சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 04/01/2012

பதிவர்கள்.. வாசகநண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 2012 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்..
 
கடலூரை தானே புயல் புரட்டி போட்டு விட்டது.. வழக்கமாக மீனவகிராமங்கள் பாதிக்கபடும் இந்த முறை விவசாயிகள் கடுமையாக பாதிக்கபட்டு இருக்கின்றார்கள்.. அவர்கள் தலை நிமர ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகும்...
=========

புயல் கடந்து ஆறாவது நாளான இன்று தமிழக முதல்வர் வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று பார்வையிட செல்லுகின்றார்..  இரண்டு நாள் முன்பே புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட போவதாக கலைஞர் அறிவித்தார்.. நேற்று காலை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் பொதுமக்களை சந்தித்து திட்டு வாங்கி கொண்டு திரும்பி இருக்கின்றார்...  எல்லோரும் போய் விட்டார்கள்.. நாம் போகவில்லை என்றால் நன்றாக இருக்காது என்பதால் இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிடுகின்றார்.. 80 வயதை கடந்த பெரியவர் கலைஞர் காரில் போய் பார்வையிடுகின்றார்...முதல்வர் ஹெலிக்காப்டரில் பயணிக்கின்றார்... டாப் ஆங்கிளில் பார்த்தால் தான் புயல் சேதங்களை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க முடியும்....
மக்கள் பிரச்சனை என்ன என்பதை நேரில் கேட்க முடியாது....சார் அம்மா நிவாரண உதவி மக்களுக்கு வழங்கறாங்க அப்ப கேட்டுப்பாங்க... அது கமண்டோ  படை பாதுகாப்புல இருக்கற அம்மாகிட்ட பிரியா சேதவிபரங்களை பிரச்சனைகளையும்  சொல்லிவிட முடியுமா?? என்ன?? நம்பிக்கையே வாழ்க்கை.
===============
நேற்று இரவு அமெரிக்காவில் இருக்கும்  நண்பரிடம் பேசும் போது அமெரிக்காவே ஆனாலும் புயல் அடித்தா கரண்ட் கிடைக்க ஆறு நாளைக்கு மேல ஆகும்... ஆனா தமிழ்நாட்டுல இதை பெரிசா பேசறாங்க என்று கதை போல சொன்னார்..ஆனால் குடிநீர், மற்றும் உணவை அமெரிக்காவின் அரசு நிர்வாகம் கொடுத்து விடும்..  அமெரிக்கவில் யாராவது எங்களுக்கு அத்தியாவசிய பொருள் கிடைக்கவில்லை என்று  சாலை மறியல் செய்து இருக்கின்றார்களா? அல்லது நிவாரணம் கொடுக்க வந்த அரசியல் வாதிகளை ஒட ஒட விரட்டியதை நண்பர் கேள்விபட்டு இருக்க வாய்ப்பில்லை....


இப்போதைக்கு  எனது பேவரிட் பாடல்.....




===============
கலைஞர் ஆட்சியில்  சேதவிபரங்கள பார்வையிட ஸ்டாலின்  சென்று வருவார்...அவர் துணை முதல்வரும் கூட..ஆனால்  அதிமுகவில் அடுத்த கட்ட தலைவர் என்பவர் யார் இருக்கின்றார்கள்.. அதனால் ஜெதான் பாதிக்கபட்ட மக்களை சந்திக்க வேண்டும்...மக்களால் தெர்ர்ந்து எடுக்கபட்ட முதல்வர் துயரத்தின் போது ஆறுதல் சொல்ல செல்லவேண்டும்..ஆறு நாளைக்கு பிறகு இப்போதாவது செல்லுகின்றரே அம்மாவுக்கு நன்றி.. வேற என்ன  செய்ய??
===========
எனக்கு சிம்புவை பிடிக்கவே பிடிக்காது.. ஆனால் விடிவி வந்த பிறகு நிறைய மாறிவிட்டேன்...சின்ன பையனாக அதிகபிரசங்கிதனமாக நடித்து  பார்த்து பழகிய முகம்.. விடிவியில் சின்ன மென்லினஸ் அந்த பையனிடம் வந்து ஒட்டிக்கொண்டது... கொலவெறிக்கு இணையான வெற்றியை இந்த பாடலுக்கு கிடைக்குமா? என்பது சந்தேகமாக இருந்தாலும்...இந்த பாடலில் இருக்கும் சிம்பிவின் மேன்லிநஸ் சான்சே இல்லாத ரகம்...  பார்த்து ரசியுங்கள்..

 
 =========

மிக்சர்...
சென்னை ரோடுகளில்  பரதநாட்டியம் ஆடுவது போல இரு சக்கர வாகனத்தை ஒட்டிக்கொண்டு தினமும் பயணித்துக்கொண்டு இருக்கவேண்டியதாக இருக்கின்றது...சாலைகள்  சரி செய்யலாம் என்று அரசு யோசிப்பதற்குள் தானே புயல் வந்து திரும்ப சாலைகளை மேலும் மோசமாக ஆக்கிவிட்டது..பொங்கலுக்கு பிறகு பாருங்கள்.. சாலைகள் உலகதரத்துக்கு மாற்றிவிடுவார்கள்..போன ஆட்சி குடும்ப ஆட்சி... இது மக்களுக்ககான ஆட்சி...
=========
ஜெ முதன் முதலில் அரசியலுக்கு வர அச்சாரம் போட்ட மண் எங்கள் ஊர் கடலூர்தான்.. அனாலும் ஜெ ஆட்சிக்கு வரும் போது எல்லாம் கடலூர் மாவட்டம் இதுவரை சந்திக்காத பல இன்னல்களை சந்தித்து வருகின்றது..சுனாமி,மற்றும் தானே புயல் என்று கடலூரை மக்களை கதி கலங்க வைக்கின்றது...வாழ்வில் நிகழாத பல இயற்கை பேரழிவுகளை கடலுர் மக்கள் சந்தித்து வருகின்றார்கள்... இதுக்கு முதல்வர் ஏதாவது யாகம் செய்தால் நலம்..
===================
முல்லைபெரியாறு போராட்டங்கள் தமிழகம் முழுவதும் கட்சி பேதமின்றி பரவலாக  தொடர் போராட்டங்களாக நடந்து வருவது மிக்க மகிழ்ச்சி இருப்பினும் இந்த கட்டுரையை நீங்கள் வாசிப்பது நலம்....கட்டுரை வாசிக்கஇங்கே கிளிக்கவும்...
==============
போனவருடம் காத்ரீனா கைப்பின் ஷீலாக்கி ஜிவானி சான்சே இல்லாத பாடல்... இந்த முறை அம்மினியின் இந்த பாடல் இந்திய அளவில் கவனத்தை கவரும் என்று நம்புகின்றேன்..


========
ஒரு செய்தி பகிர்வு..

நேசம் - புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பு
வணக்கம் நண்பர்களே

பொன்வேண்டேன்,
பொருள் வேண்டேன்
மண் வேண்டேன்
மனை வேண்டேன்
நோயற்ற வாழ்வே நான் வாழ வேண்டும்
என்பதே அனைவரின் பிராத்தனையாக இருக்கும்



அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது, அதனிலும் கூன் குருடும் உடல் குறைபாடுகளும் இல்லாமல் பிறத்தல், அதையும் விட இன்று வாழ்நாள் முழுதும் எந்த வித உடல் பிணிகளும் இன்றி நல்நெடும்வாழ்வு வாழ்வதைவிட பெரிய செல்வம் ஏதும் இல்லை. எண்ணற்ற நோய்கள் வாழ்க்கை முறைகளினால் வந்தாலும் பெரும்பாலும் அவைகள் லைஃப்ஸ்டைல் எனப்படும் வாழ்வுமுறை நோய்களே.

இவ்வகை நோய்களின் ஏன் எதற்கு எப்படி என்றே அறியும் முன் உடலை அரித்து விடும் நோய்களில் ஒன்று கேன்சர் எனப்படும் புற்றுநோய். இன்று உலகம் எங்கும் இதனால் உயிர் விடுவோர் எண்ணிக்கை மற்ற அனைத்தையும் விட அதிகம். புற்றுநோய் வரக்காரணம் எவ்வளவோ இருக்கலாம், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், ஆனால் வந்த பின் அதனுடைய பாதிப்பின் அளவையும் நோயின் தீவிரத்தைப்பொறுத்தும் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளது.

எல்லா நோயைப்போலவும் இதனையும் நாம் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் நூறு சதவீத குணப்படுத்தலாம். எப்படி கண்டறிவது என்பதே விழிப்புணர்வு.

இந்த புது வருடத்தில் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு நேசம், முழுக்க முழுக்க புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் அதுகுறித்த நிகழ்வுகளுமாக இணையத்தில் உங்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கிறோம்.


நேசம் - அமைப்பில் இருந்து முதல் விழிப்புணர்வு அறிவிப்பு ஜனவரி முதல் அன்று வெளிவரும். புற்றுநோயை கண்டறிந்து களைவோம், போராடி வெல்வோம்

 ====================
 இதையும் படிச்சி மனசுல வச்சிக்கோங்க..........





நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை,கட்டுரை,குறும்பட போட்டிகள்


புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம் தன் பணியை துவங்குகிறது.  மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் புற்றுநோய் வரலாம். இதை கண்டறிவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்றாலும் சில சோதனை அல்லது அறிகுறிகள் மூலம் ஸ்க்ரீனிங் எனப்படும் புற்றுநோய்கண்டறிதல் சோதனையை செய்வது நல்லது. 40 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை செய்வது போல் அனைவரும் ஆரம்பகட்ட அடிப்படை புற்றுநோய் பரிசோதனையை செய்வது நல்லது. இந்த விழிப்புணர்வுதான் கரு.


கதை:சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கதை போட்டி.
முதல் பரிசு ரூபாய் 5.000
இரண்டாம் பரிசு ரூபாய் 3,000
மூன்றாம் பரிசு ரூபாய் 2,000

பரிசுத்தொகை தவிர சிறந்த முதல் பரிசு பெறும் கதை நேசம் சார்பில் குறும்படமாக எடுக்கப்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு கதையை அமைக்கவும்.

1.கதை எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும், மிக இயல்பாக இருக்க வேண்டும்.

2. மிகச்சிறந்த கதை குறும்படமாக எடுக்கப்படும், அந்த கதைக்கு உரியவருடைய திறமையை பொறுத்து அந்த படத்தில் அவர் விரும்பினால் பங்கு பெறலாம்.

3. தேர்ந்தெடுக்கப்படும் முதல் கதையின் குறும்பட உரிமை நேசம் அமைப்பை சேரும்.

4.நேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.


கட்டுரை :  சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கட்டுரை போட்டி

முதல் பரிசு ரூபாய் 5000
இரண்டாம் பரிசு ரூபாய் 3000
மூன்றாம் பரிசு ரூபாய் 2000

பரிசுத்தொகை தவிர மிகச்சிறந்த கட்டுரை நேசம் சார்பில் ஆவணப்படமாக தயாரிக்கப்படும்.

விதிமுறைகள்:

கட்டுரை, மிக எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில், அதனுடன் தொடர்புடைய சுட்டிகள் அல்லது புத்தங்களின் விவரங்களுடன் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முதல் கட்டுரையின் ஆவணப்பட உரிமை நேசம் அமைப்பை சார்ந்தது.

நேசம் அமைப்பின் முடிவே இறுதியானது.

சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படம் போட்டி

முதல் பரிசு ரூபாய் 10,000
இரண்டாம் பரிசு ரூபாய் 7,500
மூன்றாம் பரிசு ரூபாய் 5,000

விதிமுறைகள்

குறும்படம் 7 முதல் 10 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.

எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும் இருக்க வேண்டும்.

பரிசு பெறும் குறும்படம் தேவைப்படும் பொழுது எங்கும் எப்பொழுது வேண்டுமானாலும் திரையிடும் முழு உரிமை நேசம் அமைப்பை சாரும்.

நேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.



பொதுவானவை

1.கதைகள், கட்டுரைகள், குறும்படம் குறித்த உங்கள் படைப்புகளை சரியான தலைப்புகளின் கீழ் அனுப்பவும்.  யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம். மாணவர்கள் எனின் அவர்களுக்கு சிறப்பு பரிசும் உண்டு.


2. இந்த போட்டிகள் அனைத்தும் நேசம்அமைப்பு யுடான்ஸ் (http://udanz.com/ )  இணையதளத்துடன் சேர்ந்து நடத்துகிறது.

3.உங்கள் படைப்புகளை ஜனவரி 31க்குள் அனுப்பி வைக்கவும்.

4.போட்டி முடிவுகள் பிஃப்ரவரி15 அல்லது 20 அன்று வெளியிடப்படும்.

5.அனைத்து படைப்புகளையும் nesamgroup@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

6.அத்துடன் யுடான்ஸ் இணையதளத்தில் நேசம் போட்டிகள் என்னும் வகையின் கீழ் உங்கள் படைப்புகளை இணைக்க வேண்டும்.

7.பதிவர்களின் வலைத்தளங்களின் யுடான்ஸ் ஓட்டு பட்டனை இணைக்க வேண்டும்.

8. படைப்புகள் அனைத்தும் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு, இணைய இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும் அனுப்பவேண்டும்

9. உங்கள் படைப்புகளை உங்கள் தளங்களில் வெளியிடும் போது அதில் நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை என்று குறிப்பிட வேண்டும்.

10. குறும்படங்களை தளங்களில் வெளியிடக்கூடாது.

சிறந்த முதல் பத்து சிறுகதைகளும் கட்டுரைகளும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படும் குறும்படம் பள்ளி, கல்வி கூடங்களில், மருத்துவமனைமனைகள் போன்றவற்றிலும் மற்ற பொது நிகழ்வுகளிலும் முடிந்தவரை திரையிடப்படும்

இது ஒரு நூறு சதவித விழிப்புணர்வு நோக்கத்தில் ஏற்படுத்த பட்ட அமைப்பு, இதில் தன்னார்வ செயல்உறுப்பினர்கள் சேரலாம்.  வெறும் உறுப்பினராக இல்லாமல் நிஜமாகவே ஏதேனும் செய்ய விரும்புவர்கள்  வரவேற்கபப்டுகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளின் தொகுப்புகளில் பங்கேற்க விரும்புவர்கள் nesamgroup@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.


ஒரு சிறிய முயற்சியின் பின் துணை நிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் நேசம் கலந்த நன்றிகள்.
 

==============
பிலாசபி பாண்டி...
 சக்சஸ் பத்தி நிறைய பேர் பேசிட்டாங்க.. இருந்தாலும் திரும்பவும் சொல்லறேன்..சக்சஸ் உங்களுக்கு கிடைக்கலான்னா.. எல்லாரையும் போல நீங்களும் அரைச்ச மாவையே அரைக்காம,  டிபரண்ட்டா செய்து பாருங்க .. நிச்சயம் சக்சஸ் உங்களை தேடி வரும்..

=========


பானா காத்தாடியில் சாதாரண சம்ந்தா இப்போ டாப் சமந்தா....
=================
நான்வெஜ் 18+

ஸ்கூல்பையன் ஒருத்தன் பள்ளியோட பாத்ரூம்ல மாஸ்டர்பேட் வேர்க்க விறுவிறுக்க செய்து கொண்டு இருந்தான்...சட்டுன்னு டீச்சர் கதவை திறந்துட்டாங்க.. பையன் வேர்வையோடும் பதட்டத்தோடும் சொன்னான்.. டீச்சர் உங்களுக்கு 100ஆயுசு....

==========


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

9 comments:

  1. // ஸ்கூல்பையன் ஒருத்தன் பள்ளியோட பாத்ரூம்ல மாஸ்டர்பேட் வேர்க்க விறுவிறுக்க செய்து கொண்டு இருந்தான்...சட்டுன்னு டீச்சர் கதவை திறந்துட்டாங்க.. பையன் வேர்வையோடும் பதட்டத்தோடும் சொன்னான்.. டீச்சர் உங்களுக்கு 100ஆயுசு... //

    ஹா ஹா ... சூப்பர் காமெடி ...

    காத்ரீனாவின் வீடியோவும் அருமையாக உள்ளது. ஹ்ம்ம்ம் ...

    ReplyDelete
  2. ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கு..அருமை...

    ReplyDelete
  3. // நம்பிக்கையே வாழ்க்கை //

    நேற்றுதான் என் நண்பர்களை தொடர்பு கொள்ள முடிந்தது. எல்லாமே போச்சுணேன்னு சொன்னப்ப எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியல!

    காப்பாத்தாத கடவுள திட்டிட்டு, இதுபோல மறுபடியும் நடக்காம பாத்துக்கன்னு அதே கடவுள்கிட்ட‌ வேண்டிட்டு உழைக்க வேண்டியதுதான்!

    நல்லதே நடக்கட்டும்...

    ReplyDelete
  4. முன்னொரு காலத்தில் ஜாக்கி என்று ஒருவர் கட்சி சார்பில்லாமல் எழுதிக்கொண்டிருந்தார். ப்ளாக் வந்தமா படிச்சமா ன்னு போவோம். இப்ப எல்லாம் வந்தா ஒன்னரை பக்கத்துக்கு அதிமுக வை குறை சொல்லி ஒரு பதிவு. ஏண்டா வரோம்ன்னு பீல் பண்ண வைக்கிறீங்க...

    கடைசி வருகை..
    Good Bye.

    பின் குறிப்பு:

    எப்படி இருந்தாலும் என்னோட கருத்து நீங்க கால் தூசுக்கு சமம் ன்னு சொல்லுவீங்க. இருந்தாலும் கொஞ்ச காலம் ரசிச்சு படிச்சேன் இல்லையா அதுக்கு நன்றி உணர்ச்சி தான் சொல்லிட்டு போறேன்...

    ReplyDelete
  5. //ஆனால் குடிநீர், மற்றும் உணவை அமெரிக்காவின் அரசு நிர்வாகம் கொடுத்து விடும்.. அமெரிக்கவில் யாராவது எங்களுக்கு அத்தியாவசிய பொருள் கிடைக்கவில்லை என்று சாலை மறியல் செய்து இருக்கின்றார்களா?//
    உண்மை. நிவாரணம் கிடைக்கவில்லை என்று அமெரிக்காவில் யாரும் சாலை மறியல் செய்வதில்லை. ஏனென்றால், அரசு நிவாரணம் கொடுக்கவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. அரசுக்கு அப்படி கொடுக்கும் வழக்கமும் இல்லை. பெரும்பாலும் சமூக சேவகர்களே உணவு கொடுப்பார்கள். அரசு தண்ணீர் மட்டுமே கொடுக்கும். எந்த சந்தர்ப்பத்திலும், அரசு நஷ்ட ஈடு / நிவாரண பண உதவி கொடுப்பதே இல்லை.

    கொடுக்காதது தவறு என்று நினைக்கிறேன். இந்த விதத்தில் நாம் எவ்வளவோ பெட்டெர் என்றே தோன்றுகிறது

    ReplyDelete
  6. Good post. Meaningful entry on cancer. Nice clips. I liked the Vettai one too.

    ReplyDelete
  7. கேப்டன் அங்கே போய் திட்டு வாங்கிட்டு வந்தார் - அவர் மாலை, மரியாதை, பேனர் எதுவும் எதிர்பார்க்கல.
    முதிய முன்னாள் முதல்வர் அங்கே போ..... - அவரும் டிட்டோ.

    ஆனால் மாலை, மரியாதை, பேனர், ஒலிபெருக்கி இல்லாத மீட்டிங்குக்கு அம்மா போக பிரியப்படவில்லை. அதான் கடலூருக்கு ஆகாய விசிட்.

    எலவு வீட்டில் கூட மரியாதையும், பேனரும், ஒலிபெருக்கியும், மாலைமரியாதையும் எதிர்பார்க்கும் அரசியல்வாதிகள் - தட்டிக்கேட்க ஜாக்கிசேகர் மட்டும்தான் இங்கே இருக்கார். ஜால்ராபோட தினமலர் இருக்கு.

    ReplyDelete
  8. //அமெரிக்கவில் யாராவது எங்களுக்கு அத்தியாவசிய பொருள் கிடைக்கவில்லை என்று சாலை மறியல் செய்து இருக்கின்றார்களா?//

    இது தவறான கருத்து, கத்திரினா புயலில் பாதிப்படைந்த பலருக்கு சாப்பாடு, தங்கும் இடம் போன்ற நிவாரணங்கள் கிடைக்காமல் இருந்ந்தது. குறிப்பாக நீயூ ஓர்லன்ஸ் பகுதியில்( கருப்பின மற்றும் ஏழை மக்கள் அதிகம் வாழும் பகுதி)...பல்வேறு அமைப்புகள் போராடித்தான் நிவாரணங்களைப் பெற்றுத் தந்தனர். Hurricane Season என்ற திரைப்படம் புயலிற்கு பிறகு நீயூ ஓர்லன்ஸ் பகுதியில் ஏற்ப்பட்ட பாதிப்பை பற்றியது - அருண் சொக்கன்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner