Faces in the Crowd/2011 முகம் மாறும் கொலைக்காரன்.


 
நீங்கள் ஒரு பள்ளி ஆசிரியை....முப்பது வயதை கடந்தவர் என்று வைத்துக்கொள்வோம்.. பாய் பிரண்டோடு சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள்.. பள்ளியில் பசங்களோட கலகலப்பாக பழகும் நபர் நீங்கள்..


திடிர் என்று ஒரு பிரச்சனையை சந்திக்கின்றீர்கள். வித்யாசமான பிரச்சனை அது..?எந்த பெண்ணும் சந்திக்காத பிரச்சனை...கொடுமையான பிரச்சனையும் கூட...


யோவ் ஜாக்கி ரொம்ப கூவிகிட்டே போகாத நைனா? இன்னா பிராதுன்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு கூவு.... அதை உட்டு புட்டு நாலு வரிக்கு மேல பிரச்சனைக்கு பில்டப்பு எல்லாம் கொடுக்காதே  என்ன பிரியுதா? 

சரி.. பிரச்சனையை சொல்லறேன் பட் நீங்க எல்லாம் ஆடி போயிடுவிங்க...

அடிங்...... திரும்ப அதையே சொல்லிக்கினுக்கிறே?? பிரச்சனையை சொல்லுய்யா மொதல்ல....

சரி சொல்லிடுறேன்..

பாய்பிரண்டடோடு உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் போது பாய் பிரண்ட் முகம் மாறிகிட்டு இருந்தா எப்படி இருக்கு?

இன்னோரு தபா சொல்லு...?பிரியலையே

சரி உன்  ரேஞ்சிக்கே சொல்லி புரியவைக்குறேன்.....

ஒரு பெண்ணை மேட்டர் பண்ணிகிட்டு இருக்கேன்னு வச்சிக்கோ...நீங்க வாழ்க்கையில் சந்திச்ச எல்லா பொண்ணுங்க முகமும் நொடிக்கு நொடி மாறிக்கிட்டு இருந்துச்சின்னா உனக்கு  எப்படி இருக்கும்??

அந்த பெண்ணோட முகம் நொடிக்கு நொடி, நீங்க பள்ளியில் படிக்கும் போது சந்தித்த பெண்கள், கல்லூரியில் படிக்கும் போது படித்த பெண்களின் முகம், திரையில் நீங்க பார்த்த நடிகைகள் சாவித்திரி,சரோஜதேவி,மீனா,சிம்ரன்,காஜல்,தாப்சி,இலியானான்னு நொடிக்கு நொடி மாறிகிட்டு இருந்தா என்ன செய்விங்க..??

ஐ ஜாலியா இருக்குமே....

நாசமாபோச்சி....

ஒரு பெண்ணுக்கு இப்படி நடந்தா எப்படி இருக்கும்?? சரி மேட்டர் பண்ணும் போது பாய் பிரண்ட் பேஸ் மாறிகிட்டே இருந்தா பரவாயில்லை...ஆனா அவளை கொலை  செய்ய வரும் கொலைக்காரன் முகம் கூட நொடியில் மாறிக்கொண்டு இருந்தால் என்ன செய்வது..? 

பேஜாரா இருக்குமே? 

அதேதான்....
============================
Faces in the Crowd படத்தின் ஒன்லைன்

Prosopagnosia  பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்...கொலைசெய்யும் கொலைக்காரனை நேருக்கு நேராக பார்த்து விடுகின்றார்.. ஆனால் அவனை அவளால்அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை...இதுதான் ஒன்லைன்..
=================
Faces in the Crowd படத்தின் கதை என்ன?

அன்னா (Milla Jovovich)  எலிமென்ட்ரி ஸ்கூல் டீச்சர்..தன்னோட பாய் பிரண்டோட ஒரு அப்பார்ட்மென்ட்டில் வசித்து வருகின்றாள். ஒரு பார்ட்டியில் தன் நண்பர்களோட தண்ணி அடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது ஒரு சிரியல் கொலைக்காரன் ஒரு பெண்ணை கொலைசெய்வதை நேரில்  பார்த்து விடுகின்றாள்..


கொலைக்காரன் அவளை துரத்தி அவைளை கொலை செய்ய முயல.... அவள் அவனிடம் தப்பித்து ஒடும் போது பாலத்தில் இருந்து கீழே இருக்கும் நீரில் விழும் முன் பாலத்தின் கட்டையில் அவள் தலை அடிபட்டு நீரில் விழுந்து விடுகின்றாள்..ஒரு வாரம் கோமா.... எழுந்தால் எல்லா முகமும் நிமிடத்தில் மாறிக்கொண்டே இருக்கின்றது.. காரணம் Prosopagnosia பிரச்சனையில் பாதிக்கப்பட்டு இருக்கின்றாள்.. 

கொலைக்காரனுக்கு இவளை நன்றாக தெரியும்.. ஆனால் இவளுக்கு தனது நண்பர்கள் ,பாய் பிரண்ட் யாரையுமே தெரியாது... காரணம்..நிமிடத்தில் வேறு ஒரு முகம்  வந்து விடும்... அவள் எப்படி அந்த சீரியல் கொலைக்காரனிடம் என்பதுதான் கதை...
============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

சரியான கான்செப்ட்... நொடிக்கு  நொடி மாறும் முகம்... எப்படி நாயகி சமாளிக்கின்றாள்  என்பதும் எப்படி கொலைக்காரனிடம் இருந்து தப்பிக்கின்றாள் என்பதும்தான் படத்தின் சுவாரஸ்யம்..

முகம் மாறிக்கொண்டே இருப்பதால் அவள் பள்ளியில் சந்திக்கும் பிரச்சனை மற்றும் வீட்டில் பாய் பிரண்டு நண்பர்கள் என Milla Jovovich சந்திக்கும் பிரச்சனைகள் சுவாரஸ்யம்..


கொலைக்காரன் நெருங்க நெருங்க நமக்கு இதயம் பட படவென அடித்துக்கொண்டாலும்... கொலையாளியை ஒரளவுக்கு கெஸ் செய்து விடுகின்றோம்..

கடைசிவரை கொலையாளி யார் என்று அறிய வேண்டிய சஸ்பென்ஸ் கடைசி வரை டிரை செய்து இருந்தால் இந்த படம் இன்னும் சுவாரஸ்யம் பெற்று  இருக்கும்.

மனிதர்களை மனதில் நிறுத்திக்கொள்ள டாக்டர்  சொல்வது போல டை மற்றும் சின்ன விஷயங்களை மளிகைக்கடை நோட்டு போல எடுத்து குறித்துக்கொள்வது..

தன் காதலன் என்று நினைத்துக்கொண்டு காதலன் எதிரிலேயே வேறு ஒருவனுடன் பாட்டியில் இழைவது என்று அசத்தி இருக்கின்றார்.. Milla Jovovich


Milla Jovovich ரெசிடெண்ட் ஈவில்,த பிப்த் எலிமென்ட் போன்ற படங்களில் நடித்தவர்...

=============
டிரைலர்.


============
படக்குழுவினர் விபரம்
 Directed by     Julien Magnat
Produced by     Kevin DeWalt
Jean-Charles Lévy
Clément Miserez
Jamie Brown
Scott Mednick
Sylvain White
Written by     Julien Magnat
Starring     Milla Jovovich
Julian McMahon
David Atrakchi
Michael Shanks
Sandrine Holt
Sarah Wayne Callies
Cinematography     Rene Ohashi
Editing by     Antoine Vareille
Studio     Voltage Pictures
Minds Eye Entertainment
Radar Films
Frantic Films
Forecast Pictures
Country     United States
Language     English
Budget     $15,000,000
Box office     $25,000,000
========
பைனல்கிக்.
 
இந்த படம் பார்க்கவேண்டிய படம்.. இன்னும் கொலைக்காரனை வேறு விதமாக சித்தரித்து கொஞ்சம் டெம்போ மெயின்டெயின் செய்து இருந்தால் இந்த படம் பார்த்தே தீரவேண்டிய பட லிஸ்ட்டில் வந்து இருக்கும்..நல்ல கான்செப்ட் அதுக்காக இந்த படத்தை பார்க்கலாம்.இந்த படம் சென்னை மூவிஸ் நவ் டிவிடிகடையில்  கிடைக்கின்றது.

 ===========

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

8 comments:

  1. Dear Jackie,

    Milla Jovovich starred in "Resident evil Series" not in "Underworld series".

    ReplyDelete
  2. கேள்விப்படாத படம்.அருமையான விமர்சனம்..எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மனதை தூண்டுகின்றன.பார்க்க முயற்சி செய்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  3. வாவ்.. செம‌ க‌தை... ந‌ல்லா இருக்கும் போல‌.. ட‌வுன்லோட‌ணும். ந‌ன்றி ஜாக்கி.

    ReplyDelete
  4. Why this கொலவெறி?
    ஒரே கொலைகார படங்களா விமர்சனம் எழுதுறீங்க.

    நல்ல கான்செப்ட்தான்.
    ஆனால் புது புது வியாதிகளை அல்லது புது புது மருத்துவ பிரச்சனைகளை திரையில் காட்டுவதுதான் திரையில் புதுமையா?

    ReplyDelete
  5. புதுப் படமா இருக்கு. பாத்துருவோம் ....

    ReplyDelete
  6. நீங்க பதிவுல போடற படங்கள்.. அருமை... நான் நீங்க பதிவில் போட்ட படங்கள் சில பர்த்தேன்.. அருமை..

    ReplyDelete
  7. நீங்க பதிவுல போட்ரதன் மூலம் நிறைய படங்களின் அறிமுகம் கிடக்குது

    ReplyDelete
  8. wht is the movie name Hungery moive: Old man try to rob Bank...oldman with his wife.. young cop will try to catch...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner