அறிவிப்பு.. இந்த படம் ஆர் ரேட்டிங் திரைப்படம்.
எப்போதுமே கிரைம்கதைகளுக்கு சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்ப்பை கொடுப்பார்கள்...
அதுவும் துப்பறியும் கதை என்றால் இன்னும் ஆர்வம் அதிகரிக்கும்.....காரணம் எல்லோருக்கும் இருக்கும் துப்பறியும் ஆர்வம்தான்.எப்போதுமே கிரைம்கதைகளுக்கு சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்ப்பை கொடுப்பார்கள்...
1971ல் இருந்து டெக்சஸ் பார்டருக்கு அந்த பக்கம்.. 60க்கு மேற்ப்பட்ட பெண்களின் உடல்கள் கண்டு எடுக்கப்பட்டு இருக்கின்றன...
லோக்கல் ஆட்கள் அந்த இடத்தை கொலைக்களம் என்று அழைப்பார்கள்..
அமெரிக்க படமான கில்லிங் பீல்டு... பெண்களை கடத்தி கற்பழித்து கொலைசெய்யும் கதைதான்... கொரிய படமான மெமரிஸ் அப் மர்டர் படத்தை நீங்கள் பார்த்து இருந்தால் இந்த படம் அந்த படத்தை நிச்சயம் நியாபக படுத்தும்..
=================
Texas Killing Fields படத்தின் ஒன்லைன்....
தடயம் விட்டு வைக்காமல் இளம் பெண்களை கடத்தி கொலை செய்யும் கொலைக்காரனை இரண்டு போலிசார் கண்டு பிடிப்பதே ஒன்லைன்..
===============
Texas Killing Fields படத்தின் கதை என்ன??
மைக் (Sam Worthington) பிரெயின் (Jeffrey Dean Morgan) பாம்(Jessica Chastain ) மூன்று டிடெக்டிவ்கள்.. டெக்சாஸ் பகுதியில் இளம்பெண்களை கடத்தி கற்பழித்து கொலை செய்வது தொடர் வாடிக்கை ஆகின்றது...மூன்று டிடெக்ட்டிவ் கொலைக்காரனை தேடியும் தடயங்களை தேடியும் பயணிக்கின்றார்கள்..
நான்கு பேர் மேல் சந்தேகம்.. சந்தேகபட்ட நபர்கள் இரண்டு பேர் கொண்ட குழுக்களாக இருக்க்கின்றார்கள்.. கொலையாளிகள் யார் என்று கடைசியில் எப்படி கண்டு பிடித்தார்கள் என்பதை வெண்திரையில் பாருங்கள்..
=================
படத்தின் சுவாரஸ்யங்கள்...
இரண்டு டிடெக்டிவ்கள் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படத்தை உருவாக்கி இருக்கின்றார்கள்.
இரண்டு டிடெக்டிவ்கள் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படத்தை உருவாக்கி இருக்கின்றார்கள்.
இரண்டு ஆண் டிடெக்ட்டிவ்... ஒரு பெண் டிடெக்டிவ் மூன்று பேரும் சேர்ந்து கொலைக்காரனை பிடிக்க தடயம் தேடி இரவு பகல் பாராது அலைவதும்..சின்ன விஷயங்களை கூட முக்கியத்துவம் கொடுத்து கவனமெடுக்கும் காட்சிகள் ரசிக்கும் விதம்..
தன் காவல் எல்லையில் காணமால் போகும் பெண்கள் மட்டும் இல்லாமல் பக்கத்து எல்லைகளில் காணமல் போகும் பெண்களை பற்றிய தகவல்களை சேகரிக்கும் பிரயின் பாத்திரம்... இளம் பெண்களை தன் பெண்ணாக நினைத்து பார்க்கும் பாத்திரம்..
பிரயின் விபச்சாரி மகளை தன் வீட்டுக்கு அழைத்து போய் இரவு உணவை அவளுக்கும் அளிக்கும் போது குடும்ப உறுப்பினர்களை எல்லாம் பார்த்து பரவசபடும் அந்த காட்சி.. அந்த சின்ன பெண்ணின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் காட்சி,.
முதலில் இந்த படத்தை இயக்கியது நம்ம ஸ்லம்டாக் மில்லியனர் படத்தை இயக்கிய டேனிபாயல்தான்.. ஆனால் நடுவில் அவர் கழட்டிக்கொள்ள, அதன்பிறகு இந்த படத்தை பெண் இயக்குனர் Ami Canaan Mann இயக்கி இருக்கின்றார்..இவர் இயக்குனர் Michael Jaffe மகள் ஆவார்..
அப்பா இந்த படத்தை தயாரிக்க, மகள் இயக்கிய படம் இது...
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அப்பாவும் மகளும்...........
இந்த படம் 68 வது வெனிஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது..
============
படத்தின் டிரைலர்.
==========
படக்குழுவினர் விபரம்.
Directed by Ami Canaan Mann
Produced by Michael Jaffe
Michael Mann
Written by Don Ferrarone
Starring Sam Worthington
Jeffrey Dean Morgan
Jessica Chastain
Chloë Grace Moretz
Produced by Michael Jaffe
Michael Mann
Written by Don Ferrarone
Starring Sam Worthington
Jeffrey Dean Morgan
Jessica Chastain
Chloë Grace Moretz
Music by Dickon Hinchliffe
Cinematography Stuart Dryburgh
Editing by Cindy Mollo
Studio Forward Pass
Gideon Productions
Infinity Media
QED International
Watley Entertainment
Distributed by Anchor Bay Films
Release date(s) October 14, 2011
Running time 105 minutes
Country United States
Language English
===========
பைனல்கிக்..
இந்த படம் பார்த்தே தீரவேண்டிய படம் காரணம் பல கிரைம்படங்கள் பார்த்து இருந்தாலும்,தடயம் தேடி செல்லும் இடங்கள் விறு விறுப்பாக எடுத்து இருக்கின்றார்கள்..இந்த படம் சென்னை பாரிஸ்இல் இருக்கும் மூவிஸ் நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

இன்றே பதிவிறக்குகிறேன்.
ReplyDeleteவிமர்சனத்திற்கு நன்றி பாஸ்.
check out jessica chastin movies she is going to be meryl streep one day
ReplyDelete400 MB download Link for the movie
ReplyDeletehttp://www.mediafire.com/?5p0sgmkco5ms9ux
http://www.mediafire.com/?3gjp1icra91e32g
Password - 300mblink.com
நல்ல அருமையான விமர்சனம்..பதிவிறக்கம் செய்கிறேன். நன்றி.
ReplyDeleteSATHISH... thanks for the link....:-)
ReplyDelete