நேற்று புத்தக கண்காட்சிக்கு போய் விட்டு இரவு ஒன்பது மணிக்கு கிளம்பி வீட்டுக்கு வந்து கொண்டுஇருந்தேன்.. கே கேநகர் ராஜமன்னார் சாலையில் இருக்கும் வட்டர் டேங் அருகே இருக்கும் ஒயின் ஷாப் வாசலில் பெரிய கூட்டம்...
ஏதோ குடிகாரர்கள் தகராறு என்று கடக்க நான் எத்தனித்த போது,ஒரு விலை உயர்ந்த வெள்ளை காரை சுற்றி பெருங்கூட்டம் சுற்றி நின்றுக்கொண்டு இருந்தது..
நீங்களே சொல்லுங்கள்..ஒரு காரை சுற்றி 50 ஆண்கள் நின்று கொண்டு ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு இருந்தால் ? உங்களால் கடந்து செல்ல முடியுமா? ஏதாவது உதவி தேவைப்படலாம் அல்லவா..? அதனால் வாகனத்தை சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்ப்படாத வகையில் சாலையின் ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு காரை நோக்கி நடந்தேன்..
மற்றுபடி அந்த காரை நோக்கி என்னை செலுத்த மற்றும் ஒரு காரணம்.. எவ்வளவு அவசரவேலையாக சாலையில் சென்று கொண்டு இருந்தாலும் சென்னையில் இருக்கும் சுவம் மற்றும் அடையாறு பாலங்களின் கீழே ஏதாவது பாடி கிடந்தால், போக்குவரத்து பற்றி கவலை படாமல், வாகனத்தை நடு ரோட்டில் நிறுத்தி விட்டு, பாலத்தின் தடுப்பு சுவர் எட்டி பார்க்கும் அடிப்படை தமிழர் மனோபாவம் எனக்கு இருப்பதும் அந்த காரை நோக்கி நடக்க ஏதுவாக இருந்தது என்றும் சொல்லலாம்.
காரை சுற்றி ஒரு ஐம்பது பேருக்கு மேல் நின்று கொண்டு இருந்தார்கள்...கேகேநகர் ராஜமன்னார் சாலையில் வாட்டர் டேங் அருகே இருக்கும், அந்த டாஸ்மார்க் ஒயின்ஸ் ஷாப்பில்தான் எப்போதாவது நானும் நண்பர் கார்த்திக் நாகராஜன் சாரும் சந்திப்போம்..
கார் முன் விண்டோ கண்ணாடியில் நான்கு பேரின் கை மாட்டிக்கொண்டு இருந்தது.. அதாவது கையை உள்ளே நுழைக்கும் போது கார் டிரைவர்... ஜன்னல் கண்ணாடி மேலே ஏற்ற முயற்சி செய்து கொண்டு இருந்தார்..ஆனால் நான்கு பேர் கையை உள்ளே மீறி விட முயற்சி செய்து கொண்டு இருந்தார்கள்...
என்ன பிரச்சனை என்று தெரியவில்லை... கார் ஹிட் அண்டு ரன் ரகம் என்பது மட்டும் பார்வையாளர்கள் மற்றும் பொதுஜனத்தின் கொதிப்பில் தெரிந்து போனது... அவகிட்ட இருந்து கார் சாவியை பிடிங்கிகிட்டு போலிசுக்கு போன் செய்யுங்க என்ற ஒரு வார்த்தையில் இன்னும் எனக்கு சம்பவத்தின் சுவாரஸ்யம் கூடிப்போனது....
காரில் உள்ளே டிரைவிங் சீட்டில் உட்கார்ந்து இருப்பது ஒரு பெண்.. அதுவும் தனியாக..கருப்பு டீ சர்ட் அணிந்து கொண்டு லட்ச்சனமாக நீட்டு முகத்துடன் காணப்பட்டார்..அந்த பொண்ணு தண்ணி அடிச்சி இருக்கா சார் என்று நான் கேட்காமலே என்னிடம் தகவலை ஒருவர் சொல்லிவிட்டு சென்றார்...
நான் முன் பக்கம் போய் கூட்டத்தை விலக்கி அந்த பெண்ணை பார்க்க முயன்றேன்.. என்னை இடிப்பது போல ஒருவர் அந்த கார் எதிரே ஆக்டிவாவை நிறுத்தி விட்டு, என்ன நடந்தது என்று அறியும் ஆவலில் அவர் இருந்தார்..
ஆனால் அவர் கொஞ்ச நேரத்தில் ஏன்டா வண்டியை அந்த பெண்ணோட கார் எதிர்க்க நிறுத்தினோம் என்று ரொம்பவே நொந்துக்கொள்ள போவதை இன்னும் சற்று நேரத்தில் பார்க்கத்தான் போகின்றோம்...
ஜன்னல் வழியாக கை விட்டு காரின் சாவியை எடுக்க நான்கு ஜோடி கைகள் போராடிக்கொண்டு இருந்தன..விண் ஷீல்டை உடைப்பது போல இரண்டு பேர் அடித்துக்கொண்டு இருந்தார்கள்...காரின் பானட்டில் ஒருவன் ஓங்கி குத்தினான்... அந்த பெண் சாரி கேட்டு கெஞ்சிக்கொண்டு இருந்தாள்....
அவள் சரக்கு அடித்து இருந்தாள் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.. கூட்டம் அதிகம் இருந்த காரணத்தால் அந்த பெண் தண்ணி அடித்தாளா? இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை...சாரி கேட்டு சைகை மட்டும் செய்து கொண்டு இருப்பது மட்டும் மங்கிய ஒளியில் தெரிந்தது...
ஆனால் 80பீட் ரோடு சந்திக்கும் இடத்தில் ஒரு பைக்காரனை இடித்து விட்டு நிற்க்காமல் ரேஷாக வண்டி ஓட்டி வந்த காரணத்தால் சேஸ் செய்து வண்டியை நிறுத்தி கார் சாவியை எடுக்க போராடிக்கொண்டு இருப்பது.. பார்த்த மாத்திரத்தில் எனக்கு சீன் ஆப் கிரைம் புரிந்து போனது..
அந்த பெண் சாரி சொல்லிக்கொண்டு இருந்தாள்.... ஆனால் ஜன்னல் வழியாக கை விட்டுக்கொண்டு இருந்த கும்பல் சாவி பிடுங்குவதில் குறியாக இருக்க.. இந்த பெண் யாரும் எதிர்பார்க்காத காரியத்தை செய்தாள்... பஞ்சாயத்து நடந்து கொண்டு இருந்த போது, அதில் கார் சாவியை எடுக்க டிரை செய்தவர்களில் பாரில் இருந்து வந்த ஒரு சில குடிமகன்களும் அடக்கம்...
அந்த பெண் வண்டியை ஆப் செய்யவில்லை....முதல் கிர் போட்டடாள்.. வண்டியை ஒரு வீரும் சவுண்ட் கொடுத்து நகர்ந்த.. தேன்கூட்டில் கல் பட்டால் சிதறுவது போல கூட்டம் சிதறி ஓட ஆரம்பித்தது... ஜன்னலில் கைவிட்டுக்கொண்டு சாவி எடுக்க டிரை செய்து கொண்டு இருந்த பசங்களுக்கு, கை கிடைத்தால் போதும் என்று சிதற ஆரம்பித்தார்கள்..
எதிரில் இருந்த ஆக்ட்டிவா மேல் மோதினால்.. அது தரையில் எதிர்பு தெரிவிக்காமல் விழுந்து வைக்க...வேடிக்கை பார்க்க வண்டியை நிறுத்திய ஆக்டிவாகாரார் லபோ திபோ என்று கத்திக்கொண்டு ஓடிவந்தார்...ஒரு மூன்று அடிக்கு ஆக்டிவா தரையில் தேய்த்துக்கொண்டு செல்ல....அவள் தனது காரை ஒரு ரைட் கட் கொடுக்க... ஆக்டிவா 180 டிகிரிக்கு அங்கபிரதட்சனம் செய்து வாய் பேசாது வழி விட்டது..
சரேல் என புயல் என கட் செய்து, அவள் காரிவ் பறக்க, எதிரில் குடும்பத்தோடு வேடிக்கை பார்த்த ஒரு குடும்பத்தை அந்த பெண்ணின் கார் தூக்கி இருக்கும்.. நல்லவேளை சட்டென்று கட் செய்து வேகம் எடுத்து சட்டென கேகேநகர் சிவன் பார்க் பக்கம் சட்டென பறந்து மாயமாகிபோனாள்..
ஓத்தா 50 ஆம்பகளைங்க.. ஒரே ஒரு பொட்டச்சி...எல்லாருடைய சூத்துலையும் கிரிஸ் தடவிட்டு போயிட்டா என்று ஒரு குடிமகன் சொல்ல... நான் மெல்ல என் பின்பக்கத்தை அனிச்சையாக தடவி பார்த்தேன்...
எல்லோருடைய கோபமும் அந்த பெண் குடித்து விட்டு கார் ஒட்டியதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவிவ்லை என்பது அந்த கார் போனதும் அங்கலாய்ப்பில் பேசிக்கொண்டதில் உணர முடிந்தது..பெண் குடித்ததை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...
அதுமட்டும் இல்லாமல் இடித்து விட்டு ஓட்டுவதால் கூட்டத்துக்கு சமுககோபமும் பயமும் இருந்தது..
போலிஸ் பேட்ரோல் கார்.. அந்த பெண் போன 50வது நொடியில் வந்தார்கள்.. சிலர் அந்த காரின் நம்பரை கொடுத்து.. வேறு யாரையும் இடிக்காமல் அந்த பெண்ணை பிடிக்க வேண்டும் என்று மன்றாடிக்கொண்டு இருந்தார்கள்..
பியட் லீனியா ஒயிட் கார்.. அது.. சிலர் ஸ்கோடா என்றார்கள்.. நான் மாடல் பார்க்கவில்லை...TN 01 AM 6334 என்று ஒருவர் மனப்பாட செயுள் போல ஒப்பித்தார்...
காவலர்கள்.. வாக்கி டாக்கியில் வண்டி என் சொல்லி ... அந்த வாகனத்தை சேஸ் செய்ய உத்தரவுகள் காற்றின் மூலம் நகர் முழுவதும் பரவிக்கொண்டு இருந்தது...
அந்த பெண் குடித்து இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.. ரேஷாக வண்டி ஓட்டி இடித்து விட்டு நிற்க்காமல் வந்தது என்று நிறைய தவறுகள் அந்த பெண் பக்கம் இல்லாமல் இல்லை..ஆனால் அந்த பெண்ணை வண்டியை விட்டு கீழே இறக்க ஒரு கும்பல் முயற்சி செய்து கொண்டு இருந்தது....
ஆனால் அந்த பெண் பயந்து போய், அந்த இடத்தை விட்டு வண்டியை எடுத்துக்கொண்டு, கேகேநகர் சிவன் கோவில் எதிரே இருக்கும் போலிஸ் ஸ்டேஷனுக்கு கூட போய் இருக்கலாம்.. ஆனால் அடுத்து என்ன நடந்தது என்று யாருக்கும் தெரிந்து இருக்க நியாம் இல்லை.ஆனால் ஒரு பெண் குடித்து விட்டு எப்படி வண்டி ஓட்டலாம் என்று கோவத்தில் பொதுமக்கள் இருந்தார்கள்.. பலருக்கு பெண்கள் குடித்ததை கேள்வி பட்டு ஆச்சர்யமாக இன்னும் கதை கேட்க ஆவலாக இருந்தார்கள்......
பேட்ரோல் காரில் வந்து இருந்த ஒரு போலிஸ்காரர் சொன்னார்...எம்பா இவ்வளவு பேர் இருக்கிங்க...?? அந்த பொண்ணை கீழ இறக்கி வண்டி சாவியை பிடிங்கி வைத்து இருக்கலாம் இல்லை? என்று கூட்டத்தை பார்த்து கேள்வியை வீசினார்..
ஒருவேளை அவர் சொன்னது போல...........
அந்த பெண்ணை கீழே இறக்கி, கார் கீயை எடுத்து இருந்தாள்... கும்பலில் கோவிந்தா போட்ட படி,அந்த பெண்ணின் மார்பகத்தை கசக்கி அந்த பெண்ணை ஜென்மத்துக்கு மாட்டுப்பொங்கலை மறக்க முடியாத நாளாக மாற்றி இருப்பார்கள்...இன்னும் வீரம் அதிகம் இருக்கும் குடிமகன் குடித்து விட்டு மனைவியை அடிப்பது போல மூஞ்சியில் ஓங்கி குத்தி இருக்கலாம்...எது வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம்..
நல்லவேளை அந்த பெண் காரை விட்டு இறங்கவில்லை.....வேறு என்னத்தை சொல்ல.....சென்னை வேறு முகத்தை மாட்டிக்கொண்டு வெகுநாள் ஆகிவிட்டது....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

சாலையில் சிலர் கூடிப் பேசிக்கொண்டு இருந்தாலே அங்கங்கே வாகனங்களை நிறுத்தி டிராபிக் ஜாமை ஏற்படுத்தி வேடிக்கை பார்ப்பது நம் தேசிய குணம். தனியாக மாட்டும் ஒரு ஆளை கும்பலாய் சேர்ந்து அடிப்பதும் அப்படியே... அவளை காரை விட்டு வெளியில் எடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் கணித்தது மிகவும் சரி சேகர். என்னத்தச் சொல்ல... சென்னை இப்படித்தான்!
ReplyDeletethangal karuthu muttrilum unmai jackie anna
ReplyDeleteதல என்னோட முதல் ஓட்டு. but same feeling.
ReplyDeleteSARI APPIDI ENRAAL AANGAL KUDITHTHU VITTU DRIVE PANNINAAL THAVARILLAYAA?
ReplyDeleteஅடடா,அந்தக் காட்சியைக் கான கண் கோடி வேண்டும்.உங்களுக்கு அந்த பாக்கியம் கிடச்சிருக்கு.
ReplyDeleteஅந்த பெண் செய்தது முற்றிலும் சரி .மாறாக அந்த பெண் கீழே இறங்கி இருந்தால் அவள் கதி அதோ கதி தான்.நீங்கள் குறிப்பிட்ட அவ்வளவும் நடக்கும் அதற்க்கு மேலேயும் நடக்கும் .
ReplyDeleteஏதாவது ஒரு சிறிய விபத்து நடந்தால் போதும் சுற்றி நிற்கும் சம்பந்தம் இல்லாத அத்தனை நாய்களும் குரைக்கும்.
DAILY EZHUTHUNGA ANNA..
ReplyDeleteபுத்திசாலிப் பெண். அதாவது, situational ethics தெரிந்த பெண். பிழைத்துக் கொள்வாள். பெண்கள் அப்படித்தான் இருக்க வேண்டும்.
ReplyDelete//ஒருவர் அந்த கார் எதிரே தன் ஆக்டிவாவை நிறுத்தி விட்டு, என்ன நடந்தது என்று அறியும் ஆவலில் இருந்தார்..
ஆனால் அவர் கொஞ்ச நேரத்தில், ஏன்டா வண்டியை இந்தப் பெண்ணோட கார் எதிர்க்க நிறுத்தினோம் என்று ரொம்பவே நொந்துக்கொள்ளப் போவதை இன்னும் சற்று நேரத்தில் பார்க்கத்தான் போகின்றோம்...//
எழுத்தாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்!
I like it..
DeleteYou are correct on her reaction. I wonder how much the cops received from making a deal with that girl.
ReplyDeleteசூழ்நிலை அறிந்து, அந்த பெண் செயல்பட்டதி்ல் தவறெதுவும், இல்லை. பெண்கள் தண்ணி அடிப்பது அவ்வளவு பெரிய குற்றமா?
ReplyDeleteகுடிப்பது அவரவர் தனி மனித விருப்பம்..இதில் ஆண் பெண் என்ற பிரிவு கிடையாது.. ஒரு சம்பவத்தை பார்த்தேன்.. அதை விவரித்து இருக்கின்றேன்..
ReplyDeleteஅதில் அந்த பெண் கீழே இறங்கி இருந்தால் என்ன நடந்து இருக்கும் என்பதை சொல்லி இருக்கின்றேன்.. அவள் சமயோஜிதமாக நடந்து கொண்டதைதான் இந்த பதிவில் சொல்லி இருக்கின்றேன்..அதையே நண்பர்களும் வழி மொழிந்து இருக்கின்றார்கள்..ராஜ சந்தர்ராஜன் சார் உட்பட..
ம்ம், அந்த பெண் இறங்கியிருந்தால் அந்த நாளை அவளுக்கு மறக்க முடியாத நாளாக்கியிருப்பார்கள் அந்த சமூக ஆர்வலர்கள்.
ReplyDeleteஅந்த நிலையில் அந்த பெண் செய்த அந்த காரியம் சரியானது. சமயோசிதமானது.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
என்னுடைய நண்பர் ஒருவர் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்பவர். வாரத்தில் 4 நாட்களாவது கட்டிங் அவருக்குத் தேவைப்படும். பெங்கை எம்.ஜி.ரோட்டில் பெண்கள் குடிப்பதை அவர் தவறென்று கூறும்போது போய்யா நீயும் உன் பிலாசபியும் என நான் பேசினேன். ஒரு பெண்ணை / ஆணை குடிக்கக் கூடாது என சொல்ல நீ என்ன அன்புமணி ராமதாசான்னு அவரை ஓட்டித் தீர்த்தோம். அது இப்போ நினைவில் நிழலாடுகிறது.
ReplyDelete// குடிப்பது அவரவர் தனி மனித விருப்பம்..இதில் ஆண் பெண் என்ற பிரிவு கிடையாது..
என்னுடைய நண்பர் ஒருவர் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்பவர். வாரத்தில் 4 நாட்களாவது கட்டிங் அவருக்குத் தேவைப்படும். பெங்கை எம்.ஜி.ரோட்டில் பெண்கள் குடிப்பதை அவர் தவறென்று கூறும்போது போய்யா நீயும் உன் பிலாசபியும் என நான் பேசினேன். ஒரு பெண்ணை / ஆணை குடிக்கக் கூடாது என சொல்ல நீ என்ன அன்புமணி ராமதாசான்னு அவரை ஓட்டித் தீர்த்தோம். அது இப்போ நினைவில் நிழலாடுகிறது.
ReplyDelete// குடிப்பது அவரவர் தனி மனித விருப்பம்..இதில் ஆண் பெண் என்ற பிரிவு கிடையாது..
Unmai Sir, Kudithu Vidu Vandi Ootradhu Romba Thaavaranthu, Pavam Aangal Nilamai.
ReplyDeleteUnmai Sir, Kudithu Vidu Vandi Ootradhu Romba Thaavaranthu, Pavam Aangal Nilamai.
ReplyDelete