(TIMES OF INDIA-CHENNAI )டைம்ஸ்ஆப் இந்தியா பத்திரிக்கை கஸ்டமர்கேர் அலங்கோலம்...



பொதுவாக  தனியார் நிறுவனங்களின் கஸ்டம்ர்கேர்கள் பாடவதிகள்தான் அதில் மறுப்பு எதும் இல்லை...
அரசு பொது துறை நிறுவனங்களின் கஸ்டமர்கேர்களின் போன்கள் எடுத்து பதில் சொல்ல மாட்டார்கள்.. அதுக்கு உதாரணம், பிஎஸ்என்எல்..

தனியார்  நிறுவனங்களின் கஸ்டமர் கேர்களுக்கு போன் செய்தால் எடுத்து பதில் சொல்லுவார்கள்.. ஆனால் சொன்னபடி நடந்து கொள்வது ரொம்பவும் அரிது.. அதுக்கு உதாரணம்.. ஏர்டெல் ,ஏர்செல், சன்டிடிஎச் போன்றவற்றை இதுக்கு உதாரணம் சொல்லலாம்...


ஆனால் இதில்  பிரபல ஆங்கில பத்திரிக்கையும் சேர்ந்து கொண்டது....  அது டைம்ஸ் அப் இந்தியா... போன வரும் ஜுன் மாதம் ஏழாம் தேதி ஒரு வருடத்துக்கு சந்தாதாரர் ஆனேன்.... ஆனால்  எனக்கு ஜனவரியில் இருந்தே பேப்பர் வரவில்லை.. கம்ளெயின்ட் ரிஜிஸ்டர் செய்தேன்...

மூன்று மாதமாக எனக்கு பேப்பர் வரவில்லை என்று மாச்சில் கம்ளயின்ட் செய்தேன். அவர்கள் மூன்று மாதத்துக்கு எக்ஸ்டன் பண்ணி கொடுத்தார்கள்.... ஆனால் நான் கம்ளெயின்ட் பண்ணியே மூன்று மாதத்துக்கு மேல் இருக்கின்றது.. இன்னும் எனக்கு பேபர் இல்லை.. குறைந்த பட்சம் என் செல்லில் இருந்து 50ரூபாக்கு மேல் போன் செய்து இருப்பேன்...

அதன் பிறகு  எங்க எரியா வொன்டர் ஆசோக் என்பவரது நம்பர் கொடுத்தார்கள்.. அந்த ஆளிடமும் பேசினேன்...அவனும் இதோ ஆதோ என்றுதான் சொன்னான்..... பேப்பர் வந்த பாடில்லை...

ஒருவருடம் சப்ஸ்கிரிப்ஷன்.. 275 ரூபாய் என்று நினைக்கின்றன்... ஆனால் போன் மட்டும் 50ரூபாய்க்கு மேல் பண்ணி இருப்பேன்....



இன்று சரி செய்து கொடுத்து விடுகின்றோம் என்பதே நேற்றைய வரையில் பதிலாக வந்தது.. ரொம்ப பிரஷர் கொடுக்க ஒரு மூன்று நாட்கள் மட்டும் பேப்பர் வந்தது..  அதுக்கு பிறகு வரவில்லை.. இப்போது போன் செய்து கேட்கும் போது ஜுன் ஏழாம் தேதியோடு உங்கள் ஒரு வருட கணக்கு முடிந்து விட்டது... புதிதாக நீங்கள் ஒரு வருடத்துக்கு கணக்கு துவங்க   வேண்டும் என்றார்கள்..

அப்போது நான் மார்ச்சில் இருந்து கம்ளெயின்ட் கொடுத்தேன்.. அதுக்கு முன்னாடியே மூன்று மாதம் பேப்பர் வரவில்லை... எனக்கு மொத்தம் ஆறுமாதம் பேபர் வரவில்லை என்றால்... வெண்டர் நம்பர் கொடுக்கின்றேன்.. பேசுங்கள் என்று சொன்னார்கள்.. நான் பேசிவிட்டேன்... ஆனால் இன்னும் வரவில்லை.. என் வீட்டுக்கு பேபர் வரவில்லை என்றால் நான் எதுக்கு அவர்களிடம் பேச வேண்டும் நீங்கள்பேசி வரவையுங்கள்.. அது என் வேலை ,இல்லை  என்று  சொன்னேன்... அதுக்குதான் உங்களுக்கு சம்பளம் கொடுத்து உட்கார வைத்து இருக்கின்றார்கள் என்றேன்.

ஒரு நிறுவனத்தை வளர்க்க இரவு பகல்பாராமல் ஒரு முதலாளி உயிரைக்கொடுத்து உழைக்கின்றான்.. ஆனால் இந்த அடிப்போடிகள் அந்த பெயரை கெடுக்கின்றன...

கஸ்டம்ர் கேரில்... பிரியா, லட்சுமி, என்ற இரண்டு பெண்கள்தான் எப்போது போன் எடுத்தாலும் பதில் சொல்லுவார்கள்.. தோ நாளைக்கு  சார்.... இன்னைக்கு முடிச்சிடறோம் சார் என்று சொல்லி சொல்லி  போனை வைப்பார்கள்.. நீங்கள்  ரெண்டு பேரும் நல்லகதிக்கே போக மாட்டிங்க... போன மாதமே எங்களால் முடியவில்லை என்று ஒருவார்த்தை  சொல்லுங்கள் விட்டு விடுகின்றேன் என்று சொன்னேன்.. ஏன் எனக்கு இன்று நாளை என்று நம்பிக்கை ஏற்படுத்துகின்றீர்கள்... சத்தியத்தில் இரண்டு பேர் படம் பார்க்க  போனாலே 300ரூபாய்  அதனால் எழவு கருமாந்திரம்  மொக்கை படத்துக்கு போனது போல்அப்படியே போயிடுச்சின்னு நினைச்சிக்கின்றேன் என்று சொல்லி  பார்த்து விட்டேன்... ஆனால் இதோ நாளைக்கு என்று காலம் தாழ்த்தினார்கள்..

சரி... இன்றைக்கு போன் செய்தால்.. என் நம்பரை பார்த்ததும் கட் செய்ய ஆரம்பித்தார்கள்.. சரி பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடுமா???

பத்து ருபாய்க்கு ஒரு ரூபாய் காயின் எடுத்துக்கொண்டு பொது தொலைபேசியில் இருந்து பேசினேன்.... உங்க மேலதிகாரியை கூப்பிடுங்க என்று சொன்னேன்... அவர் என் எரியாவின் வென்டர் சீப் நப்ர் தருவதாக சொன்னார்.. பெயர் சரன்யன் என்று சொன்னார்...அந்த நம்பரும்  பொய் நம்பர்....


ச்சே இப்படி கூட கஸ்டம்ர்கேர்ல உருப்படா வெட்டி எல்லாத்தையும் வேலைக்கு வச்சிக்குவாங்களா என்ன? இது பொய் நம்பர்.. என்று திரும்பவும் அதே பொது தெலைபேசியில் இருந்து போன் செய்தேன் அந்த நம்பரும் கட் செய்தார்கள்....


பயங்கர மன உளைச்சல்... நான் அலைந்து அலைந்து இன்னும் பொது தொலைபேசி தொலைபேசியாக போன் செய்து கொண்டே போலாம்.. ஆனால் பேசிக்கொண்டே அவர்கள் கட் செய்துவிடுவார்கள்.. ஆல்லது நாளைக்கு முடித்து விடுகின்றேன்.. என்று சந்தியம் செய்து விட்டு, செய்யாமல் விட்டு விடுவார்கள்... அவர்களுக்கு என்ன??? கடமை செய்யவே யோசிக்கும் நாட்டுமக்கள் நாம்....  சரி நேராக ஓஎம் ஆரீல் இருக்கும் அதன் அலுவவலகத்துகே போய் கம்ளெயின்ட் கொடுக்கலாம் என்று நினைத்தேன்... போக இரண்டு லிட்டர் வர இரண்டு லிட்டர் அதுவே 210ரூபாய் வந்து விடும் என்பதால் சராசரி இந்திய குடிமகன் எடுக்கும் முடிவை  நான் எடுத்து விட்டேன்...


அது.....

ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்.....


இந்த முடிவு மயிரை எடுக்க 50ரூபாய்க்கு மேல தண்டம் மற்றும் நேர விரயம்.. இதுதான் டைம்ஸ் அப் இந்தியாவின்  கஸ்டர்கேர் கொடுத்த புத்திக்கொள்முதல்..

இது போல பல சராசர மனிதர்களிடம் தனியார் கஸ்டமர்கேர்கள் இப்படி தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.... 98 ரூபாய் டிக்கெட்டுக்கு 100ரூபாய் கொடுத்து விட்டால்....கண்டக்டர் டிக்கெட் மட்டும் கொடுத்து விட்டு
நம் கண்ணை பார்க்காமல் சென்று விடுவாரே அப்படித்தான் இது.. என்ன எனக்காவது மனதில் இருப்பதை கொட் ஒரு இடம் இருக்கு... பட் மற்ற சாராசரிமனிதனின் கதை  கொடுமைதான்....

நல்ல புத்திக்கொள்முதலுக்கு மிக்க நன்றி டைம்ஸ்ஆப் இந்தியா சென்னை கஸ்டமர்கேர்....



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...




========================

11 comments:

  1. அது சரிதான் பூனைக்கு யார்தான் மணி கட்டுவது
    கன்சியூமர் கோர்ட் எதற்கு இருக்கிறது

    ReplyDelete
  2. பாஸ்... நீங்க ஒரு சின்ன பிட்டை மட்டும் போட்டுருந்தீங்கன்னா, மறுநாளே எல்லாரும் வீடு தேடி வந்து நிப்பாங்க... அது என்னன்னா - "உங்களோட பேசிக்கிட்டு இருக்க இந்த அழைப்பை நான் மொபைல்ல ரெகார்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்... நாளைக்கு பேப்பர் வரலைனா நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி பணம் கறந்துடுவேன்... ஒழுங்கா பதில் சொல்லலைன்னு உன் வேலை போகும். இல்லாட்டி உன்னை வேலையில வச்சுக்கிட்டே, எனக்கு கொடுத்த பணத்தை எல்லாம் உன் சம்பளத்துல பிடிப்பான் உன் முதலாளி... உனக்கு எப்படி வசதி..." - இப்படி ரெண்டாவது அழைப்புலேயே சொல்லி இருந்தீங்கன்னா எல்லாம் ஒழுங்கா வாசல் தேடி வந்து சேர்ந்திருக்கும்...

    ReplyDelete
  3. @வித்தியாசமான கடவுள் இது ரொம்ப நல்ல யோசனையா இருக்குதே ?

    ReplyDelete
  4. Neengal innum indiyaraga irruka palagavillai.
    Sorry Try to be Indian then its common.

    ReplyDelete
  5. http://www.complaintsboard.com/bycompany/times-of-india-a1279.html

    ReplyDelete
  6. நந்தனம் சிக்னல் பக்கத்தில் இருக்கும் times of india அலுவலகத்துக்கு ஒருமுறை நேரில் போய் பாருங்களேன்...

    ReplyDelete
  7. வாடிக்கையாளர்களை மதியாதார் தலைவாசல் மிதிக்காமல் இருந்திடுவோம். ஆனால் உங்கள் பணம் போனதே!.. இப்படி ப்ளாக்கில் எழுதி அவர்கள் மானத்தை வாங்குவதைத் தவிர இப்போது வேறு வழியில்லை. அவர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த சுட்டியை அனுப்பி வைக்கவும்.

    ReplyDelete
  8. மன உளைச்சலை உங்கள் எழுத்தில் எழுதி சற்றே தணித்திருப்பீர்கள் என நம்புகிறேன். உங்களுடன் சேர்ந்து ஆதங்கப்படுவதில் பங்குபெறுகிறேன்.

    பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகும்... பகிர்ந்த துன்பம் பாதியாகும். இது உண்மையே. உங்கள் இன்பத்திலும், துன்பத்திலும் பங்குகொள்ள எத்தனையோ இணைய நண்பர்கள் உள்ளோம்.

    நன்றியுடன்

    நானே!

    ReplyDelete
  9. அய்யா ஜாக்கி, நான் போனவாரம் 300 ரூபாய் சந்தா கட்டியிருக்கேனே... அப்ப அவ்வள்ளோ தானா? அடப்பாவிகளா? கோவிந்தாவா?

    ReplyDelete
  10. இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை புத்தக கண்காட்சியில் டைம்ஸ் ஆப் இந்தியா சந்தா வாங்கினேன். வருடம் 250 ரூபாயில். இன்று வரை ஒரு நாள் தவறாமல் பேப்பர் வருகிறது. சென்ற மாதம் கூட 299 ரூபாய்க்கு செக் குடுத்தேன் பேப்பர் போடுபவரிடம். எந்த பிரச்னையும் இல்லை. உங்களுக்கு ஏன் இப்படி ஆகிறது என்று தெரியவில்லை. இதை விட்டுவிடாதீர்கள். தயவு செய்து ஆபிசுக்கு சென்று அவர்களை கிழியுங்கள். அப்போதாவது புத்தி வரட்டும்.

    ReplyDelete
  11. @Din Bab - அது எத்தனை பேருக்கு சரியா வேலை செய்யுமுன்னு தெரியலை... ஆனா என்னை ரெண்டாவது தடவை வாடிக்கையாளர் சேவையை அணுகும் படி செய்தால் முதலில் செய்வது அவர்களுக்கு ஒரு ரெண்டு பக்கத்துக்கு மின்னஞ்சல் எழுதுவேன்; அதற்கு பதில் வந்தும் பிரச்சினை சரியாக வில்லை எனில், அந்த பதிலுக்கு ஒரு பதில் எழுதி விட்டு, மறுநாளே, பதில் வந்தாலும் வராவிட்டாலும் அவர்களை அழைத்து, ஒரு 5 நிமிடம் தன்மையாய் பேசுவேன்... அப்போதும் திருப்தி இல்லாவிடில், கன்சூமர் கோர்ட் அஸ்திரம் தொடுத்தால், மறுநாள் வேலை முடிந்து விடும்... அதிகபட்சம் 10 நாட்கள் மட்டுமே இந்த மாதிரி விஷயத்திற்கெல்லாம் செலவிடுவது வழக்கம்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner