பொங்கல் வைக்க அம்மா குயவர் வீட்டுக்கு பானை வாங்க செல்லும் போது, பானை மட்டும் வாங்காமல் கீரை கடையும் சட்டி, அடுப்பு ,சட்டியை மூட மண் தட்டு என்று பல மண்ணால் செய்யப்பட்ட பொருட்களை நானும் அம்மாவும் வாங்கி வருவோம்.. அதில் முக்கியமானது மரத்தூள் அடுப்பு..
அது என்ன மரத்தூள் அடுப்பு... மரம் அறுக்கு இழைப்புளி பட்டறைக்கு போய் தூளாக கிடக்கும் மரத்தூளை ஒரு பெரிய சாக்கு மூட்டையில் கட்டி வாங்கி வருவோம்..
மரத்தூள் அடுப்பில் அப்படியே.. வரட்டி மற்றும் சுள்ளிகளை வைத்து எரிய வைக்கலாம்..ஆனால் மரத்தூள் போட்டு கிடித்து எரிய விட்டால் நின்று எரியும்...நிறைய சமையல் வேலைகள் செய்ய முடியும்...
அடுப்புக்கு தேவையான மரத்தூள் முறத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்...
அதன் மேல் தண்ணீர் லைட்டாக தெளிக்க வேண்டும்... மரத்தூள் அடுப்பில் நடுவில் பீர்பாட்டிலை அல்லது கிசான் பாட்டிலை நடுவில் வைத்து விட்டு, அடுப்பின் வாய்புறத்துக்கும் நடுவில் இருக்கும் பீர் பாட்டிலுக்கும் ஒரு சின்ன பாட்டில் வைத்து தண்ணீர் தெளித்து லைட்டாக ஈரமாக பிசைந்து வைத்த, மரத்தூளை எடுத்து பாட்டிலை சுற்றி மரத்தூளை கொட்டி கீரை கடையும் மத்தின் பின்புறத்தால் நன்றாக கிடிக்க வேண்டும்..
கிடிக்க கிடிக்க நன்றாக இருகும்...இருகிய பின் வாய்புறம் இருக்கும் பாட்டிலையும் பீர் பாட்டிலையும்.. அலுங்காமல் குலுங்காமல், மரத்தூளால் அடுப்பில் கடடிய இன்ஸ்டென்ட் கட்டிடத்தை இடிக்காமல் பாட்டிலை எடுக்க வேண்டும்...
சவுக்கு விறகை இரண்டாக அதையே நான்காக எட்டாக பிளந்து சின்ன சுள்ளி போல் ஆக்கி கொள்ள வேண்டும்..
சின்ன வரட்டியில் மரண்ணெய்(மண்ணெண்னையை இப்படித்தான் எங்கள் ஊரில் அழைப்போம்) ஊற்றி தீப்பற்ற வைத்தால் நின்று எரியும்...விறகும் அதிகம் செலவாகாது..
சாப்பாடு,கொழம்பு,பொறியல் என்று எல்லா வேலையையும் அம்மா ஜில்லாக்கத்திரியாக மரத்தூள் அடுப்பில் முடித்து விடுவாள்..
எப்படி கேஸ் அடுப்பில் தீ பாத்திரத்தின் நடுப்பகுதியில் தீ விழுகின்றதோ? அது போல மரத்தூள் அடுப்பில் பாத்திரத்தின் சென்டரில் விழும் அதனால் குறைந்த விறகில் நிறைய வேலைகள் செய்யலாம்.. இதில் சப்போர்ட்டிங் ஆக்டர் போல மரத்தூள் செயல்படும்...
எனக்கு மரத்தூள் அடுப்பில் பிடித்த விஷயம் என்னவென்றால் பார்த்து பார்த்து கட்டிய மினியேட்சர் செட்டை, சினிமா ஷுட்டிங்கில் வெடிவைத்து தகர்க்க படுவது போல....மரத்தூள் நன்கு எரிந்த பிறகு அந்த எரிந்த கனன்று இருக்கும் சாம்பல் பொடுக்கென்று விழுந்து விடும்...அது விழுவதை கவனிப்பது எனக்கு வேடிக்கையான விஷயம்..
பொதுவாக சமையல் வேலைகள் முடிக்கவும்... அந்த மரத்தூள் சாம்ராஜ்யம் அழியவும் நேரம் சரியாக இருக்கும்.. உடனே அம்மா சின்ன தேக்சாவில் சுடத்தண்ணி போட்டு விடுவாள்...கொஞ்சம் நெருப்பையும் வீணாவதை அவள் விரும்புவதில்லை..
சமையல் செய்யும் போது அடுப்பு பக்கத்திலே உட்கார்ந்து கொண்டே இருக்கவேண்டும்.. அடுப்பு எரிந்தால்தான் வேலை சீக்கரம் முடியும்.. ஒரு போதும் பால் காய்ச்சும் போது பொங்கி, என் அம்மா சமைத்த அடுப்பில் வழிந்ததே இல்லை..
அடுப்பை சுற்றி காய்கறி, புளிக்கரைப்பது,அஞ்சறை பெட்டி, போன்ற சின்ன சின்ன பாத்திரங்கள் என்று கைக்கெட்டு தூரத்தில் எல்லாம் இருக்கும்... அம்மா புளி கரைத்து, காய் கறி நறுக்கிக்கொண்டே அடுப்பை எரிய வைத்துக்கொண்டு இருப்பாள்...அடுப்பின் வெம்மையில் அம்மா வேர்வையோடு வேலை செய்து கொண்டு இருப்பாள்..
அது என்னவோ எனக்கு சமையல் செய்வது என்றால் எட்டிக்காய் கசப்பு..சில ஆண்கள் விரும்பி சமைப்பார்கள். எனக்கு சமைப்பது பிரச்சனை இல்லை .. ஆனால் அதுக்கு பிறகு பாத்திரம் கழுவி வைப்பதற்கு பதில் இருபது ரூபாய்க்கு இட்லி வாங்கி மூன்று வகை சட்னியோடு சாப்பிட்டு விடலாம் என்பது எனது எண்ணம்..
தானே புயல் அன்று மனைவி லேட்டாக எழுந்த காரணத்தால் சமைக்காமல் வேலைக்கு சென்று விட்டார்.. வெளியே மழை ... வெளியே செல்ல முடியாத சூழல்....
குக்கரில் ஒரு இன்சுக்கு அடிப்பகுதியில் தண்ணீர் வைத்து, ஒன்றரை டம்ளர் அரிசியை தண்ணீரில் கழுவி,அலசி, மூன்று டம்ளர் தண்ணீரில் அரிசியை மூழ்கடித்து குக்கரில் வெயிட் போட்டு விட்டு வந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்தேன்..
ஐந்து விசிலுக்கு பிறகு பொல பொலவென சாப்பாடு ரெடி....ஆனால் அம்மா அடுப்பை நன்றாக எரிக்க வைக்க பத்து நிமிடத்துக்கு மேல் போராடி, அடுப்பு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அதை தாஜா செய்து கொண்டே எரிய வைத்துக்கொண்டு எங்கேயும் நகராமல் குத்துக்கால் போட்டு உட்காந்து கொண்டு சாதம் தேக்சாவில் பொங்கியதும், இரண்டு சாத பருக்கை எடுத்து வெந்து விட்டதா என்று விரலால் அரியை நசுக்கி பார்த்து விட்டு, சட்டியில் சாதத்த்தின் கஞ்சியை வடிக்க வேண்டும்...
நீராவி கையில் படாமல் பார்த்துக்கொள்வதும் கஞ்சி வடியும் போது சாப்பாடு கஞ்சி சட்டியில் கவுந்து கொள்ளாமல் இருப்பது போல சாதத்தை வடிப்பதும்தான் அதன் டேலன்ட்டே..
கேஸ் அடுப்பும்,ஐந்து விசிலில் சாப்பாடு பொல பொலவென நோவாமல் நோம்பு குளிக்கும் தொழில் நுட்பம் அறியாமலேயே என் அம்மா செத்து போய் விட்டாள்..ஒரு வேளை ஐந்து விசிலில் சாப்பாடு ரெடியாகும் தொழில்நுட்பம் அவள் அறிந்து இருந்தால்...?அவளுக்கு நன்றாக தையல் தெரியும்..தமிழ்நாட்டில் பெரிய காஸ்ட்யூம் டிசைனராக வந்து இருக்கலாம்... யார் கண்டா??? பெரும்பாலும் கிராமத்து பெண்களுக்கு விறகு அடுப்பும், சமையல் மட்டுமே வாழ்க்கை என்று பழக்கி வைக்கின்றார்கள்.. பல பெற்றோர்...இனி வருங்காலங்களில் மெல்ல அந்த நிலை மாறினால் சந்தோஷமே..
எவ்வளவு தேடியும் மரத்தூள் அடுப்பு புகைபடங்கள் இணையத்தில் கிடைக்கவில்லை.. அதனால சில அடுப்பு படங்கள்.. ஒன்று ஓவியர் இளையராஜா வரைந்தம ஓவியம் என்று நினைக்கின்றேன்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.,
குறிப்பு..
மீன்சுருட்டியில் இருந்து ஜான்சி என்ற பெண் பேசினார்.. ஆண்ணா உங்க பதிவுகளை படிக்கும் போது எனது சொந்த ஊரில் என் அம்மாவோடு இருக்கும் பிலிங் எனக்கு கிடைக்கின்றது என்று போன் செய்து பாராட்டினாள்.. அப்போது அவள் அதிகம் பாராட்டியது.. கால ஓட்டத்தில் காணாமல் போனவை பற்றி பதிவைத்தான்.. அவள் நினைவுபடுத்திய காரணத்தால் இந்த பதிவு.. இனி அதிகம் காணாமல் போனது பற்றி எழுத இருக்கின்றேன்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Good one jackie :)
ReplyDeleteமரத்தூள் அடுப்பில் செய்யும் உணவுக்கு ஈடு இணையே இல்லை.... அந்த சுவை நமக்கு பின் வரும் சங்கதிகளுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே...?
ReplyDeleteஅடுப்புக்கு நடுவுல வச்சு தூள் கிடிக்க பீர் பாட்டில் தான கெடச்சது நாங்கள் சோடா பாட்டில தான் பயன் படுத்துவோம்
ReplyDeleteஅருமையான பதிவு ஜாக்கி....
ReplyDeleteதங்கள் பதிவுகள் தாய்ப்பால் போன்றவை .எந்தவித கலப்படம் இன்றி உள்ளதை உள்ளபடி எழுதும் அந்த நடை அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கை வராது.
ReplyDeleteஎங்கள் தஞ்சையில் அதனைத் "தவிட்டடுப்பு" என்பர். சிறுவயதில் அதன் கதகதப்பில் அமர்ந்து அம்மாவிடம் கதைகேட்பது எல்லாம்.......ஹும்ம்ம்ம்....கோல்டன் டேய்ஸ்...ஒரே நாஸ்டால்ஜியா!!!!!
ReplyDeleteஇதே போன்று ஒரு காலத்தில் LECO என்ற பெயரில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி உருண்டைகள் (கருப்பு உருளை கிழங்கு மாதிரி இருக்கும்) + அதற்கான அடுப்பும் கடலூரில் பிரபலம். என் அம்மா அதில் தான் சமைப்பார்கள். நினைவு வந்தது.
ReplyDeleteமரத்தூள் அடுப்பில் என் அன்னையும் சமைத்துள்ளார்கள். மரப்பொடி வாங்கிவரும் வேலை எனக்கு. அப்போதுதான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டதால் மரப்பொடி வாங்க விருப்பத்துடன் நண்பர்களுடன் செல்வோம் கும்பலாக.
ReplyDeleteதற்சமயம் ரைஸ் குக்கரில் அரிசியை களைந்து சரியான அளவு தண்ணீர் ஊற்றி ப்ளக்-ஐ சொருகி ஸ்விட்சை போட்டால் சாதமாகி வார்ம்-அப் -லேயே இருக்கும். சூடான சாதம் ரெடி.
Anna, indrum engal veetil intha aadupupum use pannukirrom.
ReplyDeleteமரத்தூள் அடுப்பில் என் அன்னையும் சமைத்துள்ளார்கள். மரப்பொடி வாங்கிவரும் வேலை எனக்கு eppothavthu ..........
ReplyDeleteen eppothum ammavai patri mattum eluthuhirihal.Appavai pudikkatha........
Enuku intha anupavam illai.... aanal nan en pakkathu veetu akka samaipathai parthuirruken.........
ReplyDeleteஅஞ்சறைப்பெட்டி, கூஜா, தூக்குவாளி, அகப்பை (தேங்காய் செரட்டையால் ஆன கரண்டி), ஓலை விசிறி, கயற்றுக்கட்டில், பதக்கம் மாதிரி வயசுப்பெண்கள் அணியும் சங்கிலி, பாட்டியின் தொங்கட்டான் காதுகள்,ஓலைப்பெட்டி, பல்லாங்குழி, பரமபத சோவி, மூங்கில்நார் கட்டில், வாழை மட்டையால் ஆன curtain ஒரு லிஸ்ட்டே இருக்கு ஜாக்கி சார்..
ReplyDeleteஅஞ்சறைப்பெட்டி, கூஜா, தூக்குவாளி, அகப்பை (தேங்காய் செரட்டையால் ஆன கரண்டி), ஓலை விசிறி, கயற்றுக்கட்டில், பதக்கம் மாதிரி வயசுப்பெண்கள் அணியும் சங்கிலி, பாட்டியின் தொங்கட்டான் காதுகள்,ஓலைப்பெட்டி, பல்லாங்குழி, பரமபத சோவி, மூங்கில்நார் கட்டில், வாழை மட்டையால் ஆன curtain ஒரு லிஸ்ட்டே இருக்கு ஜாக்கி சார்..
ReplyDelete//எவ்வளவு தேடியும் மரத்தூள் அடுப்பு புகைபடங்கள் இணையத்தில் கிடைக்கவில்லை..//
ReplyDeleteஅதானே பார்த்தேன்!அடுப்பு செய்முறை பிசிறுதேனே பார்த்தேன்.
நியாயமா இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் போடக்கூடாதுதான்.காரணம் ஜாக்கி vs கேபிள் மாதிரி
உங்கள மாதிரி சமையல் எட்டிக்காய்க்கு எதிர்ப்பக்கம் நான்.
//இதே போன்று ஒரு காலத்தில் LECO என்ற பெயரில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி உருண்டைகள் (கருப்பு உருளை கிழங்கு மாதிரி இருக்கும்)//
ReplyDeleteலிக்கோ வுக்கு கூட ஜோடி சேர்த்துறாங்களே:)
ஜாக்கி, அருமையான பதிவு. எனக்கு சிங்கம்புனரியில் வாழ்ந்த காலம் நினைவுக்கு வந்தது. பள்ளிக்காலங்களில் தினமும் மாலை மரத்தூள் அடுப்பில் மரத்தூள் போட்டு கிட்டிப்பது ஒரு மிக விருப்பமான வேலை. Thanks for reminding me a precious period of my life!
ReplyDeletepala varudangal maraththool aduppil venneer(kulikka)poduvom.markazhi maathaththil naanthaan incharge.kulurukku mikavum ithamaaka irukkum.samayalukku savukku milaar(ilai!)kosu antha areavileye irukkaathu(perum pukai).
ReplyDeleteஜாக்கி அண்ணா,
ReplyDeleteஉங்களின் எழுத்துக்கள் என்னுடைய குழந்தை பருவ எண்ணங்களை...கண் முன்னே நிறுத்திவிட்டது .....நன்றி நன்றி நன்றி ....
கால ஓட்டத்தில் காணாமல் போனவை என்ற இந்த தொடர் ஓட்டத்தை ஆரம்பித்து வைத்தவன் என்ற வகையில் மிகவும் பெருமை அடைகிறேன். நீங்கள் மட்டும் தொடர்ச்சியாக நிறைய விஷயங்களைக் கூறியிருக்கிறீர்கள்..!! இது மிகப்பெரிய ஆவணம்!
ReplyDeleteஉண்மையில் இதை ஒரு வானொலி நிகழ்ச்சியாக, திருச்சியில் செய்தேன்...!!
அதன் பாதிப்பாக பதிவெழுதி...இப்போது நீங்கள் அதற்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறீர்கள்.
நன்றி!!
http://www.surekaa.com/2008/08/blog-post_29.html இந்தப் பதிவுதான் தொடக்கம் தலைவரே!
ReplyDeleteநான் பாலிடெக்னிக் முடிக்கும்வரை அம்மாவுக்கு சைக்கிளில் மரப்பொடியும் விறகும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன். சாயங்காலம் மரப்பொடி வாங்க க்யூவில் நிற்க அடிதடியே நடக்கும். எங்கள் வீட்டில் இப்பொழுதும் விருந்தினர்கள் வந்தால் நிறைய சமைக்க வேண்டியிருக்கும்போது மரப்பொடி அடுப்புதான்.. கால ஓட்டத்தில் காணாமல் போனவையில் நீங்கள் எழுதியுள்ள அனைத்தும் என் பால்ய வயதை ஞாபகப்படுத்துகின்றன... நன்றி ஜாக்கி..
ReplyDeleteபதிவும் மரத்தூள் அடுப்பில் சமைத்த உணவு போல சுவையாகவே இருக்கிறது ஜாக்கி!
ReplyDeleteவாழ்த்துகள்!....தொடர்ந்து எழுதுங்கள்!
இப்படி ஒன்னு இருப்பது எனக்கு இப்பத் தான் தெரியவருது. (நான் பிறந்ததிலிருந்தே டெக்னாலஜி அட்வான்ஸ்)
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
கால ஓட்டத்தில் காணாம போனதுக்கு மட்டும் தனியா ஒரு புத்தகம் மாதிரி போடலாமே ஜாக்கி.. நம்ம குழந்தைகளுக்கு தேவைப்படலாம்..
ReplyDeleteGreat nostalgic article.
ReplyDeleteMy grandmother used to make these stoves and give it away to her friends.
Very nice
ReplyDelete