The Devil's Double-2011 உலகசினிமா/நெதர்லேன்ட்/பெல்ஜியம்/இம்சை அரசன்....


 
 

2011ஆம் ஆண்டு 31ம் தேதி இரவு சென்னை துறைமுகத்தில் இருந்து இரண்டு அமெரிக்க  மாலுமிகள் கரை இறங்குகின்றார்கள்...


சென்னையில் விடியப் போகும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உற்சாக பானம் அருந்துகின்றார்கள்... நம் சென்னை பெண்களை பார்க்கின்றார்கள்..

கிறக்கம் அதிகமாகின்றது.. நம் பெண்களை கை பிடித்து இழுக்கின்றார்கள்..வேடிக்கை பார்ப்பவர்கள் பொறுத்து போகின்றார்கள்.. அடுத்து ரோட்டில் போகும் பெண்களை இழுத்து அனைத்து முத்தம் கொடுக்க முயற்சி செய்ய, பொதுமக்கள்  செக்க மாத்து கொடுத்து மட்டும் இல்லாமல், அவர்கள் மண்டையை உடைத்து, அவர்களது ரத்தங்களை முகத்தில் வழிய விட்டு ,போலிஸ் ஸ்டேஷனில் நம் மக்கள் அவர்களை ஒப்படைத்தார்கள்..

உங்கள் அப்பா கோடிஸ்வரர்.. ஒரு பேச்சுக்கு உங்க அப்பா அம்பானின்னு வச்சிக்கோங்க.. நீங்க ஒரு பார்ட்டிக்கு போறிங்க... பொண்ணுங்களை எல்லாம் பார்க்கறிங்க ,ஒரு பொண்ணு அழகா இருக்கா .... என்ன செய்விங்க?? அந்த பொண்ணை எப்படியாவது கரேக்ட் பண்ண முயற்சி செய்வேன்....ரைட்...
 
சரியான போதையில இருக்கிங்க.. இதுவே உங்க அப்பா சர்வ அதிகாரமுள்ள மத்திய மந்திரியா இருக்காரு... ஒரு அழகான பொண்ணை பார்ட்டியில் பார்க்கறிங்க..? அப்ப என்ன பண்ணுவிங்க?? சார் எப்படியாவது அந்த பொண்ணை அடைய நான் முயற்சி செய்வேன்.... எதுவந்தாலும் பரவாயில்லைன்னு தூக்கிடுவேன்.. சோ.... அதிகாரம் அதிகமாக அதிகமாக என்னவேனா பண்ணுவிங்க? அப்படித்தானே???

சரிங்க உங்க அப்பா ஒரு நாட்டோட அதிபர் மற்றும் சர்வாதிகாரி... அவர் வச்சதுதான் சட்டம்.. அவரோட மகன் நீங்க...ஒரு பார்ட்டிக்கு போறிங்க...நிறைய பொண்ணுங்க இருக்காங்க.. அப்ப என்ன  செய்விங்க?? சார்...அப்படி ஒரு அதிகாரம் இருந்தா நினைச்ச பொண்ணை தூக்குவேன்... 

ரோட்டுல ஒரு  அழகான பெண்ணையும் விட்டு வைக்க மாட்டேன்....எவனுமே எதிர்த்து பேச மாட்டான்...ஐ ஜாலி என்று சிலர் நினைக்கலாம்.  ஒரு சிலர் எவ்வளவு அதிகாரம் இருந்தாலும் என் சொந்த நாட்டு மக்களுக்கு எந்த  பிரச்சனையும் செய்ய மாட்டேன் என்று  நினைக்கலாம்... மனித மனங்கள் விசித்திரமானது..

 ஒரு  நாட்டோட அதிபரின் மகன் ஒரு பாட்டிக்கு போறான்..அவன் ஒரு சைக்கோ... பார்ட்டியில் 100க்கு மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களும் இருக்கின்றார்கள்...அதிபரின் மகன் என்ன நினைத்தானோ தெரியவில்லை...எல்லோரும் உடையை அவுத்து போட்டு விட்டு ஆடுங்கடான்னு சொல்லறான்...  பார்டியில் இருக்கும் ஆண் பெண் உட்பட எல்லோரும் அவுத்து போட்டு ஆடுகின்றார்கள். காரணம் உயிர் பயம்... இப்படி எல்லாம்  நடக்குமா-? 

நடந்து இருப்பதாக இந்த படம் சொல்ல வருகின்றது... எங்கே தெரியுமா? ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சிகாலத்தில்... அவர் மகள் உதய் சதாம் செஞ்ச லீலைகள்தான் இந்த படம்.

================
The Devil's Double-2011 படத்தின் ஒன்லைன்...
 சர்வ அதிகாரம் படைச்ச ஒரு  நாட்டின் அதிபரோட பையன் சைக்கோவா இருந்தா என்னவாகும்..
==========
The Devil's Double-2011 படத்தின் கதை என்ன?
லத்திப்...(Dominic Cooper) ஈராக் படை வீரன்..குவைத் ஈராக் போரின் போது போரில் ஈடுபட்டவன்..ஈராக் அதிபர் சதாம் உசேன் பையன் உதய் சாதாமோடு  ஒன்றாக லத்திப் படித்தவன்... 

இரண்டு பேருமே உருவ ஒற்றுமையில்  அப்படியே இருப்பார்கள்.. அதுதான் லத்திப்புக்கு வினையாக  போய் விடுகின்றது..உதய் சதாம் ஒரு பிளேபாய்.. அதிபர் சதாம் பையன் என்பதாலும் அதிகாரம் அதிகம் இருப்பதாலும், எந்த அநியாயத்தையும் செய்ய துணிந்தவன்..கொலைக்கூட செய்ய   யோசிக்கமாட்டான்..

அவன் தன்னை போல லத்திப்பை மாற்றி தான் போகும் இடங்களுக்கு பாதுகாப்பு காரணத்துக்காக அவனை அனுப்புவதே உதய் சதாமின் திட்டம்...அதற்கு லத்திப் ஒப்புக்கொள்ளவில்லை... சும்மா விடுவானா அவன்..அதன் பிறகு எப்படி எல்லாம் லத்திப் எப்படி எல்லாம் பந்தாடபடுகின்றான் என்பதே மீதிக்கதை...

==============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

இந்த படம் உண்மை சம்வங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது..
பாதுகாப்பு காரணத்துக்காக உலக தலைவர்கள்.. அவர்களை போல ஒரு டூப் ஆளை ரெடி செய்து கொள்வதுதான் இந்த படத்தின் ஒன்லைன்.. ஆனால் நாட்டுக்காக போராடிய படைவீரன்.. ஒரு சைக்கோவுக்காக அவன் போல மாறுவதை எதிர்ப்பதும் அதற்க்காக அவன் படும் இன்னல்களும்தான் கதை..

ஈராக் இண்டீரியர் மற்றும் சதாம் உசேன் வீடு அலுவலகம் என எல்லாவற்றையும் மிக நேர்த்தியாக படமாக்கி இருக்கின்றார்கள்.
சதாம் உசேன் வரும் காட்சிகளில் சின்ன ஹைப் கொடுக்கத்தான் செய்கின்றார்கள்.. அதே பல சதாம் போல டூப் இருப்பது போல காட்டும் காட்சியும் இரண்டு பேரும் ஒரே மேனாரிசத்தை செய்வது திடுக் ரகம்.

சதாம் ரோடு போட்டார்.. கல்வி கொடுத்தார், சொந்த வீடு கொடுத்தார்..ஈராக்கை உலகஅளவில் தலைநிமிர செய்தவர்.. அவரையும் அவர் குடும்பத்தையும் எதிர்த்து  ஒரு வார்த்தை பேசக்கூடாது என்பதுதான் எழுத படாத சட்டமாக ஈராக்கில் அவர் ஆட்சி காலத்தில் இருந்தது என்பதாக இந்த படத்தில் சொல்லுகின்றார்கள்...

சைக்கோ கேரக்டர் மற்றும் படைவீரன் என இரண்டு கேரக்டர்களிலும் Dominic Cooper நடித்து இருக்கின்றார்....நல்ல நடிப்பையும் இரண்டு கேரக்டர்களுக்கான வேறுபாட்டையும் சின்ன சின்ன மேனாரிசங்கள் மூலம் செய்து அசத்துகின்றார்..

