போனவருடம் 30ம் தேதி அதிகாலை தானே புயல் கடலூரில்கரையை கடந்தது...பெரிய பேரிழப்பு ஏற்படுத்தியதை உலகம் கண்டு கொண்டது..வழக்கம் போல உலகம் உச் கொட்டியது...
தானே புயல் ஓய்ந்தது போல போய்ஸ் தோட்டத்தில் இவ்வளவு காலம் கொடி பறக்க விட்ட, சசி புயல் ஒய்ந்த களைப்பில் முதல்வர் ஜெ மனம் ஒடிந்து போய் இருக்கின்றார்... பின்னே பிரிவின் வலி யாருக்குத்தான் இருக்காது...அதுவும் நம்பிக்கை துரோகம்...? மன்னிக்கவே முடியாது.. அல்லவா?? அந்த மன உளைச்சலில் இருக்கும் போதுதான் தானே புயல் வந்தது..
தமிழகம் கடனில் இருக்கின்றது.. செலவுகளை குறைக்க வேண்டும்.. உங்களிடம் வாராமால் வேறுயாரிடம் நான் செல்லுவேன் என்று பொதுமக்களிடம் பசப்பு வார்த்தை பேசிவிட்டு,ஒரு சில நாட்கள் கூடஅவகாசம் கொடுக்காமல், அன்று இரவே பஸ் கட்டணத்தை உயர்த்தி ஏழைமக்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றவர் முதல்வர் ஜெ...
சரி செலவினங்கள் அதிகம்.. தமிழகம் கடனில் இருக்கின்றது..முதல்வர் சைடில் இருந்து என்ன விதமான செலவினங்களை குறைத்தார்..??? எல்லார் தலையிலும் விலையேற்றத்தை எற்றி விட்டு தான் மட்டும் ஹெலிகாப்டரில் பயணிப்பதை அவர் நிறுத்திக்கொள்ளவே இல்லை...என்பது வயது கடந்த கலைஞர் ரயில் பயணம் மேற்க்கொள்ளும் போது இவர் ஏன் ரயில் பயணம் மேற்க்கொள்ளுவது இல்லை என்று தெரியவில்லை....??? ரயிலில் ஜெ பயணிப்பதை கவுரவக்குறைச்சலாக நினைக்கின்றாரா?
புயல் கடந்து நாலு நாள் ஆகி விட்ட பிறகு கூட தன் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் போய் பார்க்கின்றேன் என்று முதல்வர் ஜெ சொல்லவில்லை..இதில் விஜயகாந்தை பாராட்டவேண்டும்...மக்களை நேரில் சந்தித்து எதிர்ப்பை சந்தித்து விட்டு வந்தார்...
எதிர்கட்சி தலைவர் அந்தஸ்த்து கூட இல்லாத கலைஞர் பாதிக்கபட்ட மக்களை போய் சந்திக்கின்றேன் என்று சொன்ன இரண்டு நாள் கழித்து அவர் போகும் அன்று தானும் கடலூர் செல்வதாக முதல்வர் அறிவிக்கின்றார்...
காலையில் எழு மணிக்கு சென்னையில் காரில் கிளம்பி முன்னாள் முதல்வர் கலைஞர்......... புதுச்சேரியில் பாதிப்புக்குள்ளான பகுதிகளையும் பார்த்து விட்டு, கடலூர் சென்று கொண்டு இருக்கும் போது, பாண்டி கடலூர் போகும் வழியில் இருக்கும் ரெட்டிச்சாவடியில் தடுத்து நிறுத்தப்படுகின்றார்... காரணம் முதல்வர்... இன்னும் வரவில்லை...அதனால் நீங்கள் இங்கே நிற்க வேண்டும் என்று கலைஞரிடம்
காவல்துறை சொல்லுகின்றது..ஹெலிகாப்டரில் பறந்து கடலூர் மக்களை மட்டும் சந்திக்கவரும் முதல்வர் மதியம் இரண்டு மணிக்கு மேல் வருக்கின்றார்..
காவல்துறை சொல்லுகின்றது..ஹெலிகாப்டரில் பறந்து கடலூர் மக்களை மட்டும் சந்திக்கவரும் முதல்வர் மதியம் இரண்டு மணிக்கு மேல் வருக்கின்றார்..
மீடியாக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.. ஏன் இன்னும் கலைஞர் கடலூருக்குவரவில்லை என்று கேட்க? காவல்துறை ரெட்டிச்சாவடியில் போலிசாரால் தடுத்த நிறுத்தப்பட்ட செய்தி கேட்டு,மீடியாக்கள் படை எடுக்கின்றன.. மீடியாக்களின் கேள்விக்கு பயந்து வேறு வழியின்றி கலைஞரை கடலூருக்குள் அனுமதிக்க... அவர் புதுப்பாளையம் பக்கம் புயல் சேதம் பார்க்க செல்கின்றார்....
யார் போய் முதலில் பாதித்த மக்களை பார்த்தால் என்ன? எதுக்கு இந்த கேவல அரசியல்...காரில் 170 கிலோமீட்டர் பயணித்து வந்த ஒரு அரசியல் மூத்த தலைவரை காக்க வைப்பது என்ன நியாயம்-? ..காரணம் புயல் பாதித்த மக்களை முதலில் கலைஞர் சந்தித்து பெயர் வாங்கி விட்டால்....??? ஆனால் கலைஞர் புதுச்சேரியில் இருந்து மக்களை சந்தித்துக்கொண்டுதான் வருகின்றார்...
முதல்வர் மதியம் இரண்டு இருபத்தஞ்சுக்கு ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி, 100அடிதூரத்தில் இருக்கும் ரெட்டியார் திருமண மணட்பத்துக்கு போய்,ஆறு பேருக்கு உதவி வழங்கி விட்டு உடனே ஹெலிகாப்டர் ஏறிவிட்டார்...மீடியாக்கள் கடலுர் முழுவதும் சுற்றிப்பார்த்தார் என்று எழுதி இருந்தார்கள். சரி பாதித்த மக்களை அவேர்கள் இடத்துக்கே காரில் சென்று ஏன் முதல்வர் சந்திக்கவில்லை...இதுவே எலெக்ஷனாக இருந்தால் காரில் போய் மக்களிடம் ஓட்டுக்கேட்டு இருப்பார்...ஒருவேளை ஜந்து வருடத்துக்கு ஒரு முறை காரில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சென்று ஓட்டுக்கேட்கலாம் என்று நினைத்து இருக்கலாம்...
ஜெ...கடலுர் பகுதிகளை எங்கேயும் சுற்றிக்கு பார்க்கவில்லை...ஆனால் கலைஞர் இரண்டு நநாட்களாக பாதிக்க பட்ட மக்களோடு இருந்தாரே அது பெரிய விஷயம்.இரண்டு பேரும் யோக்கிய சிகாமணிகள் இல்லை என்பது மக்களுக்கு தெரியும்..ஆனால் யார் மக்களுக்கு நல்லது செய்கின்றார்கள் என்று இப்போது உணர்ந்து இருப்பார்கள்..ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்லாத அனாதைகள் போலத்தான் எம் மக்கள் தவித்து போய் இருக்கின்றார்கள்..
ஆட்சியில் இருக்கும் தமிழக முதல்வர்..மக்கள் பணத்தில் ஹெலிகாப்டரில் பறக்கும் முதல்வர் ஜெ...சரியாக கூட பாதிக்கபட் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூட சொல்லவில்லை..சரியாக கூட சுத்தி பார்க்காமல் திரும்பி இருக்கின்றார்...பண்ரூட்டியில் இருக்கும் யாருக்கும் முதல்வர் வந்த விஷயமே தெரியவில்லை..
கடலூர் மாவட்டமே மயான அமைதியில் இருக்கின்றது..மின்சாரம் இல்லாத காரணத்தால் வீட்டுக்கு வெளியே தம்பி பிழைத்த மர நிழல்களில் பகலில் வாழ்க்கை நடத்துகின்றார்கள்.
தனியார் செய்தி சேனலான புதிய தலைமுறை ஹெலிகாப்டரில் பறந்து, சேதப்பபகுதிகளை ஒன்று விடாமல் பார்த்தது போல கூட முதல்வர் பார்க்கவில்லை என்பதுதான் உண்மை..முதன் முறையாக செய்தி சேனல்களில் புதியதலைமுறையில்தான்.. அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் பண்ரூட்டி பேரை சொல்லி இருக்கின்றார்கள்....
மக்களை நேரில் சந்தித்து இருந்தால் புயல் கடந்து, ஒன்பது நாட்களாகியும்.. இன்னும் மின்சாரம் வரவில்லை...என்று மக்கள் முதல்வரிடம் கண் கலங்க சொல்லி இருப்பார்கள்..ஒன்பது நாட்களாக மின்சாரம் இல்லை என்பது ரயில் பயணத்தையே அறியாத, ஹெலிகாப்டரில் பறக்கும் முதல்வருக்கு தெரியுமா? என்று தெரியவில்லை..தெரிந்தால் மட்டும் என்ன செய்து விட போகின்றார்??
கலைஞரிடன் கேட்டார்கள்.. கடலூரில் நிவாரண மற்றும் மீட்பு பணிகள் ரொம்ப மெத்தனமாக இருக்கின்றதே? ஒன்பது நாட்களாக மின்சாரம் கிடைக்கவில்லையே என்று நிருபர்கள் கேட்டார்கள்..கலைஞர் சொன்னார்...அவர்களாகவே தேடிக்கொண்டார்கள்... நான் என்ன செய்வது...?
ஆறு அமைச்சர்கள் இரவு பகல் பாராது உழைக்கின்றார்கள் என்றால் ஏன் இன்னும் பல இடங்களில் கடலூர் மக்கள் ஏன் சாலை மறியலில் ஈடுபடவேண்டும்...கடலுர் கலெக்டர் பொதுமக்களை போராட வேண்டாம் என்று கெஞ்சுகின்றார்...
ஒன்பது நாள் சுத்தமாக மின்சாரம் இல்லையென்றால் போராடாமல் என்ன செய்வார்கள்..?? புயல் ஒரே ஒரு மாவட்டத்தைதான் பதம் பார்த்து இருக்கின்றது... இதுக்கே இந்த லட்சனம்.. தமிழக மக்களே வேண்டிக்கொள்ளுங்கள்.. பெரிய நில நடுக்கம் தமிழகம் முழுவதும் ஏற்ப்பட்டால் நாதி அத்து சாக வேண்டியதுதான்..ஒரு மாதம் ஆனாலும் உயிருக்கு போராடும் உங்களுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்...
வேண்டிக்கொள்ளுங்கள்... இயற்கையிடம் இதை விட பெரிய தண்டனை கொடுக்கவேண்டாம் என்று??
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
எல்லாம் நேரம் தலைவரே...இதெல்லாம் அரசியல்.பாப்போம் ..எவ்ளோ நாளைக்கு தான் இது என்று..அடிக்கடி ஹெலி ஹாப்டரில் வேற போறாங்க...ஏதாவது ஆயிட போகுது...
ReplyDeleteஇதை படிக்கும்போதே மனசு இவ்ளோ வலிக்குதே, அங்க நம்ம மக்கள் படும்பாடு!!! கடவுளே, காப்பாற்று..
ReplyDelete//வேண்டிக்கொள்ளுங்கள்... இயற்கையிடம் இதை விட பெரிய தண்டனை கொடுக்கவேண்டாம் என்று??//
தம்பி,
ஈரோடு.
ஓர் ஒப்பீடு...!
ReplyDeleteமுதலமைச்சராய் இருந்த, இருக்கின்ற இருவருக்குமுள்ள வித்தியாசம்...!
இப்போதும் அல்ல...!
எப்போதும் கலைஞர் தரைவழிப் பயணத்தைத்தான் விரும்புவார்...! காரணம்...! அவர் மக்களை... (அவர்கள் தன் கட்சிக்காரராய் இருந்தாலும்) பார்த்துக்கொண்டே செல்வதை என்றும் விரும்புவார்...! அது... இன்று, நேற்றல்ல...! என்றும் அதனை விரும்பி மேற்கொள்வார்...!
தனது 88 வயதிலும்...
முதுகுவலியில் உள்ள முதியவர்... குண்டும்குழியுமாய் உள்ள சாலையில் பயணித்து... போகும் வழியில் மக்களை சந்திப்பது புதிய நிகழ்வல்ல...!
அம்மக்களுக்கு உதவுகிறாரோ... (தன் கட்சியின் சார்பில் 50 லட்ச ரூபாய் மக்களின் நிவாரணத்திற்கு அளித்துள்ளார்) இல்லையோ... அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவந்தது பெரிய விஷயம்...!
அவரின் மக்கள் பணிக்கு ஓர் எடுத்துக்காட்டு...!
கடந்த 96 -2001 இல் முதல்வராய் இருந்தபோது.. புழல் ஏரி உடைப்பு சம்பவம் நடந்தது என்று அறிந்தவுடன்... முதல்வராகிய இவர் செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை... ஒரு அமைச்சரை அனுப்பினாலே போதும்...! (அந்நேரம் தேர்தல் ஏதும் வரவில்லை.. ) இருந்தாலும் விடியற்காலையில் சாலை வழியாக நேரில் சென்று பார்வையிட்டு... பணிகளை முடுக்கிவிட்டார்...!
அதுதான் மக்கள் பணி...!
அதுமட்டுமல்ல....!
அவர் ஆட்சியில் சென்னையில் மழைக் காலங்களில் தண்ணீர் புகுந்த பகுதிகளை தான் செல்கிறாரோ இல்லையோ... மழை பெய்யும் போதே தன் கட்சி மேயர்களை பாதித்தப் பகுதிகளுக்கு சென்று பார்வையிட அனுப்புவார்...!
காரணம்...!
அவர் பிறந்தது ஓர் கிராமத்தில் ஏழையின் குடும்பத்தில் பிறந்தவர்...
ஆனால் இந்த ஆண்டு..
கடும் மழையிலும் சரி...!
தானே புயல் தாக்கத்தின்போதும் சரி...!
சென்னையே நீரில் தவித்தபோது மேயரையும் காணவில்லை... மந்திரியும் காணவில்லை... கவுன்சிலரையும் காணவில்லை... சரி...!
என்ன செய்வது "
முன்ஏறு நேராப் போனாதானே...
பின்னேறு நேராப்போகும்...!"
ஆனால்...!
இதே இன்றைய முதல்வர்...! பக்கத்திலுள்ள திருவள்ளூர் சென்று திட்ட துவக்க விழாவிற்கு செல்வதானாலும்.. ஹெலிகப்டரில்தான் செல்வார்...!
காரணம் அவர் பிறந்ததே வசதியுள்ள குடும்பத்தில்...!
இவர்கூட கடலூர் சென்றிருக்க மாட்டார்...! கலைஞர் செல்கிறார் என்றவுடன்... சென்றார்...! கலைஞர் பத்திரிக்கையாளரிடம் சொன்னதில் தவறில்லை...!
"வினை விதைத்தவன் வினை அறுப்பான்...! திணை விதைத்தவன் திணை அறுப்பான்...!" அதுதானே உண்மை...!
தனக்கென வராதவரை..தனி மனிதன் திரும்பிபார்ப்பதில்லை..
ReplyDeleteகடலூர் பற்றி என் பதிவு..
ReplyDeletehttp://ninthanai.blogspot.com/2012/01/blog-post.html
நன்றி ஜீவா, தம்பி, நன்றி காஞ்சி மிக அழகா சொல்லி இருக்கிங்க...மிக்க நன்றி..
ReplyDeleteவிடுங்க தலைவரே இதெல்ல்லாம் அரசியல்ல சாதாரணம்...
ReplyDeletecuddalore senru vantha namathu reporter-friend sonnathu:thaniyaar thondu niruvanam,udanadiyaaka thuyar theerkkum nadavadikkaiyil irangiyathu.kuraintha alavil ulla man-power muzhu veeechchil seyalpadavillai.arasu athikaarikal vegamaaka seyalpadalaam..hm.hmm..ithil evvalavu suruttinaarkalo!
ReplyDeleteநல்லா நீங்க ஒரைக்கிற மாதிரி கேட்டு இருக்கிறீர்கள் ஜாக்கி. பூனைக்கு மணி கட்ட போவது யாரு?
ReplyDeleteபிரதான கட்சி தலைவர்கள் சந்திக்காமலே பல்லாண்டு காலம் இருப்பது நம் மாநிலத்தில்தான் நடக்கும். தற்செயலாக கூட பார்க்க விரும்புவதில்லை. இயற்கை சீற்றம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கினால் நமக்கும் இதே நிலைதான் எனும் அச்சம் வருகிறது. கொடுமைடா சாமி!!
ReplyDeleteதானே புயல் செய்திகளை தொடர்ந்து பதிவிட்டு வருவதற்கு நன்றி. இவ்வாண்டு தனிநபர் நடத்தும் வலைப்பூவில் சிறந்த கவரேஜ் ஆக இது விளங்கும் என நினைக்கிறேன். தொடரட்டும் தங்கள் பணி!
ReplyDeleteஆனால் மாலை, மரியாதை, பேனர், ஒலிபெருக்கி இல்லாத மீட்டிங்குக்கு அம்மா போக பிரியப்படவில்லை. அதான் கடலூருக்கு ஆகாய விசிட்.
ReplyDeleteஎலவு வீட்டில் கூட மரியாதையும், பேனரும், ஒலிபெருக்கியும், மாலைமரியாதையும் எதிர்பார்க்கும் அரசியல்வாதிகள் - தட்டிக்கேட்க ஜாக்கிசேகர் மட்டும்தான் இங்கே இருக்கார். ஜால்ராபோட தினமலர் இருக்கு.
////ஒன்பது நாள் சுத்தமாக மின்சாரம் இல்லையென்றால் போராடாமல் என்ன செய்வார்கள்..?? புயல் ஒரே ஒரு மாவட்டத்தைதான் பதம் பார்த்து இருக்கின்றது... இதுக்கே இந்த லட்சனம்.. தமிழக மக்களே வேண்டிக்கொள்ளுங்கள்.. பெரிய நில நடுக்கம் தமிழகம் முழுவதும் ஏற்ப்பட்டால் நாதி அத்து சாக வேண்டியதுதான்..ஒரு மாதம் ஆனாலும் உயிருக்கு போராடும் உங்களுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்...
ReplyDeleteவேண்டிக்கொள்ளுங்கள்... இயற்கையிடம் இதை விட பெரிய தண்டனை கொடுக்கவேண்டாம் என்று??
/////
மன்னிக்கவும் தங்களின் கருத்தில் நான் உடன்படவில்லை!
வருந்துகிறேன்!தங்களைப் போன்ற வெகுஜனப் பதிவர்கள் இவ்வாறு கட்சி ரீதியான துவேசத்தை மனதில் கொண்டு எல்லோரையும் எச்சரிக்கும் வகையிலான சாடல்களையும்/ சாபங்களையும்!
வருத்தம் [இது எனது முதல் கருத்தும் கூட உங்களின் ப்ளாகில். சுமார் இரண்டு வருட வாசகன் உங்கள் பிளாகிற்கு!]
அன்புள்ள ஜாக்கி
ReplyDeleteசென்னை இருந்து நீங்கள் எழுதும் தானே புயல் பற்றிய பதிவுகள் மிகவும் சிறப்பு .....எனக்கொரு சந்தேகம் ....நீங்கள் மற்றும் உங்களை போன்ற கடலூர் மாவட்ட வாசிகள் ( மற்ற மாவட்டங்களில் ) வசிக்கும் தோழர்கள் ஏன் இதுவரை கடலூர் வந்து தங்கி பொது சேவை செய்ய முன் வர வில்லை....எல்லாவற்றுக்கும் அரசையே குறை சொல்வது மிகவும் தவறான ஒரு செயல் .....இயற்கை பேரழிவை மனத்துணிவோடு மக்களே எதிர் கொள்ளும் வழி முறைகளை சொன்னாலாவது பலன் இருக்கும்....இதை போல அரசாங்கத்தையே குறை சொல்லிக்கொண்டு அவர்களிடமே உதவியும் எதிர்பார்ப்பது தப்பு .....கொசு கடிக்கும் பழகி வைப்பது நல்லதுதானே
வருந்துகிறேன்!தங்களைப் போன்ற வெகுஜனப் பதிவர்கள் இவ்வாறு கட்சி ரீதியான துவேசத்தை மனதில் கொண்டு எல்லோரையும் எச்சரிக்கும் வகையிலான சாடல்களையும்/ சாபங்களையும்!
ReplyDeleteவருத்தம் [இது எனது முதல் கருத்தும் கூட உங்களின் ப்ளாகில். சுமார் இரண்டு வருட வாசகன் உங்கள் பிளாகிற்கு!] //
மிக்க நன்றி வினு என்னை பற்றிய புரிதலுக்கு.. செருப்பு போட்டு இருக்கறவனுக்குதான் கடிக்கற வலி தெரியும்.. உங்களுக்கு தெரிய நியாயம் இல்லை.. நன்றி
.எனக்கொரு சந்தேகம் ....நீங்கள் மற்றும் உங்களை போன்ற கடலூர் மாவட்ட வாசிகள் ( மற்ற மாவட்டங்களில் ) வசிக்கும் தோழர்கள் ஏன் இதுவரை கடலூர் வந்து தங்கி பொது சேவை செய்ய முன் வர வில்லை....எல்லாவற்றுக்கும் அரசையே குறை சொல்வது மிகவும் தவறான ஒரு செயல் .....இயற்கை பேரழிவை மனத்துணிவோடு மக்களே எதிர் கொள்ளும் வழி முறைகளை சொன்னாலாவது பலன் இருக்கும்....இதை போல அரசாங்கத்தையே குறை சொல்லிக்கொண்டு அவர்களிடமே உதவியும் எதிர்பார்ப்பது தப்பு .....கொசு கடிக்கும் பழகி வைப்பது நல்லதுதானே //
ReplyDeleteசுகம் நீங்க சுகமா இருப்பதால் கொசுக்கடிக்கு பழகுவது நல்லது என்று சொல்லுகின்றீர்கள்..... என் நண்பர்கள் முடிந்தவரை உதவி செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். மக்கள் கேட்பது மின்சாரத்தை அதை எந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தாலும் செய்ய முடியாது...நீங்கள் பாதிக்கபட்ட யாருக்காவது உதவி இதுவரை செய்து இருக்கின்றீர்களா-? சுகம்..உங்கள் குடும்பத்தோடு பத்து நாள் மின்சாரம் இல்லாமல் கொசுக்கடியில் இருந்து இருந்தால் இந்த அட்வைஸ் உங்களிடத்தில் இருந்து வந்து இருக்க நியாயம் இல்லை..
சுகுமார்சார் நீங்க சொல்லறது உண்மைதான். நிறைய காசு அடிக்கறாங்களாம்..
ReplyDeleteஇதற்கு முன்னாள் சிலபதிவில்கூட
ReplyDeleteஜாக்கியின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை...!
அதற்காக...!
அவரை நான் கோவிக்கவில்லை...!
காரணம்..!
அவரவர் கருத்து அவரவருடையதே...!
நம்மீது அவர் திணிக்கவில்லை...! அதைபோலவே நாம் அவரை நிர்பந்திப்பதுவும் தவறு...!
"போற்றுவார் போற்றட்டும்...!
தூற்றுவார் தூற்றட்டும்...! "
தங்கள் நிலையிலிருந்து
தவறாதீர்...! ஜாக்கி...!
உண்மையை
ஊருக்கு
உரைத்திடுவீர்...!
ஜாக்கி, இதே ஜெ முதல்வராக இருந்த போது தான் சுனாமி வந்தது...அப்போது அவர் மேற்கொண்ட மீட்ப்புபணி பற்றி நாடறியும்... நீங்களே சொல்றீங்க இது போல் ஒரு சேதத்தை பார்த்ததில்லை ன்னு..சோ இயல்பு வாழ்க்கை திரும்ப கொஞ்ச நாள் தான் ஆகும்...வெள்ள சேதத்தை ஹெலிகாப்டேரில் போய் பார்த்தால்தான் முழுமையாக பார்வையிடமுடியும்.....தாத்தா அவசரம் இல்லாத இடங்களுக்கு எல்லாம் ரயிலில் செல்வார் அவசரமும் அவசியமும் உள்ள இடங்களுக்கு (டெல்லி ) விமானத்தில் செல்வார் :)..ஆனாலும் உங்களுக்கு அம்மா மேல இவ்ளோ காண்டு கூடாது ...ஹிஹிஹிஹி
ReplyDeleteநல்லது நண்பரே... நீங்கள் ஆளுங்கட்சியாக இருக்கலாம். மின்சாரம், தண்ணீர் கூட சரியாக கிடைக்காத நிலையில் இருக்கும் அந்த வேளையிலும் கூட முதல்வரின் ஹெலிகாப்டர் இறங்கும் இடத்திலிருந்து, ரெட்டியார் மண்டபத்திற்கு போகும் வழியில் புதிய தார் சாலை போடப்பட்டது. அதற்கு என்ன சொல்ல போகிறீர்கள். நானும், என் ஊர் மக்களும் 12 நாட்கள் இருட்டில் தான் பொழுதை கழித்தோம்..
Deleteதிரு ஜாக்கி
ReplyDeleteநீங்கள் தானே பதிவு எழுதி வருகுறீர்கள்....உங்களை போய் ஏன் உதவி செய்யவில்லை என்று கேட்டால் உங்கள் நண்பர்கள் செய்கிறார்கள் என சொல்றீர்கள் ....அதை போல அம்மாவை கேட்டால் அமைச்சர்கள் மாவட்டத்தில் தங்கி துரித நடவடிக்கை எடுத்து வருவதாக சொல்கிறார்கள்
தாத்தா அவசரம் இல்லாத இடங்களுக்கு எல்லாம் ரயிலில் செல்வார் அவசரமும் அவசியமும் உள்ள இடங்களுக்கு (டெல்லி ) விமானத்தில் செல்வார் :)..ஆனாலும் உங்களுக்கு அம்மா மேல இவ்ளோ காண்டு கூடாது ...ஹிஹிஹிஹி --//
ReplyDeleteகமல் ஹெலிகாப்டர்ல போய் பார்த்திங்க சரி... கலைஞருக்கு இருக்கறது போல அப்படி என்ன அவசரம் இந்த அம்மாவுக்குன்னு சொல்ல முடியுமா? கமல்...அவசரமா போறதுக்குதான் விமானம் கமல்.. உங்களுக்கு காஞ்சி முரளி அழகா உங்களுக்கு புரியறது போல பதில் சொல்லி இருக்கின்றார்..
திரு ஜாக்கி
ReplyDeleteநீங்கள் தானே பதிவு எழுதி வருகுறீர்கள்....உங்களை போய் ஏன் உதவி செய்யவில்லை என்று கேட்டால் உங்கள் நண்பர்கள் செய்கிறார்கள் என சொல்றீர்கள் ....அதை போல அம்மாவை கேட்டால் அமைச்சர்கள் மாவட்டத்தில் தங்கி துரித நடவடிக்கை எடுத்து வருவதாக சொல்கிறார்கள் //
சுகம் இப்பதான் உங்க பிரொபலை பார்த்தேன்.. இருந்தாலும் பதில் சொல்லறேன்..இப்போதைக்கு என் ஊருக்கு தேவை மின்சாரம் அதை நான் போய் கொடுக்க முடியாது..இரண்டாவது எனக்கு குடும்பம் இருக்கின்றது.. என் கைகுழந்தையை பார்த்துக்கொள்ள ஆள் இல்லை..அதனால்தான் நான் இன்னும் ஊருக்கு செல்லவில்லை.. நான் போய் மின்சாரம் கொடுக்க முடியாது.. என்னையும் முதல்வரையும் ஒன்றாக வைத்து பார்க்கும் உங்கள் உலக ஞானம் மெய்சிலிர்க்க வைக்கின்றது..
உங்களுக்காக உழைக்க வந்து இருக்கின்றேன் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்ற நான் எவன் வீட்டு வாசலுக்கும் போய் ஓட்டுக்கேட்டு நின்றதில்லை..
ஓட்டுக்கேட்டு நின்னவங்க நேரில் போய் இருக்க வேண்டும்.. மக்கள் பிரச்சனையை கேட்டு இருக்க வேண்டும். ஹெலிகாப்டரில் சுற்றி பார்த்தாலும் மக்களை காரில் சென்று பார்க்க வேண்டும்..
மவுன்ட் ரோடில் டிராபிக் சரியில்லை என்று எழுதினால்நீங்க ஏன் டிராபிக் சரிப்பண்ணபோகலை என்று கேட்பீர்களா?
நீங்க கேட்பீங்க..உங்களுக்கு பதில் சொல்லி என் நேரத்தை வேஸ்ட் செஞ்சேன் பாருங்க என்னை சொல்லனும்....
ஜாக்கி, இதே ஜெ முதல்வராக இருந்த போது தான் சுனாமி வந்தது...அப்போது அவர் மேற்கொண்ட மீட்ப்புபணி பற்றி நாடறியும்... நீங்களே சொல்றீங்க இது போல் ஒரு சேதத்தை பார்த்ததில்லை ன்னு..சோ இயல்பு வாழ்க்கை திரும்ப கொஞ்ச நாள் தான் ஆகும்...வெள்ள சேதத்தை ஹெலிகாப்டேரில் போய் பார்த்தால்தான் முழுமையாக பார்வையிடமுடியும்..//
ReplyDeleteதிருவள்ளுவருக்கு போறதுக்கு கூட ஹெலிகாப்டர்ல போனாவங்க அவுங்க.. அவிங்களை பத்தி எங்களுக்கு நல்லா தெரியும்..ஓட்டு கேட்க போகும் போது ஹெலிகாப்டர்ல போகவேண்டியதுதானே எதுக்கு காரில் போறாங்க...?கமல்..
எனக்கு முதல்வருக்கு வாய்க்கா சண்டை அதான் அவுங்க மேல எனக்கு காண்டு.. நல்லது செஞ்சா எனக்கு எல்லாரும் ஒன்னுதான்..
நண்பன் ஜாக்கி அவர்களே
ReplyDeleteஇதை நான் ரொம்பவும் பர்சனல் ஆ எடுத்து செல்ல விரும்பவில்லை
உங்கள் பதிவில் காரம் அதிகம் என்பதாலேயே அப்படி பின்னூட்டம் எழுதினேன்
மற்றபடி என் பின்னூட்டம் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறேன்