கடலூரில் போர்க்கால நடவடிக்கை… போங்கய்யா. நீங்களும் உங்கள் நடவடிக்கையும்..





பேர்க்கால நடவடிக்கை என்ற சொல்லுக்கு சரியான அர்த்தம்  தெரியாத சமுகம் தற்போதைய தமிழ்நாட்டு மக்கள்..

குண்டு விழப்போவுதுன்னு உயிரை கைல பிடிச்சிக்கிட்டு வீட்டை போட்டது போட்டபடி குடும்பத்தினருடன் ஓடியது உண்டா? இல்லையே?


நீங்கள் வெகு இலகுவாக போன சாலைகள் எல்லாம் குண்டு போட்டு குண்டும் குழியுமாக இருக்கும் சாலை என்று பெயரில் இருக்கும் மரண குழிகளில் விழுந்து விடாமல் ஓடியது உண்டா-? இல்லையே?

அடுத்த வேளை சாப்பாடு இல்லாமல்,மாற்றத்துணி இல்லாமல்,குடிக்க தண்ணி இல்லாமல் உயிர் பயத்தில் ஷெல் குண்டுக்கு பயந்து கொண்டு பதுங்கு குழியில் வாழ்ந்த அனுபவம் உண்டா-? இல்லையே?

நடந்து போகும் போது கண்ணிவெடியில் கால் வைத்து உடல் சிதறி யாராவது இறந்து போய் இருப்பதை பார்த்து இருக்கின்றீர்காளா? இல்லையே


வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது பிரங்கி குண்டு  பாய்ந்து உங்கள்  பக்கத்து வீடு குடும்பத்துடன் அழிந்து போனதை பார்த்து இருக்கின்றீர்களா? இல்லையே

மின்சாரம் இன்றி காடுகளில் குடும்பத்தோடு வாழ்ந்து இருக்கின்றீர்களா? இல்லையே?

நீங்கள் வாழ்ந்த நகரத்தில் விமானத்தில் இருந்து குண்டு வீசி நகரத்தையே நாசமாக்கியதை பார்த்து இருக்கின்றீர்களா? இல்லையே?
ஹீரோஷிமா , நாகசாகி போல நகரம் அழிந்து போனதை கண்ணால் பார்த்து இருக்கின்றீர்களா? இல்லையே?

 சோ.. போரையே நேரில் பார்த்து இல்லை...அப்பறம் இன்னா மயத்துக்குடா போர்கால நடவடிக்கை என்ற வார்த்தையை உபயோகபடுத்தறிங்க..???

ஜப்பான்காரன் பயண்படுத்தாலாம்... போர்கால நடவடிக்கை மேற்க்கொண்டு இருக்கின்றோம் என்று? நிலநடுக்கத்தால் பள்ளமான சாலையை ஒரு  வாரத்தில் போட்டு முடித்தான் அந்த படங்கள் இணையத்தில் கூட உலா வந்தது..அமெரிக்காவில் போர்கால நடவடிக்கை என்றால் அவனுக்கும் அதன் அர்த்தம் தெரியும்....


 போர் என்றால் என்னவென்றே தெரியாத 300ஆண்டு தமிழ்நாட்டு சமுகம், அடிக்கடி போர்க்கால நடவடிக்கை என்றவார்த்தையை சொல்லி வருவது வியப்புதான்... அதனால்தான் அரசியல்வாதிகள். மற்றும் ஊடக சனியன்கள் சொல்லுவதை கேட்டு நாம்  மண்டையை மண்டையை ஆட்டிக்கொண்டு இருக்கின்றோம்..நாமும் சில வேளைகளில் பயண்படுத்துகின்றோம்...ஆனால் போர்க்கால நடவடிக்கை என்பது அப்படி இல்லை...

போரில் காயம அடைந்த ராணுவ வீரர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது  எதிரிபடையிடம் போர்முனையில் இருக்கும் இராணுவ வீரர்களுக்கு உணவு குடிதண்ணீர் போன்றவற்றை எத்தனை இடர் வந்தாலும் எடுத்து செல்வதைதான் போர்க்கால நடவடிக்கைக்கு உதாரணமாக சொல்லலாம்...செய்யவே முடியாத மலைப்பான வேலையை தேசத்து மக்களுக்காக இரவு பகல் பாராமல் ஓய்வில்லாமல் செய்து முடிப்பது.. போரில் பழுதான சாலையை சீரமைப்பது என்றால் அதுக்கு போர்கால நடவடிக்கை தேவை .. சாலை சீர்செய்தால்தான் படை நகரும்...இரவு பகல்பாராமல் உழைப்பார்கள்..கார்கில் போன்ற மலை பிரதேசத்தில் நம் ராணுவவீரர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு எடுத்து போன பனிமலையில் சாலை இல்லையென்றால் முதலில் அந்த சாலையில் உள்ள பனியை போர்க்கால நடவடிக்கையாக நீக்கி சாலையை சரிசெய்வார்கள்..அப்படி முடியவில்லை என்றால்  ஹெலிகாப்டரில் போயவது  கொடுத்தாக வேண்டும்.. இதுதான் போர்கால நடவடிக்கை என்றால் அவசரம் அவசரமாக என்று அர்த்தம்.

ஆனால் எங்கள் ஊர் கடலூரில்  புயல் கரையை கடந்து 5 நாட்கள் ஆகின்றது.. இன்னும் மின்சாரம் வரவில்லை..

மின்சாரம் கிடைக்கவில்லை என்றால் குடி மூழ்கியா போய்விடும்...? ஆமாம் அப்படித்தான் போய் விடும்..

நீங்கள் உங்கள்  செல்போன் சார்ஜ் செய்ய 20ரூபாய் கொடுத்து இருந்தால் இந்த கேள்வியை கேட்டு இருக்க மாட்டீர்கள்..

அரை லிட்டர் பால் அறுபது ரூபாய்க்கு விற்றார்கள்.. இன்னும் மின்சாரம் இல்லை என்பதால் அடிபம்பு இருக்கும் வீடுகளில் குளிக்க பெருங்கூட்டம் நிற்கின்றதாம்....

பேங்கில் இருக்கும் பணத்தை அவரத்துக்கு எடுக்க முடியவில்லை...
ஏடிஎம் வேலை  செய்யவில்லை..

 
மாநில முதல்வர் தன் அடிப்பொடிகளை அனுப்பி வைத்து இருக்கின்றார்.. ஒரு மாநில முதல்வர் புயல் பாதித்த பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களை இதுவரை நேரில் போய் சந்திக்கவில்லை..வரலாறு காணத புயல் கடலூரை புரட்டி போட்டு இருக்கின்றது...ஆனால் இன்னும் போகவில்லை..

ஹெலிகாப்டர் இறங்க அங்கே தோதான இடம் இல்லை என்பதாலா? கரெக்ட் ஹெலிகாப்டர் இருந்தால்தானே அவர் போவார்... காரில் போய் பழக்கமில்லாதவர்...பாவம் தமிழ்நாட்டு மக்கள்..

புயல் கரையை கடந்த போதுதான் கட்சியின் பொதுகுழுவை  கூட்டினார்...அங்கு ஒரு மாவட்ட மக்கள் தங்கள் வாழ்வாதரத்தை பறிகொடுத்து அனாதை போல நிற்கும் போதுதான் சென்னையில் பொதுக்குழு நடந்தது.. இதில் அவரின் கட்சிக்காரர்களே புயலின் காரணமாக வர சிரமபட்டடார்கள்..



பெரிய புயல் வரப்போகின்றது என்று வானிலை ஆய்வு மையம் அறிவிக்கின்றது..இரண்டு நாளைக்கு  முன்பே அது கடக்கும் போகும் இடத்தை சொல்லுகின்றது.. ஒரு நாளைக்கு முன்னே அது எங்கே கடக்கும் என்பதையும் சொல்லிவிடுகின்றது..

ஆனால் மனித ஆற்றல் கம்மியாக இருக்கின்றது...கடலூரில்ஆயிரம் மின்சார போஸ்ட் மரம் இருக்கின்றது என்றால்... அதில் 850 போஸ்ட் மரங்கள் விழுந்து விட்டன.. மாநில அரசு மின்சாரம் கொடுக்க பிரச்சனை சரிசெய்ய ஆயிரம் பேரை அனுப்புகின்றது... ஆனால் புயல் கரையை கடந்து  ஐந்து நாட்கள் ஆகியும் இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்....?

 மனித ஆற்றல் போதவில்லை என்று அர்த்தம் பெரிய பாதிப்பு...300 படங்கள் வரை புயல் பாதித்த படங்கள் எனக்கு எனது நண்பர்கள் அனுப்பி வைத்து இருக்கின்றார்கள். எங்கள் வீட்டில் சேதம் அதிகம் இல்லை...கைபம்பு இருக்கின்றது.. அதனால் பிரச்சனை இல்லை.. மின் மோட்ரை மட்டும் நம்பி இருந்த மக்கள் அதிகம் அவதிக்குள்ளாகி இருக்கின்றார்கள். வீடுகள் சர்வநாசம்.. ஐந்து நாட்களாக மின்சாரம் இல்லாத இரவை நீங்கள் கழித்து இருந்தால்  அந்த வேதனை உங்களுக்கு தெரியும்..

நியாயமாக துணை ராணுவபடை அனுப்பி சாலை சீர்செய்வதில் கவனத்தை செலுத்தி இருக்க வேண்டும்..மின்சாரம் கொடுக்கு நிறைய மின் கம்பம் நடவேண்டும்..மின்வயர்களை இழுத்து கட்ட வேண்டும்... நிறைய மனித ஆற்றல் தேவையாக இருக்கின்றது..ஆனால் மாநில அரசு ஆயிரம் பேரை மட்டும் அனுப்பி இருக்கின்றது..
 
யானை பசிக்கு ஆயிரம் பேர் உழைப்பு சோளப்பொறிதான்..
அதனால்தான் பொதுமக்கள் இன்று நலம் விசாரிக்க சென்ற எதிர்க்கட்சி எம்எல்ஏ விஜயகாந்தை திட்டி அனுப்பி இருக்கின்றார்கள். இத்தனைக்கு புதுப்பாளையம் கடற்கரையில் இருந்து இரண்டு கிலோமீட்டரில்  இருக்கும் சிறு நகர்... அதுக்கே இந்த நிலைமை என்றால் 40 கிலோமிட்டர் சுற்றளவு கொண்ட மாவட்டத்தின் உள் கிராமங்களில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்...

நேற்று தான் கடலூர் நத்தப்பட்டு மின்பகிர்வு நிலையத்துக்கு மின்சாரம் வந்து இருக்கின்றது.. காரணம் நெய்வேலியில் இருந்து மின்சாரம் தாங்கி வரும் உயர்மின் கோபுரங்களை நேற்றுதான் சரிசெய்து இருக்கின்றார்கள்...

இதுவே சென்னையில் இப்படி ஒரு சேதம் ஏற்பட்டு இருந்தால் மாநில அரசு இப்படித்தான் மெத்தனமாக நடந்து கொள்ளுமா???மீடியாக்கள் இப்படித்தான் வாய் பொத்தி இருக்குமா??

மெயின் சாலையில் இருந்த மரங்களைதான் மட்டும்தான் சரிபடுத்தி இருக்கின்றார்கள்.. இன்னும் கிரமபுறங்களில் இன்னும் சாலைகள் சீர் செய்யபடவில்லை..

நண்பர் கடலூர் மாவட்ட மின்சாரதுறையில் வேலை பார்க்கின்றார்..

கடலூர் நகரங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மருத்துவமணைக்கும் நேற்றுதான் மின்சாரம் கொடுத்து இருக்கின்றார்கள்..

ஒரு குடம் குடி தண்ணீர் 5ரூபாய் கொடுத்து வாங்குகின்றார்கள்.. அதுக்கே போலிஸ் பாதுகாப்போடு லாரி நீர் வினியோகிக்கபடுகின்றது...
 
கடலூர் நகருக்கே இந்த நிலமை என்றால் சுற்றுப்புறத்தில் இருக்கும் 200 கிராமங்களின் நிலை????

பொங்கலுக்குள்ளாவது மின்சாரம் கடலூரின் சுற்றுப்புற கிராமத்துக்கு கிடைக்குமா? என்று நண்பரிடம் கேட்டேன்... அப்ப கிடைத்தால் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று மின்சாரத்துறை நண்பர் சொன்னார்...

 நகரத்தில் பிறந்த மக்கள்தான்  நெய்யில் பொறித்து பிறந்தவர்கள்.. கிராம புறமக்கள் ???

எதிக்கட்சி தலைவராவது நேரில் போய் பாதிக்கபட்ட மக்களை சந்தித்தார்.. இன்னும் தமிழக முதல்வர் ஜெ... கடுமையான புயல் தாக்கிய பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் ஏன் இன்னும் சந்திக்கவே இல்லை..

கடலூர் தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து 175 கிலோமீட்டரில்தான் இருக்கின்றது... அவர் தமிழகத்துக்கு முதல்வர் என்பதை யாராவது அவரிடம் சொல்லுங்கப்பா.... உங்களுக்கு புண்ணியமா போவும்...அட்லிஸ்ட்  சென்னை குப்பையை அகற்ற ஹெலிகாப்ட்டரில் சுற்றி பார்த்தழ போல கடலூர் நகரத்தின் மேல் ஹெலிகாப்டர் மேலேயாவது சுற்றியாவது பார்க்கச்சொல்லுங்கப்பு  உங்களுக்கு புண்ணியமா போவும்.....

ஐந்து நாட்களுக்கு பிறகும் மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை, அத்ததியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை, அதனால் தயவு செய்து போர்கால நடவடிக்கை என்றும் மெல்ல சீரடையும் கடலூர் என்றும் மீடியாகாரர்கள்.. சொல்லதீர்கள்..போர்கால நடவடிக்கையை அவமானபடுத்தாதீர்கள்...

வேதனையுடன்
கடலூர்காரன்...
ஜாக்கிசேகர்....






நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

12 comments:

  1. போஸ்ட் போட்டு விட்டு புதியதலைமுறை செய்திகளை பார்த்தேன்.. நாளை முதல்வர் கடலூருக்கு செல்லுகின்றார்ராம்...இதுதானா? உங்க டக்கு.....

    ReplyDelete
  2. விடுங்க பாஸ்

    இவங்க எப்பவுமே இப்படித்தான், அறிக்கைய மட்டும் நல்ல விடுவாங்க
    அப்புறம் வீட்ல பொய் படுத்து தூங்கிடுவாங்க

    இன்னுமா இவங்கள நாம நம்பிகிட்டு இருக்கோம்?

    இந்த லச்சணத்துல அணுஉலைக்கு இவங்க பாதுகாப்பு குடுப்பாங்களாம்
    இதே போர்க்கால அடிப்படையில

    வாழ்க இந்தியா
    வாழ்க இந்திய அரசாங்கம்
    சாவுங்கள் மக்கள்

    ReplyDelete
  3. unga postai avangalum padikkaraangalo! ungal aathangam nyaayamaanathu!!aanaal, arasu iyanthiram appadiththaan.

    ReplyDelete
  4. nice post.ungal family real story rani magazine vanthu ullathu intru patithean arumai.vazuthkal sir

    ReplyDelete
  5. //சோ.. போரையே நேரில் பார்த்து இல்லை...அப்பறம் இன்னா மயத்துக்குடா போர்கால நடவடிக்கை என்ற வார்த்தையை உபயோகபடுத்தறிங்க..???//
    சும்மா இதெல்லாம் வெறும் அலங்கார வார்த்தைகள்.. தளபதி.. புரட்சி தலைவர்.. புரட்சி தலைவி.. அறிஞர்.. என்பது போல.. எந்த ஒரு அர்த்தமும் இல்லை. இதை போய் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளலாமா..

    ReplyDelete
  6. நியாயமான கேள்வி... பட்டா தான் தெரியும்... அது வரைக்கும் யாரும் கவலை பட மாட்டார்கள்... அதவும் இந்த தினமலர் சரியான ஜால்ரா... ஜெயலலிதா விரைவில் இதற்கான பலனை அனுபவிப்பார்..

    ReplyDelete
  7. @Jackiesekar ஏன் என்றால் நாளை கலைஞர் கடலூர் போகிறார்... அந்த பெரியவர் காரில் செல்கிறார்...இந்த அம்மாள் ஹெலிகாப்பிட்டாரில்...

    ReplyDelete
  8. வேதனை தான்.
    உங்களது பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  9. thalaivaa porkaala adippadiyil intha post uthavumaa...!

    ReplyDelete
  10. INTHA ALATCHIYAP POKKU MANILA, MATHYA ARASUKALUKKE ENNAIKKUME MARATHU SIR. IVANUNGALAI ELLAM MLA VA SELECT PANNI PATHAVIERKURATHUKKU MUNNADI NEENGA FIRST PARALA SONNA MADHIRI , CURRENT ILLATHA, KAKOOSUKKU THANNI ILLATHA VEETULA THANGA VACHUTUTHAN PATHAVI YAERKA VUDANUM. APPA THAN IVANUNGALUKKU PAMARA MAKKALODA KASHTAM ENNANU THERIYUM.

    ReplyDelete
  11. நாம இப்படி மட்டும் தான் பொலம்ப முடியும் ..அந்த அம்மா என்ன நினைக்குதோ அத தான் செய்யும்...போர் கால நடவடிக்கை கூட வேணாங்க அட்லீஸ்ட் அங்க இருக்கற குடும்பங்களின் அத்தியாவசீய தேவையையாவது பூர்த்தி செய்கம்மா

    ReplyDelete
  12. vote kuthu kuthunnu kuthinaangya ippa anupavinga!!!! athukkuthan annaikke paadivaichan puyal vantha pothum thalaraatha mottu. konjam maathinaal puyal vantha pothum ???????????????

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner