இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..2012 கடந்த கால புத்தாண்டுகளில் வெளியில் சுற்றுவதும் தொழில்நிமித்தமாய் ஏதாவது  ஒரு புத்தாண்டு விழாவில் போட்டோ எடுப்பதுமாக அன்றைய புத்தாண்டு கழியும்..


 சில  நேரங்களில் வேலை இல்லையென்றால்  வெளியே சென்று இருக்கின்றேன்.. திருமணத்துக்கு பிறகு எங்கேயும் தனியாக போக முடியவில்லை.. மனைவியை  தனியாக விட்டு விட்டு செல்லவும் மனமில்லை..

யாழினி பிறந்த பிறகு எங்கேயும் நகரவே முடியவில்லை..

காலையில்  நன்றாக தூங்கி கொண்டு இருந்தோம்.. யாழினி வெகு சீக்கரத்தில் எழுந்து விட்டாள்..எழுந்து அவள்  பாட்டுக்கு விளையாடிக்கொண்டு இருந்தாள்... அவள் அம்மா எழுந்ததும் அவளிடம் போய் விளையாடிக்கொண்டு இருந்தாள்..

கிருஸ்த்துவர்களின் பெந்தகொஸ்த்தே சபையில் அன்னிய பாஷை என்று ஒரு புரியாத பாஷை பேசுவார்கள்.. அது போல யாழினி தற்போது பேசிக்கொண்டு இருக்கின்றாள்........

சில நேரங்களில் அப்பா ,அம்மா என்று சொல்லியிருந்தாலும் அது ஓரு காற்றில் பறக்கும் நீர்குமிழ் மேல் கவனம் வைக்கும் போதே உடைந்து விடுவது போல, சட்டென  அவள்  சொல்லி விட்டு சொல்லாதது போல ரியாக்ஷனில் அவள் பாட்டுக்கு விளையாடிக்கொண்டு இருப்பாள்.......


இன்று காலை அவள் அம்மாவிடம்  விளையாடிக்கொண்டே இருந்தாள்..சட்டென, இரண்டு முறை அம்மா ம்மா என்று சொன்னாள்... என் மனைவிக்கு பெருமை என்னை பார்த்த பார்வையில் ஒரு  சின்ன கர்வம்...மனைவி மேல் எனக்கு பொறாமையாகவும் இருந்தது...அடுத்து நடந்த நிகழ்வை என்னால்  நம்பவே முடியவில்லை...யாழினி மெல்ல திரும்பினாள் என்னை பார்த்தால் அவள் அம்மா மீது உட்கார்ந்து கொண்டு உற்சாகத்தில் குதித்துக்கொண்டே என்னை பார்த்து விட்டு, அப்பா என்று  அழுத்தம் திருத்தமாக சொன்னாள்...

காலையில் இருந்து  அந்த நிகழ்வை தெளிவாக அப்பா அம்மா என்று அழைக்கும் இந்த 2012 புத்தாண்டு முதல் நாளான இன்றைய நாளை,என்னால் மறக்கவே முடியாது.. திரும்ப திரும்ப நினைத்துப்பார்த்துக்கொண்டே இருக்கின்றேன்... மனது நெகிழ்ச்சியாக இருக்கின்றது....2012


பதிவுலக நண்பர்கள் வாசக நண்பர்கள்.. அத்தனை பேரின் குடும்பத்தினருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2011


மொபைல் போனில் எர்டெல்  போன்ற பிக்காலி நெட்வொர்க் பசங்களின் பணத்தாசையும் மீறி...எஸ்எம்எஸ் மூலமாக வாழ்த்து செய்திகள் குவிந்து கிடக்கின்றன..மெயிலிலும் அப்படியே  உங்கள் அத்தனை பேரின் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.... என் மீதான பொறாமைக்கு காரணம், எனக்கு இப்படி இருக்கும் நண்பர்கள் கூட்டம்தான் என்பதை எனக்கே புரிய வைத்து இருக்கின்றீர்கள்..

எல்லோருக்கும் வரும் காலங்கள் அனைத்தும் வசந்த காலமாய் மாற  எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


 
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

24 comments:

 1. என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 2. அருமை. வாழ்த்துக்கள் அண்ணே

  ReplyDelete
 3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜாக்கி சார்.

  ReplyDelete
 4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஜாக்கி சார்.

  ReplyDelete
 5. என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 6. அம்மா.. .அப்பா...குழந்தையின் முதல் சொல்..அது அனுபவிக்கணும் - அந்த உணர்வு...எந்நாளும்........ மறக்கவே முடியாது.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
  எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 8. கொடுக்கக் கொடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருப்பது அன்பு ஒன்றுதான் சேகர். அதை நிறையப் பேரிடமிருந்து சம்பாதித்து வைத்திருக்கும் நீங்கள் பணக்காரன்தான். அந்த அன்பின் மிகுதியுடன் உங்களுக்கும் உங்கள் வீட்டினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். (குழலினிது யாழினிது என்ப யாழினி அப்பா என அழைத்த சொல் கேளாதவர்- இல்லையா சேகர்?)

  ReplyDelete
 9. புத்தாண்டு நல்வாழ்த்துகள் அண்ணே

  ReplyDelete
 10. வாழ்த்திக்கிறேன்ப்பா...
  அந்த ரெண்டு டம்ளர்ல ஒன்ன எனக்கி அனுப்பி வெய்க்கவும்.சரக்கோட.

  ReplyDelete
 11. யாழினியின் மனம் போல் சந்தோசமான
  கள்ளம் கபடம் இல்லாத நிறைவான
  வாழ்க்கை என்றும் தொடர என்
  மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 12. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. yenethu makalum thaatha sollkiral, athai solkiraal,pasithaal amma solkiraal, naan phone pesumpothu en manaivi appa sollu appa sollu endraal phone pidithu kadikkiraal, sila nerankalil appa sollvathaka solkiraal. my daugter akshara 7 months only,i waiting to here appa.......

  ReplyDelete
 14. என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 15. புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. மனமார்ந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்,

  ReplyDelete
 17. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 18. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 19. என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 20. Wish U Happy & Prosperous New Year to You and your family..............

  ReplyDelete
 21. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 22. // என்னை பார்த்து விட்டு, அப்பா என்று அழுத்தம் திருத்தமாக சொன்னாள்...//

  என்னை பெற்ற தாய், தந்தை
  என்னை தன் மகனாக,

  கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்
  என்னை தன் மாணவனாக,

  தொழில் அறிவு கொடுத்த குரு
  என்னை தன் சீடனாக,

  என் நன்றிக்குரியவர்கள்
  என்னை தன் நன்றிக்குரியனாக,

  நேசத்திற்க்குரிய என் மனைவி
  என்னை தன் கணவனாக ஏற்க மறுத்தாலும்,
  தன் உறவென்று என்னை சொல்ல
  விரும்பாவிட்டாலும் பரவாயில்லை,

  இவர்கள் அனைவருக்கும்
  ஏதாவது ஒரு வகையில்
  நான் வேண்டாதவன்!

  ஆனால்

  என் உயிர்களாகிய சக்ரிகா & அஸ்வின்
  இருவரும் என்னை "அப்பா" என்று சொல்ல தயங்கி
  "அப்பா"வை ஏற்றுக்கொள்ளாமல் போனால்

  (((ஒரு உடலில் உயிர் இருந்தும்
  எதுவும் செயல்படாத நிலையை
  "கோமா" என்கிறது மருத்துவம்)))

  அந்த நிலையில்தான் "அப்பா" இருப்பேன்.!

  என்றும் பாசமுடன்,
  "அப்பா"

  (இன்று வரை இதை என் குழந்தைகள் படித்ததில்லை. ஏன்னா அவங்களுக்கு Tamil படிக்க தெரியாது! ஹாஹா...ஹா...)

  ReplyDelete
 23. என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner