வில்லன் இரண்டு மூணு புல்டோசர் வச்சி ஒரு கிராமத்தை காலி செய்ய முயற்சி பண்ணறான்...
நிறைய வீட்டை இடிச்சி தரைமட்டமாக்கறான்... அப்ப வில்லன் காஜல் அகர்வாலை அடிச்சடறான்... காஜல் வாய்கிட்ட இருந்து ரத்தம் வருது...
சார் எங்க காஜலை எந்த பண்ணாடை சார் அடிச்சது????
தம்பி நீங்க யாரு...??
நான் காஜல் ரசிகன்.....
ஓ அப்படியா??, கூல் டவுன்.....
உம்.. எங்க விட்டேன்.... ம் வில்லன் காஜல் அகர்வாலை அடிச்சிடறான்... அந்த பொண்ணு கர்பம் வேற...வில்லன் கிட்ட ரேய்ன்னு தொடை தட்டாத குறையா அந்த பொண்ணு வசனம் பேசுது..
சார் எங்க காஜலுக்கு என்ன சார் ஆச்சு??? அவுங்க நடிக்கவும் செய்வாங்களா???
டேய் பண்ணாடை எதுக்குடா என் பின்னாடி வந்து கூவிகிட்டு இருக்கே.... இரு சொல்லறேன்...
காஜல் வயித்துல எட்டி உதைக்க போவும் போதுதான் சரியா ரவி தேஜா என்ட்ரி....
சார் அந்த ஆளு யாரு சார்...???
யோவ் அவருதான் இந்த படத்துல காஜல் புருசன்....
வந்ததும் இந்த மண்ணை அள்ளி போடறது,பள்ளம் தோண்டறது எல்லாத்தையும் செய்யுமே.. தும்பிக்கை போல வச்சிகிட்டு செய்யுமே?? அது பேரு என்ன??? சரி உனக்கும் தெரியலையா??,கேட்டர் பிள்ளர், ஜேசிபி ன்னு கூட சொல்லி கேள்விபட்டு இருக்கேன்.. அது எத்தனை டன் வெயிட் இருக்கும்?? அதை ஹீரோ வந்து உதைக்கும் போது அந்த ஜேசிபி மிஷின் தூள் தூளா ஆவதை பார்த்துட்டு அப்படியே மெரண்டு போயிட்டேன்... நீங்களும் மிரளுனும்னா... வீரா தெலுங்கு படத்தை பாருங்க....
======================
வீரா படத்தின் கதை என்ன?,
தெலுங்கு படத்தை பொருத்தவரை இரண்டு லட்சத்தி எழுபத்தி மூணாயிரம் கதைகளுக்கு மேல் வந்து இருக்கின்றது... சிம்பிளா சொல்லறேன்...ரவிதேஜா பதினெட்டு பட்டி கிராமத்துக்கும் பேன்ட் போட்ட நாட்டாமை.. அவுங்க ஊர்ல தெர்மல் பிளான்ட் கட்ட விவசாய நிலத்தை அபகரிக்க வருவதை எதிர்ப்பதால் அவர் சந்திக்கும் பிரச்சனைதான் படம்....
====================
படத்தின்சுவாரஸ்யங்களில் சில.....
முதல் பாதியில் பிரம்மானந்தாவோடு ரவிதேஜா அடிக்கும் லூட்டிகள் கல கல...
முதல் பாதியில் கொஞ்சம் லாஜிக் பார்த்து இருக்கின்றார்கள்...இரங்ணடாம் பாதியில் இது தெலுங்கு படம் எந்த மயிரான் லாஜிக் பத்தி கேட்பான்? பார்த்துடலாம்டா என்று நினைத்து படத்தை எடுத்து இருக்கின்றார்கள்..
ரவிதேஜா என்டரயில் மாஸ் மகராஜா என்ற பட்டத்தை டைட்டிலில் போடுகின்றார்கள்... உண்மைதான்... செமை மாஸ்...
படம் முழுவதும் கிளாமர் மற்றும் சின்ன சின்ன நகைச்சுவதைதான் ரவி படத்தின் பெரிய பலம்...
தமிழ் நாட்டாமை நடிகர் விஜயகுமார் பெண் ஸ்ரீதேவி திருமணத்துக்கு பின் நடித்து இருக்கும் படம் என்று எண்ணுகின்றேன்....சின்ன தெகிலான இடுப்பாக இருந்தவர் திருமணத்துக்கு பின் கொஞ்சம் பெருத்த இடுப்பாக காட்சி தருகின்றார்...
காஜல் அகர்வாலுக்கு தடிப்பும் ஆணவமும் அதிகரித்து விட்டது போலும்...தனக்கு அழகாக இடுப்பு இருப்பதை படம் முழுக்க காட்டி வருகின்றார்... முக்கியமாக அந்த கபடி சீன்....நிச்சயமாக கேமராமேன் லைட் போடாமல் ஹெல்ப் செய்து இருக்கின்றார்....பிரிவியூவில் கேமராமேனுக்கு காஜல் நன்றி சொல்லி இருக்க கூடும்...
டாப்சி... அவர் மேல் கொஞ்சமாக மரியாதை வைத்து இருந்தேன்.. அதையும் இந்த படத்தில் கெடுத்துக்கொண்டார்...எதுவும் இல்லாத......... சரி விடுங்க....
முதல் பாடலில் டாப்சி என்ட்ரி சாங் அருமை... அந்த மேக்கிங் கேமரா ஆங்கிள் லோகேஷன் அற்புதம்..
=================
படக்குழுவினர் விபரம்
Directed by Ramesh Varma
Produced by Ganesh Indukuri
Written by Parachuri Brothers
Starring
Ravi Teja
Kajal Aggarwal
Shaam
Taapsee Pannu
Music by Thaman
Cinematography Chota K. Naidu
Editing by Marthand K. Venkatesh
Studio Sanvi Productions
Release date(s) May 20, 2011
Country India
Language Telugu
Produced by Ganesh Indukuri
Written by Parachuri Brothers
Starring
Ravi Teja
Kajal Aggarwal
Shaam
Taapsee Pannu
Music by Thaman
Cinematography Chota K. Naidu
Editing by Marthand K. Venkatesh
Studio Sanvi Productions
Release date(s) May 20, 2011
Country India
Language Telugu
=======================
படத்தின் டிரைலர்
==============
தியேட்டர் டிஸ்கி
இந்த படம் பெங்களூர் ஆரக்கள் அருகே இருக்கும் சினிவாசா தியேட்டரில் நானும் மூவி கேலரி சங்கரும் பார்த்தேம்...
தியேட்டரில் மதிய காட்சிக்கு கனிசமான கூட்டம் இருந்தது...
குறைந்த செலவில் நீட்டாக படம் பார்க்க ஏற்ற தியேட்டர்
===============
பைனல்கிக்...
இந்த படம் டைம்பாஸ் படம்....இரண்டாம் பாகம் ரொம்ப இழுத்து தள்ளிவிட்டார்கள்... மசலாபடம்தான்.. கிளாமரும் இருக்கின்றது... ஆனால் கொஞ்சம் கத்திரி போட்டு இருந்தால் இந்த படம் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்....காஜல் எனக்கு பிடிக்கும் எங்க குலசாமிக்கு அடுத்து அந்த புள்ளையைதான் நான் கும்புடுவேன் என்று சொல்லுபவர்கள்... உடனே படத்துக்கு செல்லுங்கள்....
===============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
===========================
//வந்ததும் இந்த மண்ணை அள்ளி போடறது,பள்ளம் தோண்டறது எல்லாத்தையும் செய்யுமே.. தும்பிக்கை போல வச்சிகிட்டு செய்யுமே?? அது பேரு என்ன??? சரி உனக்கும் தெரியலையா??,கேட்டர் பிள்ளர், ஜேசிபி ன்னு கூட சொல்லி கேள்விபட்டு இருக்கேன்.. அது எத்தனை டன் வெயிட் இருக்கும்?? அதை ஹீரோ வந்து உதைக்கும் போது அந்த ஜேசிபி மிஷின் தூள் தூளா ஆவதை பார்த்துட்டு அப்படியே மெரண்டு போயிட்டேன்... நீங்களும் மிரளுனும்னா... வீரா தெலுங்கு படத்தை பாருங்க....
ReplyDelete======================
அம்மாடி நம்மளா முடியாது
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
Charlie Chaplin “City Lights” சாப்ளின் காதல்
http://speedsays.blogspot.com/2011/06/charlie-chaplin-city-lights.html
தெலுங்கு பட உலகைப் பற்றி நிறைய தெரியுமோ?
ReplyDeleteகருன் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்...
ReplyDeleteHello Jackie Sir,
ReplyDeleteI am daily reading your blog for the past 2 months and I would like to comment a lot. But I don have this much views about life to advise. still I Just like your blog, the way ur comments/ msg has conveyed and especially the language you used.
Pls try to write more and more.
My best wishes to your wife and daughter Yazhini
Eluthungal Eluthungal... Eluthikkondey Erungal.............
Vaalthukkal
Poornima.M