சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/வியாழன்/12/01/2012

ஆல்பம்..

கடலூர் மக்கள் வேண்டுவது மின்சாரம் மட்டுமே...புயல் கடந்து 13 நாட்கள் ஆகிவிட்டது..ஆனால் இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை...



தமிழக முதல்வரின் வேகமான மக்கள் நலப்பணியை  பார்த்து நெஞ்சம் நெகிழ்கின்றது..சுனாமியில் அவரின் பணி பாராட்டதக்கது என்பதை மறுப்பதற்க்கு இல்லை ஆனால் கடலோரம் மட்டுமே மக்கள் வசிப்பதில்லையே...

புயல் 30ஆம் தேதி கடலூரில் கரையை கடந்தது..
புவியீர்ப்பு விசைக்கு எதிர் திசையில் இது நாள் வரை இருந்து வந்த...45 ஆயிரம் மின்கம்பங்கள்,85ஆயிரம் தென்னை மரங்கள் புவியீர்ப்பு விசைக்கு எதிர்ப்பில்லாமல், அம்மாவின் அமைச்சர்கள் போல சாஷ்டாங்கமாக பூமியில் விழுந்துநமஸ்கரித்துக்கொண்டு இருக்கின்றன என்றால் புயல் சேதத்தை கணக்கு போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்..

கலைஞர் கிளம்புகின்றார் என்றதும் தானும்  ஹெலிகாப்டரில் கிளம்பி எந்த பாதித்த மக்களையும் நேரில் சந்திக்காமல் சென்னைக்கு கிளம்பி வந்தார்..
முதலில்..1500 பேர் 45,000 மின்கம்பத்தை சரி செய்ய போதும் என்று நினைத்தார்.. பிறகு 1500 பேர் கூடுதலாக சேர்த்தார்.இப்போது திரும்ப 5000 பேர்களை சேர்த்து இருக்கின்றார்.பொங்களுக்குள் மக்களுக்கு மின்சாரம் கிடைக்க வேண்டும். என்று உத்தரவு போட்டு இருக்கின்றார்.. வாய்ப்பே இல்லை என்று கடலூர்வாசிகள் சொல்லி வருகின்றார்கள்..

புயல் கடந்து 12 நாட்களுக்கு பிறகு பொதுமக்களிடம் முதலைமைச்சர் நிவாரண நிதி  கோரி இருக்கின்றார்.. செமையான வேகம்...கடலூருக்கு இந்த முறை இருட்டு பொங்கல்தான்..
===============
ஏற்கனவே பென்னிகுக் சிலை திமுக அட்சியின் போது மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் திறந்த வைத்தாலும்....முதல்வர் ஜெ...லோயர் கேம்பில் பென்னிகுக் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணியை பாராட்டியே ஆகவேண்டும்.. இன்னும் வளரும் சமுதாயத்தினருக்கு அறியும் வகையில் பென்னிகுக்  அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் முல்லைபெரியாறு அணை கட்டிய வலி நிறைந்த, விடாமுயற்சியையும்.. தமிழக பிள்ளைகள் படித்து பயண்பெற பாடத்திட்டமாக வைத்தால் அம்மாவின் சாதனைகளில் இது நிரந்தரமாக இடம் பெறும்... எது எப்படி இருந்தாலும் இந்த அறிவிப்புக்கு முதல்வரை மனம் விட்டு பாராட்டுவோம்...

============
இப்போதைக்கு நான் எதிர்பார்க்கும் படம் மகேஷ் பாபுவின்.. பிசினஸ்மேன்தான். பார்ப்போம் போக்கிரியை பீட் செய்கின்றதா என்று??



=============
மிக்சர்.
ஆட்சிக்கு வந்த உடன் தமிழகத்தில்  உள்ள ரவுடிகள் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடி விட்டார்கள் என்று முதல்வர் அறிக்கை விட்டார்..விடுமுறை முடித்து கொண்டு, திரும்ப வந்து விட்டார்கள் என்பதை தினசரிகள்  தினமும் தெரிவிக்கின்றன..திரும்ப  எப்போது ஆந்திராவுக்கு ஓடப்போகின்றார்கள்  என்பது தெரியவில்லை...
=============
கிஸ்கால் கம்பி விளம்பரத்தில் மூன்று சின்ன ஸ்டெப்பில் நெஞ்சை டமால் என்று நிமிர்த்தி, நமீதா கம்பி பற்றிய கட்டுமான பலத்தை சொல்லும் போது, கிஸ்கால் கம்பி மீதான பலத்தின் மீது நம்பிக்கை வைக்காமல் இருக்க முடியவில்லை... அதே போல சின்தால் சோப்பை மொட்டை மாடியில் கையில் வைத்துக்கொண்டு அந்த சோப்பை பார்த்து சிரிப்பதை பார்த்தால் நமக்கு  அந்த பெண்மேல் பரிதாபம் வருகின்றது-
==========
திருமணம்ஆகி மனைவியோடு சந்தோஷமாகி இருக்கும் ஒருவனை கரம் பிடித்தே தீருவேன் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, வெறித்தனமாக அலையும் சாரு என்ற கேரக்டர் தென்றல் சீரியலில் வருகின்றது.. அது போன்ற ஒரு உயர்ந்த நோக்கத்தோடு இருக்கும் பெண்ணை நான் இதுவரை சந்தித்ததே இல்லை..இதுக்கு எல்லாம் மச்சம் வேண்டுமோ? :-)))))))))))))
 ==============
 நக்கீரன் அலுவலகத்துக்கு மின்சாரம்,குடிநீர் போன்றவற்றை கட் செய்து இருக்கின்றார்கள்..அதிகாரிகள் சமீபத்தில் முதல்வன் படத்தை பார்த்து இருப்பார்களோ? சீரியஸ் டவுட்...
============
லக்கியின் நாவல்  அறிமுகம்.


இணையத்தில் வலம் வரும் தமிழ்வாசகர்களுக்கும், தமிழில் வெளியாகும் வலைப்பதிவுகள் (ப்ளாக்) பற்றி அறிந்தவர்களுக்கும்பரிச்சயமான வலைத்தளத்துக்குச் சொந்தக்காரர், லக்கிலுக் என்று அறியப்படும் யுவகிருஷ்ணா.தமிழுக்கு இணையம் தந்துகொண்டிருக்கும் இளம் எழுத்தாளர்களில் ஒருவர். இளமை ததும்பும் சுவாரசியமானஎழுத்து நடையால், இணையத்தில் வசீகரித்து வரும் இவரது 'அழிக்கப்பிறந்தவன்'என்ற நாவலை,புத்தகக் காட்சிக்குசென்று திரும்பும் பதிவர்களிடம் பார்க்க முடிகிறது. 'திருட்டு விசிடி'யை மையமாகக் கொண்ட விறுவிறுகதை, 'படுவேகமான த்ரில்லர் வகையறா' நாவல் என சக பதிவர்கள் சான்று கொடுத்து வருகின்றனர். வெளியீடு : 'உ' பதிப்பகம்விலை : ரூ.50

விகடன் செய்திகளில்  நேற்று பார்த்தேன் இந்த பத்தியை....... பிரபல பதிவர், எழுத்தாளர் லக்கி என்கின்ற யுவகிருஷ்ணாவின்புதிய நாவலை அறிமுகபடுத்தி இருக்கின்றார்கள். தம்பி அப்துல்லாவும் பாராட்டி இருக்கின்றார்...நாவலை வாங்கிடவேண்டியதுதான்.... வாழ்த்துகள் லக்கி..



==========
 எங்கே இருக்கின்றது இந்த இடம் என்று தெரியவில்லை ஒரு வாரத்துக்கு சோத்து மூட்டை கட்டிக்கொண்டு குடும்பத்ததோடு போய் இறங்கிவிடவேண்டும்.. என்ற ஆசை படத்தை பார்க்கும் போதே தோன்றுகின்றது...இணையத்தில் பகிரபட்டபடம்..





=================


பிசினிஸ்மென் டிரைலர்...



 ================
பிலாசபி பாண்டி.
ஒரு நிமிடம் ஒரு போதும் உன் வாழ்க்கையை மாற்றப்போவதில்லை,ஆனால் ஒரு நிமிடத்தில் நீ எடுக்கும் சில முடிவுகள்  உன் வாழ்க்கை ஸ்டைலையே மாற்றி விடும்..
=========


 பீர் அடிச்சா மட்டும் இல்லை...பீப் சாப்பிட்டாலும் தொப்பை விழும்..ஒரு தகவலுக்கு சொன்னேம்பா.. வேற எந்த உள்நோக்கமும் இல்லை..
=============
நான்வெஜ்18+

 A Boy pulls down his pant & ask a girl ” do u have this ?”
Girl lifts her skirt, slips the panty & says,”My mom says if u
have this u can get plenty of those…………….! “
===============
 நண்பர்கள் அனைவருக்கும்   இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..2012




 =========
 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



  நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

10 comments:

  1. //திருமணம்ஆகி மனைவியோடு சந்தோஷமாகி இருக்கும் ஒருவனை கரம் பிடித்தே தீருவேன் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, வெறித்தனமாக அலையும் சாரு என்ற கேரக்டர் தென்றல் சீரியலில் வருகின்றது..//

    Almost all TV Serials in India are related to adultery.

    No surprises here.

    ReplyDelete
  2. அண்ணே, அந்த படத்தில் இருக்கும் இடம் Turnip Rock என்று அழைக்கப்படுகின்றது. Lake Huron - வட அமெரிக்காவில் இருக்கு.

    ReplyDelete
  3. என்ன ஜாக்கி அண்ணே,
    டைம் இல்லையா? வழமையான மினக்கிடல் இல்லையே. ஃபேஸ்புக்ல பகிர்ந்ததையே போட்டு உங்க வாசகர்கள ஏமாத்த பார்க்கிறீங்களா?

    ReplyDelete
  4. //திருமணம்ஆகி மனைவியோடு சந்தோஷமாகி இருக்கும் ஒருவனை கரம் பிடித்தே தீருவேன் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, வெறித்தனமாக அலையும் சாரு என்ற கேரக்டர் தென்றல் சீரியலில் வருகின்றது..//

    ithu kuda pravala saar...aduthavan pondatiya epdi lavutikitu porathunu oru aalum oru ponnum plan panuvanga.... antha nadagam vera ethuvum numma rathika edukira "chellamey" serialthaan

    ReplyDelete
  5. Turnip Rock - ஐ விட எனக்கு அதிகம் பிடித்தது Blue Lagoon படத்தில் வரும் தீவு. கல்யாணம் முடிந்து குறைந்த பட்சம் ஒரு வருடமாவது யாருடைய தொந்தரவும் ( சினிமா, அரசியல், செல்போன், கணிப்பொறி ) இல்லாமல் அங்கே வாழ ஆசை. அந்த வாழ்க்கை மச்சமே உடம்புமொத்தல் உள்ள ஆதிவாசிக்குத்தான் அமையும் போல...

    ReplyDelete
  6. நண்பரே
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
    நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    தமிழர் வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையோடு..

    ReplyDelete
  7. http://www.facebook.com/pages/Jackie-Sekar-FANS-PAGE/169409519825863

    ReplyDelete
  8. dear jackie
    chaaru -- thendral just in serial only but have not you come across --- nayanthaara and radhika sarathkumar they have done in real life ?!!? what else shall i say ? hope everybody knows this just sharing
    anbudan
    sundar g (rasanai)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner