மிக தாமதமாய் ஞாயிறு மினி சாண்ட்வெஜ் (28/06/2011)

 
ஆல்பம்...

டெய்லி எழுதறோம்.. சரி கொஞ்சம் இடைவெளிவிட்டால் என்ன என்று  தோன்றியது...??
அப்பாவிடம்  ஆசி வாங்க குழந்தையை அழைத்து போக வேண்டும் என்பதால்.. சரி. ஒரு மூன்று நாட்கள்.. இந்த இணையத்து பக்கமே வரக்கூடாது என்று முடிவு கட்டினேன்...


ஊருக்கு செல்ல குடும்ப நண்பரின் போர்டு ஜகான்காரை எங்கள் பயணத்துக்கு கொடுத்து  உதவினார்.. மூன்று நாட்கள்  சொந்த ஊர் கடலூருக்கு போய்விட்டு இப்போதுதான் வீட்டுக்கு வருகின்றேன்....
போர்டு ஐகான் காரில் லைட்டாக ஆக்சிலேட்டர் அழுத்தினாலே... எளிதில் 100 ஐ தொட்டு விடுகின்றது.. அது ஒரு புது அனுபவம்....அது பற்றி ஒரு நாள் சாவகாசமாக எழுதுகின்றேன்..
அப்பா குழந்தைக்கு ஆசிர்வாதம் செய்தார்... அம்மா இல்லை என்ற வருத்தம் நிறையவே நான் வாழ்ந்த வீட்டில் மனைவி பிள்ளையோடு நுழைகையில் ஏற்பட்டது..


மிக்சர்..



வரும்  சனி ஞாயிறு கூட திருச்சியில் உறவினரின் நிச்சயதார்த்த  விழாவுக்கு குடும்பத்துடன் செல்ல இருக்கின்றேன்...அதற்கு  அடுத்த வாரம் கும்பகோணத்தில் ஒரு குடுமப நண்பரின் திருமணம்.. அதனால் பிசியோ பிசி... அதனால் நிறைய வேலைகள்.



கடந்த வெள்ளிக்கிழமை ஊருக்கு போய் திங்கள் இரவுதான் வீடுவந்தேன். 
என் வீட்டில் குழந்தையை பார்த்து கொள்ள ஆள் இல்லை என்பதால் மாம்பலத்தில் உறவினர் வீட்டில் இரண்டு வாரத்துக்கு வாசம்..அதனால் அலைச்சல் அதிகம்...


பயணம்  அலுப்பை போக்க தூங்கபோகின்றேன். விரிவாய் புதன் சாண்ட்வெஜ்ல் பார்க்கலாம்..............

எங்கே மினி சாண்ட்வெஜ்  என்று கேட்ட இராமசாமி கண்ணன், மும்பை வருன், இரண்டு பேருக்கும் ஸ்பெஷல் நன்றிகள்.

 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..

(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...


2 comments:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner