சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/புதன்/18/01/2012

ஆல்பம்..

சில வருடங்களுக்குமுன் லேடர் 49 ஹாலிவுட் படத்தை பார்த்த போது இரண்டு  நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் தவித்தேன்...அந்த படத்தில் நடித்த தீயனைப்பு வீரர்கள் கதாபாத்திரங்கள் மேல் எனக்கு மரியாதை ஏற்ப்பட்டது...தமிழில் டிஷ்யும் படத்தில் ரொம்ப லைட்டாக அந்த கான்செப்ட்டை கையாண்டு இருப்பார்கள்... 2008ல் வலையுலகில் விமர்சனம் எழுத ஆரம்பித்த போது எழுதிய படம் அது... அந்த படத்தின் விமர்சனத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்.,.


தமிழில் மைக்கேல் மதனகாமராஜன் பயர்சர்விஸ்மேன் கமல், மற்றும் விரும்புகின்றேன் படத்தில் பிரசாந் என்று கொஞ்சமே கொஞ்சம் பயர்சர்விஸ் ஆட்களின் கஷ்டங்களை தமிழில் பேசியபடங்கள் என்று சொல்லலாம்..ஆனால் எரிந்த முடித்த பிறகு   பயர்சர்விஸ் லேட்டாக வருகின்றார்கள் என்று அவர்களை தூற்றாமல் நம் மக்கள் இருந்ததே இல்லை... ஒழக்கு போல ரோட்டில் வீட்டை கட்டிக்கொண்டு சாலை வசதி  சரியில்லாத சென்னையில் அவர்கள் சரியான  நேரத்துக்கு வருவது என்பது சாத்திய குறைவும் கூட..

அமெரிக்காவின் 9/11 தாக்குதலின் போது பயர் பைட்டர்ஸ் என்று மக்களால் செல்லமாக அழைக்கபடும் பல வீரர்கள்..இடி பாடுகளில் சிக்கி இறந்து போனார்கள்..ஆபத்து இருக்கின்றது என்று தெரிந்து அங்கு சென்று பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் வேலை...எத்தனை பேர் அப்படி பட்ட வேலையை துணிச்சலுடன் செய்ய முடியும்???

நீங்கள் வாகனம் எடுக்கும் போதே, பத்தாவது கிலோமீட்டரில் எதிரில் வரும் லாரி மீது மோதி நீங்கள் இறக்கலாம் அல்லது இறக்காமலும் போகலாம் என்று யாராவது சொன்னால் நீங்கள் வண்டியை ஸ்டார்ட் செய்வீர்களா? ஆனால் தீயனைப்பு வீரர்கள்.. சென்றுதான் ஆக வேண்டும்...

சென்னையில் கடந்த ஞாயிறு இரவு எழிலகத்தில் ஏற்ப்பட்ட தீயை அணைக்க  சென்ற தலைமை வீரர் அன்பழகன் வீர மரணம் அடைந்தார்..அதே போல துணிச்சலான பெண் அதிகாரி பிரியாவுக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்றார்.. அதே போல முருகன் என்ற வீரரும் முதுகு முழுவதும் தீக்காயத்துடன் உயிருக்கு போராடி வருகின்றார்... தீயணைப்பு வீரப்பெண்மணி பிரியா அவர்களுக்கு 40 சதவீத தீக்காயம் என்பது மிகுந்த வேதனைக்குறியது...பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவும் முடிவு செய்து இருக்கின்றார்கள்..காயம் பட்ட வீரர்கள் மற்றும் அந்த வீரப் பெண்மணி நலமுடன் திரும்ப நாம் அனைவரும்  பிரார்த்திப்போம்...
===============
மார்கழி போய் தை வந்தாலும் குளிர் இன்னும்  சென்னையை விட்டபாடில்லை...பகலில் வெயிலில் சென்னையின் சாலையில் வாகனத்தில் பயணிக்கும் போது குளிர் உணர முடிகின்றது...இரவு ஜெர்கின் இல்லாமல் போக முடியவில்லை...40 வருடத்துக்கு முன் இது போல ஒரு குளிர் வந்ததாக சொல்லுகின்றார்கள்..மே மாதத்தை நினைத்தால் சொத சொதக்கும் பனியன் ஈரத்தை நினைத்தால் இப்போதே கடுப்பாக இருக்கின்றது.
==============
மிக்சர்.
மாட்டுப்பொங்கல் அன்று சென்னை புத்தககண்காட்சிக்கு போயிருந்தேன்..மெட்ரோ ரயில் பணிகள்  புத்தககண்காட்சியின் ஷேப்பை மாற்றி இருந்தன.. லீவ் நாள் என்பதால் நல்ல கூட்டம்.... நிறைய பேர் அடையாளம் கண்டு கொண்டார்கள்..சாகித்திய அகாடமி ஸ்டாலில் நானும் பட்டர்பிளை சூர்யாவும் வந்த போது, கிழக்கு பதிப்பகம் பத்ரி வந்தார்..பதிவுலக சூப்பர் ஸ்டார்... என்று  என்னை அழைத்தார்.. 

ஏன் சார் நீங்களுமா ? என்று கேட்க.. நான் எங்கேயும் நக்கல் விடலை.. டூவிட்டல சொல்லறது போல கூட சொல்லலை.. நேரில் பார்த்தே சொல்லறேன்  வாழ்த்துகள் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்..
நான் பரகத் அலி மற்றும் சூர்யா மூவரும் சாரு நேர்க்கானல் நடக்கும் இடத்துக்கு போய் இருந்தோம்..59 வயது ஆகின்றது... இன்னும் தமிழகத்தின் வெகுஜனமக்களிடம் செல்ல போராடிக்கொண்டு இருக்கின்றேன்., போன வருடம் பா.ரா சாரை சந்டிதத்தேன்.. ஆனால் இந்த முறை அவரை சந்திக்க முடியவில்லை...

டிஸ்கவரி புத்தக கடையில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது உங்கள்  கோடிக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் என்று அறிமுகம் இல்லாமல் முகம்முழுவதும் மகிழ்ச்சியுடன் ஒருவர் கைகுலுக்கினார்.. ஏம்பா கோடி அது இதுன்னு சொல்லி பில்ட் கொடுக்கறிங்க என்று அவரை நான் திரும்ப கடிக்க... அண்ணே நான் ராஜேஷ்...பெங்களுர் ஸ்னைடர் கம்பெனியில் ஒர்க் செய்யறேன்...உங்க பலம் உங்களுக்கு தெரியாது...  வெளிநாட்டுல இருக்கும் போது உங்க தளம் எனக்கு பெரிய வரப்பிரசாம் என்று சொன்னார்.. அது அனுபவிச்சவங்களுக்கு தெரியும்...தொடர்ந்து எழுதுங்க,... எழுதறதை நிறுத்தாதிங்க.. என்று சொல்லி விடை பெற்றார்...நேரமின்மை காரணமாக மூன்று நான்கு புத்தகங்களை மட்டும் வாங்கி கொண்டு விடைபெற்றேன்.
===================
மழை போய் விட்டது... இன்னும் சென்னை சாலைகள் அனேக இடங்கள் அப்படியேத்தான் இருக்கின்றன.. அடுத்த மழை வரை காத்து இருப்பார்களோ??
=====================
ஹிஸ்ட்ரி ஆப் பென்னிகுக் என்ற புத்தகம்  கன்னிமாரா நுலகத்தில் இருப்பதாக சொல்லுகின்றார்கள். யாராவது கன்னிமாராவில் மெம்பராக இருந்தாலோ அல்லது அந்த புத்தகத்தை யாராவது வைத்து இருந்தாலோ.. தயவு செய்து கொடுக்க வேண்டுகின்றேன்.. படித்து சில தகவல்களை சேகரித்துக்கொண்டு கொடுத்து விடுகின்றேன்..
========================
சென்னை கார்பரேஷன் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் யாராவது இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும் பர்த் சர்ட்டிபிகேட் பற்றி ஒரு சில சந்தேகங்கள் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
================
இந்த வாரம் கடலூருக்கு செல்ல இருக்கின்றேன்... இன்னும் ஊருக்கு போக முடியவில்லை என்ற குற்றஉணர்வு எனக்கு ரொம்பவே இருக்கின்றது..தனியாக போகலாம் என்றால் குழந்தையை  யாரிடமும் விட்டு செல்ல மனம் வரவில்லை... அதனால் குடும்பத்துடன்தான் போகலாம் என்று இருக்கின்றேன். சிங்கை பதிவர் ரோஸ்விக் தானே புயலில் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவி செய்ய பணம் சேர்த்துக்கொண்டு இருப்பதாக சொல்லி இருக்கின்றார்... பணம்  சேர்ந்ததும் சொல்லுகின்றேன். என்று சொல்லி இருக்கின்றேன்.. வாழ்த்துகள் ரோஸ்விக்.

============
 
இந்தவார கடிதம்..
அன்பு தலைவர் ஜாக்கிக்கு,

எனது நண்பன் - குமுறல் விமர்சனம் கட்டுரை.காம் ல் வெளிவந்துள்ளது. பலத்த பராட்டையும் , அதெ சமயம் 250 ம் மேலான கல்லடிகளும் கிடைத்த வண்ணம் உள்ளன.
ட்விட்டரில் பெரிதும் பாராட்டபடும் விமர்சனமாகவும் வெளி வந்துள்ளது.

லிங்க்: http://www.katturai.com/?p=735

எனினும் , எழுத்து வடிவத்தில் மானசீக குருவான (பேச்சு நடையிலெயெ என் விமர்சனமும் எழுதி உள்ளென்) நீங்கள் வாழ்த்தாமல் (உங்களுக்கு பிடித்திருந்தால்)
எனக்கு நிறைவு இல்லை.

அதெ சமயம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்கள் பதிவுகளில் ஒரு வார்த்தை இந்த விஷயத்தை சொன்னால், என் போன்ற புதிய, சிறிய மற்றும் எளிய பதிவர்கள்
வளர ஏதுவாகும். இது ஒரு விண்ணப்பம் தான்.  எனது புணை பெயர் கட்டதொர..!

உங்கள் மடல் என்னெரமும் வரலாம் என எதிர் பார்த்து இருக்கும்,

மொட்ட மாடியிலிருந்து கட்ட தொர..!
==================
அன்பின் கட்ட தொர...

உங்கள் விமர்சனம் படித்தேன்.. எள்ளலோடு கமர்சியல் விஜய் ரசிகர்கள் பொங்குதலோடும்.. அதே வேளையில் விஜய்யை ரொம்பவே அவரின் கமர்சியல் தனங்களை எள்ளல் விட்டும் எழுத பட்டு இருந்தது..உங்கள் எழுத்தை நிறைய இடங்களில் ரசிக்க முடிந்தது..ஆனால் விஜய் இது போலான கதை ஆழம் மிக்க நண்பன் போன்ற படங்களில் நடிப்பது அவரது வளர்சிக்கு மிக முக்கியம்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
=========================
பிலாசபி பாண்டி..
பிளான் ஏ செயல்படவில்லை என்றால் கவலை வேண்டாம்...பி, சி,டி,இ, என்று இன்னும் 25 லட்டர் இருக்கின்றது...  தேவை முயற்சி மட்டுமே...
========
நான்வெஜ்18+
Why r women considered stronger than men ?
Ans: b’coz they carry 2 mountains on their chest whereas men carry just 2 stones with the help of crane!
=================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

 

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

8 comments:

 1. // “நான்வெஜ்18+” //
  எங்க இருந்து சார் இதையெல்லாம் பொறுக்கிறீங்க???

  பிலாசபி செக்சன் நல்லாயிருக்கு. பதிவுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. போட்டு தாக்குங்க..

  ReplyDelete
 3. நல்லதொரு பதிவு தலைவா

  தீயணைப்பு வீரர்கள் பற்றி பகிர்ந்த விடயங்கள் உண்மைதான்... செய் அல்லது செத்துமடி என்பது அவர்களுக்குத்தான் பொருந்தும். என் பிராத்தனையில் இனி அவர்களுக்கும் ஒரு இடம் ஒதுக்கி கொள்கிறேன்..

  ReplyDelete
 4. interesting post.
  Prayers to the fire fighters for their speedy recovery.

  ReplyDelete
 5. //
  ..காயம் பட்ட வீரர்கள் மற்றும் அந்த வீரப் பெண்மணி நலமுடன் திரும்ப நாம் அனைவரும் பிரார்த்திப்போம்...
  //
  Kandippaga....

  ReplyDelete
 6. தாங்கள் ’இந்தவார கடிதம்..’ நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி..! மீண்டுமொறு முயற்சியுடன் (அனேகமாக ஆனந்ததொல்லை..) சந்திக்கிரென்..!

  நட்புடன் கட்டதொர

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner