இந்த படம் ஆர் ரேட்டிங் படம்..
அந்த பசங்க என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணிகிட்டு இருக்காங்கப்பா என்று ஒரு பெண் சொன்னால்...பள்ளிக்கு போய் வரும் போது பசங்க நக்கல் அடிக்கின்றார்கள் என்று அர்த்தம்.
ஒரு எதிரி நாட்டு ராணுவத்திடம் ஒரு ராணுவ வீரன் மாட்டிக்கொண்டால் உண்மையை வெளிக்கொண்டு வர என்ன விதமான டாச்சர் எல்லாம் செய்வார்கள்..?? அப்ப டார்ச்சர் என்பது மனரீதியாவும் இருக்கலாம் உடல் ரீதியாகவும் இருக்கலாம் அல்லவா? இந்த படம் உடல்ரீதியான டாச்சரை ஈவு இரக்கம் இல்லாமல் சொல்லுகின்றது.......முந்தைய இரண்டு பாகங்களையும் பார்த்தவர்ககளுக்கும் இந்த படம் சாதாரணம்தான்..
==========
HOSTEL III-2011 படத்தின் ஒன்லைன்...
ஆடு அறுப்பது போல மனிதன் ஒருவனை டார்ச்சர் செய்து கொல்வதை பார்க்கும் பணக்கார கூட்டம்...
==============
HOSTEL III-2011 படத்தின் கதை என்ன?,
ஸ்காட் என்பவனுக்கு சில தினங்களில் திருமணம் நடக்க போகின்றது பேச்சிலர் பார்ட்டி கொண்டாடுவதற்கு நண்பர்கள் நால்வரும் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லுகின்றார்கள்.. அங்கே நண்பர்கள் காணமல் போகின்றார்கள்.. எலைட் ஹண்ட்டிங் கிளப் மெப்ர்கள் தேவைக்கு அவர்கள் காணமல் போகின்றார்கள்.. என்ன காரணம் என்பதை வெண்திரையில் பாருங்கள்.
==================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..
என்னதான் ஆட்டுக்கறி சாப்பிட்டாலும் கோழிக்கறி சாப்பிட்டாலும்... கண் எதிரில் அதன் கழுத்தில் கத்தி வைத்து அறுக்கும் போது ஒரு மாதிரி பிலிங் வருமே அது போல பிலிங் இந்த படத்தை பார்க்கும் போது நிச்சயம் வரும்...
இந்த முறை ஆக்சா பிளேடு, மற்றும் ரம்பம் என்று இல்லாமல் விஷ வண்டு போன்றவற்றை துணைக்கு அழைத்து இருக்கின்றார்கள்.
ஒருவன் முகத்தை அளவெடுத்து அவன் முகத்தின் தோளை மட்டும்.. வேண்டாம்... யப்பா.. இதுவே போதும்... உவ்வே.........
லாஸ் ஏஞ்சல் பாரில் இருக்கும் ஸ்டிரிப்பிங் கிளப்புக்கு ஸ்காட் மற்றும் நண்பர்கள் வரும் போது ஒரு பெண் டிக்கியை மட்டும் ஆட்டுவதும் அதுக்கும் அவன் நண்பன் அடிக்கும் கமென்ட்...யப்பா..
வில்லனிடம் தப்பித்து விட்டார்கள் என்று சொல்லும் போது அலராம் அடி என்று சொல்லும் காட்சியில் ஒரு பார் அட்டென்டர் போட்டு இருக்கும் உடை....என்ன காஸ்ட்டியூம்டா..? அது போல காஸ்ட்யூமை நான் பார்த்ததே இல்லை.
==============
படத்தின் டிரைலர்..
டிரைலரை பார்த்தாச்சு இல்லை.. படம் பார்க்கலாமா இல்லையான்னு முடிவு செஞ்சிக்கோங்க.??
====================
படக்குழுவினர் விபரம்.
Director:
Scott Spiegel
Writers:
Michael D. Weiss, Eli Roth
Stars:
Kip Pardue, Brian Hallisay and John Hensley
Country:
USA
Language:
English | Hungarian
Release Date:
27 December 2011 (USA)
Scott Spiegel
Writers:
Michael D. Weiss, Eli Roth
Stars:
Kip Pardue, Brian Hallisay and John Hensley
Country:
USA
Language:
English | Hungarian
Release Date:
27 December 2011 (USA)
==========
பைனல்கிக்..
இந்த படம் டைம்பாஸ்படம்.. முதல் படம் போல உங்களுக்கு பெரிய சஸ்பென்ஸ் எதையும் இந்த படம தரப்போவதில்லை அதே கான்செப்ட்..இந்த படம் மூவிஸ் நவ் கடையில் கிடைக்கின்றது.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
yesterday only watched this movie. not bad as compared to previous series.
ReplyDeleteBased on your review I downloaded Devils double. It was very nice movie.. Thanks Jackie.
PS: How t type in Tamil here
HI Jackie,
ReplyDeleteWould like to refer a movie called "Down Periscope" which makes you laugh and think.
By the way, i am one among the millions of followers of you. good luck.
-Ravi.sa
I already saw this picture 4 days before.. not too horror like Hostel 1 & 2. Quite boaring.
ReplyDeleteThanks for the review.
மனிதர்களை துன்புறுத்தி கொல்லும் இந்த மாதிரி படங்களை எப்படி நீங்கள் டைம் பாஸ் பட வரிசையில் சேர்கிறீர்கள் .....உண்மையில் நம் கலாச்சாரத்திற்கு இது போன்ற படங்களை அறவே ஒதுக்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்
ReplyDeleteஹாஸ்டல் 1,2 அளவிற்கு பயங்கரமில்லை என்பது படம் பார்த்த பலரின் அபிப்ராயம். எனவே யாராவது இதை பார்க்க விரும்பினால் 1,2ம் பாகங்களை பார்ப்பது கிக் ஆக இருக்கும்.
ReplyDeleteஇதுக்கு பெயர் விமர்சனமா?!
ReplyDelete