சிய அட்வைஸ்கள் தருபவர்களை பாத்திருக்கிறேன்///
    intha doctor sariyilla enru angeye solluvaarkal!pechchu suthanthiram!

    ReplyDelete
  3. இந்த பொது புத்தி எல்லா ஊர்களிலும் எல்லா மக்களிடத்திலும் இருக்கு நீங்க குறிப்பிடுவது போல நம் ஊரில் மட்டுமல்ல.

    ReplyDelete
  4. தலைப்ப பார்த்துட்டு சிரிக்க போனேன்...
    ஆனால் விஷயத்தை படிச்சவுடனே கண் கலங்கிருச்சு...

    ReplyDelete
  5. பீர்பாலிடம் அக்பர், அமைச்சரே நாட்டில் மக்களுக்கு எந்த தகுதி அதிகமாக இருக்கிறது? என்று கேட்பார், அதற்கு பீர்பால்,”அனைவருக்கும் மருத்துவர் ஆகும் தகுதி நிறையவே இருக்கிறது” என்பார். மன்னர் அது எப்படி என்று கேட்க..நீங்கள் மாறுவேடத்தில் கையில் ஒரு கட்டை மட்டும் கட்டிச்செல்லுங்கள் உங்களை முன் பின் அறியாதவன் கூட அவனது மருத்துவ பண்டிதத்தனத்தை உங்களிடம் பரிட்சித்து பார்ப்பான்” என்றார்.. கடைசியில் நிஜத்தில் அதுதான் நடந்தது..மொத்தத்தில் இது காலம் காலமா உள்ள பிரச்சனை...

    ReplyDelete
  6. 'இதுதாண்டா பதிவு' என்பது போல ஒரு பதிவு.
    இந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் சில சமயங்களில் விஷயம் தெரிந்தவனை கூட குழப்பி ஒன்னும் தெரியாதவனாக்கி விடுவார்கள்.
    இப்படி மூக்குடைபட்ட அனுபவங்கள் எனக்கு நிறையவே உண்டு.
    நல்ல அவதானிப்பு.
    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்
    தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  7. மிக வருத்தப்படக்கூடிய விசயம். நெத்தில அடிச்ச மாதிரி சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  8. உண்மையை ஒப்புக்கொள்ளவே ரொம்பவும் அவமானமாக இருக்கிறது .....இருந்தாலும் ஒப்புக்கொள்கிறேன் ....நானும் இதை போல் தான் இது வரை இருந்து வருகிறேன் .....இனி என்னை மாற்றி கொண்டு விட்டேன் ......

    ReplyDelete
  9. நல்ல பதிவு.... இதில் எத்தனை பேரு ..... பார்மசில் மருந்து வாங்கி சாபிட்டு இருக்கோம் ...??? இனிமேல் இந்த தவறு நடக்கமா பாத்துக்கணும்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner