ரேடியோ பிக்எப்எம்மில் எனது தளம் பற்றி....

 


நீங்கள் ஒருவரை ரசிக்கின்றீர்கள்.. அவருக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நேரில் பார்த்தது கூட இல்லை...உதாரணத்துக்கு எனக்கு கமலை பிடிக்கும் என்று வைத்துக்கொள்வோம்... அவர் என்னை பற்றி பேசி இருக்கின்றார் என்றால்  எனக்கு எந்த அளவுக்கு சந்தோஷமாக இருக்கும்... அது போலத்தான்..நேற்று சந்தோஷம் கொண்டேன்..


அதை பற்றி....விரிவாய்..

ண்பர் ராஜ் முத்துக்குமார் என்பவர் எனது ராணி  பத்திரிக்கை  பதிவுக்கு பின்னுட்டம் இப்படி போட்டு இருந்தார்...


தல, ராணி பத்திரிக்கையை வாங்கி உங்க பேட்டியை படித்தேன். என் வீட்டாரிடமும் உங்களை அறிமுகபடுத்தினேன். உங்கள் தளத்தை பற்றி Big FM இல் சொன்னதாக சொன்னார்கள். படிக்கின்ற பெண்ணின் மனதை கெடுக்காத உங்கள் தன்மை எனக்கு பிடிச்சிருக்கு. உங்கள் காதல் வெற்றி பெற்றது போல உங்கள் வாழ்க்கையும் வெற்றி பெரும். யாழினி குட்டி பாப்பா ரொம்ப அழகா இருக்கு. வீட்ல சொல்லி சுத்தி போட சொல்லுங்க. வாழ்த்துக்கள். 

 பிக்எப்எம்மில் என்னை பற்றியும் எனது தளத்தை பற்றியும் சொன்னது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.. ஜஸ்ட் டயலுக்கு போன் செய்து பிக் எப் எம் நம்பர் வாங்கினேன்...

அந்த நம்பருக்கு போன்  செய்தேன்..

ஹலோ பிக் எப் எம்..??

 ஆமாங்க சொல்லுங்க.. 

சார்... நான் ஜாக்கிசேகர் என்ற பெயரில் இணையத்தில் எழுதி வருகின்றேன் எனது  தளத்தை பற்றி உங்கள் ரேடியோவில் சொன்னதாக சொன்னார்கள் என்ன சொன்னார்கள் என்று அறிய ஆவல்... என்று சொன்னேன்.....

சரி உங்களுக்கு வேறு ஒரு  எண்ணை கொடுக்கின்றேன்.. அங்கே தொடர்பு கொள்ளுங்கள் என்று சொன்னார்...
அந்த நம்பரை தொடர்பு கொண்டேன்..

போனை எடுத்தது ஒரு பெண்குரல்..
எங்கேயோ கேட்டது போல இருந்தது...

சொல்லுங்க... வழக்கம் போல எனது அறிமுகபடலம் முடிந்தது... நேற்று எனது தளத்தை பற்றி உங்கள் ரேடியோவில்  சொன்னாதாக அறிந்தேன்..

என்ன சொன்னார்கள் என்று  அறிய ஆவல் என்றேன்..

உங்கள் தளத்தை பற்றி பேசியது நான்தான் என்று   அந்த பெண் சொன்னார்... உங்கள்  பேர் என்ன என்று கேட்டேன்... 

கண்மணி என்று சொன்னார்... ஒரு  சின்ன பிளாஷ் பேக்...

தனியார் பண்பலை சென்னையில் வந்த போது சூரியன் எப்எம்மில் சட்டென்று வசீகரித்த குரல் அந்த பெண்ணின் குரல்... நிகழ்ச்சி முடிவில் பெயர் கண்மணி என்று அந்த நிகழ்ச்சி  தொகுப்பாளர்  சொன்னார்.......அப்படி ஒரு வசீகரம் அந்த குரலில்.... யோவ் குரலில் என்ன வசீகரம் என்று கேட்கலாம்..?? ஆம் அந்த குரல் என்னை பொறுத்தவரை வசீகரம்தான்..நம்மோடு பக்க்ததில் உட்கார்ந்து பேசுவது போன்ற ஒரு நட்பான குரல் அந்த பெண்ணின் குரல்....

ரேடியோ  தொடர்ந்து கேட்கும் வழக்கம் இப்போது இல்லை என்றாலும் கல்லூரியில் வேலை செய்த ஐந்து வருடத்தில் பேருந்து பயணத்தை சந்தோஷப்பபடுத்தியது தனியார் பண்பலை ரேடியோக்கள்தான்.. அப்போது கண்மணிகுரல் கேட்டால் அதன் மேல் தனி கவனம் வைப்பேன்..

பன்பலையில் இரண்டு குரல்கள் எனக்கு ரொம்பபிடிக்கும்.. ஒன்று பெண்குரலில் கண்மணியின் குரல் மிகவும் பிடிக்கும், அதே போல மேனேஜர் மாதவன் என்று ஹலோ எப்எம்மில் பேசும் இந்த இரண்டு குரல்களும் எனக்கு ரொம்ப பிடித்தமானவை.. ஏற்கனவே நண்ப் கீதப்பிரியன் எனது கருத்துக்களை சென்னை வானொலியில் பேட்டி எடுத்து ஒளிபரப்பி இருக்கின்றார்...

கண்மணியிடம்  சொன்னேன்.. உங்கள் நிகழ்ச்சிக்கும் உங்கள் குரலுக்கும் நான் ரசிகன் என்று சொன்னேன். நேரடி நிகழ்சியில் சரளமாக பேசுவது ஒரு கலை.. அது உங்களுக்கு கை வந்து இருக்கின்றது.. உங்கள் குரலுக்கு  நான் ரசிகன் என்று சொன்னேன்...

அப்போது தமிழ் வலையுலகத்தை தனது நிகழ்சியில்  அறிமுகப்படுத்தி வருவதாகவும்.. அதில் நேற்று முன் தினம் இரவு நிகழ்சியில் எனது பெயர் மற்றும் எனது தளத்தை அறிமுகபடுத்தியபோது...ஜாக்கிசேகர் சமுக பிரச்சனைகள் அதிகம் அலசி இருக்கின்றார்... ஒன்வேயில் வருவதே தவறு.. ஆனால் அதே ஒன்வேயில் அறுபது கிலோமீட்டர் ஸ்பீடில் வருவது நம் ஊரில்தான் நடக்கும் என்று எழுதியதையும், மாநகர பேருந்தில் நடக்கும் பிரச்சனைகளையும் நான் எழுதி இருப்பதையும் குறிப்பிட்டதாக சொன்னார்...மிகுந்த  சந்தோஷம் என்றேன்.. தள அறிமுகத்துக்கு நன்றி கூறி போனை வைத்தேன்..


நான் ரசித்த ஒரு நபர் எனது தளத்தை குறித்து சொல்லி இருப்பது எனக்கு மகிழ்வை தந்தது.. இதனை எனக்கு குறிப்பிட்டு பின்னுட்டம் இட்ட நண்பர் ராஜ் முத்துகுமார் அவர்களுக்கு எனது நன்றிகள்..

பிரியங்களுடன்
ஜாக்கிசேக்ர்...

நினைப்பது அல்ல
நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

15 comments:

 1. 2012 உங்களுக்கு அருமையான ஆரம்பம்.... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 2. I am also fan for kanmani voice in suriyan fm "kaalai thenral" (7AM to 8AM) may be the year of 2003 and 2004 - sridhar

  ReplyDelete
 3. முதல் முறையாக உங்கள் blog ஐ visit பண்ணுகிறேன். சூப்பர் சார். I am new to blogging. Please give your feedback. Thanks.
  http://sathish-chennai.blogspot.com/

  ReplyDelete
 4. நேற்று பத்திரிக்கை...
  இன்று எப்எம்...

  நாளை..?

  கலக்குற ஜாக்கி...

  ReplyDelete
 5. மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம் தாங்க! மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 6. //நான் ரசித்த ஒரு நபர் எனது தளத்தை குறித்து சொல்லி இருப்பது எனக்கு மகிழ்வை தந்தது.. //

  நிச்சயமாக பாராட்ட படவேண்டிய மகிழ்ச்சியான சம்பவம்தான்

  வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் இந்த வருடம் உங்களுக்கு சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது.

  இதையும் வாசித்து பாருங்கள்
  http://kanavulaham.blogspot.com/2012/01/blog-post.html

  ReplyDelete
 8. அட்டகாசமான வருடம் ஆரம்பம் உங்களுக்கு ஜாக்கி சார். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 9. congrats, sir , really i am very happy..

  ReplyDelete
 10. பொய் சொல்லப் போறேன், பொய் சொல்லப் போறேன்....நீ ரொம்ப அழகியடி, இந்தப் பாடலில் சிரித்தே அசத்தியிருப்பார் கண்மணி.

  http://www.youtube.com/watch?v=O6GO3R54YpQ&feature=related

  ReplyDelete
 11. இன்னும் உயர வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 12. <<
  நீங்கள் ஒருவரை ரசிக்கின்றீர்கள்.. அவருக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நேரில் பார்த்தது கூட இல்லை...உதாரணத்துக்கு எனக்கு கமலை பிடிக்கும் என்று வைத்துக்கொள்வோம்... அவர் என்னை பற்றி பேசி இருக்கின்றார் என்றால் எனக்கு எந்த அளவுக்கு சந்தோஷமாக இருக்கும்... அது போலத்தான்..நேற்று சந்தோஷம் கொண்டேன்..>>

  இது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்தான். நானும் உங்களை பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை. உங்கள் பதிவில் என் பெயர் வந்ததும் என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. Big FM இல் சொன்னது உங்களுக்கு தெரியும் என்று நினைத்தேன். நீங்கள் என் பின்னுட்டத்தை பதிவில் எழுதி சொன்னது உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது.

  ReplyDelete
 13. Very Good starts....in 2012.
  Really..should be Wonderful year for you

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner