சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/திங்கள்/23/01/2012


ஆல்பம்...

அடிமேல் அடி விழுந்தா அம்மியும் நகரும் என்பது யாருக்கு பொருந்துகின்றதோ இல்லையோ? தமிழக அரசுக்கு கண்டிப்பாக பொருந்தும்....
சற்று நேரத்துக்கு முன்புதான் மக்கள் நலப்பணியாளர்கள்..13500 பேரை டிஸ்மிஸ் செய்தது தவறு என்று மீண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கொட்டு வைத்து இருக்கின்றது..   

எத்தனை பேர் கதறி துடித்தார்கள்.. எத்தனை பேர் அழுது துடித்தார்கள்..அவர்கள் கவலைக்கு இந்த உத்தரவு பெரிய அளவில் ஆறுதல் தரும்....எனக்கு தெரிந்து ஜெ, ஆட்சிக்கு வந்த ஆறுமாத காலத்தில் எந்த கேசிலும் அவர்கள் ஜெயித்ததாக வரலாறு இல்லை... எல்லா  இடத்திலும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் கண்டனத்தை பெறுவது தவறவில்லை..
===============

ஏற்கனவே 4500 மின் வாரிய பணியாளர்கள்.. இரவு பகல் பாராமல் தானே புயலால்  பாதிக்கபட்ட கடலூருக்கு மின்சாரம் வழங்க போராடி வருகின்றார்கள்..மேலும் இப்போது 2500 பேர் அவர்களோடு இணைய இருக்கின்றார்கள்.. இன்னும் பல கிராமங்களில் மின்சாரம் வரவில்லை...அமெரிக்க நண்பர் சொன்னார்... அமெரிக்காவா இருந்தாலும் புயல் என்றால் ஆறு நாள் என்றாலும் மின்சாரம் இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்றார்...இதோ இருபத்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.. இன்னும் மின்சாரம் கிராமங்களுக்கு கிடைத்த பாடில்லை...29 ம்தேதிக்குள் மின்சாரம் கிடைத்து விடும் என்று நம்பிக்கை வைத்து இருக்கின்றார்கள்.
========================
ஒரே ஒரு மாவட்டமான கடலூர்  மட்டும்தான் தானே புயலால் பாதிக்கபட்டு இருக்கின்றது.. இதுக்கே நிவாரணபணிகளில் மெத்தனமான  நிலைமை என்றால், தமிழ்நாடு முழுவதும்  பாதித்து இருந்தால் அடராமா? நினைக்கவே பயமா இருக்கு...
=====================
புதிய தலைமைசெயலகத்தை மருத்துவமணையாக  மாற்ற மத்திய அரசின் சுற்று சூழல்  அமைச்சகத்தின் அனுமதி பெற்றீர்களா? என்று  கேள்வி கேட்டு இருக்கின்றது. உச்சநீதிமன்றம். அதுவரை மருத்துமணையாக மாற்றும் பணிகளுக்கு தடை போட்டு இருக்கின்றது.. நான் முன்பே சொன்னது போல உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும்தான் தமிழகத்தில் ஆட்சி செய்கின்றன...
=============
மிக்சர்...
கடந்த இரண்டு நாட்களாக தானே புயலுக்கு பிறகு சொந்தஊர் கடலூருக்கு சென்றேன்.தானே புயலில் கோரத்தாண்டவத்தை எல்லா தென்னை மரங்களும் உணர்த்தின.. பல வருட புளிய மரங்கள் காலை கிளிப்பிக்கொண்டு சாய்து கிடைக்கின்றன.. பெரிய போர் நடைபெற்ற தேசத்தில் பயணிப்பது போன்ற ஒரு உணர்வு எனது நகரில் பயணிக்கும் போது எனக்கு ஏற்பட்டது...மரம் என்று சாலை ஓரத்தில் எதுவுமே இல்லை..இந்த கோடையை கடலூர்வாசிகள்  மிகுந்த எரிச்சலுடனே சந்திப்பார்கள். காரணம் வெயிலில்  இளைப்பாற எந்த மர நிழலும் இல்லை. கடலூரே வெக்கையில் தவிக்கின்றது... இன்னும் கிராம புறங்களில் இப்போதுதான் மின் இணைப்புகள் கிடைத்துக்கொண்டு இருக்கின்றன..தம்பி சிங்கை பதிவர் ரோஸ்விக் 40,000 பணம் அனுப்பி இருக்கின்றார்...அந்த பணத்தில் என்னமாதிரி உதவிகள் செய்வது என்பது குறித்து  நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கின்றேன். பதிவர்கள் யாராவது வாலிண்டியராக வர விருப்பம் இருப்பவர்கள் தெரிவிக்கவும்..அடுத்த புதன்கிழமைக்குள் உண்மையிலேயே பாதித்த மக்களுக்கு தேவையான உதவிகள் அந்த பணத்தில் என்ன முடியுமோ? அதனை உரியவர்களிடம்  கொண்டு சேர்ப்பேன்..நன்றி ரோஸ்விக்.

=============
சென்னை போன்ற பெருநகரங்களில் கள்ள நோட்டு கும்பல் தினமும் பிடிபட்டு வருவதாக செய்திகள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றன.. அதனால் பொதுமக்கள்.. ஆயிரம் ரூபாய் , 500ரூபாய் வாங்கும் போது கவனம் தேவை...
===============
லக்கியோட அழிக்கப் பிறந்தவன் இப்பதான் படிச்சி முடிச்சேன்...பட்டுகேட்டை பிரபாகர்,சுபா, எல்லாரையும் நினைவு படுத்தும் நடை...அப்துல்லா சொன்னது போல கோடியில சம்பாரிச்ச வாப்பா...அண்ணா சதுக்கம் பின்பக்கம் ஒதுங்கறது கொஞ்சமே கொஞ்சம் லாஜிக் இடிச்சாலும்.... என்னதான் பணம் அதிகம் இருந்தாலும் சில நேரத்துல ரோட்டுக்கடையில சாப்பிடற மாதிரி எடுத்துக்க வேண்டியதுதான்.,,
சிறுகதை எழுதுவது அரும்பு பூ கட்டுவது போல... அரும்பு பூ மட்டும்தான் களம்.. ஆனா நாவல் என்பது கதம்பம் கட்டுறது மாதிரி...நிறைய பூ சேர்த்து அழகா மாலையாக்கற விஷயம்.. லக்கி நல்லவே செய்து இருக்கின்றார்..
சென்னையின் கருப்பு பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கின்றார்.. அதுக்கான உழைப்பு நாவலில் தெரிகின்றது..முக்கியமா சினிமாவில் அதிகம் சம்பாதித்த பணத்தை காத்திக்கை வைத்து படம் எடுத்து படம் ரிலிஸ் ஆகாமலேயே திருட்டி வீசிடி வந்து  நொடிஞ்சி போன விகே ராமசாமி ஜயா பிரச்சனையை அழகா சேர்த்து இருக்கின்றார்...
கதைப்பாத்திரங்களோடு நாமும் பயணிப்பது இந்த நாவலோட பலம் என்பேன்..காரணம் நாவல் உண்மையான மனிதர்கள் பக்கத்தில் பயணிக்கின்றது..
ஜபார் வகையறாவை துப்பாக்கியால் போடுவதை லாஜிக் மீறல் என்று சொல்லுவேன்.....
மாடு  சிவப்பு சேலையை முட்ட வரும் போது வப்பா நடுவுல வந்து நின்னதும் சப்ஜக்ட்டுக்கு மத்தியில ஆப்ஜக்ட் நிக்கறதை நினைச்சு மாடு குழப்பியதை சொன்ன வரிகளில் நகைச்சுவை... அது போல பல இடங்களில் படிக்கும் போது புன்னகை பூக்க வைக்கின்றார்.....
வாழ்த்துகள் லக்கி......
======================
வரும் சனி ஞாயிறு உறவினர் திருமணத்துக்கு திருச்சியில் இரண்டு நாள் டேரா.... நல்லதம்பி போன்ற நண்பர்களை சந்திக்கப்போவதில் நிரம்ப மகிழ்ச்சி.
====================
விஜய்டிவியில்  நேற்று பிரண்டை போல யாருமச்சான் என்ற நிகழ்ச்சியை கோபி தொகுத்து வழங்கி கொண்டு இருந்தார்.. நடிகர் விஜய் உடன் 50 நாட்கள் அவரோடு  பணி புரிந்து இருக்கின்றேன்... அதனால் அவரின்  சின்ன சின்ன அசைவுகள் நிறைய கவனித்து இருக்கின்றேன்.. இயல்பிலேயே கூச்சசுபாவமான நபரான அவரிடம்  நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன.. அவரும் நிறைய சிரித்து மழுப்பினார்.. அதில் கொஞ்சம் கோபமும் இருந்ததை கவனித்தேன்.. அதே போல சிரித்துக்கொண்டே  கோபத்தை வெளிபடுத்தும் இன்னோரு நபர் நடிகர் தனுஷ்.... நிகழ்ச்சி முடிவில் கடைசியாக நடிகர் ஜீவா இந்த கோட்டை நீங்க மாத்தவே மாட்டிங்களா? என்று கோபியை  கலாய்க்க, விஜய் விழுந்து விழுந்து சிரித்ததை யாராவது கவனித்தீர்களா என்று தெரியவில்லை..? அந்த  மெல்லிய கோபத்தின் அந்த சிரிப்புதான் அவரின் வெளிப்பாடு.. காரணம்  கோபி சகட்டு மேனிக்கு அங்கே உட்கார்ந்து இருந்த  பலரை கலாய்த்துக்கொண்டு இருந்தார்..அவர் கான்ர் பண்ணியதை பார்த்ததும் பல செலிபிரட்டிகளுக்கு மகிழ்சி
======================
புதியதலைமுறை செய்தி சேனலில் நண்பேன்டா நிகழ்சியில் பேசும் பெண்மணி ஒருவர் எதிராளிகள் அமைதியாக பொறுமையாக கருத்தை முன் வைத்து பேசும் போது கூட, அவர் குரல் உயர்த்தி பேசுவது ஏன் என்று  தெரியவில்லை..
===============

பிலாசபி பாண்டி

அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்
செய்யப்பட்டவை அல்ல;
விடாமுயற்சியினால் தான்.
-சாமுவேல் ஜான்சன்.

=========
நான்வெஜ்18+
இதை இப்படி படிக்கறதுதான் சரி...

Little Boy: Dad, how was I born? Dad: Well, son your mom and I got together a "Yahoo"
 We set up a date via email and meat in cyber cafe and then your mom agreed to "Download Data"from my "Pen Drive".
 Just when I was about to "Transfer" We realised that non of us had "Installed" a "Firewall"
It was too late to hit "Delete" and ... Nine Months later A "POP- UP" window apprered saying "You Have Got A Male":)


============
 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

12 comments:

  1. நானும் “என் பிரண்டப் போல யாரு மச்சான்” நிகழ்ச்சியில் நீங்கள் கூறியதை அவதானித்தேன்.

    இந்த வார +18 ஜோக் அட்டகாசம். இன்னும் சிரித்துக் கொண்டே தான் கருத்திடுகிறேன். நன்றி சேகர் சார்.

    ReplyDelete
    Replies
    1. கவனித்தேன் என்று சுலபமாக சொல்லலாமே :)

      Delete
  2. //அவரும் நிறைய சிரித்து மழுப்பினார்.. அதில் கொஞ்சம் கோபமும் இருந்ததை கவனித்தேன்//
    சரியாக சொன்னீர்கள்.... பிரபுதேவாவுடன் கலந்துகொண்ட ஒரு பத்திரிகை சந்திப்பில் யாரோ ஒருவருடன் வெடித்து தீர்ப்பாரே, அதுபோல் கோபிநாத் வாங்கிகட்டப் போகின்றாரோ என் நினைத்து பயந்து கொண்டுதானிருந்தேன்.......

    ReplyDelete
  3. //உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும்தான் தமிழகத்தில் ஆட்சி செய்கின்றன...//உண்மை எத்தனை குட்டு பட்டாலும் திருந்த மாட்ராங்களே

    ReplyDelete
  4. துணுக்குகளான செய்திகள் எல்லாமே அருமையாக தொகுத்து கொடுத்துருக்கீங்க. நான்வெஜ் கலக்கல்.

    ReplyDelete
  5. ஜாக்கி சார்,

    "சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்" வழக்கம் போல சூப்பர்!

    ஒரு சிறிய மாற்றுக் கருத்து!

    நீங்களுமா ம.ந.பணியாளர்களுக்கு சப்போர்ட் பண்றீங்க?

    இவங்க மற்ற அரசு ஊழியர்களுக்கு (வேலை செய்யாததில்) எந்த விதத்திலும் குறைதவர்களில்லை. இவர்கள் கிராமங்களில் ஒரு புல்லை கூட புடுங்கி போட்டது இல்லை! அரசாங்கத்தின் one of the தண்ட செலவுகள்! எங்கள் கிராமத்து மக்கள் தங்கள் ம.ந.ப -வை பார்த்ததே இல்லை! வெறும் 13500 பேர்களின் கதறலை கவனித்த நீங்கள்,நம் தமிழ் நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள லட்ச கணக்கான மக்களை மறந்து இருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்!

    ReplyDelete
  6. அப்படியா....திருச்சியில் சந்திப்போம்..இரண்டு நாட்கள் எனக்கு அங்க தான் வேலை ..

    ReplyDelete
  7. விஜய் டி.வி நிகழ்ச்சி தொடர்பான உங்களின் அவதானிப்பு மிகச் சரி.
    தனுஷிடமும் அத்தகையதொரு இயல்புண்டுதான்.

    யுவாவின் 'அழிக்கப்பிறந்தவன்' வரவேற்க்கத்தக்க படைப்பு.
    மாடு சிவப்பு சேலையை முட்ட வரும் போது வப்பா நடுவுல வந்து நின்னதும் சப்ஜக்ட்டுக்கு மத்தியில ஆப்ஜக்ட் நிக்கறதை நினைச்சு மாடு குழம்பியதை கூறிய வரிகளை நானும் ரசித்தேன்.
    கதையின் அதிகமான இடங்களில் சினிமாவுடன் தொடர்புபடுத்துவதையும் சினிமா உதாரணங்களையும் கொடுத்திருப்பது ஒரு குறை.
    அதை அளவாக கையாண்டிருக்கலாம்.

    பிலாசபியும் அருமை

    நான்வெஜ்18+ அருமை.
    ஆமா எந்த தளத்தில் சுடுறீங்க?


    வாழ்த்துகள்
    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  8. வலைச்சரத்தில் இன்று இந்தப் பதிவினை அறிமுகம் செய்துள்ளேன். நேரமிருப்பின் வந்து பாருங்கள். தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
    http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_19.html

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner