இந்தபடம் ஆர் ரேட்டிங் படம்....
தமிழ்சினிமாவை டெக்னிக்கலாக நிறைய ஜாம்பவான்கள் தூக்கி நிறுத்திஇருந்தாலும்..
சமீபத்தில் மிஷ்கினின் அஞ்சாதே, நந்தலாலா,யுத்தம் செய் போன்ற படங்கள் உலகதிரைப்படங்களின் சாயலை, உலகதிரைப்படங்களின், எதார்தத்தை அந்த வாசனையை தமிழ் சினிமா ரசிகர்கள் நுகர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக ரசித்துக்கொண்டு இருந்த வேளையில், தடாலடியாக உலக திரைபடத்தின் தரத்துக்கு இணையாக ஒரு தமிழ்படம் வந்து இருக்கின்றது என்றால்.... அது ஆராண்ய காண்டம்தான்.ஒளிப்பதிவு தொழில் நுட்பங்களை, திரைக்கதையில் தேவையான இடத்தில் மிகச்சரியாக நிறைய பேர் பயண்படுத்தி வந்தாலும்
மகேந்திரன்/பாலுமகேந்திரா
மணிரத்னம்/பிசிஸ்ரீராம்
கவுதம்மேனேன்/ராஜசேகர்
அமீர்/ராம்ஜி
மிஷ்கின்/மகேஷ்முத்துசாமி
சசிகுமார்/கதிர் என்று எனக்கு தெரிந்த லிஸ்ட்டில் சட்டென
தியாகராஜன் குமாரராஜா/பிஎஸ்வினோத் என்று அந்த லிஸ்ட்டில் தனது முதல் படத்தில் தியாகராஜா வந்து உட்கார்ந்து கொண்டது.. அவரின் அதிஷ்டம் என்பதை விட அவர் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று நிச்சயம் சொல்லலாம்...
நிறைய உலக படங்கள் பார்த்து இருக்கின்றேன்... ஆனால் அந்த ஸ்டைலில் ஒரு படம் நம்ம ஊரில் எப்போது வரும் என்று ஏங்கி இருக்கின்றேன். ஓத்தா எப்பதான், இப்படி எல்லாம் நம்ம ஊரில் எல்லாம் படம் எடுப்பார்கள். என்று யோசித்து இருக்கின்றேன்.
இனிமே நான் அப்படி சொல்லவே மாட்டேன்... தமிழில் உலகதரத்துக்கு எப்போது படம் வரும் என்று..?? இதோ வந்து விட்டது... அந்த படம்தான் ஆரண்யகாண்டம்...
எது தர்மம்..???
உனக்கு எது தேவையோ அதுவே தர்மம்... இதுதான் இந்த படத்தின் ஒன்லைன்...
புரியலை சார்...
ஒரு கதை சொல்லறேன்... பச்சபுள்ளையை கத்திரி வெயிலில் தூக்கி கொண்டு ஆற்றை கடந்தாளாம் ஒரு அம்மாக்காரி... ஆறு சின்ன ஆறு அல்ல பெரிய ஆறு.. காலில் செருப்பு இல்லை... வெயில் கொதிக்கும் மணலில் நடக்கு முடியவில்லை பொடி சூடு அவளால் தாங்க முடியவில்லை... பாதி ஆற்றை கடந்த நிலையில் சட்டென கையில் இருந்த பச்சபிள்ளையை கொதிக்கும் ஆற்று மணலில் போட்டு குழந்தைமேல் ஏறி நின்று விட்டாலாம்.. அந்த குழந்தையை பெற்றதாய்..
சார் குழந்தை?? பச்சபுள்ளை சார்.. எல்லாம் ஓகே... நான் வாழ வேண்டும் என்று வரும் போது, குழந்தையாக இருந்தாலும் பெற்ற தாயே அப்படி செய்து விடுவாள் என்பதை உணர்த்த கிராமத்து பக்கம் இந்த கதை இப்போதும் சொல்லப்படுவது வழக்கம்....
எது தர்மம்,உனக்கு எது தேவையோ அதுவே தர்மம் இந்த ஒரு வார்த்தையை படத்தில் வரும் எல்லா கேரக்டரும் பிரதிபலிப்பது போலான திரைக்கதை சான்சே இல்லை.. யோவ் தியாகராஜா எதிரில் இருந்தால் கட்டி பிடித்து முத்தமே கொடுத்து விடுவேன்...
தமிழ்சினிமாவில் டிடெய்லாக கேங்ஸ்டர் படங்கள் வந்தாலும் புதுப்பேட்டை குறிப்பிட்டு சொல்லவேண்டியபடம் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.. அதே போல நிறைய டிடெய்லுடன் சொல்லும் கதை ஆரண்யகாணடம்..
=============
ஆரண்யகாண்டம் படத்தின் கதை என்ன??
சிங்கம்பெருமாள் மற்றும் கஜேந்திரன் இரண்டு பேரும் ஒரே ஏரியாவில் இருக்கும் டான்கள். ஒரு போதை மருந்து பை ஒரு இடைத்தரகன் மூலம் வருகின்றது.. அவன் பொதுவாக கஜேந்திரனிடம் மட்டுமே அந்த பொருளை கொடுப்பான்.. காசுக்கு ஆசைபட்டு சிங்கம் பெருமாளின் கையாள் பசுபதியிடம் பேரம் பேசுகின்றான்....இந்த இடைவேளையில் பசுபதி சிங்கம்பெருமாளை வாய்கொடுத்து வார்த்தையால் சீண்டி வீட பசுபதி இக்கட்டில் சிக்குகின்றான். தனது பவுடரை பேரம் பேசிய கஜேந்ததிரன் கோஷ்ட்டியும் பசுபதியை தேட....பசுபதி இந்த இக்கட்டில் இருந்து எப்படி வெளியே வருகின்றான் என்று திரையில் அதுவும் நல்ல தியேட்டரில் படம் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்..
============================
இயக்குனரின் பேட்டி..
===============
இயக்குனரின் பேட்டி..
===============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..
முதலில் இந்த கதையை படமாக எடுத்த கேப்பிட்டல் சினிமா எஸ்பிபி சரணுக்கு என் முதற்கண் வந்தனம்...
சார் எனக்கு உலக சினிமா ஸ்டேண்டார்டு என்ன? என்பது எனக்கு தெரியாது என்று யாராவது சொன்னால் இந்த படத்தை பாருங்கள் என்று தைரியமாக சொல்லுவேன்.......
இந்த படம் சமுகத்தில் இருக்கும் இரண்டே வாழ்க்கையான வெள்ளை கருப்பு வாழ்க்கையில், கருப்பு வாழ்க்கையை பற்றி சொல்கின்றது.. வெள்ளை வாழ்க்கையில் சக் த ஆஸ், மதர் பக்கர், பிட்ச் , கிஸ் மை ஆஸ், போன்றவை கருப்பு பக்க வாழ்க்கையில் சொந்த மொழியில், ஓத்தா , தேவிடியா மகனே, என்று சொல்லுவதை கேலி பேசுவார்கள்.. காரணம் சமுகம் அப்படித்தான்... இந்த இரட்டை வாழ்க்கை சமுகத்தை கேலி செய்து படத்தில் இயக்குனர் ஒரு டயலாக் வைத்து இருப்பார்... பணக்காரனுக்கு வேட்டி அவுந்துடுச்சினா.. ஜயோ பாவம் வேட்டி அவுந்துகிச்சு... அதுவே ஏழைக்கு அவுத்துகிச்சினா.. மூதேவி வேட்டி கட்ட கூட தெரியலை என்று கேலி பேசும் என்று சமுகத்தின் இரட்டைதனத்தை கேலி செய்கின்றார்....
இந்த படம் தமிழ்சினிமாவின் பிரேக் த ரூல் மூவி என்று தாராளமாக சொல்லலாம்...
ஒரு பெரிய டான் தள்ளிக்கொண்டு தன் வீட்டிலேயே வைத்து இருக்கும் சின்ன பெண்ணிடம் உடலுறவு கொள்ளும் போது, சீக்கிரமாக ஊத்திக்கொள்ள, அந்த கோவத்தை, அந்த இயலாமையை அந்த பெண்ணின் மீது காட்ட, அவள் வலி தாங்காமல் ஒத்த வார்த்தையை சொல்லி விடுகின்றாள்.. என்ன சொல்லறா???
உங்களால முடியலைன்னா ஏன் என்னை அடிக்கறிங்க???
அந்த கோவம், கொடுமையன கோவம் எந்த ஆணாலும் தாங்கி கொள்ள முடியாத ஈகோ கோவம், அந்த கோபம் தனது கூட்டாளி மற்றும் அன்றைய சேவல் சண்டையில் சேவல் தலையை சீவுவது வரை வியாபிக்கின்றது..... மிக அழகான காட்சிக்கோர்வை. இப்படி ஒரு காட்சியோடு தமிழ்சினிமா தொடங்குவது இதுவே முதல் முறை....
இந்த படம் இயக்குனருக்கு முதல் படம்.. அப்படி நம்ப முடியவில்லை.....ஒரு 15 நிமிடத்துக்கு சிங்கம்பெருமாள் விட்டினுள் அலையும் கேமரா, எல்லா கேரக்டர்களையும் அறிமுகபடுத்துவதும் அதன் பிறகு ஆப்போசிட் டான் கஜேந்திரன் பற்றி வார்த்தையால் பயமுறுத்துவது சான்சே இல்லை... ஒன்ஸ் அப்பான்ய மெக்சிக்கோ படத்தில் ஆன்டனியோ பேன்டரசை, பாரில் அவன் எபபடி இருப்பான் என்று அறிமுகபடுத்தும் காட்சியை அது நினைவுபடுத்துகின்றன....
முதல் காட்சியில் சிங்கபெருமாள் கோஷ்ட்டிகள் சப்பையை வைத்து பேசி சிரிக்கும் காட்சிகள்.. தமிழ்சினிமாவுக்கு புதுசு..
வசனங்கள் அற்புதம்...
===========
சப்பை நான் சொல்லற இடத்துக்கு வேலைக்கு போறியா? போறேன்.. அவர்கிட்ட நான் சொன்னேன் சொல்லு.. சரி சொல்லறேன்... எங்க சொல்லனும் இங்க சொல்லு.. என்று சொல்லி சிரிக்கும் காட்சி...
ஒரு காட்சியில் ஸ்கோர் செய்யும் பைவ்ஸ்டார் கிருஷ்ணா அதுக்கு பதிலாய் வரும் ஆன்சர் வயிரை பதம் பார்க்க வைக்கின்றது...பிரபு, குஷ்பு..
தமிழ்சினிமாமூலம் ஆண்டியை கவுக்கும் டெபனிஷன் மற்றும் கமல் கூட ஹேராம் படத்துல கூட நடிச்ச பொம்பளை குண்டிய கடிச்சிடுவார்....
எனக்கு எல்லா அம்பளையும் ஒன்னுதான் சப்பையா இருந்தாலும் சிங்கம்பெருமாளா இருந்தாலும்...
உங்க அப்பவை உனக்கு ரொம்ப பிடிக்குமா?
அப்படி இல்லை.. ஆனாலும் அவர் எங்க அப்பா.....
அண்ணே யார்கிட்ட பேசிகிட்டு இருந்திங்க...
ஆங் கூத்தியாகிட்ட...
கஜேந்திரன் பெரிய மயிரா?
பெரிய மயிறுதான்...
உடம்பு எல்லாம் வெந்து போச்சி தோள் வழுண்டு போயிடுச்சி.. அப்ப குருவி போன் செய்யறான்..அவன் மேல எந்த தப்பு இல்லை...சரக்கு சரியா இருக்குன்னு.. ஆனாலும் அவனை சவாடிச்சிட்டான்... காரணம் அவ்வளவு டார்சர்.. கத்தி திரும்பாதுன்னு என்ன நிச்சயம்..??
விரல் கட்டிச்சாதை பார்த்த ஆதாரம் இருக்கா??
இது எல்லாம் பில்டப்..
உனக்கு பயம் நீ பயந்துட்டே?? என்று சொல்லும் போது விஷுவலாய் டீயை கொடுக்கும் பெண்ணின் கைவிரலை காட்டும் போது திடுக்...
பசுபதி உயிருக்கு பயந்து ஓடும் போது பின்னனியில் மரணம் என் கூடவே துரத்தது என்று நீண்ட நெடிய அந்த டயலாக் ஏ ஓன்..
அதை விட இன்டர்வெல் பிளாக் அசத்தல்..
==============
அந்த ஜமின் அப்பாவும், பையன் கொடுக்கபுளியும் மனதில் நிற்கின்றாகள்.. எவ்வளவோ இழந்தாலும் எட்டாயிரத்துக்கு மேல் டிமான்ட் செய்யாத மனதும், போனில் இரண்டு லட்சம் என்று சொல்லி விட்டு மகனை பார்ப்பதும், தேர்த்த ரசனை அவரின் குரல்மற்றும் பாடிலாங்வேஜ் பெரிய பிளஸ்.... அதே போல் அவர் கூத்து பட்டறை ஆசாமியாம்..
கொடுக்கபுளியுடன் சம்பத் போனில் பேசும் போது உன் பொண்டாட்டியை காப்பாத்த உனக்கு துப்பு இல்லை என் அப்பாவை காப்பத்தா போறியா? என்பதும்.. பவுடர் தரமாட்டேன் என அந்த சின்ன பையன் சொல்ல பசுபதி உடைந்து அழுவதும் நல்ல காட்சி... கோவாவுக்கு பிறகு பசுபதிக்கு வெயிட்டான ரோல்..
திரைக்கதையில் நான்லினியர் திரைக்கதையை அவ்வப்போது உறுகாய் போல் தொட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.. உதாரணமாக பசுபதி ஓடிவந்து கொண்டு இருக்கும் போது திடிர் என்று பல்சர் பைக்கில் பயணிப்பதை காட்டும் போது அது எப்படி வந்தது என்று ஒரு சின்ன ஸ்லோமோஷன் காட்சி ஒரு உதாரணம். ஓரம் போ படத்துக்கு வசனம் எழுதியவர்தானா இந்த படத்தின் இயக்குனர் என்று வியக்க வைக்கினறார்...
=========
ஒளிப்பதிவாளர் பிஎஸ் வினோத்.. இந்திய விளம்பர துறையில் வெற்றிக்கொடிநாட்டிய ஒளிப்பதிவாளர்...தமிழில் இவர் செய்த படங்கள் மிக குறைவு...ரிதம் மற்றும் ஜெயம் ரவி நடித்த ஒரு படம் என்று ஒரு சிலபடங்கள் செய்தாலும்.. இந்த படத்தில் பிச்சி உதறி இருக்கின்றார்... தேவையாக இடத்தில் மட்டும் லைட் வைத்து விட்டு இந்த படம் பிளாக் சைடு சப்ஜக்ட் என்பதால் வாண்டட் ஆக நிறைய சில் அவுட்டில் ஷாட்டுகள் எடுத்து இருக்கின்றார்...
முக்கியமாக பவுடரை தேடி வரும் கஜேந்திரன் ஆட்கள் அந்த லாட்ஜில் படியில் ஏறி வெளியே என்ட்ரி ஆகும் காட்சியில் ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் கைகுலுக்கி இருக்கும் காட்சி...
அதே போல ரவி எரோப்பிளேனை விழுங்குவது போல் எடுத்த காட்சிக்கு எப்படி மெனெக்கெட்டார்கள்... அல்லது மினி பிளேனா என்று தெரியவில்லை-சிஜியாகவும் இருக்கலாம்
சூப்பர்சானிக் கேமராவில் 1000 பிரேமில் பல காட்சிகள் எடுத்து இருக்கின்றார்கள்.. அனைத்தும் திரைக்கதையில் துருத்திக்கொள்ளாமல் அழகாய் இருக்கின்றது.. முக்கியமாக கரெயின்ஸ் இல்லை.. மற்ற எல்லா படத்திலும் கிரேயின்ஸ் இருக்கும்..
==============
இந்த படத்தின் பலம் எடிட்டிங்.. அவர்கள் தன் பணியை சிறப்பாக செய்து இருக்கின்றார்கள்..
=========
யுவன்சங்கரின் மாஸ்டர் பிஸ் இந்த படம் என்று சொல்லலாம்...
அப்பாவும் பிள்ளையும் சண்டை போட்டு விட்டு அப்பா மகனை அழைக்க அவன் வராமல் சண்டித்தனம் செய்ய இழுத்து அனைத்த உடன் அப்படியே கேமரா மேலே செல்ல ஒரு பியானோவும், ஒரு வயலினும் நம்மை கொள்ளை கொள்ளுவதை என்வென்று சொல்ல.....
இதே போல் பவுடரோடு பசுபதி ஒரு மனையில் நிற்க,கஜேந்திரனின் தம்பி பவுடரை வாங்க முன்னே நடக்க, பசுபதி நடக்க அப்ப ஒரு துள்ளல் கிடாரோடு சேர்ந்த இசை சான்சே இல்லை...
அதே போல தேவையில்லாத இடங்களில் சைலன்டாக இருந்து இருக்கின்றார்.. முக்கியமாக காரில் பயணிக்கும் காட்சிகள்..
பாடலே இல்லாத படம்..
==========
ரவியின் நடிப்பு கனக்கச்சிதம்.
யாஸ்மீன் பொன்னப்பா நல்ல தேர்வு... அபலை பாத்திரமும் அசத்தல் பாத்திரமும் அசத்தி இருக்கின்றார்..
ஜாக்கிஷேராப்... வசனங்களில்தான் பல இடங்கள் புரியவில்லை.... மற்றபடி அவரின் நடிப்பு ஓகே...
எனக்கு கஜேந்திரன் கேரக்டரும் அவனின் மொட்டை தம்பியின் கேரக்டரும் எனக்கு பிடித்து இருந்தது..
எஸ்பிபிசரனுக்கு முதல் வெற்றி சென்னை 28... இது இவருக்கு இரண்டாவது வெற்றி..
======================
விருதுகள்..
the South Asian International Film Festival,where it won the Grand Jury Award for Best Film
==========
படக்குழுவினர் விபரம்...
Directed by Thiagarajan KumararajaProduced by S. P. B. Charan
Written by Thiagarajan Kumararaja
Starring Jackie Shroff
Ravi Krishna
Sampath Raj
Yasmin Ponnappa
Somasundaram
Music by Yuvan Shankar Raja
Cinematography P. S. Vinod
Editing by Praveen K. L.
N. B. Srikanth
Studio Capital Film Works
Release date(s) 30 October 2010 (SAIFF)
10 June 2011 (India)
Running time 153 minutes
Country India
Language Tamil
============
படத்தின் டிரைலர்...
=================
தியேட்டர் டிஸ்கி..
இந்த படம் சைதை ராஜ் தியேட்டரில் பார்த்தேன்... 60ரூபாய் பஸ்ட்கிளாஸ் டிக்கெட்டில், ஏசி போட்டு தரமான ஒளி ஒலியுடம் படம் காட்டுகின்றார்கள்.. பால்கனிக்கு போனால் எதிரில் இருப்பவர்கள் மண்டைதான் தெரியும்...சீட்டை மாற்ற போகின்றார்களாம்...
படத்துக்கு பெரிய அளவில் விளம்பர ரீச் இல்லாமல் இருக்க முக்கியகாரணம் போஸ்டர் டிசைன்தான்... போஸ்டரில் மஞ்சளும், கருப்பும் வியாபித்து இருக்கின்றது.. முகங்கள் இல்லைவே இல்லை... நம்மவர்களுக்கு முகமும்தேவை... நாம் இப்போதுதான் வளர ஆரம்பித்து இருக்கின்றோம்....
தியேட்டருக்கும் எதிரில் இருக்கும் டீக்கடையில்3 மணிக்கு ஒருவன் பத்து ரூபாய்க்கு சில்லரை கொடுத்து விட்டடாலும் கொடுக்கவில்லை என்று கேட்டு தகராறு செய்து போய்விட்டானாம்...சாய்ங்காலம் ஒரு அஞ்சே முக்காவுக்கு தன் கூட்டாளியோடு சரக்கு அடித்து விட்டு வந்து வெட்டி கிராக்கி பிடித்து டீக்கடையின் கல்லா பெட்டியில் இருந்த இளைஞனை முகத்திலேயே குத்தி அவன் முகத்தை கன்னி போக வைத்தனர்... அக்கம் பக்கம் கடைகாரர்கள், மேன்ஷன் ஆட்கள் எல்லோரும் வந்து தடுத்தும் இந்த ரெண்டு பேரும் அராஜகம் செய்து கொண்டு இருந்தனர்...
ஓத்தா எங்கிட்டேயாவா?
ஓம்மாலா எங்கிட்டேயாவா??
சூத்துல சுண்ணாம்பு வச்சிடுவேன்....
என் சட்டையையா பிடிக்கிற..??? ஒம்மால பொலி போட்டு விடுவேன் என்று எகிரிக்கொண்டே இருந்தார்கள்.
தடுத்த ஒரு பக்கத்து கடை ஆளின் சட்டையை கிழித்து விட்டனர்.. உடனே போலிஸ் வந்து விட்டது...
தியேட்டரில் டோக்கன் போடும் இடத்தில் ... பேசும் போது..
சார் அந்த டீக்கடை ஒனருங்க.. பெரிய அளுங்க..பைனான்ஸ் பார்ட்டி.. அந்த அடிவாங்கிய பையனே அவுங்க எல்லாரையும் தும்சம் பண்ணி இருப்பான்..
அவனுங்க சண்டையயில் கல்லாவுல கையை வச்சிட்டா அதுக்குதான் அவன் அமைதியா இருந்தான்... இன்னைக்கு நைட்டுக்கு எல்லாம் அடி கொடுத்தவனுங்களை ரவுண்டு கட்டிடுவாங்க என்று சொன்னார்கள்...
படத்தில் பல காட்சிகளுக்கு ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ்..
படம் முடித்து விட்டு வெளியே வரும் போது என்னையே பார்த்த ஒரு நண்பர்,... நீங்க ஜாக்கிதானே.. அமெரிக்காவில் வேலை பார்க்கின்றேன், ஆறுமாச லீவில் நான் வந்து இருக்கேன்.. டெய்லி உங்க தளத்தை வாசித்து விடுவேன்.. இன்னைக்கு கூட பைக்பயணம் பத்தி எழுதி இருக்கிங்க.... நாங்களும் கோவா வரை சென்னையில் இருந்து போய் இருக்கின்றோம் என்று சொன்னார்..ஞாயிறு காலை கிரிக்கெட் விளையாட லக்கி நான் எல்லாம் ஒன்னா விளையாடுவோம் என்றார்.. சந்தித்ததில் மகிழ்ச்சி என்று சொல்லிவிட்டு போனார்..
=========
பைனல்கிக்..
இந்த படம் பார்த்தே பார்த்தே பார்த்தே பார்த்தே தீரவேண்டிய தமிழ்படம்..பிஎஸ்வினோத்,எஸ்பிபிசரண்,தியாகராஜான் குமாரராஜா போன்றவர்களுக்கும், இந்த படத்துக்கும் தமிழ்சினிமா ரொம்பவும் கடமை பட்டு இருக்கின்றது.. அதனால் தவறாமல் இந்த படத்தை பார்க்கவும்..52 கட்டுகளோடு சென்சார் செய்து, டெல்லிக்கு போய் ரிவைசிங் கமிட்டி ஓகே சொல்லி வெளியே வந்த படம்....திரை அரங்கில் பாருங்கள்.. இது வயது வந்தோருக்கான படம்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...

============
ஃஃஃஃஉலக திரைபடத்தின் தரத்துக்கு இணையாக ஒரு தமிழ்படம் வந்து இருக்கின்றது என்றால்.... அது ஆராண்ய காண்டம்தான்.ஃஃஃஃ
ReplyDeleteபடித்ததுமே புரிந்து கொண்டேன்... ஒண்லைனும் பார்த்தேன் பட படம் இன்னும் பார்க்க்ல..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio
X'cellent review jackie... i am expecting from you this kind of detail review for this movie.. u did that.
ReplyDeleteஇன்னைக்கே பார்த்திருவோம்
ReplyDelete//அமெரிக்காவில் வேலை பார்க்கின்றேன், ஆறுமாச லீவில் நான் வந்து இருக்கேன்.//
ReplyDelete6 Months Leave?!?!?!?!?
dear jackie,
ReplyDeleteu dont know its a copy of 'trade'?
senthil,doha
Good review.
ReplyDeleteநன்றி,
ஜோசப் (http://www.tamilcomedyworld.com)
ஜக்கி... எந்த படத்துக்குமே இப்படி ரெக்கமனட் பண்ணியதில்லை போல இருக்கே.. பாத்துடுவம் ...
ReplyDeleteஅருமையான விமர்சனம்....
ReplyDeleteஉங்கள் விமர்சனமே..
படத்தை பார்க்க தூண்டும்....
...........................என்ன செய்வது....
தரமான படத்திற்கு விளம்பரம் கிடைப்பதில்லை ..!
ரொம்ப நாள் கழிச்சு உங்க கடைக்கு வந்தேன்.முன்னாடியெல்லாம் கடைல ஆள் மொய்க்கும்.இப்ப என்னாச்சு?
ReplyDeletehi, i am new to your site. I am from Srilanka. I have watched the film "Aaranya kaandam" recently and I felt as same as u think. U have given a wonderful review of the film. keep continuing.
ReplyDelete