அன்பின் பட்டர்பிளை சூர்யாவுக்கு,
வணக்கம் வாழிய நலம்...
சென்னையில் இன்றளவும் மிக உரிமையாய் ஒரு சகோதரனுடன் பேசும் மனநிலையில், அது பொது விஷயமாக இருக்கட்டும் அல்லது பதிவுலக மேட்டராக இருக்கட்டும் அல்லது குடும்ப விஷயமாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் நான் மனம் விட்டு பேசும் பதிவுல நண்பர் நீங்கள்தான்..
சென்னையில் நீங்கள் யார் என்றே எனக்கு தெரியாது..ஆனால் நம்மை இணைத்தது இந்த பதிவுலகம்தான்...
சென்னையில் மூன்று வருடத்துக்கு முன் நடந்த உலகபடவிழாவில்தான் நாம் முதன் முதலாக சந்தித்தோம்....
கடந்த எட்டாவது உலகபடவிழாவில் நீங்கள் நான் உண்மைதமிழன் அண்ணன் என்று தொடர்ந்து படங்கள் பார்த்தோம்....நீங்களும் நானும் உலகபடங்களை விரும்பி பார்க்கும் நபர்கள்.,கடந்த உலகபடவிழாவை நீங்கள் மறக்க வாய்ப்பே இல்லை... காரணம் நடிகை அஞ்சலியோடு நீங்கள் நிற்கும் வரலாற்று சிறப்பு மிக்க படத்தை எடுத்ததேன்...நீங்கள் மகிழ்ந்தீர்கள்.அப்படி உலகபடங்களை தேடிபார்க்கும் ரகம் நாம் இருவரும்.
பிளாக் ஆரம்பித்து விட்டேன்.... தொடர்ந்து என்ன எழுதுவது என்ற கேள்வி என்னுள் எழுந்த போது எனக்கு நன்கு தெரிந்த சினிமாவை எழுதுவது என்று முடிவு செய்தேன்...
பார்த்தேதீரவேண்டியபடம், பார்க்கவேண்டியபடம், டைம்பாஸ்படம் என்று மூன்று பிரிவுகளில் பிரித்தேன்....நல்ல படங்களை மட்டுமே எழுதுவது என்று முடிவு செய்தேன்..
இன்று தமிழ்பதிவுலகில் நிறைய பேர் சினிமா விமர்சனங்களை எழுதினாலும் எனது சினிமா விமர்சனங்களுக்கு பதிவுலகில் ஒரு மவுஸ் இருக்கத்தான் செய்கின்றது என்பதனை மறுப்பதற்க்கில்லை...அந்த மரியாதையை பெற்று தர ஒருவகையில் நீங்களும் காரணம் என்பதை நான் மறக்கமாட்டேன்.
அந்த மரியாதைதான் கத்தாரில் இருந்து முன்னூற்றிஇருபது ஹார்ட்டிஸ்க்கை ஒரு ரசிகனின் பரிசாக என்னிடத்தில் வந்த்து...
காரணம் உங்கள் வார்த்தைகள்...
ஜாக்கி ஒரு படம் மொக்கைபடம்னு சொல்ல, எதுக்கு டைம மெனக்கடுறாங்கன்னு தெரியலை... அது டைப் அடிக்கறவனுக்கும் வேஸ்ட், படிக்கறவனுக்கும் வேஸ்ட் என்று நீங்கள் சொன்னது எத்தனை சத்தியமான வார்த்தை.
நானும் இதுவரை மொக்கை படம் எழுதியதில்லை...அப்படி ஒரு ஒத்த அலைவரிசை நம்மில் இருப்பதால்தான் நாம் இன்னும் நெருங்கினோம்..
நான் உங்கள் விமர்சனங்கள் படித்தாலும் ஒரு இடத்தில் கூட பெரிதாக நீங்கள் எந்த இயக்குனரையும் சாடியதில்லை..சினிமா ஒருகலை...அதை புரிந்தவர் நீங்கள்...
என்னிடம் நீங்கள் காட்டும் பாசம் அலாதியானது...ஒரு பெரிய பிரச்சனை... நான் கொட்டி தீர்த்து 100 பர்சென்ட் லோக்கல் என்று ஒருபதிவு போட்டேன்... அதில் நீ வெளிப்படையா எந்த கல்மிஷமும் இல்லாமல், 100% லோக்கல் பதிவில் நீ போட்ட பின்னுட்டம் கீழே...
========
ஜாக்கி , சில நாட்களாக ஊரில் இல்லை. பின்பு உடல் நிலை சரியில்லை. இன்றைக்கு தான் இந்த பதிவையே பார்க்கிறேன்.
இந்த பதிவுக்கு 48 ஒட்டு 112 கமெண்டா... அடப்பாவி.. கொடுத்து வச்சவன் நீ...
லூஸ்ல விடு.. வேலைய பாரு..
===============
என் மீதான உன் வெளிப்படையான பாசத்துக்கு இது ஒன்று போதும்...அதன் பிறகு எந்த பிரச்சனையாக இருந்தாலும் நிரறை
என் மனைவிக்கு வளைகாப்பை சிம்பிளாக முடித்து விடலாம் என்று நினைக்கும் போது என் மனைவி சமுகத்தின் பக்கம் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதனை சொல்லி அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொடுத்தீர்கள்..
என் சொந்த அண்ணன் அண்ணி போல வளைகாப்புக்கு வந்து விழாவை சிறப்பித்துக்கொடுக்க கேட்டுக்கொண்டேன்.. அன்று உங்கள் குடும்ப விழாவில் கலந்து கொள்ள சென்று விட்டதால் வரமுடியவில்லை என்று வருத்தம் கொண்டிர்கள்..
பெங்களுருக்கு போகும் போது சொல்லு ஜாக்கி...... குழந்தையை பார்க்கவரேன் என்று சொல்லி சொல்லி அந்த புரோகிராம் தள்ளி தள்ளி போனது...உன் மருமகள் சென்னையில்தான் இருக்கின்றாள்... அப்பாவிடம் ஆசி வாங்க குழந்தையை வரும் சனி ஞாயிறு கடலூருக்கு அழைத்து செல்கின்றேன்...உனக்கு நேரம் கிடைக்கும் போது போன் செய்து விட்டு வா....
எனக்கு இன்னமும் நம்ப முடியாத விஷயம் பதினோராம் வகுப்பு படிக்கும் பெண்ணும், ஏழாவது படிக்கும் பையனும் உங்களுக்கு இருக்கின்றார்கள் என்பதை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை...
முன்பு போல் இப்போது எழுத நேரம்கிடைப்பதில்லை என்று அன்று வருத்தபட்டீர்கள்.. திரும்ப எழுத வேண்டும்...
இன்னும் நிறைய உலகசினிமாக்கள் எழுதவேண்டும் என்பதே என் ஆசை...
யெயப்பா, மற்றும் ஓத்தா லவுடிகபால்.... என்ற இந்த இரண்டு வார்த்தைகளை நீங்கள் உச்சரிக்கும் அழகே அழகு....
உங்களுக்கும் அண்ணிக்கும், குழந்தைகளுக்கும் என் அன்பும் கனிவும்...
சூர்யா ஒரு வியப்பான விஷயம்....பாஸ்டன் ஸ்ரீராம் ஒரு வாரத்துக்கு முன் சாட்டில் வந்தான்... அடுத்து யாருக்கு மச்சி லட்டர் என்று கேட்டு விட்டு இது என்னுடைய கெஸ் என்று இரண்டு பேர் சொல்லி இருந்தான்... அதில் உங்கள் பேர் வந்தது... பெரிய ஆச்சர்யம்...நான் அப்படி இல்லை என்று ஜல்லியடிக்காமல் எந்த ஈகோவும் இல்லாமல் அவனிடம் ஒத்துக்கொண்டேன்..
நேரில் சந்திப்போம்....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
===============
நான் பழகிய வரை கூட சூரியா ஒரு (வெள்ளேந்தியான) நண்பர்களுக்கு நண்பர்! ஹைதராபாத் வரை வந்து சில km தூரத்தில் வந்துவிட்டு பின்பு வீட்டுக்கு வர முடியாமல் போனது எங்களிருவர் இடையே நடந்த ஒரு நிகழ்வு
ReplyDeleteஎனக்கும் அப்படியே.. நிறைய விஷயங்களை நானும் பொருத்திப் பார்த்துக்கொள்கிறேன். சூர்யாண்ணா நல்லா இருக்கிங்களா?
ReplyDeleteI Know I know ரகுவரன் ஸ்டைலில் படிக்கவும்
ReplyDeleteகும்க்கியுடன் உடன்படுகிறேன். சூர்யாவைப் பத்தி உயர்வா நினைக்க வச்சிக்கிட்டே வந்த இடுகைக்கு அந்த வரி திருஷ்டி போட்டு மாதிரி இருக்கு.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஜாக்கி, உன் அன்பிற்கு ஒரு அளவேயில்லை. தொடர்ந்து துரத்தும் வேலைப்பளு. பதிவுலகம் அலாதியானது. ரொம்ப மிஸ் பண்றேன். என்றாலும் விரைவில் வருவேன். பதிவுகளை தருவேன். Thanx da.
ReplyDeleteபாஸ்டன் ஸ்ரீராமை பார்க்க மிகவும் ஆவலாய் உள்ளேன். Waiting for you Sri...
ReplyDeleteஅன்பின் சூர்யா..
ReplyDeleteதொலைபேசி உரையாடல் / வெப்காம் சாட் எப்போ வேணாலும் சாத்தியம். நேரில் சந்திக்க ஜனவரி அல்லது மார்ச் வரை காத்திருக்கணும்.
கண்டிப்பா சென்னை வரும்போது சந்திக்கலாம்.
ஜாக்கியை ஒரு முறைதான் சந்த்திருக்கிறேன், ரெண்டாவது முறை உங்களுடன் சேர்ந்து சந்திப்பேன் என நினைக்கிறேன்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.