இது போல படங்களை நீங்கள் ஆயிரத்து மூன்னுற்று பத்து தடவைக்கு மேல் நீங்கள் பார்த்து இருக்கலாம்...வழக்கமானமுக்கோண காதல் கதைதான்.. நிறைய கிளிஷே காட்சிகள்.. இருந்தாலும் இந்த படத்தை ரசிக்க வைக்கின்றார்கள்.. இந்த தெலுங்கு படத்தை நான் எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லை...
============
ALAA MODALAINDI தெலுங்கு படத்தின் ஒன்லைன் என்ன??
காதலில் தோற்று போன ஆணும் பெண்ணும் எப்படி காதலர்களானார்கள் என்பதுதான் படத்தின் ஒன் லைன்
================
ALAA MODALAINDI படத்தின் கதை என்ன?
கவுதம் மற்றும் நித்யா இரண்டு பேரும் காதலில் தோற்றவர்கள்.. இரண்டு பேரும் ஒரு திருமணவிழாவில் சந்திக்கின்றார்கள்..இந்த
ஜோடி எப்படி நட்பாக இருந்து அவர்கள் காதலர்களாக மாறுகின்றார்கள் என்பதுதான் கதை
=================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..
புதிய ஆட்களை வைத்துக்கொண்டு லோ பட்ஜெட்டில், பிரஷ்ஷாக புதிய பேக்ரவுண்டில் கதை சொல்லி இருக்கின்றார்கள்..
தமிழில் எப்படி கண்டநாள் முதல் படத்தை பிரியா ஒரு பீல்குட் ரேஞ்சில் இயக்கி இருந்தாரோ அது போல தெலுங்கில் இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்கிஇருக்கின்றார்..
தமிழில் 180 படத்தின் நடித்த நாயகி நித்யா மேனன் மற்றும் நானி.. இதே ஜோடி தெலுங்கில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் வெப்பம் என்ற படத்தில் நடித்தார்கள்..
நாயகன் நானி நெக்ஸ்ட் டோர் பாய் போல இருக்கின்றார்...கதையை கடத்துபவனிடம் சொல்லிக்கொண்டு பயணிப்பதும் அந்த சலிப்புகள் வெகு இயல்பு..
நித்யாமேனேன்... கண்கள் பவர் புல்லாக இருக்கின்றது..அந்த இரண்டு பெரிய விழிகளுக்காகவே அவரை எனக்கு பிடிக்கும் அடுத்த இரண்டு வேண்டாம்...இதுவே போதும் எனக்கு ஏன் நித்யா மேனன் பிடிக்கும் என்பதற்கு...படத்தில் ஹட்ச் டாக் பெட்ரூமில் படுத்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டு இருப்பார்.. அந்த ஹட்ச் டாக் போன ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்து இருக்கவேண்டும் என்று நீங்கள் சர்வ நிச்சயமாய் நினைப்பீர்கள். கழுத்துக்கு கீழே கேரள செழுமை வியாப்பித்து இருக்கின்றது...நல்ல நடிப்பும் வருகின்றது.. அவருடைய வெற்றிபடம் இந்த படம்தான் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்.
நாயகனின் அம்மாவாக ரோகிணி நடித்து இருக்கின்றார்.. மிக இயல்பாக நடித்து இருக்கின்றார்...
.நரேட்டிவ் ஸ்டைலில்.... தன்னை கடத்தி செல்லும் கிட்நாப்பரிடம் கதை சொல்லும் பாணியில் இந்த படத்தின் திரைக்கதையை அமைத்து இருக்கின்றார்கள்.
கடைசி காட்சியிவ் திருமண வீட்டில் ரகளை செய்யும்.. குடிகாரன் கேரக்டர் அசத்தலாக நடித்து இருக்கின்றார்..
ஏன் பெண்கள் ஷாப்பிங் செல்ல மிகுந்த ஆர்வம் காட்டுகின்றார்கள்.. என்று அதற்கு லாஜிக்கா சொல்லும் காரணங்கள் சுவாரஸ்ய ரகம்...
போன வருடம் தெலுங்கில் பம்மப்ர் ஹிட் ஆன படம் இந்த படம்.. ALAA MODALAINDI என்றால்.... எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை என்பதுதான் ஒரே அர்த்தம் என்று மனவாடுகள் சொல்லுகின்றார்கள்.
======
படத்தின் டிரைலர்-..
========
படக்குழுவினர் விபரம்
Directed by Nandini Reddy
Produced by K. L. Damodar Prasad
Starring Nani
Nithya Menen
Sneha Ullal
Music by Kalyani Malik
Cinematography Arjun Jena
Editing by Marthand K Venkatesh
Distributed by Sri Ranjith Movies
Release date(s) January 21, 2011
Running time 140 minutes
Country India
Language Telugu
Produced by K. L. Damodar Prasad
Starring Nani
Nithya Menen
Sneha Ullal
Music by Kalyani Malik
Cinematography Arjun Jena
Editing by Marthand K Venkatesh
Distributed by Sri Ranjith Movies
Release date(s) January 21, 2011
Running time 140 minutes
Country India
Language Telugu
===========
பைனல்கிக்..
நீங்கள் காதலிப்பவாரா? காதல் என்றால் உங்களுக்கு ரொம்பவும் பிடிக்குமா? அப்படி என்றால் இந்த படத்தை பார்த்து வைத்தால் காதலியை நினைத்துக்கொண்டோ அல்லது காதலினை நினைத்துக்கொண்டே தூக்கத்தை இழப்பது உறுதி-..ஜாலியான காதல் கதை.. இந்த படம் பார்க்கவேண்டிய படம்..இந்த படம் சென்னை மூவிஸ் நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது............
=====
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

அலா = அப்படி (எலா = எப்படி); மொதல் + ஆயி + அந்தி = மொதலாயிந்தி. நாக்கு கூட தெலுகு ராது (எனக்கும் கூடத் தெலுங்கு வராது), ஆனா தெலுங்கு தேசத்துக்குள்ளார தட்டழிஞ்சு திரிஞ்ச வகையில கொஞ்சம் கொஞ்சம் வஸ்த்தாவு.
ReplyDelete//நித்யாமேனேன்... கண்கள் பவர் புல்லாக இருக்கின்றது..அந்த இரண்டு பெரிய விழிகளுக்காகவே அவரை எனக்கு பிடிக்கும் அடுத்த இரண்டு வேண்டாம்...இதுவே போதும் எனக்கு ஏன் நித்யா மேனன் பிடிக்கும் என்பதற்கு.//
இப்படி எழுதியதோடு தாழே அந்த 'நைட்டி'யோடுள்ள படத்தை போட்டால் தீர்ந்தது. //கழுத்துக்கு கீழே கேரள... // என்பதெல்லாம் 'மிகைபடக் கூறல்' என்னும் வழு என்று தொல்காப்பியர் (மரபியலில்) கூறி இருக்கிறார்.
Ala Mothalaindi means "Thats how its started"..
ReplyDeleteIts a interesting movie, but not a big hit.. Average grosser only.
நமக்கு தெலுங்கு படம் பிடிக்காது. ஆனால் மகதீரா பிடித்திருந்தது (காஜலுக்காக). இப்பயாவது இதை தமிழ்ல ரீமேக் பண்ணுவாங்க (அனேகமா நம்ம டாக்குட்டர்) அப்போ பாத்துக்கலாம்.
ReplyDeleteநல்ல விமர்சனம். படம் பார்க்கணும்.
ReplyDeleteஐயா.. என்ன பண்ணிங்கன்னு தெரியல.. பக்கமே லோட் ஆக மாட்டேங்குது. விளம்பரம் மட்டும் தான் வருது. ஸ்கிப் ஆட் எல்லாம் பண்ணினாலும் இன்னொரு விளம்பரம் தான் வருது. நாலு அஞ்சு தரம் முயற்சி பண்ணினா வருது. கொஞ்சம் கவனிங்க..
நல்ல விமர்சனம். படம் பார்க்கணும்.
ReplyDeleteஐயா.. என்ன பண்ணிங்கன்னு தெரியல.. பக்கமே லோட் ஆக மாட்டேங்குது. விளம்பரம் மட்டும் தான் வருது. ஸ்கிப் ஆட் எல்லாம் பண்ணினாலும் இன்னொரு விளம்பரம் தான் வருது. நாலு அஞ்சு தரம் முயற்சி பண்ணினா வருது. கொஞ்சம் கவனிங்க..
நித்யா மேனன்,நானி made for each other ஜோடி. வெப்பத்திலேயே கவர்ந்துவிட்டனர்.
ReplyDeleteபட்டுகோட்டையாரின் (பிரபாகரன்) பாணியில் சொல்லுவது என்றால் " இப்படிதான் ஆரம்பிக்கிறார்கள்" @ அப்படித்தான் தொடங்கியது
ReplyDelete