லத்திப் உதய் போல இருப்பதால் அவனுக்கு முகத்தில் ஆபரேஷன் எல்லாம் செய்து முகத்தை சற்றே மாற்றி அமைப்பதும்..இரண்டு பேரும் குளித்துக்கொண்டு இருக்கும் போது , லத்திப்பின் பெரிய சமாச்சாரத்தை பார்த்து விட்டு இதையும் ஆப்ரேஷன் செய்து சின்னதாக ஆக்க வேண்டும்.. காரணம் எனது காக் ரொம்ப சின்னது என்று இந்த ஊரில் இருக்கும் பல பெண்களுக்கும் தெரியும் என்ற காட்சியில் லத்திப்புக்கு மட்டும் திக் அல்ல....படம் பார்க்கும் நமக்கும்தான்...

ரோட்டில் பள்ளிக்கு போகும் பெண் பிள்ளைகளை கூட விட்டுவைக்காமல் பாலியல் பலாத்காரம் செய்வதும் அந்த பள்ளி பெண்ணின் அப்பனிடம், உன் பெண் தப்பானவள் என்று சொல்லி அந்த தகப்பனை கதறவிடுவது கொடுமை...


திருமணத்துக்கு போய் கல்யாண பெண்ணையே உடலுறவு கொண்டு அவள் தற்கொலை செய்துக்கொள்ளவைப்பது என உதய் சதாம் உசேனின் அராஜகம் அதிகம்.

பார்ட்டியில் எல்லோரும் அவுத்து போட்டு ஆடவேண்டும் என்று சொன்னதும் எல்லோரும் அவுத்து போட்டு ஆடும் காட்சி..சைக்கோவின் உச்சம்..

லத்திப் என்பவரது உண்மைக்கதைதான் இந்த படம்.. அவர் எழுதிய டெவில்ஸ் டபுள் என்ற புத்தகமே இந்த படம் திரைப்படமாகி இருக்கின்றது...இவர் ஒரு பிளாக்கரும் கூட... என்பது கூடுதல் தகவல்.... Sundance Film Festival இந்த படம் திரையிடப்பட்டது..

================
படத்தின் டிரைலர்..

==========
படக்குழுவினர் விபரம்
 Directed by     Lee Tamahori
Produced by     Paul Breuls
Michael John Fedun
Emjay Rechsteiner
Catherine Vandeleene
Screenplay by     Michael Thomas
Based on     The Devil's Double by
Latif Yahia
Starring     Dominic Cooper
Philip Quast
Ludivine Sagnier
Music by     Christian Henson
Cinematography     Sam McCurdy
Editing by     Luis Carballar
Studio     Corsan
Distributed by     Lionsgate
Herrick Entertainment
Release date(s)     January 22, 2011 (Sundance)
July 29, 2011 (US: Limited)
Running time     108 minutes
Country     Belgium
Netherlands
Language     English
Budget     $19.1 million[1]
Box office     $4,807,493
==========
பைனல்கிக்..
இந்த படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்.. ஒருவனது வாழ்வின் உண்மை சம்பவம் இந்த படம்.. படம் பரபரப்பாக செல்லத்தக்கவகையில் இயக்கி இருப்பது இந்த படத்தின் கூடுதல் சிறப்பு...இப்படி ஒருத்தன் கையில நாம சிக்கினா என்னவாகும் என்று படம் பார்த்து முடிக்கும் போது சும்மானாச்சுக்கும் நினைச்சி பார்ப்பிங்க பாருங்க.. அதுதான் இந்த படத்தின் வெற்றி...


இந்த படம் சென்னை பாரிசில் உள்ள மூவிஸ் நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது..


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

7 comments:

  1. வழக்கம்போல அருமையான விமர்சனம்..
    நன்றி.

    ReplyDelete
  2. ரசித்ததை அழகாகப் பகிர்ந்து கொள்வதில் உம்மை அடிச்சுக்க ஆள் கிடையாது சேகர்! பாத்துட வேண்டியதுதான்!

    ReplyDelete
  3. ரொம்ப நாளாச்சு படத்தை டவுன்லோட் பண்ணி. இப்போ பார்க்கணும்னு இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. நாளைக்குள் பார்க்க முயற்சிக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  4. intha maathiri namma oorilayum nadanthiche ! !

    ReplyDelete
  5. Movie download Link

    http://www.mediafire.com/?dgw3n8h0z9hte3t


    http://www.mediafire.com/?01er79z92h5sw9z


    http://www.mediafire.com/?4ooaqmt7u511uhd

    ::Password:: www.mediafiremonster.com

    ReplyDelete
  6. domnic cooper does a amazing job of potraying both the charcter

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner