ராணி பத்திரிக்கையில் எனது பேட்டி...
நாம் எழுதிய  கதையோ அல்லது  கட்டுரையோ ஒரு பத்திரிக்கையில் வந்தால் எவ்வளவு  சந்தோஷமாக இருக்கும்...அந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை...


நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் போது,ஒரு பதினைந்து பைசா போஸ்ட் காட்டில் கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா மேம்பாலம் ஏறும் இடத்தில் சிக்னல் அவசியம் தேவை என்பதை எங்கள் ஊர் கடலூர் எடிஷனில் வரும் தினத்தந்தி பத்திரிக்கையில் நகர்வலம் பகுதியோ அல்லது புகார் பெட்டியோ ஏதோ ஒரு பகுதியில் எழுதி போட்ட விஷயம், பிரசுரமாகி இருந்தது...

முதல் முதல் எனது எழுத்தை அங்கீகரித்தது தினத்தந்திதான். அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. அந்த பேப்பரை எடுத்துக்கொண்டு காண்பிக்காத ஆள் இல்லை... என் அம்மாவுக்கு பெரிய சந்தோஷம்..ஒரு போஸ்ட்கார்டில் எவ்வளவு சின்னதாக எழுத முடியோமோ அந்த அளவுக்கு சின்னதாக எழுதுபவன் நான்.. அது பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யாமல் வெளியாகி இருந்தது...கீழே... தனசேகரன் கூத்தப்பாக்கம்.... என்று வெளியானதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அதை விட பெரிய மகிழ்ச்சி என் அம்மாவுக்கு....

அதன் பிறகு  குமுதம் ரிப்போர்ட்டரில் பயரிங் ஸ்பாட் என்று ஒரு பக்கம் வரும் அதில் நான் எழுதிய பல சமுக பிரச்சனைகள் வந்து இருக்கின்றன... சில கட்டுரைகள் தான் எடுத்து வைத்து இருக்கின்றேன்.. முக்கியமாக நான் புகைபடங்களோடு சமுக பிரச்சனைகள் எழுதி அனுப்புவதால், அவைகள் பிரசுரமாகி இருக்கின்றது...

அதன் பிறகு  இந்த வலை பக்கத்தை ஆரம்பித்த பிறகு பத்திரிக்கைக்கு எழுதுவது குறைந்தே போய் விட்டது... சிறு வயதில் எனது மாமா சுந்தரராமன் இரண்டு புத்தகங்கள் தொடர்ந்து  வாங்கி வருவார்.. ஒன்று ராணி மற்றது  அம்புலிமாமா,ராணி பத்திரிக்கை அப்படித்தான் பழக்கம்... குரங்கு குசாலாவும் அன்புள்ள அல்லி கேள்வி பதில்கள் ரொம்பவும் பேமஸ் முக்கியமாக அன்புள்ள அல்லி  கேள்விபதில்கள் நடிகர் நடிகையர் பற்றிய கேள்விகளாக இருக்கும் அதை படித்து படித்து  சிரித்துக்கொண்டு இருப்போம்...

போன வருடத்தில் சின்னதுரை என்ற நண்பர் பேசினார்.. உங்கள் தளம் வாசித்தேன்.. ராணியில்  நான் நிருபராக இருக்கின்றேன்.. காதல் திருமணம் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் எதில்  பிரச்சனை அதிகம்.. அதே போல உங்கள் காதல் கதையை  சொல்லுங்கள் என்றார்..

அதன் பிறகு  அந்த அந்த கட்டுரையை எனக்கு பிடிஎப் பைலாக அனுப்பி இருந்தார்.. சில திருத்தங்களை சொன்னேன்.. அதன் பிறகு மறந்து போனேன்... நேற்று முன்தினம் புத்தாண்டு நல்வாழ்த்துகளை எனக்கு  சொல்லிவிட்டு பேட்டி எடுத்த கட்டுரை  நாளை ராணி பத்திரிக்கையில் வருவதாக தகவல் தெரிவித்தார்...

இன்று காலையில் ராணி புத்தகம்  வாங்கி பார்த்த போது  சந்தோஷத்தில் மனம் துள்ளியது.. 8/01/2012 இதழில் பக்கம் 32/33 ல் வெளிவந்து இருக்கின்றது...மூன்று மாத குழந்தையாக யாழினியை பெங்களுரில் இருந்து சென்னைக்கு அழைத்துக்கொண்டு வரும் போது ஓசூர் தாண்டியது பெட்ரோல் பங் கம் மெக்டொனால்டு ஓட்டலில் நிறுத்துவார்கள்..அப்போது எடுத்து புகைப்படம் அது.. ராணி நிருபர்  சின்னதுரைக்கு எனது நன்றியும் அன்பும்..


புத்தகத்தை எடுத்து வந்து  போட்டோவை  ஒன்பது மாத யாழினியிடம் முதலில் காட்டினேன்..போட்டோவை தொட்டு மிக உற்சாகமாக.. சிரித்தாள்..


காலையில் இருந்து பத்திரிக்கையில் எனது  குடும்ப  போட்டோவை பார்த்து விட்டு சென்னையில் இருக்கும் பழைய நண்பர்கள் இரண்டு பேர் போன் செய்து அதற்குள் வாழ்த்து சொல்லிவிட்டார்கள்..

என் அம்மா இந்த கட்டுரையை படித்து இருந்தால் ரொம்பவே சந்தோஷப்பட்டு இருப்பாள்....அவள் இதை பார்த்து இருந்தாள் என்ன ரியாக்ஷன் கொடுத்து இருப்பாள் என்பதை என் கற்பனையில் கண்டு விட்டேன்..24 வருடங்கள் அவளோடு சுற்றிக்கொண்டு இருந்தவனுக்கு அவள் என்ன ரியாக்ஷன் கொடுத்து இருப்பாள் என்பது எனக்கு தெரியாதா ? என்ன?? அவள் உயிரோடு இருக்கும் போது தமிழகத்தில் புதிய அறிமுகம் ஜனுன், சுவாபிமான்,சாந்திதான்..செல்போன் எல்லாம் அப்போது இல்லை.. 

இப்போது அவள் இருந்து இருந்தாள் என் அம்மா வைத்து இருக்கும் செல்போன் எண்ணுக்கு இன்று ஒருநாள் மட்டும் 500ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து இருக்க வேண்டும்.. என்ன??அந்த கொடுப்பனை எனக்கு இல்லாமல் போய் விட்டது...அவள் ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் உண்டு என்று எனக்கு தெரியும்....பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

33 comments:

 1. அருமை...புதுவருடம் அமர்க்களாய் ஆரம்பித்திருக்கிறது உங்களுக்கு..வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. புத்தாண்டில் மகிழ்வான செய்தி சொல்லியிருக்கீங்க நண்பா. உடன் ராணி வாங்கிப் படிச்சுடறேன். இன்னும் பல பத்திரிகைகள்ல உங்க படைப்புகள் வரணும், அதைப் பார்த்து நான் மகிழணும்னு வாழ்த்தறேன் சேகர்!

  ReplyDelete
 3. வாழ்த்துகள் சார். சந்தோசமான தருணங்கள்.

  ReplyDelete
 4. vilipunarvu katuraigal niraya eluthungal jackie anna

  ReplyDelete
 5. Blog la Raja Jackie photo Rani Book la vandhirukku........

  ReplyDelete
 6. இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 7. புது வருடத்தில் நல்ல சேதி, வாழ்த்துகள்

  ReplyDelete
 8. வாழ்த்துகள் அண்ணா...

  ReplyDelete
 9. வாவ்.. வாழ்த்துக‌ள்.. ஒருவார‌ம் க‌ழிச்சி அந்த‌ பேட்டிய‌ அப்ப‌டியே இங்க‌ போட்டுவிடுங்க‌. நாங்க‌ளும் ப‌டிச்சிக்குறோம்.

  ReplyDelete
 10. Best of Luck thala innum pala sathanaigal seya un ammavin asirvatham thunai nirkum iraivanai pirarthhikiren un nalanukakga

  nandri valthukla

  R. Vadivelan

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் பங்காளி...

  ReplyDelete
 12. அம்மாவின் அன்பை மறவாமல் வாழும் மகன் என்றும் நல்வாழ்வே வாழ்வான். யாழினி உங்களை அம்மா போல் பார்த்துக்கொள்வாள் பாருங்கள்.. வாழ்த்துக்கள்.
  Follow me @iThamilachi

  ReplyDelete
 13. சந்தோஷமான செய்தி. வாழ்த்துகள். ராணி இதழை கூரியர் செய்ய சொன்னால் டென்ஷன் ஆவார்கள். கடையில் கேட்டுப்பார்க்கிறேன். கிடைக்காவிடில் பார்சல் அனுப்புக. இல்லாவிடில் போரூர் போர்க்களம் ஆகும். :-)

  ReplyDelete
 14. காதல் திருமணம் செய்பவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை மிக அழகாக சொல்-யிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 15. வாழ்த்துகள். உங்கள் குழந்தைக்கும் சொல்லிவிடுங்கள்..

  ReplyDelete
 16. தொடரட்டும் உங்கள் எழுத்து ...

  ReplyDelete
 17. மகிழ்ச்சி ஜாக்கி அண்ணா, உங்கள் கட்டுரையின் பலமே சிம்பிளாய் படிப்பவர்களை நெகிழ வைத்து விடுவீர்கள்.

  ReplyDelete
 18. இந்த வருசத்துல முதல் நாளே அமர்க்களம் பண்ணியாச்சா.. நீங்க நடத்துங்க அண்ணே, நாங்க இருக்கோம்..

  தம்பி,
  ஈரோடு

  ReplyDelete
 19. ஆகா ஜாக்கி அண்ணே இன்னைக்கு தான் இந்த செய்தியை பார்த்தேன், வாழ்த்துகள். சுத்திப்போடுங்க அண்ணே, கண்ணு பட்டுறபோகுது.

  ReplyDelete
 20. ஆகா ஜாக்கி அண்ணே இன்னைக்கு தான் இந்த செய்தியை பார்த்தேன், வாழ்த்துகள். சுத்திப்போடுங்க அண்ணே, கண்ணு பட்டுறபோகுது.

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் ஜாக்கி.

  ReplyDelete
 22. புது வருடத்தில் நல்ல சேதி. வாழ்த்துகள் ஜாக்கி.

  ReplyDelete
 23. மூன்று மாத குழந்தையாக யாழினியை பெங்களுரில் இருந்து சென்னைக்கு அழைத்துக்கொண்டு வரும் போது ஓசூர் தாண்டியது பெட்ரோல் பங் கம் மெக்டொனால்டு ஓட்டலில் நிறுத்துவார்கள்..அப்போது எடுத்து புகைப்படம் அது..

  யாழினியை ஈன்ற போழ்து உவந்ததைப்போல ராணி இதழில் தங்களுடைய பேட்டிக்கட்டுரையை பார்த்ததும் உவவகை கொண்டு உள்ளீர்கள் ! எங்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி ! அந்த‌ பேட்டிய‌ அப்ப‌டியே இங்க‌ போட்டுவிடுங்க‌. நாங்க‌ளும் ப‌டிச்சிக்குறோம்.

  ReplyDelete
 24. தல, ராணி பத்திரிக்கையை வாங்கி உங்க பேட்டியை படித்தேன். என் வீட்டாரிடமும் உங்களை அறிமுகபடுத்தினேன். உங்கள் தளத்தை பற்றி Big FM இல் சொன்னதாக சொன்னார்கள். படிக்கின்ற பெண்ணின் மனதை கெடுக்காத உங்கள் தன்மை எனக்கு பிடிச்சிருக்கு. உங்கள் காதல் வெற்றி பெற்றது போல உங்கள் வாழ்க்கையும் வெற்றி பெரும். யாழினி குட்டி பாப்பா ரொம்ப அழகா இருக்கு. வீட்ல சொல்லி சுத்தி போட சொல்லுங்க. வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner